Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Wednesday, October 24, 2012

Protest against Nithyananda in Bidadi - Disappeared from Bidadi Also?

பிடதியில் நித்தியானந்தாவுக்கு எதிராக போராட்டம் - அங்கிருந்தும் அவர் தலைமறைவு? 

செவ்வாய்க்கிழமை , அக்டோபர் 23, 2012
மதுரை ஆதீன இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தா டிஸ்மிஸ் செய்யப்பட்டதையடுத்து திருவண்ணாமலையில் தங்கியிருந்த அவர் பிடதி ஆசிரமம் வந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து நேற்றுகாலை பிடதி மடத்தில் கர்நாடக கஸ்தூரி கன்னட சங்கம், கர்நாடக ரக்ஷண வேதிகே, கன்னட பாதுகாப்பு அமைப்பினர் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் பிடதி மடத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.
 
ஆசி ரம வாசலில் நித்யானந்தாவின் கொடும்பாவியை கன்னட அமைப்பினர் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையே, நித்யானந்தா ஆசிரமத்தில் இல்லை. தசரா பண்டிகை காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் கன்னட அமைப்பினர் ஈடுபட வேண்டாம் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிடதி ஆசிரமத்திலும் நித்யானந்தா இல்லை என்பதால் தலைமறைவாகியுள்ள அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது.
 Protest against Nithyananda in Bidadi - Disappeared from Bidadi Also?

 http://tamilmedia24.com/news/index.php?option=com_tamilportalnews&view=tamilportalnewsindia&id=1526

Tuesday, October 23, 2012

Kannada organisations have urged the govt of Karnataka to evict Nithyanantha from the state.

ராம்நகரம்: தமிழகத்தில் கைதாவதிலிருந்து தப்பிப்பதற்காக கர்நாடகத்திற்கு வந்து விட்ட நித்தியானந்தாவை, அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்துள்ளன.
மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டு சில மாத சர்ச்சைகளுக்குப் பின்னர் சில நாட்களுக்கு முன்பு அப்பதவியிலிருந்து விரட்டப்பட்டார் நித்தியானந்தா. மேலும் அவர் மீது மதுரை ஆதீனம், மதுரை போலீஸில் புகாரும் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் நித்தியானந்தாவை தூக்கி உள்ளே போட போலீஸார் முயலலாம் என்று செய்தி பரவியது. இதையடுத்து நித்தியானந்தா திருவண்ணாமலையிலிருந்து பிடதி ஆசிரமத்திற்கு ஓடி விட்டார்.
அவர் பிடதிக்கு வந்துள்ளதால் கர்நாடகத்தில் ஏற்கனவே அவர் மீது கடும் கோபத்தில் உள்ள கன்னட அமைப்புகள் மேலும் கோபமடைந்துள்ளன. நித்தியானந்தாவை கர்நாடகத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று கோரி, நேற்று இரவு முதல் கர்நாடக கஸ்தூரி கன்னட சங்கம் தலைமையில் பல்வேறு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சாலையில் டயர்களைப் போட்டுக் கொளுத்தியும், நித்தியானந்தாவின் படத்துக்கு தீ வைத்தும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஆசிரமத்தைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நித்தியானந்தாவை கர்நாடகத்தை விட்டு வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளதால், நித்தியானந்தாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 http://tamil.oneindia.in/news/2012/10/23/india-kannada-organisations-protest-against-nithyanantha-163605.html

TV9 Special: Nithyananda Out of Aadheenam, Where Next...? 'Ellige Payana Yaavudo Daari' - Full


TV9 Exclusive : Suspicious CD's Found Inside Nithyananda's Ashram Premises


மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை- த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு

செவ்வாய், 23 அக்டோபர் 2012( 10:20 IST  
 
இளைய ஆ‌தீனம் பொறுப்பில் இருந்து நித்யானந்தாவை நீக்கிவிட்டாலும், மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் மீதான நடவடிக்கைகள் தொடரும் என்று தமிழக அரசு கூ‌றியு‌ள்ளது.

