Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label நித்தி. Show all posts
Showing posts with label நித்தி. Show all posts

Saturday, August 2, 2014

நித்யானந்தாவின் உண்மை தெரிந்துவிடும்: 6ம் தேதி !!

நித்யானந்தா அளித்த மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம் வரும் 6ம் திகதி ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள பிடதியில் ஆசிரமத்தை நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா, அங்கிருக்கும் பெண்களை கற்பழித்துள்ளதாகவும், நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலைகள் புரிந்ததாகவும் தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பியிருந்தன.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதன்பின் இவ்வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் அந்த சோதனை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவின் மீது பல ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு இறுதியில் நித்யானந்தாவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நித்யானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என்று பெங்களூர் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா தொடர்பான வழக்கு சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த போது, அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனை எதிர்த்தும் நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை இன்று தள்ளுபடி செய்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ராம்நகர் நீதிமன்றத்தில் வரும் 7ம் திகதி ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.
எனவே நித்யானந்தாவுக்கு பெங்களூர் மருத்துவமனையில் வரும் 6ம் திகதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. அதன் பின்னர் அவர் 7ம் திகதி ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது
http://indru.todayindia.info/nithyananda-to-know-the-truth-6th/

கம்யூனிஸ்டு கட்சி பற்றி அவதூறு: நித்யானந்தாவை திருவண்ணாமலைக்குள் நுழைய விடமாட்டோம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

நித்யானந்தா கம்யூனிஸ்டு கட்சி பற்றி அவதூறாக கூறியிருக்கிறார். அவரை திருவண்ணாமலைக்குள் நுழையவிடமாட்டோம் என்று கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜன், மாவட்ட செயலாளர் எம்.வீரபத்திரன் மற்றும் பலர் பேசினர். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
சிறப்பு வகுப்புகள்
அப்போது ஏழை குழந்தைகளின் கல்விக்காக கம்யூனிஸ்டு கட்சி போராடி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1411 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையே கல்வியில் பின்தங்கியிருப்பதற்கு காரணம். 10 மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வுக்கு முன்பு மாணவ– மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.
காத்திருப்பு போராட்டம்
பெற்றோர்களிடத்தில் ஆங்கில மோகம் அதிகரித்து விட்டதால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தின் கல்வி தரத்தை உயர்த்த ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இல்லாவிட்டால் ஆசிரியர்களை நியமிக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.சிவக் குமார், குமரேசன், பலராமன், வக்கீல் அபிராமன், ஜெயபால் மற்றும் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நுழையவிட மாட்டோம்
பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில் ‘நித்தியானந்தா சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் கம்யூனிஸ்டு கட்சி பற்றி அவதூறாக கூறியிருக்கிறார். அவர் திருவண்ணாமலைக்கு வந்தால் அவரை திருவண்ணாமலைக்குள் நுழையவிடமாட்டோம் என்று தெரிவித்தார்.
http://www.dailythanthi.com/2014/08/01191742/Communist-Party-About-Defamation-Nithyananda-Tiruvannamalai.vpf

Friday, October 18, 2013

ஆசிரமத்தில் ரெய்டு: மீண்டும் பொலிஸ் வலையில் நித்யானந்தா!

[ வியாழக்கிழமை, 17 ஒக்ரோபர் 2013, 10:36.39 AM GMT +05:30 ]
கர்நாடகாவில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கெண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
25 நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் 100 பேரை தங்கவைத்து அவர்களது விருப்பதை மீறி மொட்டை அடித்து சன்னியாசி ஆக்குகிறார்.
ஆண், பெண் குழந்தைகள் தவறான பாலியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் கமிஷனின் செயலாளர் உமேஷ் ஆரத்தியாவுக்கு புகார் வந்தது.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த நித்யானந்தா ஆசிரமத்துக்கு உமேஷ் ஆரத்தியா சென்றபோது அவரை உள்ளே விடவில்லை. அதனால் அவர் நித்யானந்தாவின் மேல் கர்நாடக அரசிடம் புகார் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா, உமேஷ் ஆரத்தியா மற்றும் ராம்நகர் டெப்டி ஆட்சியர் இருவரையும் பொலிஸ் பாதுகாப்புடன் சென்று ஆசிரமத்திற்குள் சோதனை நடத்தும்படி உத்தரவிட்டார்.

நடத்தப்பட்ட சோதனையில் வெடித்த வன்முறை மற்றும் நித்யானந்தாவின் ஆட்கள் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றை பற்றி உமேஷ் ஆரத்தியா கர்நாடக அரசுக்கு புதன்கிழமை அறிக்கை கொடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில், நித்யானந்தா இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 100 குழந்தைகளை எந்தவிதமான பாடத்திட்டமும் இல்லாமல் நித்யானந்தா பாடத்திட்டம் என்ற ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் மத்திய அரசு மாநில அரசு என எந்த அரசுகளின் கல்வித்துறையின் அனுமதியில்லாமலும் ஒரு உள்ளூர தங்கும் பள்ளியை நடத்தி வருகிறார்.

