நித்தியை பதவியில் இருந்து நீக்கிய பிறகும் கூட ஆதீனத்திற்கு நிம்மதி கிடைக்கவில்லை. அவசர அவசரமாக சில கடமைகளைச் செய்து முடித்தவர், இப்போது வெப்சைட் ஒன்றை புதிதாக தொடங்கியிருக்கிறார்.
கிரீடமும், செங்கோலும் யாருக்கு?
தன் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், மதுரை ஆதீனத்தை அரசே எடுத்துக் கொள்வதை தடுப்பதற்காகவும் 2012 அக்டோபர் 19 ஆம் தேதி, நித்தியானந்தாவை அவசரமாக பதவியில் இருந்து நீக்கினார் மதுரை ஆதீனம். கோர்ட்டை ஏமாற்றுவதற்காகவே இந்த நாடகம் என்று சர்ச்சை எழுந்ததால், அப்படி இல்லை என்று காட்டுவதற்காக, நித்தியின் ஆட்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பரபரப்பு புகார் ஒன்றை போலீஸில் கொடுத்தார் ஆதீனம்.
பிறகு, நித்தி கொடுத்த பரிசுப் பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்லவும் ஆணையிட்டார் அதன்படி அனைத்துப் பொருட்களையும் லாரி, லாரியாக பிடதிக்கு எடுத்துச் சென்றனர் நித்தியின் ஆட்கள். ஆனால், தங்கக் கிரீடம், செங்கோல் போன்றவற்றைக் கொடுக்க ஆதீனம் மறுத்துவிட்டார். தன் கனகாபிஷேகத்திற்காக வாங்கப்பட்ட 169 கிராம் தங்கக் காசுகளை, நித்தியின் ஆட்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகவும், அவற்றை திரும்ப ஒப்படைத்தால்தான் கிரீடத்தையும், செங்கோலையும் கொடுப்பேன் என்று அடம்பிடித்தார் ஆதீனம். கடைசியில் தங்கக் காசுகளைக் கொடுத்து, கிரீடத்தையும், செங்கோலையும் மீட்டுச் சென்றார்கள் நித்தியின் ஆட்கள்.
வைஸ்ணவி திருமணம்
நித்தியால் ஏற்பட்ட கறையைத் துடைத்துவிட்டதாகக் கருதிய ஆதீனம், அடுத்ததாக தன் முதன்மைச் செயலாளரும், பிரதான பெண் சீடருமான வைஸ்ணவிக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். அதன்படி, கடந்த 16.5.12 அன்று வைஸ்ணவிக்கும், அவரது
வைஸ்ணவி திருமணம்
நித்தியால் ஏற்பட்ட கறையைத் துடைத்துவிட்டதாகக் கருதிய ஆதீனம், அடுத்ததாக தன் முதன்மைச் செயலாளரும், பிரதான பெண் சீடருமான வைஸ்ணவிக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். அதன்படி, கடந்த 16.5.12 அன்று வைஸ்ணவிக்கும், அவரது
சில மாதங்களுக்குப் பிறகு, வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலத்தில் மாப்பிள்ளை இல்லத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் ஆதீனம். நிச்சயதார்த்தத்தின்போது தான் பணம் கொடுத்த விவகாரம் சர்ச்சையானதால், திருமணத்தின் போது எந்தப் பரிசுப் பொருளையும் கொடுக்கவில்லை ஆதீனம். ஆனால், அவர்களுக்கான பரிசுப் பொருட்கள் ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டன.
புதிய வாரிசு நியமனம்
நித்தியை பதவியில் இருந்து தூக்கிய சில நாட்களிலேயே, தன் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் அருணகிரிநாதர். "திருவாடுதுறை ஆதீனத்தில் தம்பிரான் சுவாமிகளாக இருந்து பூஜை பணிவிடைகள் செய்துவந்த ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகளை மதுரை ஆதீனத்தின் சீடராக நியமித்துள்ளோம். இவர் மதுரை ஆதீனத்தின் தம்பிரானாக இருந்து பூஜை, பணிவிடைகள், சமயப்பணிகளை ஆற்றுவார். அவருக்கு இப்போது 36 வயதாகிறது. பால் பதனிடும் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பெற்றிருக்கிறார்" என்று அறிவித்தார் ஆதீனம். அவரது இந்த அறிவிப்பின் போது, வைஸ்ணவியும் (அப்போது அவருக்கு நிச்சயம் ஆகியிருந்தது), அவரது தங்கை கஸ்தூரியும் உடனிருந்தார்கள்.
