Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label madurai aadheenam. Show all posts
Showing posts with label madurai aadheenam. Show all posts

Monday, April 25, 2016

மதுரை ஆதீனத்துக்கு இளைய ஆதீனம் நியமனம்




இந்து மதத்தில் சைவ பிரிவை தழைத்தோங்கச் செய்தவர்களில் திருஞான சம்பந்தர் குறிப்பிடத் தகுந்தவர். மதுரையை ஆட்சி செய்த கூன் பாண்டிய மன்னன் காலத்தில் சமண மதம் பரவியது. இதையடுத்து, கூன்பாண்டியன் மனைவி சுந்தரேஸ்வரரை மனம் உருக வேண்டினார். மன்னனுக்கு வெப்பு நோயை ஏற்படுத்தினார் இறைவன். இந்நோயை சமணர்களால் குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து ஞான சம்பதருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் மதுரைக்கு வந்து, கூன் பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார்.


இதையடுத்து, மதுரையில் சைவ மதத்தை வளரச் செய்யும் வகையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் ஆதீனத்தை நிறுவினார் ஞானசம்பந்தர். திருஞான சம்பந்தரால் நிறுவனப்பட்ட மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக அருணகிரி உள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமி நித்தியானந்தர், மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்படுவதாக அருணகிரி அறிவித்தார். இதில் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து நித்தியானந்தரை இளைய ஆதீனம் பதவியில் இருந்து நீக்கி, அருணகிரி உத்தரவிட்டார்.
 

இந்நிலையில், மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனத்தை நியமனம் செய்வது தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆலோசனை நடந்தது. இந்நிலையில், இன்று காலை மதுரையில் நிருபர்களை சந்தித்த ஆதீனம் அருணகிரி, “மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் பட்டம் சூட்டப்படுவதாக முறைப்படி அறிவித்தார். அருணகிரி மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமாக வந்த பின்னர், இப்போது நான்காவது முறையாக மதுரை ஆதீனத்துக்கு இளைய ஆதீனம் நியமிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


credit: jannalmedia

Tuesday, March 3, 2015

My Life Under Threat Because of Swami Nithyananda – Madurai Adheenam @ Madurai Court

நித்யானந்தாவால் எனது உயிருக்கு ஆபத்து: மதுரை ஆதீனம் கோர்ட்டில் மனு தாக்கல்





மதுரை, மார்ச்.3- 

மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த மணிவாசகம், கும்பகோணம் தியாகராஜன் ஆகியோர் மதுரை 1-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதுரை ஆதீனம் (அருணகிரிநாதர்), நித்யானந்தா ஆகியோர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்குகள் நிலுவையில் இருந்தபோது மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தாவை நீக்கி விட்டதாக மதுரை ஆதீனம் அறிவித்தார். மேலும் இதுதொடர்பான வழக்கை தொடர தனக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் கோர்ட்டில் தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது நித்யானந்தா தன்னை மதுரை ஆதீனமடத்தின் 293-வது மடாதிபதியாக குறிப்பிட்டு ஒரு மனுவை தாக்கல் செய்தார். 

அதில், ‘‘எனக்கும், அருணகிரிநாதருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் தனித்தனியாக வழக்கை சந்தித்து வருகிறோம். வழக்கில் நான் பாதிக்கப்பட்டவன். எனவே வழக்கை தொடர்ந்து நடத்த விரும்புகிறேன். எனவே இந்த வழக்கில் அருணகிரிநாதரை 3-வது எதிர்மனுதாரராக சேர்த்து, வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி இளவழகன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது:- 

தம்பிரானாக பணிபுரிபவரின் அடுத்த பதவி தான் இளைய ஆதீனம். தம்பிரானை இளைய ஆதீனமாக உயர்த்த பல்வேறு நடைமுறைகள் உள்ளன. நித்யானந்தா தம்பிரான் அல்ல. அவர் மதுரை ஆதீனத்தின் பக்தர் அல்ல. நித்யானந்தா என்னிடம் ஆசி பெறவும், திருஞானசம்பந்தர் பற்றி தெரிந்து கொள்ளவும் தான் மடத்துக்கு வந்தார். 