அதன் மூலம் அவர் கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கிறார். இது சட்ட விரோதம் என உமேஷ் ஆரத்தியா கூறியுள்ளார்.
உமேஷ் ஆரத்தியாவின் அறிக்கையை தொடர்ந்து, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் மேல் நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு கர்நாடக அரசு வந்துள்ளது என தெரிகிறது
.
இதனைத் தெரிந்து கொண்ட நித்யானந்தா, கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையாவை, கண்டபடி திட்டி தனது இணையதளத்தில் பேசியுள்ளார்.
என் மேல் நடவடிக்கை எடுத்த முதல்வர்கள் காணாமல் போனார்கள். என் மேல் நடவடிக்கை எடுத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சதானந்த கவுடா ஆகியோர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டனர் என்றும் கடவுளான என் மீது காவல்துறையை ஏவும் முதல்வர் சித்தராமையா விரைவில் சின்னாபின்னமாகிவிடுவார் என சாபமிட்டுள்ளார்.
நித்யானந்தாவின் இந்த சாபம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.newindianews.com/view.php?22cMC403JOyce27mKdb2Y0Mad3o44ec3ODL043AlH223WAo2

Wednesday, October 16, 2013

Notice served on Nithyananda gurukul

The office of Deputy Commissioner, Ramanagaram district, was buzzing with activity on Tuesday. As many as 89 students of the gurukul in Nithyananda ashram, accompanied by their parents, attended counselling at the office.
The counselling was held after the DC’s office, Child Protection Cell, District Child Welfare Committee and Department of Women and Child Welfare, Ramanagaram district, issued a notice to the gurukul. It is said that the gurukul, a residential school, does not have the requisite permission from either the Education or Women and Child Welfare departments. The school is also not affiliated to any board, either State or central. It has also been said that the school was violating all norms and had failed to apply for registration. Kannada was not being taught there.
After issuing the notice, the DC’s office had directed the school authorities to ensure that all students and their parents attend the counselling. During counselling, it emerged that of the 108 students, 19 had been transferred to other schools in the neighbouring States. Of the 89 remaining students, 88 and their parents attended. A report of the counselling will be sent to the head office in Bangalore.
During the counselling session, there was an altercation between Nithyananda supporters and the media personnel.

Thursday, September 19, 2013

நள்ளிரவு நிர்வாண பூஜை!

