Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Saturday, June 29, 2013

Nithyananda News by Nakkeeran is Truth, Court rules - நித்யானந்தா பற்றி நக்கீரன் செய்திகள் அனைத்தும் உண்மை - நீதிமன்றம் தீர்ப்பு !

In a huge victory for truth and the right of media to publish truths in service of the public, a court in Chennai has ruled that news about Nithyananda published by Nakeeran magazine (since 2010) is truth!! The key points in this judgment (as also the Tamil article below) are summarized here:

  • Nithyananda's defamation case against Nakkeeran fails to establish any motive for defaming him. 

  • Nithy's image was already damaged by the video telecasts on Mar 2nd (2010), as per complaint of Nithyananda's ashram manager. Subsequently many other magazines published many news about him. So Nakkeeran did not do anything additional to bring down his image or defame him.

  • Nithy claims himself to be an avatar of God (as published in his own book) - therefore nothing about him can be private as he is accountable to the public. And hence it is the duty of the media to make public know about such a person.

  • Ashram has itself submitted to the court, the FSL (Forensic Science Lab, premiere Forensic lab of the country) lab report and forensic expert Dr. Chandra Shekar's reports confirming that video is authentic and not morphed. From their own submissions it is clear that Nakkeeran only published the truth

  • Judge has noted that plaintiffs (Nithy's ashram) have themselves admitted that devotees have signed NDA (sex contracts) - which has been published by Nakkeeran and hence no false representation was made.




சனிக்கிழமை, 29, ஜூன் 2013 (9:44 IST)

              நக்கீரன் மீண்டும் ஒரு முறை நீதியின் துணையுடன், பத்திரிகை சுதந்திரத்தையும் கருத்துரிமை யையும் நிலைநாட்டியிருக்கிறது. இந்த முறை நடந்த சட்டப்போர் என்பது அரசியல்வாதிகளுடனோ,  அல்ல ஆன்மிகப் போலியுடன்.

நித்யானந்தா சாமியாரின் போலித்தன்மையை ஆரம்பத்திலேயே அம்பலப்படுத்தியது நக்கீரன்தான். 2008-ம் ஆண்டிலேயே நித்தி கல்லூரி மாணவிகளை கட்டிப்பிடித்து போலித்தனமாக ஆசிர்வாதம் செய்யும் கீழ்த்தரமான நடவடிக்கையை நக்கீரன் அம்பலப்படுத்தியிருந்ததால் அவரைப் பற்றி தொடர்ந்து புலனாய்வு செய்து, ஆன்மிகத்தின் பேரில் தன்னை கடவுளின் அவதாரம் என கூறிக் கொண்டு பொது மக்களிடமிருந்து லட்சக்கணக் கான தொகையை வசூல் செய்து பிரசங்கம் என்ற பெயரில் மோசடி செய்வதையும், இளம் பெண் களிடம் ஒப்பந்தம் போட்டு செக்ஸ் வைத்திருந்த தையும், பாதிக்கப்பட்டவர்களின் பேட்டி, புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுடன் 2010 மார்ச் மாதத்தில் நக்கீரன் வெளியிட்டது.

தொடர்ந்து தனது அந்தரங்க லீலைகள் மற்றும் மோசடிகள் நக்கீரனால் அம்பலமாவதை தடுக்க, நித்தி பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்ததோடு, ரஞ்சிதா மற்றும் நித்தியின் கூட்டாளிகள் பலபேர் தமிழக-கர்நாடக இருமாநிலங்களிலும் நக்கீரன் மீது அடுக்கடுக்காய் வழக்குகள் தாக்கல் செய்தனர். அதில் ஒரு வழக்காக நித்தி டிரஸ்டியாக இருக்கும் தியானபீட சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக அதன் ஒரு டிரஸ்டியான நித்ய சதானந்தா தொடர்ந்த வழக்கில், நித்தி பற்றியோ, தியான பீடத்தை பற்றியோ அதன் பக்தர்கள் பற்றியோ எந்தவிதமான செய்தியோ, புகைப் படங்களோ நக்கீரன் பத்திரிகையிலோ அல்லது நக்கீரன் வெப்சைட்டிலோ வெளியிடக்கூடாது என்று நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று கோரி உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 


சென்னை மாநகர உரிமையியல் 19-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது வழக் கறிஞர்கள் பி.டி.பெருமாள், எல்.சிவகுமார், வி.வர்கீஸ் ஆகியோர் நமக்காக வழக்கில் ஆஜராகி வாதம் செய்து வந்தார்கள். விசாரணையின் போது நமது தரப்பில், நக்கீரன் செய்தி உண்மையானது எனவும், உள்நோக்கமற் றது எனவும், நித்தி மற்றும் நித்தியின் மடத்திற்கு ஏற் கனவே நற்பெயரோ, மதிப்போ, மரியாதையோ இல்லை எனவும் நக்கீரன் செய்தியால் நித்திக்கும் அவரது மடத்திற்கும் எந்தவித இழப்போ நஷ்டமோ ஏற்பட வில்லை எனவும் நிரூபிக்கும் வண்ணம் 3 சாட்சிகளும் 38 ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

குறிப்பாக, தன்னை கடவுளின் அவதாரம் என்று நித்தி தன்னைப் பற்றிய புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதை நீதிமன்றத்தின் பார்வைக்கு வைத்து, அவர் பொதுமனிதர் என்பதால், ஒரு பொது மனிதரைப் பற்றிய விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பது பத்திரிகையின் கடமை என்பதையும் நம் தரப்பு வாதத்தில் எடுத்து வைத்தோம். அத்துடன் பொதுவான சட்டவிதிப்படி தன்னைப் பற்றி செய்தி பிரசுரிக்கக்கூடாது என செய்தி வருவதற்கு முன்பே எவரும் தடை கேட்டு வழக்குத் தொடர முடியாது என வாதிட்ட துடன், பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகையின் கடமை குறித்து நக்கீரன் ஏற்கனவே ஆட்டோ சங்கர் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பெற்றுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பையும் [(1994) 6 Supreme Court Cases 632 R.Rajagopal @ R.R.Gopal Vs State of Tamilnadu] நீதிமன்றத்தின் முன் வைத்தோம்.

செய்தி வெளியானபிறகு பாதிப்பு ஏற்பட்டதாக நித்யானந்தா கருதினால், அவர் தனிப்பட்ட முறையில்தான் வழக்கு தொடர முடியும், தியான பீட டிரஸ்ட் சார்பில் இந்த வழக்கை தொடர சதானந்தாவிற்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்பதையும் ஆவணங்களுடன் மேற்கோள் காட்டி வாதாடினார் நமது வழக்கறிஞர் பி.டி.பெருமாள்.

நித்யானந்தா-ரஞ்சிதா ஆகியோரின் நெருக்கமான படுக்கையறைக் காட்சிகள் முதலில் 2-3-2010 அன்று இரவு டி.வி. மீடியாக்களில் வெளியானது. அச்செய்தி, புகைப்படங்களுடன் 3.3.2010 அன்று நக்கீரனில் வெளியானது. அதைத் தொடர்ந்து லெனின் கருப்பன் கொடுத்த புகாரின் பேரில் நித்தி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். மேலும் பல புகார்கள் நித்தி மீது சுமத்தப்பட்ட நிலையில் பெண்களிடம் ஒப்பந்தம் போட்டு செக்ஸ் வைத்துக் கொண்ட நித்தியின் நடவடிக்கைகள் போலித்தனமானது, சட்ட விரோதமானது, மத உணர்வுக்கு எதிரானது என்பதை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் நித்தி சம்பந்தப்பட்ட குற்றச்செய்திகள் அனைத்தையும் நக்கீரன் தனது அடுத்தடுத்த இதழ்களில் வெளிக் கொண்டு வந்தது.

டி.வியில் நித்யானந்தா-ரஞ்சிதா பற்றிய காட்சிகள் வெளியானபோதே, நித்தியின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டு ஆசிரம சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக அந்த ஆசிரம மேலாளர் ஆத்ம பிரபானந்தா போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரில் கூறியிருக்கிறார். எனவே, 2010 மார்ச் 2-ந் தேதி இரவே நித்தியின் புகழ் களங்கப்பட்டுவிட்டது என்பதை அவரது ஆசிரமமே ஒப்புக்கொள்ளும் நிலையில், மார்ச் 3-ந் தேதி நக்கீரன் வெளியிட்ட செய்தியால்தான் நித்தியின் புகழ் களங்க மடைந்தது என வழக்குத் தொடுத்திருப்பது பொருத்தமற்றது எனவும் நமது வழக்கறிஞர் பி.டி.பெருமாள் வாதாடினார்.

நக்கீரன் அம்பலப்படுத்திய நித்தியின் லீலைகள், செக்ஸ் மோசடிகள், அனைத்தும் அதன்பின், 2011-ல் பல்வேறு இதழ்களிலும், செய்தித்தாள்களிலும் வந்திருப்பதையும் சுட்டிக்காட்டி அந்த இதழ்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததோடு, நித்தியின் முன்னாள் பக்தர் ஒருவர் ""சரசம் சல்லாபம் சாமியார்'' என நித்தியைப் பற்றியும், ஆசிரமத்தைப் பற்றியும் ஒரு பத்திரிகையில் 30 வார தொடராக எழுதியதையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அந்தப் பத்திரிகைகளின் மீதெல்லாம் வழக்குப் போடாத நித்தி நக்கீரனை மட்டும் தேர்வு செய்து தடை கேட்கும் இந்த வழக்கு ஏற்புடையதல்ல எனவும் வாதாடினார்.


நித்தி-ரஞ்சி சம்பந்தப்பட்ட வீடியோ உண்மையானதுதான் என தடயவியல் நிபுணர் சந்திரசேகர் அளித்த அறிக்கை, டில்லி தடய அறிவியல் கூடம் அளித்துள்ள அறிக்கை இவற்றை வாதி ஆசிரமமே நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பு ஆவணங்களாக தாக்கல் செய்திருப்பதை நீதிமன்ற பார்வைக்கு கொண்டு வந்தனர் நமது வழக்கறிஞர்கள். மேலும், 2-3-2010-ல் நித்தி ஆசிரமம் பொதுமக்களால் சூறையாடப்பட்டு நித்தியும் அவரது கூட்டாளிகளும் அவமரியாதைப்படுத்தப் பட்ட செய்திகள் அடங்கிய சி.டி.யும், நீதிமன்றங்கள் மற்றும் காவல்நிலையங்களில் நித்தி தரப்பு கூறும் பொய் பித்தலாட்டங்களை நிரூபிக்கும் ஆவணங்கள் என அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நமது வழக்கறிஞர் பி.டி.பெருமாள் வாதாடினார்.