பிடதி ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டே, மதுரை ஆதீன மடத்தில் பக்தராக இருக்க வேண்டும் என்று நித்யானந்தா நினைத்தார். ஒருவர் இரு வேறு தத்துவங்களை கொண்ட மடத்தின் சீடராக இருக்க முடியாது என அறிவுறுத்தினேன். ஆனால் நித்யானந்தா படிப்படியாக சைவ சித்தாந்தத்திற்கு மாறுவதாகவும், படிப்படியாக தியான பீடத்திலிருந்து வெளியேறுவதாகவும் கூறினார். 

அதன்படி அவர், மடத்தில் எனது கண்காணிப்பில் இருந்தார். இங்கு தங்கியிருந்த சில நாட்களில் பாரம்பரியமான மதுரை ஆதீனத்தின் பெயரை கெடுக்க முயன்றார். ஆதீன தத்துவத்துக்கு எதிராக செயல்பட்டார். 

இயற்கைக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மடத்தில் தங்காதது, ஆதீனத்தின் அனுமதியின்றி வெளியே சென்றது, தலையை மொட்டையடிக்காதது போன்ற காரியங்களை உற்று கவனித்து வந்தேன். அவரது நடவடிக்கைகள் ஆதீனத்திற்கு இணையாகவும், அதைவிட மேலானதாகவும் இருந்தன. 

ஆதீனத்திற்கு இணையாக உட்கார்ந்தார். அவர் தன்னை கடவுளாக கூறிக்கொண்டு மடத்தில் பூஜைகள் நடைபெறுவதை வெறுத்தார். தன்னைத்தானே 293-வது ஆதீனமாக அறிவிக்கத் தொடங்கினார். இந்த சூழலில் நித்யானந்தா மீது பல்வேறு பாலியல் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. நித்யானந்தாவின் ஒழுக்கமற்ற, சட்ட விரோத காரியங்களை பார்த்த பின்னர் கண்காணிப்பிலிருந்து என்னை விலக்கிக்கொண்டேன். 

பின்னர் கடந்த 19-10-2012 அன்று அவரை மடத்திலிருந்து வெளியேற்றினேன். அவர் மடத்தில் தங்கி இருந்த குறைவான நாட்களிலேயே ஆதீனத்தின் பெயரை பயன்படுத்தி பல குற்றச்செயல்களில் ஈடுபட்டார், ஆதீனத்தின் கையெழுத்தை போலியாக போட்டார். அடுத்த மடாதிபதியாக நியமனம் செய்யப்பட்டதாக போலி ஆவணங்களை தயாரித்தார். 

தவறான எண்ணத்துடன் அறக்கட்டளை ஆவணம் ஒன்றையும் உருவாக்கி கையெழுத்து வாங்கினார். நித்யானந்தாவை குருட்டுத் தனமாக நம்பிவிட்டேன். ஆவணங்களில் திருட்டுத்தனமாகவும், சட்டவிரோதமாகவும் மோசடி செய்து நித்யானந்தா என்னிடம் கையெழுத்து வாங்கினார். அந்த ஆவணங்கள் ஆதீனத்தை கட்டுப்படுத்தாது. 

அவர் மதுரை ஆதீன மடத்தின் பெருமையை சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். நித்யானந்தா ஒரு மாதம் கூட மடத்தில் தங்கவில்லை. சமய சடங்குகளை செய்யவில்லை. தீட்சையும் பெறவில்லை. தன்னை மதுரை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதியாக அவர் அறிவித்தது செல்லாது. அவர் பலனடையும் விதத்தில் கோர்ட்டு உத்தரவிடக் கூடாது. 

அறக்கட்டளை ஒப்பந்தத்தில் நித்யானந்தாவின் ஆட்கள் மிரட்டி கையெழுத்து பெற்றனர். எனவே நித்யானந்தாவை கோர்ட்டு தண்டிக்க வேண்டும். எனது உயிருக்கு நித்யானந்தாவால் ஆபத்து உள்ளது. இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். அந்த விசாரணை நிலுவையில் உள்ளது. நித்யானந்தாவும் இளைய ஆதீனமாக இல்லை என அவரது இணையதளத்தில் தெரிவித்துள்ளார். 

