கே.கே.மகேஷ்
படங்கள்: கிருஷ்ண மூர்த்தி & பா.காளிமுத்து
மதுரை ஆதீனப் பதவியில் நிம்மதியாக ஒரு மாதம் கூட இருக்கவில்லை நித்தியானந்தா.அதற்குள் அவரது முன்னாள் பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்த செக்ஸ் புகார்கள் பரபரப்பை பற்ற வைத்தன. அது மதுரை ஆதீனத்தின் நிம்மதிக்கும் சேர்த்து உலை வைத்தது.
பல முறை கற்பழித்தார்
குடும்ப வாழ்க்கையில் பற்று இல்லாமல், சன்னியாசியாகும் 'ஆசை'யில் 2004ல் நித்தியின் ஆசிரமத்துக்கு வந்தவர்தான் ஆர்த்தி ராவ். சென்னையைச் சேர்ந்த இவர் திருமணமானவர். அவரது கணவர் அமெரிக்காவில் இருக்கிறார்.
நித்தி, ஜீவ முக்தி தருவதாகச் சொல்லிச் சொல்லியே தன்னை பல முறை கற்பழித்தார் என்று அதிர்ச்சி புகார் கொடுத்தார் ஆர்த்தி ராவ். "சேலம், ஏற்காடு, பிடதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் போன்ற பல இடங்களுக்கு அழைத்துச் சென்று என் விருப்பம் இல்லாமலேயே நித்தி என்னை அனுபவித்தார்.வாரணாசி கும்ப மேளாவுக்கு அழைத்துச் சென்று புனித தலத்தில் உறவு கொண்டால் ஆன்ம சக்தி அதிகரிக்கும் என்று சொல்லி அங்கேயும் கற்பழித்தார்" என்று சொன்னார் ஆர்த்திராவ்.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக சி.ஐ.டி. போலீஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய, பிடதி ஆசிரமத்தில் வைத்து நித்தியிடம் கேள்வி கேட்டன கர்நாடக மீடியாக்கள். அப்போது ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டார்கள். நித்தியின் ஆட்களுக்கும் மண்டை உடைந்தது.
இந்த விவகாரத்தால், ''பிடதியின் அமைதி பறிபோய் இருக்கிறது. சர்ச்சைக்குரிய ஆசிரமத்தையும், நித்தியானந்தாவையும் விசாரித்து ஓரிரு நாட்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு இருக்கிறேன். தேவைப்பட்டால் பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்படும்" என்று அறிவித்தார் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா.
கைதான நித்தி
இதற்கிடையே, ஜூன் 7 ஆம் தேதி கர்நாடகாவின் ராம்நகர் போலீஸ், நித்தியானந்தா உள்ளிட்ட எட்டுப் பேர் மீது கொலை மிரட்டல், வெறித்தாக்குதல், பொது அமைதியைச் சீர்குலைத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நித்தி, கைது நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவானார்.
கடைசியில் வேறு வழியில்லாமல் ஜூன் 13 ஆம் தேதி ராம்நகர் கோர்ட்டில் சரண் அடைந்தார். உடனே நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. வெளியே வந்த நித்தியை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவார் என்று கோர்ட் வாசலிலேயே கைது செய்தது கர்நாடக போலீஸ்.
மதுரை வந்தார்
ஜூன் 15 ஆம் தேதி இரண்டாவது வழக்கிலும் நித்திக்கு ஜாமீன் கிடைத்தது. மீண்டும் ஏதாவது வழக்குப் போட்டு கர்நாடகா போலீஸ் கைது செய்து விடுமோ என்ற பயத்தில், இரவோடு இரவாக மதுரை புறப்பட்டார் நித்தி. மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு மதுரை ஆதீனத்துக்கு வந்து சேர்ந்த அவரை ஆரத்தழுவி வரவேற்றார் அருணகிரி. அவர் உள்ளே போன மறுகணமே கேட் சாத்தப்பட்டு பெரிய பூட்டு போடப்பட்டது.