ென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய த‌மிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், ஆதீனம் உயிரோடு இருக்கும்போது இளைய ஆதீனத்தை நியமிக்க முடியாது என்றும், அவ்வாறு நியமித்தது தவறு என்றும் கூ‌றினா‌ர்.

அவ்வாறு நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் தனது சீடர்களில் ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும் என்றும், அவர் எந்தவித சட்டரீதியான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாதவராக இருக்க வேண்டும் என்றும் நவநீத கிருஷ்ணன் கூறினார்.

ித்யானந்தா நியமனத்தால் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து மதுரை ஆதீனத்தின் நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள அனுமதி கோரி இந்து அறநிலையத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நித்யானந்தா இளைய ஆதினம் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் மதுரை ஆதீனம் மீதான நடவடிக்கை தொடரும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


 http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1210/23/1121023007_1.htm

நித்யானந்தா கட்டுப்பாட்டில் இளம் பெண்கள் இளைஞர்களை மீட்க அரசு நடவடிக்கை வேண்டும்

நித்யானந்தா
கட்டுப்பாட்டில் உள்ள இளம் பெண்கள், இளைஞர்களை மீட்க அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று மதுரை ஆதீன மீட்பு குழு தலைவர் நெல்லை கண்ணன்
கூறினார்.இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர்
கூறியதாவது:மதுரை ஆதீன இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தாவை
நீக்கியது எங்களுக்கு முழு வெற்றியை தரவில்லை. ஐகோர்ட் நடவடிக்கையை
தொடர்ந்தும், தனது பதவிக்கு ஆபத்து வந்து விட கூடாது என்ற பயத்திலும் மதுரை
இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தாவை, மதுரை ஆதீனம் அருணகிரி
நாதர் நீக்கியுள்ளார்.இதனை தொடர்ந்து உடனடியாக தர்மபுரம் அல்லது
திருப்பனந்தாள் மடத்தில்இருந்து பயிற்சி பெற்ற கட்டளை தம்பிரானை மதுரை
ஆதீனத்தில் இளைய சன்னிதானமாக நியமிக்கப்பட வேண்டும்.பின்னர்
இப்பிரச்னைகளுக்கு காரணமாக மதுரை ஆதீனம் பதவியில் இருந்து அருணகிரி நாதர்
விலக வேண்டும். மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் இணைந்து தொடங்கிய
டிரஸ்ட்டை உடனடியாக கலைக்க வேண்டும்.நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள்
பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடனடியாக அரசு அவரை கைது செய்து சிறையில் அடைக்க

வேண்டும். நித்யானந்தா கட்டுப்பாட்டில் உள்ள இளம் பெண்கள், இளைஞர்களை
மீட்டு மருத்துவ பரிசோதனை நடத்தி போதை பழக்கங்களில் இருந்து அவர்களை
விடுவித்து பெற்றோர்களிடம் அவர்களை ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.மதுரை ஆதீன மடத்தை அரசு கையகப்படுத்த கூடாது. இதுகுறித்து
கருத்து தெரிவித்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு நன்றி
தெரிவிக்கிறோம். தமிழக முதல்வர் முழுமையாக தலையிட்டு அனைத்து
கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

http://tamil.yahoo.com

Mind Control Cults


பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா தஞ்சம்: கன்னட அமைப்பினர் போராட்டம்

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2012,00:06 IST
பெங்களூரு: தமிழகத்திலிருந்து துரத்தப்பட்ட நித்யானந்தா, மீண்டும் கர்நாடக மாநிலம், பிடதிக்கு வந்ததை அறிந்த கன்னட அமைப்பினர், அவருக்கு எதிராக
போராட்டத்தில் குதித்தனர். நித்யானந்தா படத்தை தீ வைத்து கொளுத்தினர்; தியான பீடத்தை சுற்றிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.மதுரை ஆதினத்தின் இளைய ஆதினமாக, நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
"அவரது நியமனம் செல்லாது' என, நீதிமன்றத்தில் வாதிட்டனர். மதுரை ஆதின சொத்துக்களை கைப்பற்ற நித்யானந்தா திட்டமிட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நித்யானந்தா, இளைய ஆதினமாக
நியமிக்கப்பட்டதை, மதுரை ஆதினம் ரத்து செய்தார்.