எனவே, இந்த வழக்கை விசாரிக்கத் தேவையில்லை. தள்ளுபடி செய்ய வேண்டும். 

இவ்வாறு மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"


Tuesday, December 3, 2013

Madurai Law college students protest outside Aatheenam mutt

மதுரை: மதுரை சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் சோலை கண்ணன். இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர். இவர் நேற்று காலை போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் அளித்த புகார் மனு: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 33 ஆண்டுகளில் சுமார் ரூ.750 கோடி வரை கையாடல் செய்து மடத்துக்கு வர வேண்டிய வருமானத்தை அபகரித்துள்ளார். தற்போது மடத்தில் உள்ள உதவியாளர் வைஷ்ணவி, அருணகிரிநாதருடன் சேர்ந்து மோசடி செய்து வருகிறார்.மடத்துக்கு முன்னோர்கள் கொடுத்த ஆபரணங்களை வைஷ்ணவி தனது சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தி வருகிறார். ஆதீன மடத்தைச் சுற்றியுள்ள 200 கடைகளில் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வாடகைக்கு விட்டதில் மாதம் ரூ.10 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.

இந்த 33 ஆண்டுகளில் இதுவரை பல நூறு கோடி வருமானத்தைப் பெற்றுள்ளார். மதுரை மாவட்ட நீதிமன்ற அனுமதி பெறாமல் சொத்துகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என தடை உத்தரவு உள்ளது. அதையும் மீறி கோவையில் ரூ.55 லட்சத்துக்கு அருணகிரி நாதர் என்ற பெயரில் ஆதீனம் சொத்து வாங்கியுள்ளார்.

மதுரை மத்திய கூட்டுறவு வங்கியில் 26-10-2012 அன்று ஒரே நாளில் இரு தவணையாக வைஷ்ணவி னீ50 லட்சம் எடுத்துள்ளார். அதிலும் மோசடி நடந்துள்ளது. இதனால், அருணகிரி நாதரை மடாதிபதி பதவியிலிருந்து நீக்கக் கோரி அறநிலையத்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தேன். மனு மீது விசாரணை நடந்து வருகிறது. எனவே, இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். மனு குறித்து துணை கமிஷனர் தமிழ்ச்சந்திரன் விசாரிக்க போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=69565
Madurai Law college students protest outside Aatheenam mutt Students of the Madurai Law College, alleging that the Madurai Aatheenam Mutt is being held under the control of Vaishnavi and family, were involved in protests outside the mutt. This created tensions in the locality, following which police were posted in large numbers to prevent mishap. There have been interesting news and hot controversy ever since the announcement that Nithyananda would be nominated as the junior Aatheenam of the Maduari aatheenam mutt. Nithyananda was removed from the post, after the mutt received flak from various organizations condemning the nomination. Meanwhile, protests have broken out alleging that the mutt is held under the control of Vaishnavi and family. A complaint of the allegation has been registered with the Madurai commissioner’s office by the Hindu People’s party. Following the complaint, the students demanding for the mutt be taken over and run by the government were involved in siege and protest outside the mutt. This created heightened tensions in the locality. Following the agitations, the police were posted in huge numbers considering the safety of the mutt. http://sathiyam.tv/english/featured/madurai-law-college-students-protest-outside-aatheenam-mutt

Sunday, February 3, 2013

Nithyananda filed 2 petitions against Madurai Adheenam


மதுரை ஆதீனத்திற்கு எதிராக 2 வழக்குகள்

Nithyananda files petition against Madurai Adheenam: Contests his removal

இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து என்னை நீக்கியது தவறு - நித்தியானந்தா வழக்கு


Posted by: Shankar Published: Saturday, February 2, 2013, 11:13 [IST]

மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து தன்னை நீக்கியது தவறு என்றும், மதுரை ஆதீன மடத்தில் பூஜைகள் நடத்த தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். 