அந்தப் பூட்டு ஆதீன வாசலுக்கு மட்டுமல்ல, நித்தி, அருணகிரியின் வாய்க்கும் சேர்த்துத்தான் போடப்பட்டது.பதவியேற்ற 2 மாதத்தில் சுமார் 25 பிரஸ் மீட்டுகளை நடத்தி சாதனை படைத்தவரான நித்தி, இந்தப் பிரச்னைக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்திப்பதையே தவிர்த்தார். தான் உண்டு, தன் சேலையுண்டு என்று ஸாரி... வேலையுண்டு என்று அடக்கத்துடன் இருக்க ஆரம்பித்தார். ஆனால், அவரது சீடர்களுக்கும், அருணகிரிநாதருக்கும் இடையே உரசல் ஏற்பட ஆரம்பித்தது.
அதிருப்தியில் ஆதீனம்
ஆசிரமத்துக்குள்ளேயே அடைந்து கிடப்பது போரடித்ததால், கொடைக்கானலுக்குச் சென்றார் நித்தியானந்தா. ஆனாலும், அவரது சீடர்கள் சுமார் 15 பேர் தொடர்ந்து மதுரையிலேயே இருந்தார்கள். அவர்களுக்கும் அருணகிரிநாதரின் ஊழியர்களுக்கும் இடையே அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டன. "நித்தியின் சீடர்கள் என்னை மதிப்பதேயில்லை. என்னைக் காண வருபவர்கள், சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது மரபு. ஆனால், நித்தி பக்தர்கள் என்னை மதிக்காதது மட்டுமல்ல, கேலியும் செய்கிறார்கள்' என்று புலம்ப ஆரம்பித்தார் ஆதீனம். இதற்கிடையே, நித்தியின் பி.ஆர்.ஓ., ஒருவர் ஆதீனத்தை 'அகோபலிப்டா' (காட்டுவாசி) என்று கேலி செய்தாராம். இதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்றார் ஆதீனம்.
இடையில் இமயமலைக்குச் சென்ற நித்தி, ரஞ்சிதாவையும் உடன் அழைத்துச் சென்றார். இதுபற்றி நித்தி தன்னிடம் கூறவில்லையே என்று வருத்தப்பட்டார் ஆதீனம். ஆனாலும் நித்தியை நீக்குவது தொடர்பாக அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. நித்திக்கு எதிராக போராடிய அமைப்புகளில் பல, ஆதீனத்துக்குப் பாதுகாப்பும், ஆதரவும் தருவதாகச் சொல்லியும் அவரால் ஒன்றும் செய்ய -முடியவில்லை. சூழ்நிலைக் கைதியாகத் தத்தளித்தார் ஆதீனம். இதனால், 'ஆதீனம் சம்பந்தப்பட்ட பலான சி.டி. ஒன்று நித்தி கையில் சிக்கிவிட்டதாக'... வசந்தி ஸாரி... வதந்தி கூட பரவியது.
கோர்ட் வைத்த செக்
இதனிடையே, நித்தியானந்தா நியமனத்தை எதிர்த்து மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பினர் தொடர்ந்த வழக்கு ஒன்று முக்கிய கட்டத்தை எட்டியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்டோபர் 16 ஆம்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ''இந்து அறநிலையத் துறை சட்டப்படி மதுரை ஆதீன மடத்தைப் பொறுத்தவரை, ஒருவர் மட்டுமே மடாதிபதியாக இருக்க முடியும். ஆனால், '292-வது குருமகா சன்னிதானமான நான் 293 ஆவது சன்னிதானமாக நித்தியானந்தாவை நியமிக்கிறேன்'னு கர்நாடகாவில் வைத்து ஒப்பந்தம் எழுதி இருக்கிறார் அருணகிரிநாதர்.
இது, இந்து அறநிலையத் துறை சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது. மரபுகளை மீறி சட்ட விரோதக் காரியத்தைச் செய்த அருணகிரிநாதரை மடத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து நீக்கி, மடத்தை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மதுரை நீதிமன்றத்தில் அரசு தரப்பில் சிவில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டன'' என்று வாதாடினார் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்.
அவர் சொன்னபடியே, அருணகிரிநாதரின் பதவியைப் பறித்து, ஆதீனத்தை அரசே கைப்பற்றுவதற்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. பதறிப்போன ஆதீனம், தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நித்தியை நீக்க முடிவு செய்தார்.
நித்தியை நீக்கிய பிறகாவது மதுரை ஆதீனத்திற்கு நிம்மதி கிடைத்ததா? நாளை பார்க்கலாம்.

http://news.vikatan.com/article.php?module=news&aid=15719
ReplyDeleteஎன்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 5