கும்பகோணம் : மதுரை ஆதீன மடத்தின் மரபுகளை நித்யானந்தாவின் சீடர்கள்
மதித்து காப்பாற்றவில்லை என்ற மதுரை ஆதீனத்தின் திடீர் புகாரால் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியத்தில் உள்ள சாட்சிநாதர் சாமி கோயிலுக்கு மதுரை ஆதீனம் நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நித்யானந்தா, கைலாஷ் யாத்திரை சென்றுள்ளதால், நான் மட்டும் வந்துள்ளேன். மதுரை ஆதீனத்திற்குட்பட்ட கோயில் நிர்வாகங்கள் இப்போதும் என்னுடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளன. நான் இங்கு வந்துள்ள தகவல் கிடைத்ததும், திருப்பனந்தாள் காசிமட அதிபர் வந்துள்ளார். நான் எப்போதும் மற்ற ஆதீனங்களோடு மாதம் ஒரு முறையாவது சந்தித்து பேசுவது வழக்கம். நித்தியானந்தா நியமனம் செய்யப்பட்ட பிறகு இந்த சந்திப்பு குறைந்தது. இனிமேல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசுவோம்.
நித்யானந்தா மீது பல வழக்குகள் பல நீதிமன்றங்களில் உள்ளன. அவர் மீது உள்ள வழக்குகளுக்கு அவர்தான் பதில் கூற வேண்டும். மதுரை ஆதீன மடத்தில் அகற்றப்பட்ட சன்னிதானங்களின் சாமி படங்கள் விரைவில் வைக்கப்படும். மதுரை ஆதீன மடத்திற்கு சில மரபுகள் உள்ளது. இந்த மரபுகளை நித்தியானந்தாவோடு வந்துள்ள சீடர்கள் மதித்து காப்பாற்றவில்லை. நித்யானந்தா அந்த மரபுகளை கடைப்பிடிப்பாரா என்பது கடவுளுக்குதான் தெரியும்.
என்னை யாரும் கடத்தவில்லை. நான் எப்போதும் போலத்தான் உள்ளேன். அப்போது உடல்நிலை கொஞ்சம் சரியில்லாமல் இருந்தது. இப்போது மகிழ்ச்சியாக உள்ளது.
திருப்பனந்தாள் காசிமட அதிபர் முத்துகுமார தம்பிரான் சாமிகள் கூறுகையில், ''நித்யானந்தா தெரிந்தோ, தெரியாமலோ குற்றம் செய்தால் அதற்கு இறைவன் தண்டனை கொடுப்பார்'' என்றார்.
வீடியோவில் பதிவு
மதுரை ஆதீனத்தோடு வந்திருந்த நித்யானந்தாவின் சீடர்கள் சிலர், மதுரை ஆதீனமும் திருப்பனந்தாள் காசிமட அதிபரும் செய்தியாளர்களுடன் பேசியதை வீடியோவில் பதிவு செய்தனர். சாட்சிநாதர் கோயிலில் குருக்கள் இருந்தாலும், நித்யானந்தாவின் சீடர்களே கருவறைக்குள் நுழைந்து தீபம் ஏற்றி அதனை மதுரை ஆதீனத்திடம் கொண்டு வந்து காட்டினர்.
http://www.results.dinakaran.com/News_Detail.asp?Nid=21675

No comments:
Post a Comment