அடைக்கலம்:இதையடுத்து, தன் சொந்த ஊரான திருவண்ணாமலையில் அடைக்கலம் புகுந்த நித்யானந்தாவுக்கு, அங்கும் எதிர்ப்பு அதிகரித்தது. தன் ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின், பிடதியிலுள்ள தன் ஆசிரமத்துக்கு, நேற்று முன்தினம் மாலை, 4:30 மணியளவில் வந்தார்.இந்த தகவலறிந்த, கர்நாடகா நவ நிர்மாண சேனை அமைப்பு தலைவர், பீமா சங்கர் பாட்டீல் தலைமையில், 25 பேர், நேற்று முன்தினம் இரவில், ஆசிரமத்துக்கு வந்து, நுழைவு வாயில் முன்பிருந்த, நித்யானந்தா விளம்பர போர்டுகளை அகற்றினர்.டயர்களை எரித்து போராட்டத்தில் குதித்தனர்.

"நித்யானந்தா பிடதி ஆசிரமத்தில் இருக்க கூடாது; கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும்' என, கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தினால், ஆசிரமத்திலுள்ளவர்கள், ஆசிரம வாசலுக்கு பூட்டுப் போட்டனர்.கலைத்தனர்;இதை அறிந்த, ஒரு வேனில் வந்த ரிசர்வ் போலீசார், போராட்டக்காரர்களை கலைத்தனர்.நேற்று காலை, கர்நாடகா ஜனபர வேதிகே அமைப்பின் தலைவர், ரமேஷ் கவுடா தலைமையில், 25 பேர் ஆசிரமம் முன் கூடினர். நித்யானந்தாவை கண்டித்து கோஷம் எழுப்பினர். டயர்களை எரித்தும், நித்யானந்தா படத்தை எரித்தும் போராட்டம் நடத்தினர்.ஆசிரமத்துக்குள் செல்ல முற்பட்ட, கன்னட அமைப்பினரை போலீசார் தடுத்தனர். இதனால், ஆசிரம நுழைவு வாயில் முன், மதியம் ஒரு மணி வரை தர்ணாவில் ஈடுபட்டனர்.

பாத யாத்திரைரமேஷ் கவுடா கூறுகையில், ""பிடதி ஆசிரமத்திலிருந்து நித்யானந்தா காலி செய்து வெளியேற வேண்டும். அப்படியும் காலி செய்யவில்லை என்றால், எங்களின் போராட்டம் தொடரும். கர்நாடகா முழுவதும் போராட்டம் வெடிக்கும்; ராம்நகரிலிருந்து பிடதி ஆஸ்ரமத்துக்கு பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளோம்,'' என்றார். 

 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=571079

Monday, October 22, 2012

Protest against Nithyanada in Bidadi Suvarna News 22-Oct-2012.


News Lunch - Nithyananda is back to Bidadi - 20 Oct 2012 - Suvarna News பிடதி ஆசிரமத்தில் மறைந்துள்ள நித்தியை வெளியேற்றக்கோரி கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்! நித்யானந்தாவை இளைய ஆதின பதவியில் இருந்து நீக்கியதாக மதுரை ஆதினம் அருணகிரிநாதர் கடந்த 19.10.2012 வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தார். இதையடுத்து நித்யானந்தா திருவண்ணாமலையில் இருந்து வெளியேறி கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் ஓடி மறைந்துள்ளார். இதனை அறிந்து அங்கு திரண்ட கன்னட அமைப்பினர், நித்யானந்தாவின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். வரும் வெள்ளிக்கிழமைக்குள் நித்யானந்தாவை வெளியேற்றாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும் கஸ்தூரி கன்னட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த அமைப்பினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் பல்வேறு புகார்களுக்குள்ளானவர் நித்யானந்தா. அவர் கர்நாடக மாநிலத்திற்குள் வரக்கூடாது. கர்நாடக அரசு அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். உங்களால் விரட்ட முடியாவிட்டால் அப்பணியை எங்களிடம் ஒப்படையுங்கள். வரும் வெள்ளிக்கிழமைக்குள் நித்யானந்தாவை வெளியேற்ற வேண்டும். இல்லை என்றால் வெள்ளிக்கிழமை அன்றே பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர். பிடதி ஆசிரமத்திற்கு வெளியே பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=84749