நள்ளிரவு நிர்வாண பூஜை!
'உண்மை அல்லாதவற்றை உண்மை என்று நம்பச்செய்து, மக்களை ஏமாற்றி போலி ஆசாமிகள் பலன் அடைவதற்கு காரணமாக உள்ள பில்லி சூன்யம், ஏவல் வேலைகள், குறி சொல்வது போன்றவை தடை செய்யப்படுகிறது’ - இப்படி ஒரு சட்டத்தை மகாராஷ்டிர மாநில அரசு நிறைவேற்றி இருக்கிறது.
 இந்த ஏமாற்று வேலைகளைத் தடைசெய்ய வேண்டும் என்று தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டுப் போராடிய சமூக சேவகர் நரேந்திர தபோல்கர், இதன் காரணமாகவே படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகுதான் மகாராஷ்டிர அரசின் அறிவுக் கண் திறந்தது. நரேந்திர தபோல்கரின் ரத்தத்தில் நனைக்கப்பட்ட காகிதங்களில் அச்சாகி உள்ள இந்தச் சட்டம், பலவீனமான மனிதர்களின் மூட நம்பிக்கைகளுக்கும் அவர்களை சுரண்டிப் பிழைக்கும் போலி ஆசாமிகளுக்கும் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
பகுத்தறிவின் தாய் பூமியான தமிழகத்திலும் வட மாநிலங்களுக்கு கொஞ்சமும் குறைவு இல்லாமல், மூட நம்பிக்கைகள், அதையட்டிய ஏமாற்று வேலைகள் சூடுபிடித்துள்ளன. அன்றாடம் செய்திகளில் வெளியாகும் சாமியார்களின் சல்லாபச் செய்திகளும் நரபலி சம்பவங்களும் நிர்வாண பூஜைகளும் இதற்கு சாட்சி.  
மக்கள் இந்த அளவுக்கு மதிமயங்கிப்போகக் காரணம் என்ன? பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் குமாரதேவனிடம் பேசினோம்.  
''பில்லி சூன்யம், ஏவல், பெண்களை வசியம் செய்வது என்று சொல்லப்படும் விஷயங்களில் துளியளவும் உண்மை இல்லை. ஆனால், திரைப்படங்கள், ஊடகங்கள் போன்றவை இவை உண்மை என்பதுபோல் ஒரு மாயத் தோற்றத்தை சமீப காலங்களில் அதிகமாக உண்டாக்குகின்றன. அதன் காரணமாக படித்தவர்கள், பணக்காரர்கள், தொழிலதிபர்கள் என்று மேல்தட்டு மக்களும் தொடர்ந்து ஏமாறுகின்றனர். பில்லி சூன்யம், ஏவல் வேலைகளைச் செய்யும் நபர்களில் குற்றப் பின்னணி கொண்ட கிரிமினல்கள்தான் 90 சதவிகிதம் பேர் இருப்பார்கள். அல்லது, வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள், உழைத்து வாழப்பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியவர்களாக இருப்பார்கள்.
அடிப்படையாக அவர்கள் சில விதிகளைப் பின்பற்றுகிறார்கள். பிளாக் மேஜிக் எனப்படும் கண்கட்டு வித்தைகளில் சிலவற்றை கற்றுக்கொள்கிறார்கள். எண்ணெய் சட்டியில் கையை விடுவது, வாயில் இருந்து லிங்கம் எடுப்பது, கைகளில் விபூதி வரவழைப்பது என்று சில வித்தைகளைப் பயன்படுத்தி தாங்கள் கடவுளின் சக்திபெற்றவர்கள் என்ற எண்ணத்தை அப்பாவி மக்களிடம் விதைக்கின்றனர். அதை நம்பி பிரமித்துப்போகும் மக்கள், அந்தச் சாமியாரிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துவிடுகிறார்கள். பிறகு, அந்தச் சாமியார் சொல்வதுதான் அவர்களுக்கு வேதவாக்கு. அப்படி ஆன பின்புதான், அவர்களை நம்பி சொத்துக்களை ஒப்படைப்பது, பெற்ற குழந்தையை நரபலி கொடுத்து புதையலைத் தேடுவது, குழந்தை பிறக்காத பெண்கள் ராத்திரி பூஜைக்குப்போவது என்று பல பைத்தியக்காரத்தனங்களை செய்கின்றனர்.
இந்தச் சாமியார்கள் செய்யும் கண்கட்டு வித்தைகளை, உரிய பயிற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதை பகுத்தறிவு இயக்கங்கள் அறிவியல் பூர்வமாக பலமுறை நிரூபித்துள்ளன. ஒரு தேர்ந்த மேஜிக் நிபுணன், இந்த சாமியார்கள் செய்வதைக் காட்டிலும் பல அற்புதங்களைச் செய்கிறான். அவர்கள் அதை மேஜிக்காகவே செய்கிறார்கள். சாமியார்கள் தங்களின் சக்தியால் செய்கிறோம் என்று ஏமாற்றுகிறார்கள்.
உன்னைக் கொலை செய்துவிடுவேன், உன்னைத் தாக்கிவிடுவேன் என்று ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பார்த்துச் சொன்னாலே அது சட்டப்படி குற்றமாகிறது. அதுபோலவே, 'பெண்களை வசியம் செய்ய வேண்டுமா? குடும்பத்தைப் பிரிக்க வேண்டுமா? எதிரிகளுக்கு சூன்யம் வைக்க வேண்டுமா?’ என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதையும் குற்றமாகப் பார்க்க வேண்டும். அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும்'' என்று கொந்தளித்தார்.
பல தலைமுறைகளாக குறி சொல்வதையே தொழிலாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த செல்வராஜிடம் பேசினோம். ''எங்கள் பரம்பரைத் தொழிலே குறி சொல்வதுதான். அதனால், மற்றவர்களைவிட இது எத்தனை பெரிய ஏமாற்று வேலை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எந்த ஒரு செயலையும் தொடர்ந்து ஒரே சீராக செய்யும்போது, அதில் சில நுணுக்கங்கள் நமக்குப் புலப்படும். சில பயிற்சிகள் கைவரப் பெறும். அதுதான் இந்தத் தொழிலின் முதலீடு. இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் முதலில் தங்களுக்கு என்று ஒரு பாணியை உருவாக்கிக்கொள்வார்கள். எங்கள் சமூகத்தினர் பரம்பரை பரம்பரையாக கம்பளியை உடலில் போர்த்திக்கொண்டு குறி சொல்லி வருகிறார்கள். இப்போது புதிதாக சிலர், சாட்டையால் அடித்துக்கொண்டு குறி சொல்வது, குடித்துவிட்டு குறி சொல்வது, தலையில் மிதித்து குறி சொல்வது என்று பல யுக்திகளை பயன்படுத்துகின்றனர். மற்றவர்களில் இருந்து தங்களை வித்தியாசப்படுத்திக்கொள்ளவே இந்த வழிமுறை. கூடவே ஆளை பயமுறுத்துகிற சாமி படங்கள், சிலைகள், பம்பை, உடுக்கையையும் பயன்படுத்துவார்கள். இதெல்லாம் உளவியல்ரீதியாக எதிராளியின் உறுதியைக் குலைத்துவிடும் தன்மை படைத்தவை.
