21 November 2012 10:54 PM IST
திருவண்ணாமலை
நித்யானந்தா ஆஸ்ரமத்தில் இருந்த சுவாமி சிலைகள் மற்றும் லிங்கங்கள் பீடங்களிலிருந்து அகற்றி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு ஆஸ்ரமத்தை கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் நித்யானந்தா ஆஸ்ரமம் இயங்கி வருகிறது. இங்கு, நித்யானந்தேஸ்வரர்-நித்யானந்தேஸ்வரி சுவாமி சிலைகளுடன், 1008 லிங்கங்கள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்தன.
கையகப்படுத்த நடவடிக்கை: இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அண்மையில் நித்யானந்தா ஆஸ்ரமத்துக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. சுவாமி சிலைகள் வைத்து வழிபாடு நடத்தும் இடமாக இருப்பதால், இதை ஏன் இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தக் கூடாது என்றும், இதற்கான விளக்கத்தை 15 நாள்களுக்குள் அளிக்குமாறும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நித்யானந்தா ஆஸ்ரமம் அனைத்து மதத்தினரும் வழிபடும் பொது இடம்.
எனவே, இந்து சமய அறநிலயைத்துறையின் முயற்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஆஸ்ரமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இப்போது நடைபெற்று வருகிறது.
சுவாமி சிலைகள் திடீர் அகற்றம்: இதற்கிடையே, ஆஸ்ரமத்தில் இருந்த அனைத்து சிலைகளும் திங்கள்கிழமை இரவோடு, இரவாக அகற்றி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஆஸ்மரத்துக்கு வெளியே "இது தனியாருக்குச் சொந்தமான இடம். அனுமதி பெற்று உள்ளே வரவும்' என்ற தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
சிலைகள் வைக்கப்பட்டிருப்பதால்தான் இந்து சமய அறநிலையத்துறை இவ்விடத்தை கோயிலாக கணக்கிட்டு, ஆஸ்ரமத்தை கையகப்படுத்த முயற்சி மேற்கொள்கிறது. இந்த நடவடிக்கையை முறியடிக்கவே இந்த சிலைகள் அகற்றம் என கூறப்படுகிறது.
ஆஸ்ரமம் விளக்கம்: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை மாலை ஆஸ்ரமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை நித்யானந்தா தியான பீட ஆஸ்ரமத்தில், ஒரு சர்வமத தியான மையமும், இவ்வுலகத்தில் உள்ள அனைத்து மதங்களையும் சார்ந்த ஒரு ஆன்மிக பிரபஞ்சவியல் பூங்காவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்பணிகளுக்காக ஆஸ்ரமத்தில் இருந்த 1008 லிங்கங்கள் நகர்த்தி வைக்கப்பட்டுள்ளன.
http://dinamani.com/tamilnadu/article1347512.ece

No comments:
Post a Comment