இருதரப்பு சாட்சியங்களையும், ஆவணங்களை யும் மற்றும் வாதங்களையும் பரிசீலித்த, சென்னை மாநகர உரிமையியல் 19-வது கூடுதல் நீதிபதி திருமதி.அ.கயல்விழி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த நீண்ட தீர்ப்பை வழங்கினார். "ஆசிரமத்திற்கும், நக்கீரனுக்கும் எவ்விதமான முன் தொடர்பும் இல்லை என்பதோடு எந்தவித உள்நோக்கமும் இல்லை என ஆசிரம தரப்பு சாட்சி ஒத்துக் கொள்வ தாலும் இச்செய்தி உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்பட்ட செய்தி அல்ல.

அவதூறு வழக்கு சம்பந்தப்பட்ட சட்ட நுணுக்கங்களை ஆராயும்போது, வாதியான ஆசிரமம் முதலில் இந்த செய்திகள் அவதூறானது என்று அறிவிக்க (விளம்புகை) கோரியிருக்க வேண்டும், தடை (உறுத்துகட்டளை) கோர இயலாது. தடை விதிக்க சட்டத்தில் இடம் இல்லை.

மேலும் நித்யானந்தா-ரஞ்சிதா தொடர்பான சி.டி. உண்மையானது தான் மார்பிங் செய்யப்பட்டது அல்ல என சான்றளிக்கப்பட்ட தடய அறிவியல் அறிக்கைகளை நீதிமன்றத்தில் ஆவணங் களாக வாதி ஆசிரமத் தரப்பு தாக்கல் செய்ததன் மூலம், தங்கள் பத்திரிகையில் உண்மைச் செய்திகளையே வெளியிடுவ தாக கூறும் நக்கீரன் தரப்பு வாதத்திற்கு ஆசிரம தரப்பு துணை நின்று, அதனை ஒத்துக்கொள்வதாக இந்நீதிமன்றம் கருதுகிறது.

ஆசிரமத் தரப்பு சாட்சியான அதன் மேலாளர் எனக் கூறும் ஆத்ம பிரபானந்தா தனது சாட்சியத்தில், 2-3-2010-க்கு முன்பே பலமுறை ரஞ்சிதா ஆசிரமத்திற்கு வந்து செல்வார் எனவும், ஆசிரமத்தில் தங்குவார் என்றும் ஒப்புக் கொண் டுள்ளதிலிருந்தும், 2008-ல் சதானந்தா தியான பீடம் சார்பாக நித்யானந்தா பற்றி நக்கீரனுக்கு கொடுத்த அறிக்கைகள் மற்றும் படங்களை நக்கீரன் வெளியிட் டது உண்மைதான் என ஒப்புக் கொள்வதிலிருந்தும், லெனின் கருப்பன், ஆர்த்திராவ் ஆகியோர் தங்கள் ஆசிரமத்தின் பக்தர்கள் என்றும், தியான வகுப்பு களுக்கு வந்து செல்வார்கள் என்று தனது சாட்சியத்தில் கூறுவதிலிருந்தும் பிடதி ஆசிரமத்தில் பயில வரும் பெண்களுடன் ஒப்பந்தம் (சர்ய்லிஉண்ள்ஸ்ரீப்ர்ள்ன்ழ்ங் ஆஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற்) செய்வது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டு சாட்சியம் அளித்திருப்பதின் மூலமும் நக்கீரனில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் உண்மை செய்திகளே அன்றி தவறான செய்திகள் அல்ல என்பதை வாதி தரப்பே ஒப்புக் கொள்கிறார்கள். 

நக்கீரனில் வெளியான செய்திகள் மூலம் ஆசிரமத்திற்கோ, நித்யானந்தாவிற்கோ எந்தவித இழப்போ நஷ்டமோ ஏற்படவில்லை என்று நக்கீரன் சாட்சிகள் கூறுகின்றனர். இவற்றை மறுத்து நிரூபிக்கும் வகையில் ஆசிரம தரப்பினர் பிரதிவாதி நக்கீரன் சாட்சிகளை குறுக்கு விசா ரணை செய்யவில்லை, எதிர் ஆவணம் எதையும் தாக்கல் செய்யவுமில்லை. இந்நிலையில், ஆசிரமத்தை பற்றியும் நித்யானந்தா பற்றியும் உண்மைச் செய்திகளை  நல்லெண்ண நோக்கத்தோடு நக்கீரன் பிரசுரித்திருப்பதை சாட்சிய ஆவணங்கள் வாயிலாக இந்த நீதிமன்றம் அறிகின்ற வகையில், நித்யானந்தாவிற்கு எதிராக தீய எண்ண அடிப்படையில் எந்த செய்திகளையும் நக்கீரன் பிர சுரிக்கவில்லை என்றும் நக்கீரனில் வந்த உண்மை செய்தியினால் நித்யானந்தாவின் நன்மதிப்பிற்கு இழப்பு எதுவும் ஏற் படவில்லை என்றும், நக்கீரனில் பிரசுர மானது நல்லெண்ண அடிப்படையி லானது என்றும் இந்த வழக்கு நிலைக் கத்தக்கதல்ல என்றும் தியானபீட ஆசிரமம் கோரியது தடை பரிகாரம் மட்டுமே, அந்தப் பரிகாரமும் கிடைக்கத் தக்கதல்ல என தீர்மானித்து இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' எனத் தீர்ப்பளித்தார்.

அரைகுறை ஆன்மிகத்துடன், மக்களிடமுள்ள கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான கோடி களுக்கு அதிபதியாகி, அற்ப விஷயங் களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கார்ப்பரேட் சாமியார் நித்யானந்தா, தனது சுயரூபத்தை அம்பலப்படுத்திய நக்கீரனைத் தனது பணபலத்தாலும் அதிகாரம் படைத்த சிலரின் நட்பாலும் ஒடுக்க நினைத்தார். ஆனால் போலி ஆன்மிகவாதி நித்தியின்  முகத்திரையை நக்கீரன் கிழித்ததுடன், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க மீண்டும் ஒரு சட்டப் போராட்டம் நடத்தி பரபரப்பான இந்த நீதிமன்றத் தீர்ப்பினை பெற்றதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்திற்கானப் புதிய பரிமாணத்தை நக்கீரன் நிலை நாட்டியுள்ளது.

Saturday, June 8, 2013

VICTORY IN USA AGAINST NITHYANANDA’S INTIMIDATION AND HARASSMENT!

US court dismisses 3 frivolous cases filed by Nithyananda Swami and his agents against victim AarthiRao in Michigan, USA. The dismissal of the complaints filed in Michigan by Nithyananda’s followers is the most recent victory against witness intimidation and harassment. The complaints filed by Nithyananda, his followers and organizations, were regarding defamation, privacy violation, etc, demanding compensation to the tune of more than Rs. 120 crores!

Quoting from the submissions made to the US court:

“Plaintiff has initiated criminal charges against Ms. Rao in India based on the same allegations that she made in this case. Believing that the best defense is a good offense, Nithyananda and his followers have aggressively attacked Ms. Rao in an effort to discredit her. Not only have the pending criminal action and this civil action been started by the plaintiff, but Nithyananda and his assistant have filed a suit (13-93-NZ) in this Court based on the same events, and Nithyananda's foundation has also filed a complaint in this Court (13-157-NZ) based on the same events. The Life Bliss Foundation, which is tied to Nithyananda, also brought suit against Ms. Rao in California (RIC 1105004) on bogus charges of misappropriation of trade secrets. Ms. Rao was forced to abandon that suit due to a lack of financial resources.

Not content to have the Indian courts sort out this drama, Nithyananda and his followers are now attempting to use the United States court system to harass Ms. Rao. Three separate civilcomplaints have been filed against Ms. Rao in Michigan. The factual allegations in the threecomplaints are strikingly similar, and none of them allege any actions in Michigan. This aggressive use of the Michigan court system to deal with what are plainly Indian concerns must stop.”

After considering all the arguments, the Hon’ble David S. Swartz of 22nd Circuit Court for the County of Washtenaw, Michigan, USA dismissed all pending cases against AarthiRao filed by Nithyananda, his followers and various Nithyananda organizations .

It has also come to lightthat amalicious attempt was made to mislead the Hon’ble Michigan Court and obtain default/ex-party judgments against AarthiRao, without her knowledge, to the tune ofRs. 120 crores. Even though Nithyananda and his group were very well aware that AarthiRao was in India during Oct 2012 (as she was appearing live in local TV programs at that time to answer some of the allegations made against her), all court summons and notices were sent only to her USA address and the US court was misled to believe that she was properly informed (when in fact she had absolutely no idea of the complaint nor about the summons, till the last minute). Further misrepresenting that AarthiRao was ignoring the summons, the court was moved to give a default judgment (i.e. without properly hearing her side) for compensation of more than Rs. 120 crores. 

AarthiRao is the victim and prime witness in the charge sheet CC No. 204/2010, filed by Karnataka CID in Nov 2010 against Nithyananda and his 5 secretaries. Over the past 2½ years, after the charge sheet was filed in 2010, at least 13 criminal and civil cases have been filed in retaliation by Nithyananda, directly or through his followers and organizations, against AarthiRaoin India and USA. What could be Nithyananda's motive behind filing so many false/frivolous complaints in so many courts, and pressing for default judgments? Is it to harass AarthiRao legally & financially by forcing her to appear in so many different courts? Is it to use these cases to pressurize her into silence, in exchange for some peace of mind? Or is it merely to collect as many judgments against her from as many courts as possible (without a proper trial where all the facts can be examined by the court), 

so that the judiciary, authorities and public in India can be misled to believe that she is guilty of several crimes in various courts, thereby discrediting her as a victim/witness during Nithyananda’s trial in India. It’s probably all of these. Remember Nithyananda's notorious press meets in Jun 2012, where he claimed that AarthiRao was convicted of fraud by a California court; but in reality there is no such judgment even as of May 2013. This clearly brings out their malafide intentions.It is not surprising that his organization and his secretaryGopal Reddy Sheelum (@ NithyaBhaktananda) were found guilty of fraud by a California court after trial for two years.

Needless to say, such continuing harassment can devastate any individual financially and mentally;butAarthiRao continues to bravely stand and fight for the truth and the social cause of exposing a fraud!

SatyamevaJayate!

