மதுரை: மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய
அவகாசம்கோரி நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை ஆதீன
மடத்திற்குள் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் நுழைய தடை விதித்தும்,
மதுரைஆதீனமும், இளைய ஆதீனமாக நித்யானந்தா இருந்தபோது துவக்கிய அறக்கட்டளை
கலைக்கப்பட்டது தொடர்பாக மதுரை ஆதீனம் சார்பில் கோர்ட்டில் வழக்கு
தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் பதில் அளிக்க கோரி நித்யானந்தாவுக்கு
நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கால அவகாசம் கேட்டார்.
இதனையடுத்து நவம்பர் 27ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைத்து நீதிபதி
உத்தரவிட்டார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?id=592132
http://www.dinamalar.com/News_Detail.asp?id=592132
No comments:
Post a Comment