பெங்களூரு : நித்யானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த, கர்நாடகா
உயர்நீதிமன்றம், ஒரு வாரம் தடை விதித்து உத்தரவிட்டது. பாலியல்
குற்றச்சாட்டுக்குள்ளான நித்யானந்தாவுக்கு, மருத்துவ பரிசோதனை செய்ய
வேண்டும், என்று சி.ஐ.டி., போலீஸார், ராம்நகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 30ல், பெங்களூரு விக்டோரியா
மருத்துவமனையில், நித்யானந்தாவிற்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
ஆனால், அன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல், நித்யானந்தா புனித யாத்திரை
சென்றுவிட்டார். ராம்நகர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய, கர்நாடக
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த கர்நாடகா
உயர்நீதிமன்றம், மருத்துவ பரிசோதனைக்கு தடை விதித்தது. இந்த தடை நேற்றுடன்
முடிவுற்ற நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி
சுபாஷ் ஆதி, நித்யானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய, செப்டம்பர், 7ம்
தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?id=538849&utm_source=twitterfeed&utm_medium=twitter
http://www.dinamalar.com/News_Detail.asp?id=538849&utm_source=twitterfeed&utm_medium=twitter
No comments:
Post a Comment