அமெரிக்க வழக்குகளை உடைத்த ஆர்த்தி ! விடாது துரத்தும் நித்தி...

அமெரிக்க வழக்குகளை உடைத்த ஆர்த்தி ! விடாது துரத்தும் நித்தி...

Friday, June 7, 2013

என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 6


எல்லாத் தவறுகளையும் நிவர்த்தி செய்துவிட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் மதுரை ஆதீனம். ஆனால், அவரது பதவிக்கு வேட்டு வைப்பதற்கான நடவடிக்கையில் சிலர் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். இத்தனை பிரச்னைகளுக்கும் காரணமான நித்தியோ குஜாலாக இருக்கிறார்.

வழக்குகள்:

மதுரை ஆதீனத்திற்கு எதிராக ஆரம்பத்தில் நிறைய வழக்குகள் தாக்கல் ஆனாலும் கூட, இப்போது 3 வழக்குகள் தான் நிலுவையில் இருக்கின்றன.

1. "நித்தியானந்தாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மீனாட்சிப்பிள்ளைகள் அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு.

2. "அருணகிரிநாதர் இந்து அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல் தன்னுடைய சுயலாபத்துக்காக ஆதீனச் சொத்துக்களை விற்று இருக்கிறார். ஆதீனத்தின் நிதியையும் சுயவிளம்பரத்துக்காக செலவு செய்திருக்கிறார். அதனால், அவரை ஆதீனப் பொறுப்பில் இருந்து விடுவித்து மடத்தை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர உத்தரவிட வேண்டும்" - என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு.

3. "மதுரை ஆதீனத்திற்குள் செல்லவும், பூஜைகள் செய்து வழிபடவும் அனுமதிக்க வேண்டும்" என்று நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு.
 
இவை அனைத்துமே மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தான் விசாணையில் இருக்கின்றன. இந்த வழக்குகள் மீதான விசாரணை துரிதமாக நடைபெறவில்லை. வாய்தா...வாய்தா... என்று போய்க் கொண்டிருக்கிறது. இந்த வழக்குகள் போதாது என்று, "நித்தியானந்தா மதுரை ஆதீனத்திற்குள் நுழையக் கூடாது" என்று மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கும் இதே கோர்ட்டில் தான் விசாரணையில் இருக்கிறது. கடைசியாக கடந்த 3ம் தேதி இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அதன் மீதான விசாரணையை மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது நீதிமன்றம்.

ஜெயலலிதாவுக்கு ஐஸ்:


தனக்கு எதிரான 3 வழக்குகளில் ஆதீனம் மிகவும் பயப்படுவது, இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கைப் பார்த்துத் தான். "அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. ஆதீனச் சொத்து, நிதி தொடர்பான விஷயங்களில் சந்நிதானத்துக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது" என்று அவர் தாக்கல் செய்த மனுவை ஆரம்பத்திலேயே நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆக, அரசாங்கத்தை ஐஸ் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஆதீனம்.

ஏற்கெனவே, முதல்வர் ஜெயலலிதாவை 'நெருப்பாற்றில் நீந்தி வந்த சிங்கம்', 'தங்கத்தாரகை' என்று வார்த்தைக்கு வார்த்தை புகழும் ஆதீனம், இப்போது அம்மாவின் ஒவ்வொரு திட்டத்தையும் வரவேற்று அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். மதுரையில் தமிழன்னை சிலை அமைக்கும் ஜெயலலிதாவின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தமிழறிஞர்களே கூட அதை எதிர்த்தார்கள். ஆனால், ஆதீனமோ "ஆகா... அற்புதம்" என்று புகழ்ந்தார். 2 நாட்களுக்கு முன்பு அம்மா உணவகம் திறக்கப்பட்டதைப் பாராட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டன் போல, "வாழ்நாளெல்லாம் போதாதே அம்மாவின் புகழ் பாட... வளர்க அம்மாவின் உணவகங்கள்" என்று நெக்குறுகி இருந்தார்.

துரிதப்படுத்தும் அமைப்புகள்:


இதுபற்றி மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் தலைவர் ஜெகதலபிரதாபனிடம் கேட்டோம். "மதுரை ஆதீனத்தை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையில் நாங்கள் இன்னமும் உறுதியாக இருக்கிறோம். 1994ல் தன்னுடைய சொந்த அத்தை மகன் சுவாமிநாதனை இளைய ஆதீனமாக நியமித்தார் அருணகிரி. பிறகு, பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு எந்தத் தகுதியுமே இல்லாத நித்தியை நியமித்தார். சமீபத்தில் ஒரு சாதித்தலைவரை, அதுவும் கொடும் குற்றப்பின்னணி கொண்டவரை மடத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

இப்போது வைஸ்ணவி குடும்பத்தினருக்கு வாரி வழங்குகிறார். வைஸ்ணவி நிச்சயதார்த்தத்தின் போது, அருணகிரிநாதர் கொடுத்த 5 லட்சம் யாருடைய பணம்? மடத்தின் வருமானத்தை நற்காரியங்களுக்குப் பயன்படுத்தாமல் இப்படி ஆசைப்பட்டவர்களுக்கு எல்லாம் வாரி இறைப்பதன் மூலம் தான் இன்னும் திருந்தவில்லை என்று நிரூபித்திருக்கிறார். எனவே ஆதீன மடத்தை அவரது பிடியில் இருந்து மீட்பதற்காக இந்த வழக்குகளை துரிதப்படுத்துவதற்கான முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம். அதற்கு அரசும், அறநிலையத்துறையும் உதவ வேண்டும். தன்னைப் புகழந்து ஆதீனம் வாரந்தோறும் வெளியிடும் அறிக்கைகளை நம்பி முதல்வர் ஜெயலலிதா ஒருபோதும் ஏமாற மாட்டார் என்று நம்புகிறோம்" என்றார்.
 
இதே மனநிலையில் தான் அவருக்கு எதிரான மற்ற அமைப்புகளும் இருக்கின்றன. நேற்று (5ம் தேதி) கூட மதுரை ஆதீனத்திற்கு எதிரான மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அந்த போஸ்டரில் வைஸ்ணவிக்கும், ஆதீனத்துக்கும் என்ன உறவு? என்று கேட்டிருக்கிறார்கள் மாணவர்கள்.

என்ன செய்கிறார் ஆதீனம்?

இதுபற்றி ஆதீனத் தரப்பில் பேசினோம். "மதுரை ஆதீனத்தில் உள்ள திருஞானசம்பந்தர் சன்னதியில் தினமும் 3 வேளை பூஜை செய்கிறார் சந்நிதானம். பகல் 11.30 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதற்காக ஒடுக்கத்தில் காத்திருக்கிறார். பிரச்னைக்கு உரியவர்களையும், பத்திரிகையாளர்களையும் தவிர வேறு யார் வந்தாலும் சந்திக்கிறார். புதிதாக நியமிக்கப்பட்ட தம்பிரான் சுவாமி, அவருக்குத் தேவையான பணிவிடைகள் எல்லாவற்றையும் செய்கிறார்.

தருமை ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், குன்றக்குடி ஆதீனம் ஆகியோருடனான நட்பை புதுப்பித்திருக்கிறார். மதுரை ஆதீனத்தில் நடந்த திருஞானசம்பந்தர் குருபூஜையின் நிறைவாக கடந்த 31ம் தேதி கூட அவர் திருவாடுதுறை, தருமை ஆதீனங்களுக்குச் சென்றார். செய்த தவறுகளை எல்லாம் அவர் உணர்ந்துவிட்டார். சிவ பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் தனக்கு ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறார்" என்கிறார்கள்.

"வைஸ்ணவி ஆதீனப்பணிகளை தொடர்வது உண்மைதான். ஆனால், அவருக்கும், சந்நிதானத்துக்கும் தந்தை- மகள் உறவு தான் இருக்கிறது. அவரது தங்கை கஸ்தூரியும் கூட எல்லா நாட்களும் இங்கே தங்கி இருப்பதில்லை. அவர் கும்பகோணத்தில், எம்.எஸ்சி. ஐ.டி. படித்துக் கொண்டிருக்கிறார்" என்கிறார்கள்.

நித்தியானந்தா என்ன செய்கிறார்? 

நித்தியானந்தாவுக்கு எந்தக் கவலையும் இல்லை. பாதிக்கப்பட்டது அவர் இல்லையே? இழந்த மதுரை ஆதீனப்பதவிக்குப் பதிலான வடநாட்டுச் சாமியார்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து 'மகாமண்டலேஸ்வரர்' பதவியைப் பெற்றுவிட்டார் நித்தி. இது மாவட்ட செயலாளர் பதவி போலத் தானாம். இந்தியாவில் மட்டும் நாற்பது, ஐம்பது 'மண்டலேஸ்வரர்கள்' இருக்கிறார்கள். தன் பெயரிலேயே (நித்தியானந்தா) ஒரு 'மண்டலேஸ்வரர்' மகாராஷ்டிராவில் இருப்பது நித்திக்கு தாமதமாகத் தான் தெரியுமாம்.

இதனால், உலகம் முழுக்க இருக்கும் தனது பக்தர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையை மட்டுமே இப்போது முழு மூச்சாகச் செய்து கொண்டிருக்கிறார் நித்தியானந்தா. 'இன்னர் அவேக்னஸ்' என்ற பயிற்சி தான் அவருக்கு வருமானம் கொழிக்கும் தொழில். அதை சிறப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார். பிடதி ஆசிரமம், ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் என்று ஒவ்வொரு மாதமும் ஓரிடத்தில் பயிற்சி நடக்கிறது. தற்போது பள்ளி விடுமுறைக்காலம் என்பதால், சிறுவர்கள் கூட மொட்டையும், கொட்டையுமாக வந்து அவரிடம் பயிற்சி பெறுகிறார்கள்.