மதுரை ஆதீன வரலாற்றில் இதுவரையில் யாரும் தம்பிரானாக நியமிக்கப்பட்டது கிடையாது. இளைய ஆதீனமாக 2004ல் சுவாமிநாதன் என்பவரும், 2012ல் நித்தியானந்தாவும் நியமிக்கப்பட்டு பின்னர் ஓராண்டுக்குள் நீக்கப்பட்டார்கள். புதிய தம்பிரானின் இயற்பெயர் செந்தில்நாதன். நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்தவரான இவர், தாய், தந்தை இருவரையும் இழந்தவர்.
மதுரையில் குடியேறிய வைஸ்ணவி
நித்தியானந்தா இருந்த போது, திரும்பிய திசையெல்லாம் மல்லிகை சூடி, வாசனை திரவியங்கள் தெளித்த பெண்களுமாக இருந்த ஆதீனம், அவர் போன பிறகு வெறிச்சோடியது. தம்பிரான் நியமனத்திற்குப் பிறகு, வைஸ்ணவியும் திருமணமாகி சென்றுவிட்டதால் ஆதீனம் களை இழந்து காணப்பட்டது. ஓராண்டாக நிலவிய சர்ச்சைகள் காரணமாகவும், அன்னதானத் திட்டம் நிறுத்தப்பட்டதாலும் பக்தர்களின் வருகையும் அடியோடு நின்று போய்விட்டது. இதனால் தனிமையில் வாடினார் ஆதீனம்.
இதைத் தொடர்ந்து ஆதீனத்தின் வேண்டுகோளை ஏற்று, மார்ச் மாத இறுதியில் தன் கணவர் வேதமூர்த்தியுடன் மதுரை ஆதீனத்திலேயே குடியேறினார் வைஸ்ணவி. தற்போது அவர்களுக்கு மதுரையிலேயே வீடு பார்த்துக் கொடுத்து, கிரகப்பிரவேசத்துக்கும் நேரில் ஆசீர்வாதம் கொடுத்தார் ஆதீனம். இருப்பினும் வைஸ்ணவியும் பொறுப்புகள் பாதியாக குறைக்கப்பட்டு, அந்தப் பொறுப்புக்கள் அவரது தங்கை கஸ்தூரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெப்சைட் தொடங்கிய ஆதீனம்
நித்தி வந்து போனதன் பாதிப்பு காரணமாக, மதுரை ஆதீனம் இப்போது ஹைடெக் மனிதராகி இருக்கிறார். லேப் டாப் பயன்படுத்துகிறார். தனக்கென்று கடந்த மாதம் மதுரை ஆதீனம்.காம் (maduraiaadheenam.com) என்ற வெப்சைட்டை ஆரம்பித்தார். அதில், இணையதள வரவேற்பு வீடியோ, மதுரை ஆதீன வரலாறு முதல் சமீபத்திய சாதனைகள் வரை பட்டியலிட்டுள்ள அருணகிரிநாதர், பக்தர்கள் தன்னைத் தொடர்பு கொள்ளவும் ஒரு வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதன் மூலம் அவருக்கு செய்தி அனுப்பிவிட்டுக் காத்திருந்தால், அவரது அருளாசி கிடைக்குமாம். சில நேரங்களில், உங்கள் மெயில் ஐ.டி.க்கு பதிலும் தருவார். தமிழகத்தில் எந்த சைவ மடாலயத்திலும் இல்லாத நவீன வசதியை மதுரை ஆதீனத்தில் ஏற்படுத்தியிருப்பதாகப் பெருமிதத்துடன் சொல்கிறார் ஆதீனம்.
கடந்த ஓரிரு மாதங்களாகத்தான் நிம்மதியாக இருக்கிறார் ஆதீனம். திருஞானசம்பந்தர் விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார். மதுரையில் மழை பெய்ய வேண்டும் என கடந்த மாதம் சிறப்பு பூஜைகள் கூட செய்தார். ஆனாலும், பழைய வழக்குகள் தலைக்கு மேல் கத்தி போல் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் தினம் தினம் அம்மா புகழ்பாடி கொண்டிருக்கிறார் ஆதீனம்.
அந்த வழக்குகளின் இன்றைய நிலை என்ன? நித்தி இப்போது என்ன செய்கிறார்? நாளை பார்க்கலாம்...
கடந்த ஓரிரு மாதங்களாகத்தான் நிம்மதியாக இருக்கிறார் ஆதீனம். திருஞானசம்பந்தர் விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார். மதுரையில் மழை பெய்ய வேண்டும் என கடந்த மாதம் சிறப்பு பூஜைகள் கூட செய்தார். ஆனாலும், பழைய வழக்குகள் தலைக்கு மேல் கத்தி போல் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் தினம் தினம் அம்மா புகழ்பாடி கொண்டிருக்கிறார் ஆதீனம்.
அந்த வழக்குகளின் இன்றைய நிலை என்ன? நித்தி இப்போது என்ன செய்கிறார்? நாளை பார்க்கலாம்...
put all news in english also thanks
ReplyDelete