எப்படியாவது கர்நாடக சி.ஐ.டி.யின் எஸ்.பி. யோகப்பாவையும் டி.ஐ.ஜி. சரண் ரெட்டியையும் மடக்கிவிடவேண்டும் என்று கடைசி வரை முயற்சித்துப் பார்த்து நித்யானந்தர் தரப்பு. வெயிட்டான சூட்கேஸ்களுடன் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நித்யானந்தர் மீதான வழக்கை குவாஷ் செய்துவிடவேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை முயற்சிகளும். ஆனால், அவர்களின் அத் தனை வலையிலும் சிக்காமல், ராம்நகர் நீதிமன் றத்தில் நித்யானந்தா உள்ளிட்ட 5 பேர் மீது சார்ஜ் ஷீட் செய்துவிட்டது கர்நாடக சி.ஐ.டி.
லெனின் கருப்பன் என்கிற லெனின் தர் மானந்தா ரகசியமாக எடுத்த நித்யானந்தர்- ரஞ்சிதா படுக்கையறை வீடியோ காட்சிகள் நமது நக்கீரனிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் வெளியான போது, சாமியார் போர்வையில் இருந்த நித்யானந்தாவின் உண்மை முகம் உலகத்திற்குத் தெரிய வந்தது. அவரது ஆசிரமத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் பற்றிய தகவல்களும் வெளியாக, தமிழக போலீஸ்தான் முதலில் எஃப்.ஐ.ஆர். போட்டது. பிறகு, பிடதி ஆசிரமம் மைசூர் அருகே அமைந்திருப்பதால் கர்நாடக போலீசுக்கு வழக்கு மாற்றமானது. கர்நாடக போலீசார் இதில் மெத்தனம் காட்டிவந்த நிலையில் தான், கர்நாடக சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.
தலைமறைவாக இருந்த நித்யானந்தாவின் செல்போன் பேச்சுகள் ட்ரேஸ் செய்யப்பட்டதில் அவர், இமாச்சலப் பிரதேசத் தில் இருப்பது தெரியவர, அங்கே சென்று கைது செய்தது சி.ஐ.டி. 53 நாள் சிறையிலிருந்த நித்யானந்தா, விசாரணை நேரத்தில் டிரா மா போட முயன்றபோது, போலீசார் தங்கள் பாணியில் சில போடு களைப் போட்டு உண்மைகளை வெளியே கொண்டுவந்தனர்.
தன் மீது சார்ஜ் ஷீட் போடுவதற்குள் வழக்கை குவாஷ் செய்துவிடவேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா வழக்குப் போட்டார். இந்த வழக்கை முதலில் ஒரு நீதிபதி மற்றொரு நீதிபதிக்குப் பரிந்துரைக்க, அவரும் விசாரிக்க மறுத்து, வேறொருவருக்கு அனுப்ப, இப்படி 3 நீதிபதிகளிடம் மாறியது இந்த வழக்கு. கடந்த 29-ந் தேதியன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான அரசு வக்கீல், 27-ந் தேதியே சார்ஜ்ஷீட் போடப்பட்டுவிட்டது என்று பதிலளிக்க அத்தனை பேருக்கும் ஷாக். வழக்கை குவாஷ் செய்வது தொடர்பான பெட்டிஷன் விசாரணையில் உள்ள நிலையில் எப்படி சார்ஜ் ஷீட் போடப்பட்டது என்ற கேள்வி முன்வைக்கப்பட, நித்தியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் வாக்குமூலம் கொடுத்திருப்பதையும் தெரிவித்தது சி.ஐ.டி தரப்பு. எந்தப் பெண்ணுமே புகார் கொடுக்கவில்லை என நித்யானந்தா தரப்பு தங்களுக்கு ஆதரவான ஊடகங்கள் வாயிலாகப் பிரச்சாரத்தை வேகப்படுத்திப் பார்க்கிறது.
நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி, கர்நாடகாவுக்கே நேரில் வந்து, தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், நான் நித்யானந்தரின் போதனைகளால் ஆசிரமத்தில் இருந்தேன். "தான்தான் சிவன், கிருஷ்ணன் என்றும் நான்தான் பார்வதி' என்றும் அவர் வர்ணிப்பார். தான் சொல்கிறபடி நடந்துகொண்டால் ஆன்மீக உலகத்தில் உயர்ந்த இடம் கிடைக் கும் என்று சொல்வார். அவரது போதனை களில் மயங்கிய என்னை அவர் பயன்படுத்திக் கொண்டார். அவரோட 4 பேரும் அந்த ஆசி ரமத்தில் துணையிருந்தார்கள்'' என்று அந்த வாக்குமூலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில்தான், நித்யானந்தாவுடன் பக்தா னந்தா, சச்சிதானந்தா, சதா னந்தா, ராகினி ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரமத்தில் இருந்த ஒரு பையனும் தன்னை நித்யானந்தா ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியது பற்றி சொல்லி யிருக்கிறார்.