காலம் காலமாக இதே வேலையைச் செய்வதால், சாமியாடிகளுக்கும் குறி சொல்பவர்களுக்கும் உளவியல் ரீதியாக சில கணிப்புத் திறமைகள் இருக்கும். குறி கேட்க வருபவர்கள் உட்கார்ந்திருக்கும் நிலை, அவர்களின் முகத்தில் தெரியும் வாட்டம் போன்றவற்றை வைத்து சில அடிப்படையான விஷயங்களைச் சரியாகச் சொல்வார்கள். உதாரணத்துக்கு, குறி கேட்க வந்திருப்பவரின் உடன் பிறந்தவர்கள், பெற்றோர் பெயர், மனதில் நினைக்கும் பூ போன்றவற்றை சரியாக கணித்துச் சொல்வார்கள். அப்படி சரியாக சொல்லும்போது, குறி கேட்க வந்தவரின் கண்களில் தெரியும் மாற்றங்களை, ஆச்சர்யங்களை சரியாக கணித்து பிடித்துக்கொள்வார்கள். அதன் பிறகு குறி சொல்லிகள் எதையும் கேட்கவே தேவை இல்லை. குறி கேட்க வந்தவர்களே அனைத்தையும் வரிசையாக ஒப்பித்துவிடுவார்கள். இப்படி சில அடிப்படை விஷயங்களை சரியாக கணிப்பது என்பது எல்லோருக்கும் சாத்தியம்தான்.
மேலும், இவர்களுக்கு பிளாக¢ மேஜிக் எனப்படும் கண்கட்டு வித்தைகள் தெரியும். உதாரணமாக ஈரச் சாணிக்குள் வெள்ளைப் பாஸ்பரஸை வைத்து, 'இதை ஈரம் காய்வதற்குள் உன் எதிராளியின் வீட்டில் எறிந்துவிடு’ என்பார்கள். அப்படிச் செய்யும்போது, அந்தச் சாணி காய்ந்தவுடன் வெள்ளைப் பாஸ்பரஸ் தீப்பிடித்து எரியும். அதனால், எதிராளிகளுக்கு சேதமும் பீதியும் உண்டாகும்.
ஆண், பெண் வசியம் என்று கேட்டு வருபவர்களிடம், சில போதை வஸ்துகளை பிரசாதத்திலோ தீர்த்தத்திலோ கலந்து கொடுப்பார்கள். இதற்காக சில மூலிகைகளையும் பயன்படுத்துவார்கள். போதை வஸ்து தன்னுடைய வேலையை காட்டும்போது, சில நாட்களுக்கு மருந்து கொடுத்தவர் சொல்வதைக் கேட்பார். அல்லது பேயறைந்தவர் போல் திரிவார். அந்த சமயத்தைப் பயன்படுத்தி நாம் சில காரியங்களை சாதித்துக்கொள்ளலாம். ஆனால், நிரந்தரமாக யாரையும் மயக்கத்தில் வைத்திருக்க முடியாது. இதுதான் ஆண், பெண் வசியம். மாய மந்திர வசியம் மூலம் ஒரு பெண்ணை ஒரேயடியாக வசியம் செய்துவிட முடியும் என்றால், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட அழகான பெண்களை இந்நேரம் எத்தனை பேர் வசியம் செய்திருப்பார்கள்!  
அதுபோல் குறி சொல்லிகள், 'உங்களின் பிரச்னை இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்களில் சரியாகிவிடும்’ என்று உறுதியாகச் சொல்வார். அதற்கு பல பரிகாரங்களைச் சொல்லி லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொள்வார்கள். பொதுவாக எந்தப் பிரச்னையானாலும் அது, சில  மாதங்களில் இயல்பாகவே சரியாகிவிடும். அப்படி ஆகும்போது சாமியார் சொன்னதால்தான் சரியானது என்று நம்பிக்கை அவர்கள் மனதில் வலுக்கிறது. அதற்காக இவர்கள் சொல்வதை எல்லாம் அவர்கள் செய்கிறார்கள். பணத்தைக் கொட்டுகிறார்கள்.  தனித்தன்மை இல்லாத மனிதர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அந்த நம்பிக்கை தேவைப்படுகிறது. அவர்களை ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு பணத்தைப் பறிப்பது, தங்களின் உடல் இச்சையை தீர்த்துக்கொள்வது, நரபலி கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்கின்றனர்'' என்றார்.
மகாராஷ்டிர அரசின் சட்டம் பற்றியும், குறி சொல்லிகள் மீதான புகார்கள் பற்றியும் பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் இல.கணேசனிடம் கேட்டோம். ''உலகளாவிய அளவில் இதுபோன்ற நம்பிக்கைகள் எல்லா மதங்களிலும் எல்லா இனக் குழுக்களிடமும் உள்ளன. ஒருவரின் எதிர்காலம், அவருக்குள்ள பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை கைரேகையை பார்த்துச் சொல்வது, முகத்தைப் பார்த்துச் சொல்வது நமது நாட்டிலும் தொன்று தொட்டு இருக்கிறது. ஆனால் எல்லா துறைகளிலும் போலிகளும் கலப்படங்களும் நுழைந்துவிட்டதைப்போல், இந்தத் துறையிலும் போலிகள் வந்து விட்டனர். எல்லா துறையும் தரம் தாழ்ந்துவிட்டதைப்போல், இந்தத் துறையும் தரம் தாழ்ந்துவிட்டது. போலியைக் கண்டறிந்து அவற்றை மட்டும் களையெடுக்க வேண்டியதுதான். அந்த வேலையை சீர்திருத்தவாதிகளும் உண்மையான ஆன்மிகவாதிகளும் செய்ய வேண்டும். மாறாக சட்டம் எல்லாம் போட்டு இதுபோன்ற நம்பிக்கைகளைத் தடுத்துவிட முடியாது'' என்றார்.
உண்மையான ஆன்மிக நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைகளுக்கும்¢ நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆன்மிகம் என்ற பெயரில், மனித மனத்தின் பலவீனங்களைக் குறிவைத்து தாக்கி பலனடையும் போலி சாமியார்களுக்கு தமிழகத்தில் எப்போது தடை விதிக்கப்படும்?
ஜோ.ஸ்டாலின்
 ராத்திரி நேரத்து பூஜையில்...
பொதுவாக, குழந்தை இல்லாத பெண்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இரவு பூஜைகள் நடத்தப்படுகிறது. சாமியார், அவருடைய நம்பிக்கைக்குரிய உதவியாளர் மற்றும் அந்தப் பெண்... என மூவர் மட்டுமே இரவு பூஜையில் கலந்துகொள்ள முடியும். இரவு பூஜையில் பங்கேற்கும் பெண்ணின் மீது குளிர்ந்த நீரை குடம் குடமாக ஊற்றுகின்றனர். அதன் பிறகு ஒவ்வொரு ஆடையாக களைந்துவிட்டு, நிர்வாணமாக இருக்கும் பெண்ணின் மீது எண்ணெய், சந்தனம், விபூதி என்று பலவற்றை சாமியாரும் அவருடைய உதவியாளரும் பூசுவார்களாம். இப்படிச் செய்யும்போது உணர்ச்சியால் தூண்டப்படும் அந்தப் பெண்ணிடம் சாமியாரும் அவருடைய உதவியாளரும் தங்களின் காம இச்சையை தீர்த்துக்கொள்வதில் பெரிய சிக்கல் இருக்காதாம். கணவனுக்கு இருக்கும் பிரச்னையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்கள், சாமியாரிடம் அடிக்கடி வரும்பட்சத்தில் அவர்களுக்கு குழந்தையும் பிறந்துவிடுகிறது. அவர்கள் மூலம் சாமியாருக்கு விளம்பரமும் கிடைக்கிறது. யாராவது ஒரு பெண் இரவு பூஜையில் ஒத்துழைக்க மறுத்து பிரச்னை செய்யும்போதுதான், சாமியாரின் வேடம் வெளி உலகுக்குத் தெரிய வருகிறது.

