2012-08-17 18:07:07
கயிலாயத்துக்கு சுற்றுப் பயணம் சென்ற நித்தியானந்தா விதவிதமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார். கயிலாய சுற்றுப்பயணம் முடிந்து 16ஆந் திகதி நள்ளிரவு தனது சீடர்களோடு திருவண்ணாமலை வந்தடைந்தார்.
அவரது ஆச்சிரமத்தில் தங்கியவர் இன்று காலை 6.30க்கு அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். சிவாச்சாரியர்களுக்கு 1000 ரூபா, 500 ரூபா நோட்டுக்களை தட்சனைத் தட்டில் போட்டவர் கோயிலை வலம் வந்தார். பின் தன் ஆச்சிரமம் திரும்பினார்.
உடனடியாக மதுரைக்கு புறப்பட்டார். உடனே அவ்வாறு புறப்படக்காரணமென்ன என அவரது சீடர்களிடம் கேட்டபோது, ''மதுரை பெரிய ஆதீனம் பிரச்சனை செய்வதாகத் தெரிவித்துள்ளனர். அதனால தான் உடனடியா மதுரை போறாரு. இதனால இங்க ஏற்பாடு செய்திருந்த பல புரோகிராம்கள் ரத்து செய்துட்டாரு "என்றனர்.
மதுரை போன பின் இன்னும் என்னன்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.
''கயிலாயம் புறப்படுவதற்கு முன் தமிழகம் திரும்பியபின் கர்நாடகா காவல்துறைக்கு ஒத்தொழைத்து பரிசோதனைகளை செய்துகொள்வேன்" என்றார். அது செய்வாரா இல்லை இழுத்தடிக்க ஏதாவது செய்வாரா என்பது இனித் தெரிந்துவிடும்.
http://www.virakesari.lk/article/world.php?vid=47

No comments:
Post a Comment