மதுரை ஆதீனத்திற்கு எதிராக மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நித்தியானந்தா புதிதாக 2 வழக்குகளை தாக்கல் செய்தார். அவற்றில் முதல் மனுவில், "நான் மதுரையின் 293-வது இளைய ஆதீன மாவேன். என்னை இளைய ஆதீனமாக நியமித்து பல்வேறு பணிகளை செய்யும்படி கூறிய ஆதீனம் திடீரென்று எந்தவித அறிவிப்பும் இல்லாமல், என்னை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டதாக அறிவித்துள்ளார். 

மடத்தின் சட்ட விதிகளின்படி இது தவறாகும். எந்த குறைபாடுகளும் இல்லாத நிலையில் என்னிடம் விளக்கம் பெறாமல் என்னை நீக்குவதற்கு மதுரை ஆதீனத்திற்கு உரிமை இல்லை. 

அத்துடன் இளைய ஆதீனமான நான் மடத்திற்குள் பூஜைகளை நடத்த வேண்டும். ஆனால் நானும், எனது தரப்பினரும் மடத்திற்குள் வருவதற்கு மதுரை ஆதீனம் தடையாக உள்ளார். எனவே என்னையும் என் தரப்பினரையும் மதுரை ஆதீனத்திற்குள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும்,"' என்று கூறப்பட்டுள்ளது. 

அதேபோல மற்றொரு மனுவில், ‘‘இளைய ஆதீனமான என்னிடம் கலந்து பேசாமல் திடீரென்று தம்புரான் ஒருவரை மதுரை ஆதீனம் நியமனம் செய்துள்ளார். இதுபோல தம்புரான் நியமிக்கும் வழக்கம் மதுரை ஆதீனத்தின் விதிகளில் இல்லை. எனவே விதிகளுக்கு மாறாக உள்ள அந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.'' என்று கூறப்பட்டுள்ளது. 

இநத மனுக்கள் நீதிபதி கே.குருவையா முன்பாக விசாரணைக்கு வந்தன. அப்போது ஆதீனம் தரப்பு வக்கீல்கள் வி.நாகேந்திரன், ஜெ.ராமமூர்த்தி ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்குகளுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 

இதையடுத்து நித்தியானந்தா தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


English summary: Nithyananda filed petition against the removal of him and his supporters from Madurai Aatheenam.


Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/02/tamilnadu-nithyananda-files-petition-against-madurai-aatheenam-169030.html

Thursday, January 31, 2013

Petition filed by Nithyananda dismissed



MADURAI, January 30, 2013 
Staff Reporter 

Principal Sub-judge K. Guruviah, on Monday, dismissed a petition filed by Nithyananda, seeking to thwart a bid by Madurai Aadheenam Arunagirinathar to dissolve a trust formed in association with the former.

According to Nithyananda, the Aadheenam did not consult him before attempting to dissolve the trust registered in both their names. Therefore, the court should pass orders forbidding the Aadheenam from dissolving the trust, he pleaded. 

However, the Aadheenam claimed that the trust was formed under the Madurai Mutt and hence there was no necessity to get approval from Nithyananda. 

The judge held that Nithyananda’s claims were unwarranted and dismissed the petition.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/petition-filed-by-nithyananda-dismissed/article4359370.ece

Tuesday, January 29, 2013

Nithyananda plea against Madurai adheenam rejected

English summary Madurai principal sessions court has dismissed Nithyananda's petition against Madurai Aadheenam.

ஆதீனத்திற்கு எதிரான நித்தியானந்தாவின் வழக்கு மதுரை கோர்ட்டில் தள்ளுபடி 

Posted by: Sudha Published: Tuesday, January 29, 2013, 12:01 [IST]

மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மீது நித்தியானந்தா தொடர்ந்த வழக்கை மதுரை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

 தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், இந்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஆதீனம் தரப்பில் மதுரை ஆதீனம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அடுத்த ஆதீனம் நியமிக்கப்படும்வரை மடத்தின் பொறுப்புகளை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இதையடுத்து அருணகிரிநாதர், அதே கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீனம் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பெயரில் பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும், மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தாவும், அவருடைய தரப்பினரும் நுழைய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் நித்தியானந்தா, ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீனம் அறக்கட்டளையை நானும், அருணகிரிநாதரும் சேர்ந்து சட்டப்படி உருவாக்கினோம். அறக்கட்டளையை கலைக்க விரும்பினால் முதன்மை அரசு வக்கீலிடம் முன் அனுமதி பெற வேண்டும். அறக்கட்டளையில் உள்ள எனக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். 

