கே.கே.மகேஷ்
படங்கள்: பா.காளிமுத்து
இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், "ஆமா.... இதுவரைக்கும் அவர் என்ன செய்தார்?" என்ற கேள்வியைத் திருப்பிக் கேட்பீர்கள். அதற்காகத் தான் இந்த எஸ்.டி.டி. ஸாரி.... ஹிஸ்ட்ரி!
வெளிநாடு பயணம்
தஞ்சை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவரான அருணகிரிநாதர், மதுரை ஆதீனத்தின் இளவரசராக (அதாங்க... நித்தியானந்தா சமீபத்தில் வகித்த பதவி) 27.5.1975ல் பொறுப்பேற்றார். 291வது குருமகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் பூரணம் அடைந்த பிறகு, 14.3.1980ல் போட்டியின்றி மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டார் அருணகிரிநாதர். அன்று முதல் அவருடைய பெயர் 292 ஆவது மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகள்! (அப்படித்தான் பத்திரிகையில் பிரசுரிக்கணும்னு அவர் வலியுறுத்திச் சொல்லுவார். ஆனால் யாரும் கேட்பதில்லை)
உண்மையிலேயே இளம் வயதில் செம ஆக்டிவாக இருந்தார் நம்ம ஆதீனம். மதுரை ஆதீனத்தின் நோக்கம் சைவத்தை பரப்புவதும், தமிழை வளர்ப்பதும்தான். அந்த வேலைகளை ஓரளவுக்குச் சரியாகச் செய்தார் மதுரை ஆதீனம். 1984ல் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கும், 1987ல் மலேசியாவுக்கும் சென்று சைவ சிந்தாத்தத்தை விளக்கிப் பேசியிருக்கிறார்.

அதே ஆண்டில் சீனாவில் உள்ள 'காண்டன்' (சரியாக உச்சரிக்கவும்) நகருக்குச் சென்ற அருணகிரிநாதர், அங்கு இஸ்லாமிய மக்களும் கூடியிருப்பதைக் கண்டு, சைவ சமயத்தையும், இஸ்லாம் மார்க்கத்தையும் இணைத்து 'ஏகத்துவம்' பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றி அசத்தினார். இதேபோல ஹாங்காங்க், சிங்கப்பூர், ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளார் ஆதீனம்.
வாடகை வசூலிப்பதில் கில்லாடி
மதுரை ஆதீனத்தின் சொத்துக்கள் பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அந்த சொத்துக்களை எல்லாம் மீட்டு, ஆதீன வருவாயைப் பெருக்கியவர் இவர்தான். தென் தமிழகத்திலேயே ஒரே வீதியில் அதிக நகைக்கடைகள் அமைந்திருப்பது, மதுரை ஆதீனம் அமைந்திருக்கின்ற தெற்கு ஆவணி மூல வீதிதான் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த வீதியில் ஆரம்பத்தில் வரிசையாக இரும்புப் பட்டறைகள்தான் இருந்தன. வருமானத்தைப் பெருக்குவதற்காக அவற்றை எல்லாம் காலி செய்ய வைத்து, நகைக்கடைகளுக்கு வாடகைக்குக் கொடுத்த 'பெருமை'யும் நம்ம ஆதீனத்தைத் தான் சேரும்.

