சிவகங்கை: ஏலச்சீட்டு நடத்தி வந்த பெண் கொலை தொடர்பாக நித்யானந்தா சீடரை
போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை அருகே ஏரியூரை சேர்ந்தவர்
கலைச்செல்வன். இவரது மனைவி ஜெகதீஸ்வரி(40). இவர் மதகுபட்டி சுற்றுவட்டார
பகுதியில் ஏலச்சீட்டு மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து
வந்தார். கடந்த 14ம் தேதி மதகுபட்டி அருகே ஜெகதீஸ்வரியும், நாமனூரை சேர்ந்த
சுரேந்திரன் மனைவி முத்துமணியும்(25) ஏலச்சீட்டு பணத்தை வசூல்
செய்துவிட்டு ஒரு டூவீலரில் வீடு திரும்பினர்.
அலவாக்கோட்டை அருகே மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது, இவர்களை பின் தொடர்ந்து மூன்று டூவீலர்களில் வந்த 4 பேர் இருவரையும் வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் ஜெகதீஸ்வரி அதே இடத்திலேயே பலியானார். வசூல் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கும்பல் தப்பியது. இருவரும் கழுத்தில் அணிந்திருந்த நகை கொள்ளை போகவில்லை. படுகாயமடைந்த முத்துமணி மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது: துபாயில் பணியாற்றும் கலைச்செல்வன் கடந்த 20 ஆண்டுகளாக மனைவிக்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பியுள்ளார். இந்த பணத்தை கொண்டு ஜெகதீஸ்வரி வட்டிக்கு பணம் கொடுப்பது, ஏலச்சீட்டு நடத்துவது போன்ற தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கும், மதுரையை சேர்ந்த பாண்டிச்செல்வம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. பாண்டிச்செல்வம் நித்யானந்தாவின் சீடர் ஆவார்.
இருவரும் அடிக்கடி பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்று வந்தனர். இருவருக்கும் நெருக்கம் அதிகமாகவே தொழில் செய்யப்போவதாக கூறி ஜெகதீஸ்வரியிடம் இருந்து 50 பவுன் நகைகளை வாங்கி பாண்டிச்செல்வம் அடகு வைத்துள்ளார். துபாயிலிருந்து வீடு திரும்பிய கலைச்செல்வன் மனைவியிடம் நகை, பணத்தை கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளக்காதலன் பாண்டிச்செல்வத்திடம் நகையை திரும்ப கேட்டுள்ளார். அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்ததால் பாண்டிச்செல்வம் உள்பட 4 பேர் ஜெகதீஸ்வரியை கொலை செய்துள்ளனர். பாண்டிச்செல்வத்திற்கு ஏற்கனவே மூன்று திருமணம் நடந்துள்ளது. இவ்வாறு தனிப்படை போலீசார் தெரிவித்தனர். தலைமறைவாகியுள்ள பாண்டிச்செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=32021

http://www.thanneerkunnam.net/2012/08/blog-post_9494.html
ReplyDelete