திருவண்ணாமலைக்கு தனது 34வது பிறந்த நாளையொட்டி வந்துள்ளார் ரஞ்சிதாவுடன் அந்தரங்க கோலத்தில் இருந்து சிக்கி, தலைமறைவாகி, கைதாகி, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள நித்தியானந்தா.
நேற்று காலை அண்ணாமலையார் கோவிலுக்கு அவர் போன போது பெரும் திரளான மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் தப்பித்தோம், பிழைத்தோம் என்று பின்வாசல் வழியாக ஓடிப் போனார் நித்தியானந்தா.
இந்த நிலையில் நேற்று கிரிவலப்பாதையில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் ஜீவன் முக்த சமுதாயம் செய்வோம் என்ற பெயரில் ஒரு உரை நிகழ்த்தினார் நித்தியானந்தா.
அப்போது அவர் பேசுகையில்,
33 ஆண்டுகளை முடித்து 34-வது ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளேன். கடந்த 10 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக பொதுமேடையில் ஏறி தமிழில் வாய் திறந்திருக்கிறேன்.
தங்கள் துறையில் இருப்பவர்களை தாக்குவது அரசியல். ஆனால் எந்த தவறும், வம்பும் செய்யாத நம்மை அழிக்க நினைப்பது ராட்சச தன்மை.
120 இடங்களில் நமது வழிபாட்டு தலங்கள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 17 இடங்களில் வழிபாட்டு தலங்களை கொளுத்தி இருக்கிறார்கள், 7 இடங்களில் சன்னியாசிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
எல்லோருக்கும் இழைக்கப்பட்ட அநீதியை தமிழக முதல்வருக்கு எங்கள் உணர்வை உருக்கி கடிதமாக எழுதி வைத்துள்ளேன். அதில் உங்கள் கண்ணீர், வேதனை எழுதப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் எனது ரத்தத்தால் கையெழுத்து போட்டு அனுப்ப இருக்கிறேன். ஒரு லட்சம் பக்தர்களும் ரத்த கையெழுத்து போட்டும், ரத்தத்தால் கைநாட்டு வைத்தும் அனுப்புகிறோம்.
கோடி கணக்கில் பணம் கேட்டு மிரட்டப்பட்டேன். மிரட்டிய நபர்கள் யார் என்பதை கோர்ட்டில் தெரிவிப்பேன். அவர்களின் மிரட்டலுக்கு பணியவில்லை. அதனால் பக்தர்கள் மிரட்டப்பட்டு அவர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் பணம் பறிக்கப்பட்டது. அதற்கு போதிய ஆதாரம் இல்லாததால் அமைதிகாத்தோம். இதற்கு மேலும் சொல்லப்படாமல் இருந்தால் அது சொல்லாமலேயே அழிந்துவிடும் என்பதால் உலகின் முன் பகிர்ந்து கொள்கிறேன் என்றார் நித்தியானந்தா.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் நித்தியானந்தா.
டி.வி.யில் வெளியான சி.டி. உண்மையா, அதில் இருப்பது நீங்கள்தானே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எனக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவை சித்தரிக்கப்பட்டவை. நீதி மன்றத்தில் நான் நிரபராதி என்று நிரூபிப்பேன் என்றார்.
ரஞ்சிதாவைப் பார்த்திருக்கிறீர்களா?
சரி, ரஞ்சிதாவை பார்த்திருக்கிறீர்களா? ரஞ்சிதாவை உங்களுக்கு எவ்வளவு நாளாக தெரியும், அவரை நீங்கள் நேரில் சந்தித்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, ரஞ்சிதா எனது பக்தை. அவரை ஒரு வருடத்திற்கும் மேலாக தெரியும். அவர் ஆசிரமத்திற்கு வந்து சென்றுள்ளார் என்றார்.
உங்களது பெட்ரூமில் கேமரா வைத்தவருக்கும், உங்களுக்கும் என்ன உறவு, அவருடன் என்ன மாதிரியான மோதல் ஏற்பட்டது என்றுகேட்டபோது, அவர் எனது சீடராக இருந்தார். கருத்து வேறுபாடுக்கான காரணம் எதுவும் தெரியவில்லை என்றார் நித்தியானந்தா.
உங்களிடம் யார் பணம் கேட்டு மிரட்டியது என்று கேட்டபோது, சி.டி.யை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டார்கள். கெட்டபெயரை ஏற்படுத்தி, புகார் கொடுத்து சட்டரீதியாக மிரட்டுவோம் என்று கூறினார்கள் என்று தெரிவித்தார் நித்தியானந்தா.
English summary
I will prove my innocence in court, says Nithyanantha. He is camping in Thiruvannamalai. He gave a lecture in his dhyanapeedam yesterday. While speaking to the reporters after the lecture, he said, I am innocent. I will prove this in court. Ranjitha is my diciple. She was regulary coming to my Ashram in Bangalore, nothing else between us. The controversial CD is a fake one, i will prove this, he said.
No comments:
Post a Comment