ஃபிரஷ் சீடர்கள்:


நித்தியானந்தாவின் சீடர்களாக இப்போதும், டாக்டர், என்ஜினீயர், கணினி வல்லுனர்கள் என்று புதிதாக நிறைய இளைஞர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அவருக்கு பாத பூஜை செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். சின்னஞ்சிறு பையன்கள் எல்லாம் நித்தியின் காலணிகளுக்கு பூஜை செய்யும் காட்சியை அவரது இணைய தளத்தில் காண முடிகிறது. தினமும் காலையில் அருளாசி வழங்கும் நித்தி, அதன் வீடியோ காட்சியை அன்றைய தினமே இணையத்தில் பதிவேற்றம் செய்கிறார். (அவரது லேட்டஸ்ட் வீடியோவைப் பார்க்க இதைச் சொடுக்கவும்:
 http://www.youtube.com/watch?v=TS6VadZUeeo&feature=player_embedded#! )

இதைப் போலவே அவரது அன்றாட ஆன்மீகப் பணிகள் பற்றிய புகைப்படங்கள் குறைந்தது பத்தாவது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அந்தப் படங்களைப் பார்க்கும் போது, இவ்வளவு திறமையான புகைப்படக் கலைஞர்கள் இவரிடம் போய் சிக்கியிருக்கிறார்களே என்று தோன்றுகிறது. சில தனியார் டி.வி.களிலும், தனது பிரத்யேக டி.வி. சேனல், ரேடியோ, இ-மேகஸின் போன்றவற்றிலும் இடைவிடாது அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார் நித்தி. நீண்ட காலம் வாழ்வது எப்படி? இளமையை நீட்டிப்பது எப்படி? ஜீவமுக்தி பெறுவது எப்படி என்று இந்தி, தமிழ், ஆங்கிலம் என்று எல்லா மொழிகளிலும் பேசுகிறார்.

பெண்களிடம் 'தாந்திரிக செக்ஸ் காண்ட்ராக்ட்' செய்தது சர்ச்சை ஆனதால், அதை மாற்றி அமைத்திருக்கிறாராம் நித்தி. அதில் கையெழுத்திட்டுவிட்டு, 16, 18 வயது பெண்கள் எல்லாம் அவருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள். முன்பு பெண்களுக்கு அவர் ஜீவமுக்தி வழங்கும் காட்சிகள் புகைப்படமாக பதிவேற்றப்பட்டது. இப்போது ஆண்கள் படத்தை மட்டுமே பதிவிடுகின்றனர். நித்தி பெண்களுடன் இருக்கும் போட்டோவை தரவிறக்கம் செய்து, பத்திரிகைகள் மிஸ்யூஸ் செய்துவிடுவதால் தான் இந்த நடவடிக்கை என்று சொல்கிறார்கள் நித்தியின் சீடர்கள்.
 
   
தவிடு பொடியான வழக்குகள்:

நித்தி-ரஞ்சிதா படுக்கைக் காட்சிகளை வீடியோ எடுத்தவர் வினய் பரத்வாஜ். தன்னை ஹோமோசெக்ஸுக்குக் கட்டாயப்படுத்தியதாக நித்தி மீது பரபரப்பு புகார் கூறியவரும் இவரே. நித்தியின் பிரதான எதிரியான இவர், தற்போது சிறையில் இருப்பதாகச் சொல்கிறார்கள் நித்தி ஆதரவாளர்கள். அமெரிக்காவில் சிறுவன் ஒருவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வினய் பரத்வாஜுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 57 மாதம் (சுமார் நான்கரை ஆண்டு) சிறை தண்டனை விதித்துள்ளதாகச் சொல்கிறார்கள். தன் மற்றொரு எதிரியான லெனின் கருப்பன் மீது, ஒரு வருடத்திற்கு முன்பு தன்னுடைய பெண் சீடர் ஒருவர் மூலம் கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகார் கொடுத்திருந்தார் நித்தி. அந்த வழக்கை போலீஸார் பதிவு செய்யவில்லை. தற்போது கோர்ட் மூலம் லெனின் கருப்பன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பெற்றிருக்கிறார் நித்தி. இதேபோல ஆர்த்தி ராவை மிரட்டும் நடவடிக்கையிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள் நித்தியின் வழக்கறிஞர்கள்.

நித்தியானந்தா தன்னைத் தாக்கியதாக கர்நாடக செய்திச் சேனல் சுவர்ணா டி.வி. நிருபர் அஜித் கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல கர்நாடகா நவ நிர்மாண் என்ற அமைப்பு கொடுத்த புகாரின் பேரில் நித்தி மீது பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடக ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து இந்தத் தீர்ப்புகளைப் பெற்றிருக்கிறாராம் நித்தி. தன் பண பலத்தால் தன் மீதான வழக்குகள் பலவற்றை நித்தி உடைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
   
மதுரைக்கு வருகிறார் நித்தி!

இந்தக் கொடுமைகளுக்கு மத்தியில், நித்தியானந்தா மீண்டும் மதுரைக்கு வர இருப்பதாக அவரது சீடர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். "மதுரை ஆதீனப் பதவிக்காக அவர் வர மாட்டார். வரவும் விரும்பவில்லை. தன்னை எதிர்த்து, விரட்டியடித்தவர்கள் மத்தியில் எதையாவது செய்ய வேண்டும் என்ற திட்டம் அவருக்கு இருக்கிறது. எனவே, அழகர்கோவில் அல்லது திருப்பரங்குன்றம் போன்ற ஊர்களில் ஒன்றில் தனது நித்யானந்தா தியான பீடத்தின் கிளையை அமைக்கவிருக்கிறார்" என்கிறார்கள்.

ஆக, ஆதீனம் ஓய்ந்துவிட்டார். மீண்டும் அடிவாங்குவதற்குத் தயாராகி வருகிறார் நித்தியானந்தா!

(தொடர் நிறைவடைந்தது)

Wednesday, June 5, 2013

Woman After 13 Year of Marital Life 'Seeks' Divorce to Join Nithyananda Mutt... TV9 News


என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 5


நித்தியை பதவியில் இருந்து நீக்கிய பிறகும் கூட ஆதீனத்திற்கு நிம்மதி கிடைக்கவில்லை. அவசர அவசரமாக சில கடமைகளைச் செய்து முடித்தவர், இப்போது வெப்சைட் ஒன்றை  புதிதாக  தொடங்கியிருக்கிறார்.

கிரீடமும், செங்கோலும் யாருக்கு?

தன் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், மதுரை ஆதீனத்தை அரசே எடுத்துக் கொள்வதை தடுப்பதற்காகவும் 2012 அக்டோபர் 19 ஆம் தேதி, நித்தியானந்தாவை அவசரமாக பதவியில் இருந்து நீக்கினார் மதுரை ஆதீனம். கோர்ட்டை ஏமாற்றுவதற்காகவே இந்த நாடகம் என்று சர்ச்சை எழுந்ததால், அப்படி இல்லை என்று காட்டுவதற்காக, நித்தியின் ஆட்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பரபரப்பு புகார் ஒன்றை போலீஸில் கொடுத்தார் ஆதீனம்.
பிறகு, நித்தி கொடுத்த பரிசுப் பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்லவும் ஆணையிட்டார் அதன்படி அனைத்துப் பொருட்களையும் லாரி, லாரியாக பிடதிக்கு எடுத்துச் சென்றனர் நித்தியின் ஆட்கள். ஆனால், தங்கக் கிரீடம், செங்கோல் போன்றவற்றைக் கொடுக்க ஆதீனம் மறுத்துவிட்டார். தன் கனகாபிஷேகத்திற்காக வாங்கப்பட்ட 169 கிராம் தங்கக் காசுகளை, நித்தியின் ஆட்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகவும், அவற்றை திரும்ப ஒப்படைத்தால்தான் கிரீடத்தையும், செங்கோலையும் கொடுப்பேன் என்று அடம்பிடித்தார் ஆதீனம். கடைசியில் தங்கக் காசுகளைக் கொடுத்து, கிரீடத்தையும், செங்கோலையும் மீட்டுச் சென்றார்கள் நித்தியின் ஆட்கள்.

வைஸ்ணவி திருமணம்

நித்தியால் ஏற்பட்ட கறையைத் துடைத்துவிட்டதாகக் கருதிய ஆதீனம், அடுத்ததாக தன் முதன்மைச் செயலாளரும், பிரதான பெண் சீடருமான வைஸ்ணவிக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். அதன்படி, கடந்த 16.5.12 அன்று வைஸ்ணவிக்கும், அவரது
அத்தை மகனான வேதமூர்த்திக்கும் கச்சனத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் கலந்து கொண்ட ஆதீனம், வைஸ்ணவிக்கு ஒரு தாம்பூலம் நிறைய கட்டுக்கட்டாக 100 ரூபாய் நோட்டுக்களை சீதனமாகக் கொடுத்தார். அதில் மொத்தம் 5 லட்சம் இருந்தது! "இது யாருடைய பணம்?" என்று சர்ச்சை கிளம்பியது.

சில மாதங்களுக்குப் பிறகு, வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலத்தில் மாப்பிள்ளை இல்லத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் ஆதீனம். நிச்சயதார்த்தத்தின்போது தான் பணம் கொடுத்த விவகாரம் சர்ச்சையானதால், திருமணத்தின் போது எந்தப் பரிசுப் பொருளையும் கொடுக்கவில்லை ஆதீனம். ஆனால், அவர்களுக்கான பரிசுப் பொருட்கள் ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டன.

புதிய வாரிசு நியமனம்

நித்தியை பதவியில் இருந்து தூக்கிய சில நாட்களிலேயே, தன் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் அருணகிரிநாதர். "திருவாடுதுறை ஆதீனத்தில் தம்பிரான் சுவாமிகளாக இருந்து பூஜை பணிவிடைகள் செய்துவந்த ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகளை மதுரை ஆதீனத்தின் சீடராக நியமித்துள்ளோம். இவர் மதுரை ஆதீனத்தின் தம்பிரானாக இருந்து பூஜை, பணிவிடைகள், சமயப்பணிகளை ஆற்றுவார். அவருக்கு இப்போது 36 வயதாகிறது. பால் பதனிடும் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பெற்றிருக்கிறார்" என்று அறிவித்தார் ஆதீனம். அவரது இந்த அறிவிப்பின் போது, வைஸ்ணவியும் (அப்போது அவருக்கு நிச்சயம் ஆகியிருந்தது), அவரது தங்கை கஸ்தூரியும் உடனிருந்தார்கள்.

மதுரை ஆதீன வரலாற்றில் இதுவரையில் யாரும் தம்பிரானாக நியமிக்கப்பட்டது கிடையாது. இளைய ஆதீனமாக 2004ல் சுவாமிநாதன் என்பவரும், 2012ல் நித்தியானந்தாவும் நியமிக்கப்பட்டு பின்னர் ஓராண்டுக்குள் நீக்கப்பட்டார்கள். புதிய தம்பிரானின் இயற்பெயர் செந்தில்நாதன். நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்தவரான இவர், தாய், தந்தை இருவரையும் இழந்தவர்.