Nithyanandavin Latest Dappankuthu Video Song


TV9 - Tight security near Nithyananda ashram


Tight security near Nithyananda ashram




Security has been tightened in the vicinity of Nithyananda Dhyanapeetam in Bidadi in Ramanagaram district on Sunday night following a flash protest by Kannada activists against the return of controversial godman Nithyananda to the ashram.
Nithyananda, who was embroiled in a sex scandal, returned to the ashram on Sunday soon after Sri Arunagirinathar, the 292nd head of Madurai Adheenam, removed him from the position of junior seer of the adheenam.

Tyres burnt
Members of a Kannada organisation demonstrated and burned tyres in front of the Nithyananda Dhyanapeetam in Bidadi demanding the controversial godman leave Karnataka. The ashram residents locked all entry points.
“Sri Arunagirinathar has sacked Nithyananda from his successor’s post. Nithyananda should leave Karnataka until charges registered against him are dropped,” a protester told The Hindu .
The Ramanagaram police chased away the protesters but as a precautionary measure, moved Karnataka State Reserve Police personnel to the ashram to ensure the safety of the inmates.
“The situation is peaceful,” Deputy Superintendent of Police (Ramanagaram Subdivision) Ramalingappa, said on Sunday night.

Kannada activists demand he should leave Karnataka
 http://www.thehindu.com/todays-paper/tp-national/tight-security-near-nithyananda-ashram/article4020862.ece

Nithyanantha has rushed to Bidadi ashram to avoid arrest in Tamil Nadu

திருவண்ணாமலை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கொடுத்துள்ள போலீஸ் புகாரின் பேரில் தான் கைது செய்யப்படலாம் என்று அஞ்சும் நித்தியானந்தா, தமிழகத்தை விட்டே போய் விட்டார். அவர் தற்போது கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்திற்குப் போயிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அருணகிரிநாதரால் பட்டம் சூட்டப்பட்ட நித்தியானந்தா, அதே அருணகிரிநாதரால் நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் மதுரை ஆதீன மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், மதுரை ஆதீனம் சார்பில் விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், நித்தியானந்தாவை நீக்கியிருப்பதால், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியிருந்தார்.
இதையடுத்து அந்தப் புகாரின் பேரில் நித்தியானந்தாவை தூக்கி உள்ளே போட காவல்துறையினர் தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதை உணர்ந்த நித்தியானந்தா, தனது திருவண்ணாமலை மடத்தை விட்டு வெளியேறி விட்டாராம்.
அவர் தற்போது பிடதி ஆசிரமத்திற்குப் போய் விட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து திருவண்ணாமலை மடத்தின் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், சுவாமி தலைமறைவாகவில்லை. ஆதீனப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு திருவண்ணாமலையில் அவருக்கு சில நெருக்கடிகள் ஏற்பட்டன. இதைத் தவிர்க்க அவர் தனது சீடர்களுடன் பிடதி ஆஸ்ரமத்துக்கு சனிக்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் அவர் பங்கேற்கிறார். இத்துடன், அங்கு இம் மாதம் 28-ம் தேதி வரை நித்யானந்தாவே தியானப் பயற்சி நடத்துகிறார். திருவண்ணாமலைக்கு அவர் எப்போது வருவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றனர்.
ஆனால் இப்போதைக்கு அவர் தமிழ்நாட்டுப் பக்கம் வருவதற்கான வாய்ப்பில்லை என்கிறார்கள். ஏற்கனவே பிடதி ஆசிரமத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு தமிழகத்திற்கு வந்தார் நித்தியானந்தா. தற்போது மறுபடியும் அதே பிடதிக்குப் போயுள்ளார். ஏற்கனவே கர்நாடகத்திலும் அவருக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் இருப்பது நினைவிருக்கலாம்.