இந்தக் கடைகள், வீடுகள், நிலங்கள் போன்றவற்றை வாடகைக்கும், குத்தகைக்கும் அனுபவித்தும் வருகிறவர்கள் எல்லாம், ஒவ்வொரு மாதமும 5 ஆம் தேதிக்குள் அவரவர்கள் கட்ட வேண்டிய தொகையை, அவர்களாகவே வந்து செலுத்தி ரசீது பெற்றுக் கொள்கிறார்கள். இந்த நடைமுறையை அமல்படுத்தியது இவர்தான்.
ஏ.சி. போட்டவரும் இவரே!
ஆதீனத்துக்குச் சொந்தமான கோவில்கள் அனைத்தும் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. (ஹி...ஹி... வைஸ்ணவியின் வீடும்தான்) கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்புறம்பியம் ஸ்ரீ சாட்சிநாத சுவாமி திருக்கோயில், கச்சனம் ஸ்ரீ கைச்சின்னேசுவர சுவாமி திருக்கோயில், பன்னத்தெரு ஸ்ரீ பன்னகாபரமேஸ்வர சுவாமி திருக்கோயில் போன்றவற்றில் திருப்பணிகள் செய்தவரும் இவரே.
மதுரை ஆதீனம் முழுக்க கிரானைட் கற்களைப் பதித்து, ஒடுக்கம் என்று அழைக்கப்படும், பக்தர்கள் ஆதீனத்தைச் சந்திக்கும் அறைக்கு ஏ.சி. போட்டவரும் இவர்தான். ஆதீனத்தின் பக்கம் இருந்த மாநராட்சி கழிவறையை அகற்றியது, ரிக்ஷா ஸ்டாண்டை அகற்றியது என்று இவரது 'சாதனை'களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆதீனத்தின் காரில் சைரன் மாட்டிக் கொண்டு பந்தா காட்டிய முதல் ஆதீனமும் இவர்தான்.
கலவர பூமியில் ஆதீனம்
ஆரம்ப காலத்தில் மதுரை ஆதீனம் செய்த உருப்படியான காரியங்களில் ஒன்று சாதி, மத மோதல்கள் நடக்கும் இடங்களுக்குச் சென்று அமைதியை ஏற்படுத்தியது. 1981 - 82 ஆம் ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் இந்து -கிறிஸ்தவர்களிடையே மதக் கலவரம் ஏற்பட்ட போது ஆதீனம் அங்கே ஆஜரானார். கொலையும், துப்பாக்கிச் சூடும் நடந்து கொண்டிருந்த அந்தப் பகுதியில், தொடர்ந்து 4 மாத காலம் தங்கியிருந்து, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சமாதானப்படுத்தினார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, கோட்டாறு மருத்துவமனையிலும், அந்தந்த ஊர்களிலும் சந்தித்து, உணவும் உடையும் வழங்கினார்.
இதேபோல 1981ல் தென்காசி மீனாட்சிபுரத்தில் மத மாற்றத்தால் பெரிய மதக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவான போது, உடனடியாக அந்தப் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றார் ஆதீனம். மீனாட்சிபுரம் பகுதியிலுள்ள இல்லங்கள் தோறும் எழுந்தருளி, சைவ சமயப் பேருண்மைகளையும், இஸ்லாம் மார்க்கத்தத்துவத்தையும் எடுத்துக் கூறி, அவரவர் மதங்களில் அவரவர் இருக்க வேண்டியது என்று சொன்னார். தென்காசி மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களோடு அமர்ந்து "சமபந்தி" போஜனத்தில் கலந்து கொண்டார் ஆதீனம். இவரோடு, வாஜ்பாய் (பின்னாள் பிரதமர்), பெஜாவர் மடத்தின் பீடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி போன்றோரெல்லாம் கலந்து கொண்டார்கள்.
அதெல்லாம் போன மாசம்...
1983 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்தபோதும், அங்குள்ள சிவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டபோதும், மிகுந்த வேதனைக்குள்ளாகி, மதுரை வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் இரண்டு முறை உண்ணாவிரதம் மேற்கொண்டவர் மதுரை ஆதீனம்.
1985 - 86ம் ஆண்டுகளில் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு, 1987-ல் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட வன்னியர் போராட்ட பாதிப்பு போன்றவற்றுக்கும் நேரில் சென்றவர் ஆதீனம்.

அதெல்லாம் போன மாசம்.... கடந்த 10 ஆண்டுகளில் மதுரை ஆதீனம் செய்த அருட்பணிகள் என்ன தெரியுமா? சொன்னா சிரிப்பீங்க...அதை நாளைக்கு படிங்க...!
பார்த்தவுடன் கவரும் தோற்றமும், கம்பீர உருவமும், இளமையும் கொண்டவர் நித்தியானந்தா என்றும் என்னைவிட அவரால் நன்றாக ஆன்மிகப் பணியில் ஈடுபட முடியும். என்று அவர் வருணித்ததைத்தான் சகிக்க முடியவில்லை! ஒரு மடாதிபதிக்கு எதுக்கையா கவரும் தோற்றம்..கம்பீர உருவம்..இளமை..எல்லாம்? என்ன மானாட மயிலாடல ஆடவா போறான்? பத்திகிட்டு வருது! வயசுக்கேத்த சகவாசம் வேணும்...இது மாதிரி நாதாரி..நன்னாரி பசங்க கூடல்லாம் சகவாசம் வெச்சுகிட்டதனாலதான் ஊரே காறி துப்பற அளவுக்கு சாமி புகழ் சிகரம் ஏறிச்சு.
ReplyDelete