மதுரையில் குடியேறிய வைஸ்ணவி


நித்தியானந்தா இருந்த போது, திரும்பிய திசையெல்லாம் மல்லிகை சூடி, வாசனை திரவியங்கள் தெளித்த பெண்களுமாக இருந்த ஆதீனம், அவர் போன பிறகு வெறிச்சோடியது. தம்பிரான் நியமனத்திற்குப் பிறகு, வைஸ்ணவியும் திருமணமாகி சென்றுவிட்டதால் ஆதீனம் களை இழந்து காணப்பட்டது. ஓராண்டாக நிலவிய சர்ச்சைகள் காரணமாகவும், அன்னதானத் திட்டம் நிறுத்தப்பட்டதாலும் பக்தர்களின் வருகையும் அடியோடு நின்று போய்விட்டது. இதனால் தனிமையில் வாடினார் ஆதீனம்.

இதைத் தொடர்ந்து ஆதீனத்தின் வேண்டுகோளை ஏற்று, மார்ச் மாத இறுதியில் தன் கணவர் வேதமூர்த்தியுடன் மதுரை ஆதீனத்திலேயே குடியேறினார் வைஸ்ணவி. தற்போது அவர்களுக்கு மதுரையிலேயே வீடு பார்த்துக் கொடுத்து, கிரகப்பிரவேசத்துக்கும் நேரில் ஆசீர்வாதம் கொடுத்தார் ஆதீனம். இருப்பினும் வைஸ்ணவியும் பொறுப்புகள் பாதியாக குறைக்கப்பட்டு, அந்தப் பொறுப்புக்கள் அவரது தங்கை கஸ்தூரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

 
வெப்சைட் தொடங்கிய ஆதீனம்


நித்தி வந்து போனதன் பாதிப்பு காரணமாக, மதுரை ஆதீனம் இப்போது ஹைடெக் மனிதராகி இருக்கிறார். லேப் டாப் பயன்படுத்துகிறார். தனக்கென்று கடந்த மாதம் மதுரை ஆதீனம்.காம் (maduraiaadheenam.com)  என்ற வெப்சைட்டை ஆரம்பித்தார். அதில், இணையதள வரவேற்பு வீடியோ, மதுரை ஆதீன வரலாறு முதல் சமீபத்திய சாதனைகள் வரை பட்டியலிட்டுள்ள அருணகிரிநாதர், பக்தர்கள் தன்னைத் தொடர்பு கொள்ளவும் ஒரு வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதன் மூலம் அவருக்கு செய்தி அனுப்பிவிட்டுக் காத்திருந்தால், அவரது அருளாசி கிடைக்குமாம். சில நேரங்களில், உங்கள் மெயில் ஐ.டி.க்கு பதிலும் தருவார். தமிழகத்தில் எந்த சைவ மடாலயத்திலும் இல்லாத நவீன வசதியை மதுரை ஆதீனத்தில் ஏற்படுத்தியிருப்பதாகப் பெருமிதத்துடன் சொல்கிறார் ஆதீனம்.

கடந்த ஓரிரு மாதங்களாகத்தான் நிம்மதியாக இருக்கிறார் ஆதீனம். திருஞானசம்பந்தர் விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார். மதுரையில் மழை பெய்ய வேண்டும் என கடந்த மாதம் சிறப்பு பூஜைகள் கூட செய்தார். ஆனாலும், பழைய வழக்குகள் தலைக்கு மேல் கத்தி போல் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் தினம் தினம் அம்மா புகழ்பாடி கொண்டிருக்கிறார் ஆதீனம்.

அந்த வழக்குகளின் இன்றைய நிலை என்ன? நித்தி இப்போது என்ன செய்கிறார்? நாளை பார்க்கலாம்...



Tuesday, June 4, 2013

என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 4

கே.கே.மகேஷ்

படங்கள்: கிருஷ்ண மூர்த்தி & பா.காளிமுத்து 


மதுரை ஆதீனப் பதவியில் நிம்மதியாக ஒரு மாதம் கூட இருக்கவில்லை நித்தியானந்தா.அதற்குள் அவரது முன்னாள் பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்த செக்ஸ் புகார்கள் பரபரப்பை பற்ற வைத்தன. அது மதுரை ஆதீனத்தின் நிம்மதிக்கும் சேர்த்து உலை வைத்தது.


 முறை கற்பழித்தார்

குடும்ப வாழ்க்கையில் பற்று இல்லாமல், சன்னியாசியாகும் 'ஆசை'யில் 2004ல் நித்தியின் ஆசிரமத்துக்கு வந்தவர்தான் ஆர்த்தி ராவ். சென்னையைச் சேர்ந்த இவர் திருமணமானவர். அவரது கணவர் அமெரிக்காவில் இருக்கிறார்.
நித்தி, ஜீவ முக்தி தருவதாகச் சொல்லிச் சொல்லியே தன்னை   முறை கற்பழித்தார் என்று அதிர்ச்சி புகார் கொடுத்தார் ஆர்த்தி ராவ். "சேலம், ஏற்காடு, பிடதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் போன்ற பல இடங்களுக்கு அழைத்துச் சென்று என் விருப்பம் இல்லாமலேயே நித்தி என்னை அனுபவித்தார்.வாரணாசி கும்ப மேளாவுக்கு அழைத்துச் சென்று புனித தலத்தில் உறவு கொண்டால் ஆன்ம சக்தி அதிகரிக்கும் என்று சொல்லி அங்கேயும் கற்பழித்தார்" என்று சொன்னார் ஆர்த்திராவ்.


பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக சி.ஐ.டி. போலீஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய, பிடதி ஆசிரமத்தில் வைத்து நித்தியிடம் கேள்வி கேட்டன கர்நாடக மீடியாக்கள். அப்போது ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டார்கள். நித்தியின் ஆட்களுக்கும் மண்டை உடைந்தது.

இந்த விவகாரத்தால், ''பிடதியின் அமைதி பறிபோய் இருக்கிறது. சர்ச்சைக்குரிய ஆசிரமத்​தையும், நித்தியானந்தாவையும் விசாரித்து ஓரிரு நாட்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு இருக்கிறேன். தேவைப்பட்டால் பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்படும்" என்று அறிவித்தார் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா.


கைதான நித்தி

இதற்கிடையே, ஜூன் 7 ஆம் தேதி கர்நாடகாவின் ராம்நகர் போலீஸ், நித்தியானந்தா உள்ளிட்ட எட்டுப் பேர் மீது கொலை மிரட்டல், வெறித்தாக்குதல், பொது அமைதியைச் சீர்குலைத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நித்தி, கைது நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவானார்.

கடைசியில் வேறு வழியில்லாமல் ஜூன் 13 ஆம் தேதி ராம்நகர் கோர்ட்டில் சரண் அடைந்தார். உடனே நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. வெளியே வந்த நித்தியை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவார் என்று கோர்ட் வாசலிலேயே கைது செய்தது கர்நாடக போலீஸ்.


மதுரை வந்தார்

ஜூன் 15 ஆம் தேதி இரண்டாவது வழக்கிலும் நித்திக்கு ஜாமீன் கிடைத்தது. மீண்டும் ஏதாவது வழக்குப் போட்டு கர்நாடகா போலீஸ் கைது செய்து விடுமோ என்ற பயத்தில், இரவோடு இரவாக மதுரை புறப்பட்டார் நித்தி. மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு மதுரை ஆதீனத்துக்கு வந்து சேர்ந்த அவரை ஆரத்தழுவி வரவேற்றார் அருணகிரி. அவர் உள்ளே போன மறுகணமே கேட் சாத்தப்பட்டு பெரிய பூட்டு போடப்பட்டது.
அந்தப் பூட்டு ஆதீன வாசலுக்கு மட்டுமல்ல, நித்தி, அருணகிரியின் வாய்க்கும் சேர்த்துத்தான் போடப்பட்டது.பதவியேற்ற 2 மாதத்தில் சுமார் 25 பிரஸ் மீட்டுகளை நடத்தி சாதனை படைத்தவரான நித்தி, இந்தப் பிரச்னைக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்திப்பதையே தவிர்த்தார். தான் உண்டு, தன் சேலையுண்டு என்று ஸாரி... வேலையுண்டு என்று அடக்கத்துடன் இருக்க ஆரம்பித்தார். ஆனால், அவரது சீடர்களுக்கும், அருணகிரிநாதருக்கும் இடையே உரசல் ஏற்பட ஆரம்பித்தது.

அதிருப்தியில் ஆதீனம்

ஆசிரமத்துக்குள்ளேயே அடைந்து கிடப்பது போரடித்ததால், கொடைக்கானலுக்குச் சென்றார் நித்தியானந்தா. ஆனாலும், அவரது சீடர்கள் சுமார் 15 பேர் தொடர்ந்து மதுரையிலேயே இருந்தார்கள். அவர்களுக்கும் அருணகிரிநாதரின் ஊழியர்களுக்கும் இடையே அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டன. "நித்தியின் சீடர்கள் என்னை மதிப்பதேயில்லை. என்னைக் காண வருபவர்கள், சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது மரபு. ஆனால், நித்தி பக்தர்கள் என்னை மதிக்காதது மட்டுமல்ல, கேலியும் செய்கிறார்கள்' என்று புலம்ப ஆரம்பித்தார் ஆதீனம். இதற்கிடையே, நித்தியின் பி.ஆர்.ஓ., ஒருவர் ஆதீனத்தை 'அகோபலிப்டா' (காட்டுவாசி) என்று கேலி செய்தாராம். இதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்றார் ஆதீனம்.

இடையில் இமயமலைக்குச் சென்ற நித்தி, ரஞ்சிதாவையும் உடன் அழைத்துச் சென்றார். இதுபற்றி நித்தி தன்னிடம் கூறவில்லையே என்று வருத்தப்பட்டார் ஆதீனம்.  ஆனாலும் நித்தியை நீக்குவது தொடர்பாக அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. நித்திக்கு எதிராக போராடிய அமைப்புகளில் பல, ஆதீனத்துக்குப் பாதுகாப்பும், ஆதரவும் தருவதாகச் சொல்லியும் அவரால் ஒன்றும் செய்ய -முடியவில்லை. சூழ்நிலைக் கைதியாகத் தத்தளித்தார் ஆதீனம். இதனால், 'ஆதீனம் சம்பந்தப்பட்ட பலான சி.டி. ஒன்று நித்தி கையில் சிக்கிவிட்டதாக'... வசந்தி ஸாரி... வதந்தி கூட பரவியது.