Wednesday, September 18, 2013

நித்தியானந்தா வழங்கும் நித்திய தர்மம்!!

நித்தியானந்தா வழங்கும் நித்திய தர்மம்!!

நித்தியானந்த   சுவாமிகளுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன.., அதையெல்லாம் தாண்டி,  இப்போ..  மற்றைய  குடும்பங்களிடையே  ஏற்படும்  பிரச்சனைகளை  கேட்டு  ‘தீர்வு’  வழங்கி வருகின்றார்.  அதற்கு  பெயர்  ‘நித்திய தர்மமாம்’.  என்ன மாதிரியான  பிரச்சனைகள், என்ன மாதிரியான   தீர்வுகள்  வழங்குகிவருகிறார்  என்பதை  நீங்களும்  கொஞ்சம்  கேட்டுப்பாருங்களேன்.. (உங்களுக்கும்  இப்படிபட்ட பிரச்சனைகள்  இருக்கலாம்) - (வீடியோ இணைப்பு)

Sunday, June 2, 2013

என்ன செய்கிறார் மதுரை ஆதீனம்? -மினி தொடர்: பாகம் 3

கே.கே.மகேஷ்

படங்கள்: கிருஷ்ண மூர்த்தி & பா.காளிமுத்து 



ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற வாசகம் சாமியார்களுக்கும் பொருந்தும். 27.3.12 ஆம் தேதி - ஆப்பசைத்த குரங்கு போல, மதுரை ஆதீனம் வசமாகச் சிக்கிய நாள். பணம், புகழ், தங்கம் என்று நித்தி காட்டிய ஆசைகளுக்கு மயங்கிய பின்னர் அருணகிரிநாதரின் பெயர் கெட்டு குட்டிச்சுவராகப் போனது.


