12:37:03Tuesday2012-11-06
சென்னை:
நித்யானந்தா ஆசிரமம் தொடர்பான வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி மறுப்பு
தெரிவித்தார். சென்னை ஐகோர்ட்டில் நித்யானந்தா தாக்கல் செய்துள்ள வழக்கில்
கூறியிருப்பதாவது: திருவண்ணாமலையில் எனக்கு ஆசிரமம் உள்ளது. இங்கு தினசரி
பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. திடீரென இந்த ஆசிரமத்தை
கையகப்படுத்தப்போவதாக இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர் பாக
எனக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் ஆசிரமத்தை எடுத்துக் கொள்வதற்கான காரணம்
குறிப்பிடப்படவில்லை. இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்க 15 நாட்கள் மட்டுமே
அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசம் முடிவதற்குள், ஆசிரமத்தை
கையகப்படுத்தப் போவதாக பத்திரிகைகளில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்
பேட்டி அளித்துள்ளனர். இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். ஆசிரமத்தை
கையகப்படுத்தவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந் தார்.
இந்த வழக்கை நீதிபதி பால் வசந்தகுமார் இன்று விசாரித்தார். மனுதாரர் சார்பாக வக்கீல்கள் ராஜகோபால், பாலாடெய்சி ஆகியோர் ஆஜராகி, 'இந்து அறநிலையத்துறை நோட்டீசுக்கு பதில் அளிக்க தயாராக இருக்கிறோம். கூடுதல் அவகாசம் வேண்டும். கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும்' என்றனர். இந்து அறநிலைய துறை சார்பாக கூடுதல்அரசு வக்கீல் கந்தசாமி ஆஜராகி, 'எந்த தடையும் விதிக்கக்கூடாது' என்றார். வக்கீல் ராஜகோபால் குறுக்கிட்டு, 'எனது வாதம் முடியவில்லை. நீங்கள் உட்காருங்கள்' என்றார். இதைக் கேட்ட நீதிபதி பால்வசந்தகுமார், 'அரசு வக்கீலுக்கு நீங்கள் உத்தரவிடக்கூடாது. இந்த வழக்கை நான் விசாரிக்க விரும்பவில்லை. வேறு நீதிபதி விசாரணைக்காக கோப்புகளை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறேன்' என்றார்.
http://classifieds.dinakaran.com/News_Detail.asp?Nid=30203
http://dinamani.com/latest_news/article1330075.ece

No comments:
Post a Comment