வலுவான வாக்குமூலங்கள் கிடைத்திருக்கும் நிலையில், நித்யானந்தா மீது என்ன ஆக்ஷன் எடுக்கப்படும் என்று சி.ஐ.டி. வட்டாரத்தில் நாம் கேட்டபோது, ""இது கல்ட் ஆக்ஷன் என்ற வகையில் சேர்கிறது. அதாவது, திட்டமிட்டே ஒரு கும்பலாக இப்படி செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தண்டனைக்குரிய குற்றமாகும்'' என் கின்றனர்.
நித்யானந்தா மீது முதலில் புகார் கொடுத்த லெனின் தர்மானந்தா நம்மிடம், ""நான் நக்கீரனில் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நித்யானந்தா மோசமான ஆள் என்று எனக்கு முதலில் தெரிந்தது 2009ஆம் ஆண்டு நவம்பர் , இந்த 2010-ல் அதே நவம்பர் 27-ந் தேதிதான் அவர் மீது சார்ஜ் ஷீட் போடப்பட்டிருக்கிறது. பலபேர் வாழ்க்கையில் விளையாடிய அவர் தப்பிக்கவே முடியாது'' என்கிறார் உறுதியான குரலில்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை எதிர்த்து நித்யானந்தா தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட, குவாஷ் பெட்டிஷன் மீதான விசாரணை வரும் 7-ந் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் இறுக்கமான பிடிக்குள் நித்யானந்தாவும் அவரது ஆட்களும் சிக்கியுள்ள நிலையில், நித்திக்கு ஆதரவாக ரத்தக் கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் வேலையில் ஆசிரமத் தரப்புத் தீவிரமாகியுள்ளது.
http://www.nakkheeran.in/
Even if you are a minority of one, the truth is the truth. Those were the golden words of Mahatma Gandhi! TRUTH is what this blog is about... truth about Nithyananda and his cult. Don't fall prey to his charming lies... before you learn more about his real intent from the ex-members of his cult. SATYAMEVA JAYATE (Let truth alone triumph!)
Breaking News
BREAKING NEWS
Nithyananda rape case trial next date: 6 Sept. 2018
Updates from Courts
UPDATES FROM COURTSSupreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018) NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012 17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returnedNITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt |
Sunday, December 5, 2010
நித்யா தப்ப முடியாது!
Labels:
Dharmananda,
Lenin,
Lenin Karuppan,
Nithyananda,
Nityananda
Subscribe to:
Post Comments (Atom)
Kindly can anyone translate this to English please.
ReplyDeleteVenugopal
Dear Nithy,
ReplyDeleteI was a close ex-member of your mission, thoroughly brainwashed and not realizing that your organization was a cult. I am out of it now thanks to Dharmananda and the truth subsequently revealed. Let me summarise the events from 19th Feb 2010 when your SAMADHI (N.S.P )started.
Aiyya and Bhaktananda suddenly returned from the U.S. on 20th Feb 2010. Aiyya cut short his trip and Bhakta returned with in 4 days. And suddenly Ma Sachit (Ragini) then incharge for Hyderabad Ashram also came to Banglore in a rush. Many Ashramites and residents were wondering why? By then ,you Nithy started the drama of Samadi. The residents and even the security guards were perplexed. The guards were also heard asking “What Samadi is this, Nithy is going out late night and also returning at odd hours.”The Ashramites and residents were fooled, Only the inner circle coterie and partners of Nithy knew the truth about the video, for they were constantly trying to contact Dharmananda who was in hiding out of fear. There seems to be sufficient proof of this by way of phone calls and audio recordings with Dharma. After a week Sachit who was managing the show in the Ashram started spinning stories saying that Nithy is now out of Samadi and that he was resting in a resort as he needed a much deserved break having worked non-stop for 7 years. You Nithy ,during this time you were in a resort in Kerala very much in touch with Ranjita and making a deal with her in case of the expose. All this, you were doing while trying to desperately contact Dharmananda and settle with him. Everything is on record. And how can we forget that you instructed Palaniappan (Sevananda) to lodge a false complaint with Bidadi police station that he was receiving blackmail calls from Dharma on his
mobile phone. This brainwashed fool did the same on 28th Feb. and back dated the complaint. Nithy and his First Circle cult managers did not know that precisely at this time the whole police team of Ramnagaram and Bidadi were watching the C.D already couriered to them by an anonymous victim. Is this how an Enlightened master handles situations with awareness ???. Sorry to say, Dharmananda handled the situation with better awareness. Recall !!! Nithy you returned on the night of 1st March and assembled everybody at 10.30 at the Temple. You gave an emotional speech leaving everybody surprised. Apologizing to every one and promising not to physically hit any Brahmachary or Ashramites. Gave liberty to all Brahmacharies to spend their time as they like. Many were in tears at your pleadings. On the morning of 2nd March you were supposed to address a meeting at 9.30. You never did. Postponed the same to 12.30. You never did. Cancelled the same and never showed your face again. YOU RAN AWAY. Then the expose on the evening of 2nd March 2010. So much for an Enlightened Master to leave his flock and run away like a common criminal. What kind of Leadership quality is this? Can you answer this Nithy? Do you agree that the fundamental principles of Spirituality is Truth and Ahimsa. Have you ever introspected if you ever lived by these principles??? Don’t you think that you owe an answer to all your devotees? Some of them have given up careers to join you. Most have devoted 75% of their time for your Mission ……
ReplyDeleteTo be continued for events after the expose…