கோர்ட் வைத்த செக்

இதனிடையே, நித்தியானந்தா நியமனத்தை எதிர்த்து மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பினர் தொடர்ந்த வழக்கு ஒன்று முக்கிய கட்டத்தை எட்டியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்டோபர் 16 ஆம்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ''இந்து அறநிலையத் துறை சட்டப்படி மதுரை ஆதீன மடத்தைப் பொறுத்தவரை, ஒருவர் மட்டுமே மடாதிபதியாக இருக்க முடியும். ஆனால், '292-வது குருமகா சன்னிதானமான நான் 293 ஆவது சன்னிதானமாக நித்தியானந்தாவை நியமிக்கிறேன்'னு கர்நாடகாவில் வைத்து ஒப்பந்தம் எழுதி இருக்கிறார் அருணகிரிநாதர். 
இது, இந்து அறநிலையத் துறை சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது. மரபுகளை மீறி சட்ட விரோதக் காரியத்தைச் செய்த அருணகிரிநாதரை மடத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து நீக்கி, மடத்தை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மதுரை நீதிமன்றத்தில் அரசு தரப்பில் சிவில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டன'' என்று வாதாடினார் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்.

அவர் சொன்னபடியே, அருணகிரிநாதரின் பதவியைப் பறித்து, ஆதீனத்தை அரசே கைப்பற்றுவதற்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. பதறிப்போன ஆதீனம், தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நித்தியை நீக்க முடிவு செய்தார்.

நித்தியை நீக்கிய பிறகாவது மதுரை ஆதீனத்திற்கு நிம்மதி கிடைத்ததா? நாளை பார்க்கலாம்.

Sunday, June 2, 2013

என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 3

கே.கே.மகேஷ்

படங்கள்: கிருஷ்ண மூர்த்தி & பா.காளிமுத்து 



ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற வாசகம் சாமியார்களுக்கும் பொருந்தும். 27.3.12 ஆம் தேதி - ஆப்பசைத்த குரங்கு போல, மதுரை ஆதீனம் வசமாகச் சிக்கிய நாள். பணம், புகழ், தங்கம் என்று நித்தி காட்டிய ஆசைகளுக்கு மயங்கிய பின்னர் அருணகிரிநாதரின் பெயர் கெட்டு குட்டிச்சுவராகப் போனது.


மதுரை ஆதீனமாக நித்தி


27.3.12 ஆம் தேதி கர்நாடகாவின் பிடதி ஆசிரமத்தில்,மதுரையின் 293 ஆவது ஆதீனமாக நித்தியானந்தாவை அறிவித்தார் அருணகிரிநாதர்.தங்க சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த மதுரை ஆதீனம்,மற்றொரு சிம்மாசனத்தில் இருந்த நித்திக்கு தங்க கிரீடம் அணிவித்து,6 அடி உயர தங்கச் செங்கோலை வழங்கி 'பதவிப்பிரமாணம்' செய்து வைத்தார்.பதிலுக்கு ஒரு கோடி ரூபாய்க்கான செக்கை அருணகிரியிடம் கொடுத்தார் நித்தி.
அப்போது பேசிய அருணகிரி, ''மதுரை ஆதீனத்தை, எமக்குப் பிறகு யார் கட்டிக்காக்கப் போகிறார்கள் என்ற கவலையில் யாம் பல நாட்கள் தூக்கமின்றித் தவித்தோம்.அப்படி சிந்தனையுடன் ஒரு நாள் இரவு தூங்கியபோது, சிவபெருமானும்,பார்வதியும் எமது கனவில் தோன்றி, 'நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு' என்று சொன்னார்கள்.அதன்பிறகு, பெங்களூரு ஆசிரமத்துக்கு வந்து நித்தியானந்தாவோடு பழகிப்பார்த்தேன்.அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவரின் செயல்பாடுகள் எமக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.

பார்த்தவுடன் கவரும் தோற்றமும், கம்பீர உருவமும், இளமையும் கொண்டவர் நித்தியானந்தா. என்னைவிட அவரால் நன்றாக ஆன்மிகப் பணியில் ஈடுபட முடியும். எனவே, மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான சொத்துக்களையும், 1250 ஏக்கர் நிலத்தையும், கோயில்களையும் நித்தியானந்தாவே நிர்வகிப்பார். எனவே நீங்கள் அனைவரும் 293-வது மதுரை ஆதீனமான நித்தியானந்தாவை, 'ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரஹம்ச நித்தியானந்த ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்' என்று அழைக்க வேண்டும்" என்று சொன்னார்.

வாய் நிறைய பல்லோடு பேசிய நித்தியானந்தா,"மதுரை ஆதீனத்தின் புகழை சர்வதேச அளவுக்கு உயர்த்துவேன்.அதேபோன்று மதுரை ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களும் கைப்பற்றப்பட்டு,புனரமைக்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.ஏற்கெனவே மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமாக இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மீண்டும் ஆதீனத்தின் ஆளுகைக்கே கொண்டு வருவேன்.இதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவேன்.ஆதீனம் சார்பாக மதுரையில் மருத்துவக் கல்லூரியும்,24 மணி நேர அன்னதானச் சேவையும் உடனே தொடங்கப்படும்" என்று சொல்லி அதிரவைத்தார்.


கொதித்தெழுந்த மதுரைவாசிகள் 

இந்த அறிவிப்பு மதுரைவாசிகளை கொதித்தெழ வைத்தது.சின்னச் சின்ன அமைப்புகள் கூட, நித்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்தன.மதுரை ஆதீனம் பதட்டப்பகுதியானது.அங்கே 24 மணி நேரமும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பதிலுக்கு நித்தியின் பெண் சீடர்கள்,மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.ஒரு தொலைக்காட்சிக்கு எதிராகவும்,இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்தையும் கண்டித்து,உலகம் முழுக்க உள்ள நித்தியின் தியான மையங்களில் இருந்தபடியே, வீடியோ கான்பரன்ஸிங் முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் அவரது வெளிநாட்டு சீடர்கள்.
இதற்கிடையே, "ஆதீன மடத்தில் 16,18 வயதுப் பெண்கள் துப்பட்டாவும், பேண்ட்டும் அணியாமல் கவர்ச்சியாக நடமாடுகிறார்கள்.ஆங்காங்கே படுக்கைகள் எல்லாம் கிடக்கிறது.தவறான செயல்கள் நடக்கிற இடம் மாதிரி இருக்கிறது"என்று கலெக்டர் சகாயத்திடம் புகார் கொடுத்தார் மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற லட்டர் பேடு இயக்கத் தலைவர் முத்துராஜ்.

மே மாத இறுதியில்,கிரானைட் விவகாரத்தால் கலெக்டர் சகாயம் மாற்றம் செய்யப்பட,அது தன்னால் தான் நிகழ்ந்தது என்பது போல் பந்தா காட்டினார் நித்தியானந்தா."எல்லாம் இறைவன் செயல்" என்றார் அருணகிரிநாதர்."புதிய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா என் நண்பர் தான்"என்றார் நித்தி.

மடாதிபதிகளின் எச்சரிக்கை

இதற்கிடையே,மதுரை ஆதீனத்தில் நடந்த இந்த கிறுக்குத்தனமான முடிவு குறித்து விவாதிப்பதற்காக, தமிழகத்தின் பிரதான மடதிபதிகள் எல்லாம் மே 1-ம் தேதி மயிலாடுதுறையில் அவசரக் கூட்டம் நடத்தினார்கள்.திருப்பனந்தாள் காசி திருமடத்து அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரான் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், தருமபுரம்,குன்றக்குடி,திருவாவடுதுறை உள்ளிட்ட ஆதீனங்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

"செக்ஸ் புகாரில் சிக்கிய நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக அறிவித்ததை,10 நாட்களில் திரும்பப் பெறவேண்டும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்"என்று அந்த கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


நித்தியின் மிரட்டல்

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மதுரை ஆதீனத்தில் அருணகிரிநாதரும்,
நித்தியானந்தாவும் ஒரு பிரஸ் மீட் வைத்தனர்.அதில் முழங்கிய நித்தியானந்தா, "என்னை ஆதீனமாக நியமித்தது சரில்லை என்றால், சந்நிதானத்திடம் தானே பேசியிருக்க வேண்டும்? ஆனால், காரணம் இல்லாமல் என்னை இழுத்ததனால், உலகம் முழுக்க இருக்கிற என்னுடைய பக்தர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள். இப்போது நான் பின்வாங்கினால்,அசிங்கம். எனக்கு எதிராக தீர்மானம் போட்ட மடாதிபதிகளுக்கு, 10 நாட்கள் நான் கெடு கொடுக்கிறேன். அதற்குள், என்னைப் பற்றிய தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டால் விட்டுவிடுவேன்.இல்லை என்றால் தருமை ஆதீனத்தின் முன், என்னுடைய பக்தர்கள் தொடர் காலவரையற்ற போராட்டம் நடத்துவார்கள்.என்னால் அதைத் தடுக்க முடியாது.

அதேபோல,கூட்டுச் சதி 120(பி),மான நஷ்டம்,அவதூறு ஏற்படுத்துதல் 100, 101,சாதி பற்றி சரியான தவல்களைத் தெரிந்து கொள்ளாமல் தவறான தகவல்களைப் பரப்புவது 153(ஏ), என்னுடைய பக்தர்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தியது 295(ஏ) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் உலகம் முழுவதும் உள்ள என்னுடைய மடங்களைச் சேர்ந்தவர்கள் அந்த மடாதிபதிகள் மீது தனித்தனியாக வழக்குத் தொடர்வார்கள்" என்று மிரட்டல் விடுத்தார் நித்தி. "இதுக்கு மேலும், இந்து அமைப்புகள் என்ற பெயரில் லோக்கல் ரௌடிகள் வயலன்ஸில் ஈடுபட்டால், அதற்கும் திருப்பனந்தாள் ஆதீனமே பொறுப்பு" என்றும் எச்சரித்தார் நித்தியானந்தா.


வைஸ்ணவி மீது தாக்குதல்


நித்தி மடத்திற்குள் நுழைந்ததும்,அருணகிரிநாதரின் காரியதரசியான வைஸ்ணவியின் முக்கியத்துவம்குறைக்கப்பட்டது.ஒரு கட்டத்தில் வைஸ்ணவிக்கும், நித்தியின் சீடரின் மனைவிக்கும் சண்டை வந்தது.உடனே, நித்தியின் ஆட்கள் அவரைத் தாக்கினார்கள்.அதைத் தடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில்,ஆதீனத்துடன் கோபித்துக் கொண்டு மடத்தில் இருந்து காணாமல் போனார் வைஸ்ணவி.