மதுரை ஆதீனமாக நித்தி


27.3.12 ஆம் தேதி கர்நாடகாவின் பிடதி ஆசிரமத்தில்,மதுரையின் 293 ஆவது ஆதீனமாக நித்தியானந்தாவை அறிவித்தார் அருணகிரிநாதர்.தங்க சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த மதுரை ஆதீனம்,மற்றொரு சிம்மாசனத்தில் இருந்த நித்திக்கு தங்க கிரீடம் அணிவித்து,6 அடி உயர தங்கச் செங்கோலை வழங்கி 'பதவிப்பிரமாணம்' செய்து வைத்தார்.பதிலுக்கு ஒரு கோடி ரூபாய்க்கான செக்கை அருணகிரியிடம் கொடுத்தார் நித்தி.
அப்போது பேசிய அருணகிரி, ''மதுரை ஆதீனத்தை, எமக்குப் பிறகு யார் கட்டிக்காக்கப் போகிறார்கள் என்ற கவலையில் யாம் பல நாட்கள் தூக்கமின்றித் தவித்தோம்.அப்படி சிந்தனையுடன் ஒரு நாள் இரவு தூங்கியபோது, சிவபெருமானும்,பார்வதியும் எமது கனவில் தோன்றி, 'நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு' என்று சொன்னார்கள்.அதன்பிறகு, பெங்களூரு ஆசிரமத்துக்கு வந்து நித்தியானந்தாவோடு பழகிப்பார்த்தேன்.அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவரின் செயல்பாடுகள் எமக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.

பார்த்தவுடன் கவரும் தோற்றமும், கம்பீர உருவமும், இளமையும் கொண்டவர் நித்தியானந்தா. என்னைவிட அவரால் நன்றாக ஆன்மிகப் பணியில் ஈடுபட முடியும். எனவே, மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான சொத்துக்களையும், 1250 ஏக்கர் நிலத்தையும், கோயில்களையும் நித்தியானந்தாவே நிர்வகிப்பார். எனவே நீங்கள் அனைவரும் 293-வது மதுரை ஆதீனமான நித்தியானந்தாவை, 'ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரஹம்ச நித்தியானந்த ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்' என்று அழைக்க வேண்டும்" என்று சொன்னார்.

வாய் நிறைய பல்லோடு பேசிய நித்தியானந்தா,"மதுரை ஆதீனத்தின் புகழை சர்வதேச அளவுக்கு உயர்த்துவேன்.அதேபோன்று மதுரை ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களும் கைப்பற்றப்பட்டு,புனரமைக்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.ஏற்கெனவே மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமாக இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மீண்டும் ஆதீனத்தின் ஆளுகைக்கே கொண்டு வருவேன்.இதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவேன்.ஆதீனம் சார்பாக மதுரையில் மருத்துவக் கல்லூரியும்,24 மணி நேர அன்னதானச் சேவையும் உடனே தொடங்கப்படும்" என்று சொல்லி அதிரவைத்தார்.


கொதித்தெழுந்த மதுரைவாசிகள் 

இந்த அறிவிப்பு மதுரைவாசிகளை கொதித்தெழ வைத்தது.சின்னச் சின்ன அமைப்புகள் கூட, நித்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்தன.மதுரை ஆதீனம் பதட்டப்பகுதியானது.அங்கே 24 மணி நேரமும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பதிலுக்கு நித்தியின் பெண் சீடர்கள்,மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.ஒரு தொலைக்காட்சிக்கு எதிராகவும்,இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்தையும் கண்டித்து,உலகம் முழுக்க உள்ள நித்தியின் தியான மையங்களில் இருந்தபடியே, வீடியோ கான்பரன்ஸிங் முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் அவரது வெளிநாட்டு சீடர்கள்.
இதற்கிடையே, "ஆதீன மடத்தில் 16,18 வயதுப் பெண்கள் துப்பட்டாவும், பேண்ட்டும் அணியாமல் கவர்ச்சியாக நடமாடுகிறார்கள்.ஆங்காங்கே படுக்கைகள் எல்லாம் கிடக்கிறது.தவறான செயல்கள் நடக்கிற இடம் மாதிரி இருக்கிறது"என்று கலெக்டர் சகாயத்திடம் புகார் கொடுத்தார் மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற லட்டர் பேடு இயக்கத் தலைவர் முத்துராஜ்.

