Updated: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 28, 2012, 17:20 [IST]
சென்னை: நான்தான் மதுரை ஆதீன மடத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளேன். எனக்குப் பிறகுதான் நித்தியானந்தா தலைமைப் பொறுப்புக்கு வர முடியும். இப்போது நித்தியானந்தா ஒரு இளைய ஆதீனமாக அவரது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் மதுரை ஆதீனம். அவர் இன்று மாலைமலருக்கு அளித்த பேட்டியில்,
எனக்கு சுவாச பிரச்சினை உள்ளதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்கிறேன். டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெறுவேன்.
மதுரை ஆதீனத்தின் சன்னிதானமாக அருணகிரி நாதர் சுவாமிகள் இருப்பதால் அந்த மடத்தின் நிர்வாகத்தில் தலையிட முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார். இது இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி நேர்மையான முறையில் தக்க முடிவு என தெளிவுப்படுத்தி உள்ளது.
மதுரை ஆதீனத்தை பொறுத்தவரை தமிழ்மொழி வளர்ச்சியையும், சைவ நெறிமுறைகளையும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். மதுரை ஆதீன மடத்தை தலைமை ஆதீனமாக நான் இருந்து வழி நடத்தி வருகிறேன்.
எனது காலத்திற்கு பிறகுதான் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டவர் (நித்தியானந்தா) பட்டத்துக்கு வரமுடியும். இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா அவருக்கு உரிய பணியை செய்து வருகிறார் என்றார் மதுரை ஆதீனம்.
http://tamil.oneindia.in/news/2012/08/28/tamilnadu-i-am-the-head-the-mutt-not-nithyanantha-says-aadheenam-160402.html

No comments:
Post a Comment