பின்பு,வைஸ்ணவி தாக்குதல் பற்றி விளக்கம் கொடுத்த நித்தி,"ஆதீனத்தில் இருந்த யாரையும் நாங்கள் வெளியேற்றவில்லை.அத்தனை பேரும் பணியில் இருக்கிறார்கள். தினமும் 20 மணி நேரம் உழைக்கின்ற 33 வயதுக்கு உட்பட்ட 1,800 இளைஞர்களைக்கொண்ட ஒரு மிகப் பெரிய 'ஒர்க்கஹாலிக் குரூப்' நாங்கள். பழைய ஆட்கள் வேறு மாதிரி செட்-அப்பில் பணி செய்திருப்பார்கள். அவர்களால் எங்களது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால், சிறுசிறு சச்சரவுகள். வைஷ்ணவிக்கும் எங்களது சீடர்களுக்கும் இடையே சிறு பிரச்னை ஏற்பட்டு, வாக்குவாதம் மட்டுமே நடந்திருக்கு.யாரும் அவரை அடிக்கவில்லை'' என்றார்.


நித்திக்கு வந்த சிக்கல்


நித்தி மதுரையில் இருந்த நாள் முழுக்க தினம் தினம் 'பிரஸ் மீட்' வைத்து யாரையாவது வசை பாடிக் கொண்டே இருந்தார்.மருத்துவ முகாம்,அன்னதானத் திட்டம் போன்றவற்றைத் தொடங்கி வைத்த அவர்,அடுத்து மருத்துவக் கல்லூரியும், பெரிய பெரிய கல்வி நிறுவனங்களையும் அமைக்கப் போவதாகவும் 'பீலா' விட்டார்.

ரஞ்சிதா விவகாரத்தில் அழிந்து போன தன்னுடைய இமேஜை ஆதீனப் பதவி மூலம் உயர்த்திவிட்டதாக அவர் கருதிய நேரத்தில், ஆர்த்தி ராவ் சொன்ன செக்ஸ் புகார்கள் விஸ்வமூபம் எடுத்தன.தப்பியோடி தலைமறைவாகும் சூழ்நிலைக்கு ஆளானார் நித்தி.

அந்த பரபர நாட்கள் பற்றிய தகவல்கள் நாளை....


http://news.vikatan.com/article.php?module=news&aid=15626

என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 2


கே.கே.மகேஷ்

படங்கள்: கிருஷ்ண மூர்த்தி & பா.காளிமுத்து 


1980 ஆண்டில் இருந்து தொடர்ந்து 33 ஆண்டுகளாக மதுரை ஆதீனமாகப் பொறுப்பில் இருக்கும் அருணகிரிநாதர்,பல நல்ல விஷயங்களைச் செய்து வந்தார். முதல் 23 ஆண்டுகளில் சுமார் ஆயிரம் கோயில்களில் இவர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது.ஏராளமான பள்ளி, கல்லூரி, கோவில் நிகழ்ச்சிகளில்,இவர் சொற்பொழிவாற்றி இருக்கிறார்.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இவர் தொட்டதெல்லாம் சொதப்பல் தான்.


நீக்கப்பட்ட வாரிசு

வயதாவதைக் கருத்தில் கொண்டு,நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் என்ற இளைஞனை தன்னுடைய வாரிசாக அறிவித்தார் ஆதீனம்.அந்த இளைஞனோ முழு துறவறம் மேற்கொள்ளாமல் தன் குடும்பத்தினரோடு தொடர்பில் இருந்தார். 

ஆதீனச் சொத்துக்களை அபகரிப்பதற்காக,அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டு தன்னையே ஒழித்துக் கட்ட அவர் திட்டமிடுவதாக மதுரை ஆதீனத்துக்குத் தகவல் வந்தது.அரண்டு போன ஆதீனம் அவரை உடனே பதவியில் இருந்து நீக்கினார்.சுவாமிநாதனையும், அவரது குடும்பத்தினரையும் மடத்தை விட்டே விரட்டி அடித்தார்.


ஒட்டுக் கேட்க ஆரம்பித்தார் 

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு,ஆதீனம் தன் நிழலைக் கூட நம்ப மறுத்தார்.ஆதீனத்தில் ஆங்காங்கே ஆன் செய்யப்பட்ட'மைக்'குகளை பொருத்தினார்.அதன் உதவியுடன் தனது அறையில் இருந்தபடியே,ஊழியர்களும்,பக்தர்களும் தன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்க ஆரம்பித்தார்.இன்றளவும் அந்த மைக்குகள் செயல்பாட்டில் உள்ளன.தொழில்நுட்பம் வளர்ந்ததும்,ஆங்காங்கே சி.சி.டி.வி. கேமிராக்களை வைத்து,மானிட்டர் மூலம் கண்காணிக்க ஆரம்பித்தார்.

சுவாமிநாதன் நீக்கம் பற்றி ஒருமுறை பத்திரிகையாளர்களிடம் விளக்கிய ஆதீனம், "அவனை பண்ணத்தெரு பன்னகாபரமேஸ்வர சுவாமி ஆலயத்திற்கு பூஜை, வழிபாட்டிற்காக அனுப்பி வைத்திருந்தேன்.ஆனால், அவன் அங்கிருந்த மேலாளரிடம்,'ஆதீனம் பெயரில் வங்கியில் எவ்வளவு இருக்கிறது? கோவில் நகைகள் எவ்வளவு இருக்கிறது?'என்றெல்லாம் கேட்டிருக்கிறான்.'அதை உங்களிடம் சொல்வதற்கு எனக்கு இன்னும் உத்தரவு வரவில்லை'என்று மேலாளர் பதில் சொல்லியிருக்கிறார்.

உடனே அவனும், அவனது குடும்பதினர்களும் '16ம் தேதி வரை தான் நீங்க. அதுக்கப்புறம் எல்லாம் மாறிடும். உங்களுக்குப் பதில் வேற மேனஜர்... ஞாபகம் இருக்கட்டும்!' என்று மிரட்டியிருக்கிறார்கள். ஆக, ஏதோ சதி நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.ஒரு சாமியாரை விஷ ஊசி போட்டுக் கொலை செய்ய சதி நடந்ததே,அதைப் போல. அதனால்தான் அவனை உடனே நீக்கினேன்" என்று சொன்னார்.

இதனால், அவர் ஊழியர்களின் பேச்சை ஒட்டுக் கேட்பதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.

 
காமெடி அவதாரம்

வயதாக வயதாக இவரது பேச்சில் குழந்தைத் தனம் தென்பட ஆரம்பித்தது.இவரது சீரியஸான பேச்சு கூட காமெடியாக புரிந்து கொள்ளப்பட்டது.வாரப்பத்திரிகைகள் தங்கள் 'காமெடி ஸ்பெஷல்' இதழ்களுக்கு முதலில் 'பிக்ஸ்' செய்வது இவரது பேட்டியைத்தான்.
எந்தக் கேள்வி கேட்டாலும், 'தெரியாது... கருத்துச் சொல்ல விரும்பவில்லை' என்ற பதிலையே சொல்ல மாட்டார். 'நான் ஐ.ஜி. ஆப் ஐ.ஜி.ஸ்...அதனால் தான் சைரன் வைத்த காரில் போகிறேன், '2012ல் உலகம் அழிந்துவிடும்'என்றெல்லாம் சிரிக்காமல் பேட்டி கொடுப்பார். அதனால், பத்திரிகைகள் இவரைக் கொண்டாடின.

என்.நடராஜனுடன் (அதாங்க... சசிகலா நடராஜன்) சேர்ந்து இவர் அடித்த லூட்டிகள் கணக்கற்றவை.இதனால்,வாசகர்களும் ஆதீனம் பேட்டி என்றால், ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்தார்கள்.

புகழ் போதையும்,பெண் அறிமுகமும்

நாளடைவில், புகழ் போதைக்கு அடிமையானார் ஆதீனம்.தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி பத்திரிகையில் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, எல்லா நிகழ்ச்சிகளிலும் தலைகாட்ட ஆரம்பித்தார்.'பவர் ஸ்டார்' சீனிவாசனின் 'லத்திகா' திரைப்படம் மதுரையில் வெளியாகவே இல்லை.ஆனால், அந்தப் படத்தின் 200வது நாள் விழா மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் பிரமாண்டமாக நடந்தது.துணை நடிகைகளின் கவர்ச்சி ஆட்டம் களை கட்டிய அந்த விழாவில் கலந்து கொண்டார் ஆதீனம். அப்போதுதான் சீனிவாசனை முதன் முதலில் சந்தித்தார். ஆனாலும், சீனிவாசனைப் புகழ்ந்து சுமார் 20 நிமிடம் பேசி, 'பவர் ஸ்டாருக்கெல்லாம் பவர் ஸ்டார் நான்'என்று புரிய வைத்தார் ஆதீனம்.

இதற்கிடையே, கச்சனம் ஸ்ரீ கைச்சின்னேசுவர சுவாமி திருக்கோயில் பணியாளர் ஒருவர்,தன் மனைவி கமலாவைப் பிரிந்து சென்றுவிட்டார்.கமலாவோ தொடர்ந்து கோவிலை கூட்டிப் பெருக்குவது என்று தொண்டு செய்து கொண்டிருந்தார். எப்போதாவது கோவிலுக்கு வரும் மதுரை ஆதீனத்திடம் மனம் கோணாமல் நடந்து கொண்டார் கமலா. அவரது அன்பு உபசரிப்பில் மயங்கிய ஆதீனம், ஒரு கட்டத்தில் அவரது வீட்டிற்கே செல்ல ஆரம்பித்தார்.அவரது மகள்கள் வைஸ்ணவி, கஸ்தூரியின் மேற்படிப்புக்கு உதவினார்.இதை உள்ளூர் மக்கள் தவறாக விமர்சிக்க,கண்ணைக் கசக்கினார் கமலா.ஒரு கட்டத்தில், கமலாவைத் தன்னோடு அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் ஆதீனம்.பின்னாலேயே வைஸ்ணவியும் மதுரை வந்துவிட்டார்.


நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்

இதுபோன்ற செயல்களால் சிலர் ஆதீன மடத்தில் வைத்தே அவரைக் கிண்டல் செய்ய ஆரம்பிக்க,அதை 'மைக்' மூலம் ஒட்டுக்கேட்ட ஆதீனம் அப்செட் ஆனார். தன்னைப் பார்க்க வரும் பக்தர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவை என்று சில
விதிமுறைகளை வகுத்தார்.அதற்கு ஆதீனச் சம்பிரதாயங்கள் என்று பெயரும் வைத்தார்.