மே மாத இறுதியில்,கிரானைட் விவகாரத்தால் கலெக்டர் சகாயம் மாற்றம் செய்யப்பட,அது தன்னால் தான் நிகழ்ந்தது என்பது போல் பந்தா காட்டினார் நித்தியானந்தா."எல்லாம் இறைவன் செயல்" என்றார் அருணகிரிநாதர்."புதிய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா என் நண்பர் தான்"என்றார் நித்தி.

மடாதிபதிகளின் எச்சரிக்கை

இதற்கிடையே,மதுரை ஆதீனத்தில் நடந்த இந்த கிறுக்குத்தனமான முடிவு குறித்து விவாதிப்பதற்காக, தமிழகத்தின் பிரதான மடதிபதிகள் எல்லாம் மே 1-ம் தேதி மயிலாடுதுறையில் அவசரக் கூட்டம் நடத்தினார்கள்.திருப்பனந்தாள் காசி திருமடத்து அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரான் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், தருமபுரம்,குன்றக்குடி,திருவாவடுதுறை உள்ளிட்ட ஆதீனங்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

"செக்ஸ் புகாரில் சிக்கிய நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக அறிவித்ததை,10 நாட்களில் திரும்பப் பெறவேண்டும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்"என்று அந்த கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


நித்தியின் மிரட்டல்

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மதுரை ஆதீனத்தில் அருணகிரிநாதரும்,
நித்தியானந்தாவும் ஒரு பிரஸ் மீட் வைத்தனர்.அதில் முழங்கிய நித்தியானந்தா, "என்னை ஆதீனமாக நியமித்தது சரில்லை என்றால், சந்நிதானத்திடம் தானே பேசியிருக்க வேண்டும்? ஆனால், காரணம் இல்லாமல் என்னை இழுத்ததனால், உலகம் முழுக்க இருக்கிற என்னுடைய பக்தர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள். இப்போது நான் பின்வாங்கினால்,அசிங்கம். எனக்கு எதிராக தீர்மானம் போட்ட மடாதிபதிகளுக்கு, 10 நாட்கள் நான் கெடு கொடுக்கிறேன். அதற்குள், என்னைப் பற்றிய தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டால் விட்டுவிடுவேன்.இல்லை என்றால் தருமை ஆதீனத்தின் முன், என்னுடைய பக்தர்கள் தொடர் காலவரையற்ற போராட்டம் நடத்துவார்கள்.என்னால் அதைத் தடுக்க முடியாது.

அதேபோல,கூட்டுச் சதி 120(பி),மான நஷ்டம்,அவதூறு ஏற்படுத்துதல் 100, 101,சாதி பற்றி சரியான தவல்களைத் தெரிந்து கொள்ளாமல் தவறான தகவல்களைப் பரப்புவது 153(ஏ), என்னுடைய பக்தர்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தியது 295(ஏ) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் உலகம் முழுவதும் உள்ள என்னுடைய மடங்களைச் சேர்ந்தவர்கள் அந்த மடாதிபதிகள் மீது தனித்தனியாக வழக்குத் தொடர்வார்கள்" என்று மிரட்டல் விடுத்தார் நித்தி. "இதுக்கு மேலும், இந்து அமைப்புகள் என்ற பெயரில் லோக்கல் ரௌடிகள் வயலன்ஸில் ஈடுபட்டால், அதற்கும் திருப்பனந்தாள் ஆதீனமே பொறுப்பு" என்றும் எச்சரித்தார் நித்தியானந்தா.


வைஸ்ணவி மீது தாக்குதல்


நித்தி மடத்திற்குள் நுழைந்ததும்,அருணகிரிநாதரின் காரியதரசியான வைஸ்ணவியின் முக்கியத்துவம்குறைக்கப்பட்டது.ஒரு கட்டத்தில் வைஸ்ணவிக்கும், நித்தியின் சீடரின் மனைவிக்கும் சண்டை வந்தது.உடனே, நித்தியின் ஆட்கள் அவரைத் தாக்கினார்கள்.அதைத் தடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில்,ஆதீனத்துடன் கோபித்துக் கொண்டு மடத்தில் இருந்து காணாமல் போனார் வைஸ்ணவி.

பின்பு,வைஸ்ணவி தாக்குதல் பற்றி விளக்கம் கொடுத்த நித்தி,"ஆதீனத்தில் இருந்த யாரையும் நாங்கள் வெளியேற்றவில்லை.அத்தனை பேரும் பணியில் இருக்கிறார்கள். தினமும் 20 மணி நேரம் உழைக்கின்ற 33 வயதுக்கு உட்பட்ட 1,800 இளைஞர்களைக்கொண்ட ஒரு மிகப் பெரிய 'ஒர்க்கஹாலிக் குரூப்' நாங்கள். பழைய ஆட்கள் வேறு மாதிரி செட்-அப்பில் பணி செய்திருப்பார்கள். அவர்களால் எங்களது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால், சிறுசிறு சச்சரவுகள். வைஷ்ணவிக்கும் எங்களது சீடர்களுக்கும் இடையே சிறு பிரச்னை ஏற்பட்டு, வாக்குவாதம் மட்டுமே நடந்திருக்கு.யாரும் அவரை அடிக்கவில்லை'' என்றார்.