 Nithyanantha has rushed to Bidadi ashram to avoid arrest in Tamil Nadu after Madurai Aadheenam Arunagirinathar given a complaint against him in Madurai police station.

 http://tamil.oneindia.in/news/2012/10/22/tamilnadu-nithyanantha-rushes-bidadi-ashram-163519.html
 ----------------------------------------------------------------------------------
 தலைமறைவான நித்யானந்தா, பிடதி ஆசிரமத்தில் தஞ்சம்

 திங்கட்கிழமை, அக்டோபர் 22, 9:41 AM IST

சென்னை, அக்.22-
 மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆதீனத்தின் சொத்துக்களை காப்பாற்ற ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. ஆதீன சொத்துக்களை மீட்கவும், மடத்தை அரசே எடுத்துக் கொள்ளவும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நீக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையும் மதுரை சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்யானந்தா நீக்கப்படுவதாக மதுரை ஆதீனம் அறிவித்தார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மதுரை ஆதீனம் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து மடத்தில் இருந்த நித்யானந்தா சீடர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
மதுரை ஆதீனம் கொடுத்த புகாரின் பேரில் நித்யானந்தா கைது செய்யப்படலாம் என்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் இருந்த நித்யானந்தா தலைமறைவானார். ஆனால் அவர் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் கூறியதாவது:-
நித்யானந்தா தலைமறைவாகவில்லை. ஆதீன பொறுப்பில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்ட பிறகு திருவண்ணாமலையில் அவருக்கு சில நெருக்கடி ஏற்பட்டது. இதை தவிர்க்க தனது சீடர்களுடன் அவர் பிடதி ஆஸ்ரமத்துக்கு சென்றுள்ளார்.
 
 http://www.maalaimalar.com/2012/10/22094159/nithyananda-refuge-in-the-bida.html

-----------------------------------------------------------------------------------

திருவண்ணாமலையில் இருந்து

நித்யானந்தா தப்பியோட்டம்

 10/22/2012 6:36:18 AM

 திருவண்ணாமலை:மதுரை ஆதீனம் போலீசில் கொடுத்துள்ள புகாரின்பேரில் கைது செய்யப்படலாம் என்ற பயத்தால், திருவண்ணாமலை ஆசிரமத்தில் தங்கியிருந்த நித்யானந்தா இரவோடு இரவாக தலைமறைவாகி விட்டார். பெங்களூர் பிடதி ஆசிரமத்துக்கு சென்றிருப்பதாக அவரது சீடர்கள் தெரிவித்தனர்.மதுரை ஆதீனத்தின் 293வது இளைய மடாதிபதியாக நித்யானந்தாவை கடந்த ஏப்ரலில் ஆதீனம் அருணகிரிநாதர் நியமித் தார். அதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கண்டன போராட்டங்களும் நடந்தன. நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்தது செல்லாது, அவர் தகுதியற்றவர் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. மேலும், மதுரை ஆதீன மடத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டது.அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்களால் நிலைகுலைந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், அதிரடியாக இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தாவை டிஸ்மிஸ் செய் தார். மேலும், நித்யானந்தாவால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம், அவர் தொலைபேசியில் என்னை மிரட்டுகிறார், அவரது சீடர்கள் அடியாட்கள் போல இருக்கின்றனர் என மதுரை போலீஸ் கமிஷனரிடம் ஆதீனம் அருணகிரிநாதர் புகார் செய்துள்ளார்.