"சன்னிதானத்தின் காலடியில் வீழ்ந்து வணங்க வேண்டும்.அவரோடு பேசும் போது 'சரி' என்ற சொல்லைப் பயன்படுத்தவே கூடாது.'உத்தரவு' என்றே சொல்ல வேண்டும்.சன்னிதானம் கொஞ்சம் அதிகமாகத்தான் பேசுவார்.அதற்காக இடையிலேயே நீங்கள் புறப்பட்டுவிடக் கூடாது.சன்னிதானம் எப்போது உத்தரவு கொடுக்கிறாரோ அதன் பின்னரே புறப்படத் தயாராக வேண்டும்.போகும் போது, அவருக்குத் தன் பின்பக்கத்தைக் காட்டக் கூடாது.முகம் அவரை நோக்கி இருக்குமாறு பின்னோக்கி நடந்து செல்ல வேண்டும்"என்று ஆதீனச் சம்பிரதாயங்கள் நீண்டு கொண்டே போனது."தன்னைப் பார்க்க வரும் அனைவரும் தரையில் தான் உட்கார வேண்டும்.சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட வேண்டும்"என்றும் அடம்பிடிக்க ஆரம்பித்தார் ஆதீனம்.


தடுமாறிய ஆதீனம்...உள்ளே புகுந்த நித்தியானந்தா
போதை இருந்தால் தடுமாற்றமும் இருக்கத் தானே செய்யும்.மதுரை ஆதீனத்தின் புகழ் போதையை புரிந்து கொண்டு,அவரைப் பிடதி ஆசிரமத்துக்கு வரவழைத்து தன்னுடைய சாம்ராஜ்யத்தைச் சுற்றிக் காட்டினார் நித்தியானந்தா.

இதேபோல் உலகமெங்கும் தனக்கு ஆசிரமங்கள் இருப்பதாக கதை அளந்தார்."நீங்கள் சம்மதித்தால்,மதுரை ஆதீனத்துக்கும் உலகமெங்கும் கிளைகளை ஏற்படுத்துகிறேன்.அதற்காக 100 கோடி ரூபாய் நன்கொடை தருகிறேன்" என்று ஆசை வார்த்தை காட்டினார். நித்தியானந்தாவின் இனிக்கும் பேச்சையும்,அவரைச் சுற்றி இருந்த கூட்டத்தையும் பார்த்து தடுமாறினார் ஆதீனம்.

அது அவர் ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்யக் காரணமாகப் போய்விட்டது. நித்தியின் வருகையும், அதன் பிறகு மதுரையில் நடந்த களேபரங்களும் ரொம்பவே சுவாரஸ்யமானவை. அவற்றைச் சுருக்கமாக நாளை பார்க்கலாம்...

என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 1

கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து


ந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், "ஆமா.... இதுவரைக்கும் அவர் என்ன செய்தார்?" என்ற கேள்வியைத் திருப்பிக் கேட்பீர்கள். அதற்காகத் தான் இந்த எஸ்.டி.டி. ஸாரி.... ஹிஸ்ட்ரி!


வெளிநாடு பயணம்

தஞ்சை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவரான அருணகிரிநாதர், மதுரை ஆதீனத்தின் இளவரசராக (அதாங்க... நித்தியானந்தா சமீபத்தில் வகித்த பதவி) 27.5.1975ல் பொறுப்பேற்றார். 291வது குருமகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் பூரணம் அடைந்த பிறகு, 14.3.1980ல் போட்டியின்றி மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டார் அருணகிரிநாதர். அன்று முதல் அவருடைய பெயர் 292 ஆவது மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகள்! (அப்படித்தான் பத்திரிகையில் பிரசுரிக்கணும்னு அவர் வலியுறுத்திச் சொல்லுவார். ஆனால் யாரும் கேட்பதில்லை)

உண்மையிலேயே இளம் வயதில் செம ஆக்டிவாக இருந்தார் நம்ம ஆதீனம். மதுரை ஆதீனத்தின் நோக்கம் சைவத்தை பரப்புவதும், தமிழை வளர்ப்பதும்தான். அந்த வேலைகளை ஓரளவுக்குச் சரியாகச் செய்தார் மதுரை ஆதீனம். 1984ல் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கும், 1987ல் மலேசியாவுக்கும் சென்று சைவ சிந்தாத்தத்தை விளக்கிப் பேசியிருக்கிறார்.
அதே ஆண்டில் சீனாவில் உள்ள 'காண்டன்' (சரியாக உச்சரிக்கவும்) நகருக்குச் சென்ற அருணகிரிநாதர், அங்கு இஸ்லாமிய மக்களும் கூடியிருப்பதைக் கண்டு, சைவ சமயத்தையும், இஸ்லாம் மார்க்கத்தையும் இணைத்து 'ஏகத்துவம்' பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றி அசத்தினார். இதேபோல ஹாங்காங்க், சிங்கப்பூர், ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளார் ஆதீனம்.

வாடகை வசூலிப்பதில் கில்லாடி

மதுரை ஆதீனத்தின் சொத்துக்கள் பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அந்த சொத்துக்களை எல்லாம் மீட்டு, ஆதீன வருவாயைப் பெருக்கியவர் இவர்தான். தென் தமிழகத்திலேயே ஒரே வீதியில் அதிக நகைக்கடைகள் அமைந்திருப்பது, மதுரை ஆதீனம் அமைந்திருக்கின்ற தெற்கு ஆவணி மூல வீதிதான் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த வீதியில் ஆரம்பத்தில் வரிசையாக இரும்புப் பட்டறைகள்தான் இருந்தன. வருமானத்தைப் பெருக்குவதற்காக அவற்றை எல்லாம் காலி செய்ய வைத்து, நகைக்கடைகளுக்கு வாடகைக்குக் கொடுத்த 'பெருமை'யும் நம்ம ஆதீனத்தைத் தான் சேரும்.

 
இந்தக் கடைகள், வீடுகள், நிலங்கள் போன்றவற்றை வாடகைக்கும், குத்தகைக்கும் அனுபவித்தும் வருகிறவர்கள் எல்லாம், ஒவ்வொரு மாதமும 5 ஆம் தேதிக்குள் அவரவர்கள் கட்ட வேண்டிய தொகையை, அவர்களாகவே வந்து செலுத்தி ரசீது பெற்றுக் கொள்கிறார்கள். இந்த நடைமுறையை அமல்படுத்தியது இவர்தான்.

ஏ.சி. போட்டவரும் இவரே!

ஆதீனத்துக்குச் சொந்தமான கோவில்கள் அனைத்தும் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. (ஹி...ஹி... வைஸ்ணவியின் வீடும்தான்) கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்புறம்பியம் ஸ்ரீ சாட்சிநாத சுவாமி திருக்கோயில், கச்சனம் ஸ்ரீ கைச்சின்னேசுவர சுவாமி திருக்கோயில், பன்னத்தெரு ஸ்ரீ பன்னகாபரமேஸ்வர சுவாமி திருக்கோயில் போன்றவற்றில் திருப்பணிகள் செய்தவரும் இவரே.

மதுரை ஆதீனம் முழுக்க கிரானைட் கற்களைப் பதித்து, ஒடுக்கம் என்று அழைக்கப்படும், பக்தர்கள் ஆதீனத்தைச் சந்திக்கும் அறைக்கு ஏ.சி. போட்டவரும் இவர்தான். ஆதீனத்தின் பக்கம் இருந்த மாநராட்சி கழிவறையை அகற்றியது, ரிக்ஷா ஸ்டாண்டை அகற்றியது என்று இவரது 'சாதனை'களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆதீனத்தின் காரில் சைரன் மாட்டிக் கொண்டு பந்தா காட்டிய முதல் ஆதீனமும் இவர்தான்.

கலவர பூமியில் ஆதீனம்

ஆரம்ப காலத்தில் மதுரை ஆதீனம் செய்த உருப்படியான காரியங்களில் ஒன்று சாதி, மத மோதல்கள் நடக்கும் இடங்களுக்குச் சென்று அமைதியை ஏற்படுத்தியது. 1981 - 82 ஆம் ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் இந்து -கிறிஸ்தவர்களிடையே மதக் கலவரம் ஏற்பட்ட போது ஆதீனம் அங்கே ஆஜரானார். கொலையும், துப்பாக்கிச் சூடும் நடந்து கொண்டிருந்த அந்தப் பகுதியில், தொடர்ந்து 4 மாத காலம் தங்கியிருந்து, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சமாதானப்படுத்தினார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, கோட்டாறு மருத்துவமனையிலும், அந்தந்த ஊர்களிலும் சந்தித்து, உணவும் உடையும் வழங்கினார்.

இதேபோல 1981ல் தென்காசி மீனாட்சிபுரத்தில் மத மாற்றத்தால் பெரிய மதக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவான போது, உடனடியாக அந்தப் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றார் ஆதீனம். மீனாட்சிபுரம் பகுதியிலுள்ள இல்லங்கள் தோறும் எழுந்தருளி, சைவ சமயப் பேருண்மைகளையும், இஸ்லாம் மார்க்கத்தத்துவத்தையும் எடுத்துக் கூறி, அவரவர் மதங்களில் அவரவர் இருக்க வேண்டியது என்று சொன்னார். தென்காசி மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களோடு அமர்ந்து "சமபந்தி" போஜனத்தில் கலந்து கொண்டார் ஆதீனம். இவரோடு, வாஜ்பாய் (பின்னாள் பிரதமர்), பெஜாவர் மடத்தின் பீடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி போன்றோரெல்லாம் கலந்து கொண்டார்கள்.

அதெல்லாம் போன மாசம்...


1983 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்தபோதும், அங்குள்ள சிவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டபோதும், மிகுந்த வேதனைக்குள்ளாகி, மதுரை வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் இரண்டு முறை உண்ணாவிரதம் மேற்கொண்டவர் மதுரை ஆதீனம்.

1985 - 86ம் ஆண்டுகளில் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு, 1987-ல் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட வன்னியர் போராட்ட பாதிப்பு போன்றவற்றுக்கும் நேரில் சென்றவர் ஆதீனம்.

அதெல்லாம் போன மாசம்.... கடந்த 10 ஆண்டுகளில் மதுரை ஆதீனம் செய்த அருட்பணிகள் என்ன தெரியுமா? சொன்னா சிரிப்பீங்க...அதை நாளைக்கு படிங்க...!