ஆனால், அதுபோன்று எந்தவித அனுமதியும் பெறாமல் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கலைத்தது தவறு. சட்டப்படி அறக்கட்டளையை கலைக்காமல் அறக்கட்டளைக்கான பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று அருணகிரிநாதர் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்கக்கூடாது. அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

 இதற்கு அருணகிரிநாதர் தாக்கல் செய்த பதில் மனுவில், சாதாரணமாக உருவாக்கப்படும் அறக்கட்டளைகளுக்குத்தான் நித்தியானந்தா கூறியுள்ள விதிமுறைகள் பொருந்தும். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மதுரை ஆதீனம் போன்ற மடங்களில் அமைக்கப்படும் அறக்கட்டளைகளை கலைக்க அந்த விதிகள் பொருந்தாது. எனவே சட்டப்படியான அடிப்படை காரணங்கள் இல்லாததால் நித்தியானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இந்த மனுக்கள் நீதிபதி கே.குருவையா முன்பாக விசாரணைக்கு வந்தன. ஆதீனம் தரப்பில் வக்கீல் நாகேந்திரன், ராமமூர்த்தி ஆகியோர் ஆஜரானார்கள். முடிவில் ஆதீனம் மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய நித்தியானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

 http://tamil.oneindia.in/news/2013/01/29/tamilnadu-madurai-court-dismisses-nithyanantha-168788.html




DINAMALAR NEWS

மதுரை ஆதீனத்திற்கு எதிரான நித்யானந்தா மனு தள்ளுபடி
 ஜனவரி 29,2013,00:59 IST

மதுரை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக, நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை, முதன்மை சப்கோர்ட் நீதிபதி குருவைய்யா, தள்ளுபடி செய்தார். மதுரை ஆதீனத்தை அரசிடம் ஒப்படைக்கவும், நித்யானந்தா-ஆதீனம் இணைந்து துவக்கிய அறக்கட்டளை பதிவை ரத்து செய்ய உத்தரவிடவும், மடத்தின் சொத்துகளை ஆதீனமோ, அவர் தரப்பினரோ வேறு நபருக்கு விற்க, பதிவு செய்ய இடைக்காலத் தடை விதிக்கவும் வலியுறுத்தி, இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், முதன்மை சப்கோர்ட்டில் மனு செய்தார். நித்யானந்தா இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டதை ரத்து செய்யவும், ஆதீன அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்யவும், ஆதீன மடத்தில் நித்தியானந்தா நுழைய தடை விதிக்கவும் கோரி, ஆதீனம் தரப்பு, அதே கோர்ட்டில் மற்றொரு மனு செய்தது. அறக்கட்டளையை பதிவு செய்த தெற்கு சார்பதிவாளரையும் இணைக்க வலியுறுத்தி, நித்யானந்தா தரப்பு, மனு செய்தது. ஒரே நேரத்தில் தாக்கலான, மூன்று தரப்பினரின் வெவ்வேறு மனுக்கள் மீதான விசாரணை, நடந்து வருகிறது. இதற்கிடையில், ஜன.,8ல், நித்யானந்தா தரப்பு புது மனுவை தாக்கல் செய்தது. 
அதில்,"மதுரை ஆதீனத்திற்கு வழக்கு போடும் உரிமை இல்லை. அவர் மனு செய்தது சட்டப்படி செல்லாது. அரசின் முன் அனுமதி பெறாமல் அறக்கட்டளையை களைத்தது, விதிகளுக்கு முரணானது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என கூறியிருந்தனர். இதுதொடர்பாக, நேற்று நடந்த விசாரணையில், நித்யானந்தா தரப்பின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி குருவைய்யா, பிற மனுக்கள் மீதான விசாரணையை, பிப்., 1 க்கு தள்ளிவைத்தார்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=636025