அதனால், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த நித்யானந்தா அதிர்ச்சியும், பீதியும் அடைந்தார். ஆசிரமத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. முக்கிய சீடர்கள், மதுரை ஆதீனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சீடர்கள் மற்றும் வக்கீல்களுடன் ரகசிய ஆலோசனையில் நித்யானந்தா ஈடுபட்டார்.
மதுரை ஆதீனம் கொடுத்துள்ள புகாரின் பேரில், கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என நித்யானந்தாவிடம் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கொலை மிரட்டல் என நேரடியாக புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாலும், தமிழக அரசு சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அருகதையற்றவர் என கடுமையாக கருத்து தெரிவித்து இருப்பதாலும் கைதானால் ஜாமீன் பெறுவது மிகவும் சிரமம் என நித்யானந்தாவுக்கு விளக்கியுள்ளனர்.இந்த குழப்பமான நிலையில், ஆசிரமத்தில் யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்த நித்யானந்தா, நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் திருவண்ணாமலையில் உள்ள அவரது ஆசிரமத்தில் இருந்து திடீரென தலைமறைவாகிவிட்டார். அவருடன், மதுரை ஆதீனத்தில் தங்கியிருந்த சீடர்களும் தலைமறைவாகி விட்டனர். அவரது உதவியா ளர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து, ஆசிரமத்தில் தற்போதுள்ள சீடர்கள் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள பிடதி ஆசிரமத்துக்கு நித்யானந்தா சென்றிருப்பதாக தெரிவித்தனர்.

 http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=28757

TV9 - Nithyananda is thrown from Adhinam matam


Sunday, October 21, 2012

Nithyananda absconding suddenly from Tiruvannamalai - Dhyanapeetam abandoned ???


 தி.மலையிலிருந்து நித்தியானந்தா திடீர் தலை மறைவு - தியான பீடம் வெறிச்சோடியது
திருவண்ணாமலை: திருவண்ணாமலையிலிருந்து நித்தியானந்தா திடீர் தலை மறைவானதையடுத்து கிரிவலப்பாதையில் உள்ள தியான பீடம் வெறிச்சோடியது. திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள தியான பீடத்தில் கடந்த 20நாட்களுக்கும் மேலாக நித்யானந்தா தங்கி தியான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி அளித்து வந்தார்.மேலும் இங்கு நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தது, இதனை முன்னிட்டு தினமும் பாட்டு கச்சேரி நடத்தப்பட்டு வந்தது.தற்போது இளைய ஆதினப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து நித்யானந்தா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். இளைய ஆதின பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவரது நெருங்கிய தொடர்புடைய முக்கிய பிரமுகர், மற்றும் அவரது சீடர்களிடம் 19ஆம் தேதி இரவு முழுவதும் விடிய விடிய ஆலோசனை நடத்தினார்.பின்னர் நேற்று 20ஆம் தேதி மாலை நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார், அப்போது நவராத்திரி விழா முடியும் வரை இங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கப்படும் என்று கூறி வந்தார்.ஆனால் தியான பயிற்சி முகாம் வரும் 28ஆம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் திடீரென நித்யானந்தா இரவோடு இரவாக தலைமறைவாகி விட்டார்.பின்னர் அதனை தொடர்ந்து இன்று காலை முதல் மாலை வரை அவரது சீடர்கள் மற்றும் தியான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்டவர்களும் ஒவ்வொரு குழுவினராக பிரிந்து திருவண்ணாமலை தியான பீடத்திலிருந்து காலி செய்து கொண்டு பெங்களூர் சென்றனர்.பின்னர் இது குறித்து தியான பீடத்தில் இருந்த அவர்களின் சீடர்களிடம் கேட்டபோது, அவர்கள் பதிலளிக்கையில்,தியான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பெங்களூர் ஆசிரமத்தில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது, அனைவரும் பெங்களூரில் உள்ளனர் என்று தெரிவித்தனர்.வரும் 28ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் தியான பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று கூறிவிட்டு திடீரென அவர் பெங்களூர் சென்றது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=570231