நித்திக்கு வந்த சிக்கல்


நித்தி மதுரையில் இருந்த நாள் முழுக்க தினம் தினம் 'பிரஸ் மீட்' வைத்து யாரையாவது வசை பாடிக் கொண்டே இருந்தார்.மருத்துவ முகாம்,அன்னதானத் திட்டம் போன்றவற்றைத் தொடங்கி வைத்த அவர்,அடுத்து மருத்துவக் கல்லூரியும், பெரிய பெரிய கல்வி நிறுவனங்களையும் அமைக்கப் போவதாகவும் 'பீலா' விட்டார்.

ரஞ்சிதா விவகாரத்தில் அழிந்து போன தன்னுடைய இமேஜை ஆதீனப் பதவி மூலம் உயர்த்திவிட்டதாக அவர் கருதிய நேரத்தில், ஆர்த்தி ராவ் சொன்ன செக்ஸ் புகார்கள் விஸ்வமூபம் எடுத்தன.தப்பியோடி தலைமறைவாகும் சூழ்நிலைக்கு ஆளானார் நித்தி.

அந்த பரபர நாட்கள் பற்றிய தகவல்கள் நாளை....


http://news.vikatan.com/article.php?module=news&aid=15626

Sunday, January 6, 2013

எச்சரிக்கை செய்த கோயில் நிர்வாகம் மற்றும் போலீஸ்! அதிர்ச்சி அடைந்த நித்தி ஆசிரமத்தில் புலம்பல்!


 


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நித்யானந்தா பிறந்த நாள் விழா நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்
மேலும் அறநிலைய துறை எதிர்ப்பால் கோயிலுக்கு வருவதை தவிர்த்துவிட்டு தனது ஆசிரமத்திலேயே பிரசங்கம் நடத்தினார். பெங்களூர் பிடதியில் தலைமை ஆசிரமத்தை வைத்து நடத்தி வருபவர் நித்யானந்தா.  இவர் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் வைத்துள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
 ஒவ்வொரு ஆண்டும் நித்யானந்தா தனது பிறந்தநாளை திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று காலை தி.மலை அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு தனது சீடர்களுடன் மாட வீதியில் ஊர்வலமாக செல்வது, அங்கேயே மேடை அமைத்து பிரசங்கம் செய்யவும் திட்டமிட்டிருந்தார். இதற்காக போலீசில் அவரது சீடர்கள் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், மாட வீதியில் ஊர்வலம் நடத்தவும், மேடை அமைத்து பிரசங்கம் செய்வதற்கும் போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.
 இதற்கிடையில் நேற்று நள்ளிரவு மாட வீதியில் பந்தல் அமைக்கும் பணி நடந்தது. இதையறிந்த போலீசார் அங்கு சென்று அப்பணியை தடுத்து நிறுத்தினர். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. நித்யானந்தா இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் திட்டத்தையும் கைவிட்டார். தனது அறையிலேயே பிரசங்கம் நடத்தினர். இதில் அவரது சீடர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நித்யானந்தா பிறந்த நாள் விழா நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். 
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=36150

நித்தியானந்தா ‘திரு அவதார திருநாளில்’ திருவண்ணாமலை மாட வீதியில் திருதிரு!


இன்று (06.01.2012) பிறந்த நாள் காணும் நித்தியானந்தா எப்போதும்போல் திருவண்ணாமலையில் பந்தா காட்ட நினைத்தார். இன்று காலை அண்ணாமலையால் கோவிலுக்குள் பக்தர்களுடன் வந்து வணங்கிவிட்டு, பின்னர் தன்னுடைய உருவ சிலையை கோயில் மாட வீதியில் வலம் வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கோயில் நிர்வாகம் கோவிலுக்குள் ஐந்து பேரை மட்டுமே அனுமதிப்போம். கோயிலுக்குள் கூட்டம் போடுவதோ, பேசுவதோ இருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதனால் கோவிலுக்குள் வருவதை தவிர்த்துவிட்டார் நித்தியானந்தா.

தொடர்ந்து மாட வீதியில் வலம் வருவதற்கு போலீசாரிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் நித்தியானந்தா அனுமதி வாங்காததால், கோயிலுக்கு எதிரே அவரது சார்பில் போடப்பட்டிருந்த பந்தலை போலீசார் பிரித்து போட்டனர். இதனால் அதிர்ச்சியான நித்தியானந்தா அனைத்து நிகழ்ச்சிகளையும் தனது ஆசிரமத்துக்கு மாற்றிக்கொண்டார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=89761

http://viruvirupu.com/2013/01/06/43384/