பெங்களூர்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நித்யானந்தா சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை பெங்களூரில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சி.ஐ.டி. போலீசார் செய்துள்ளனர்.
கற்பழிப்பு புகார்பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடத்தில் சாமியார் நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சாமியார் நித்யானந்தா மீது பெங்களூர் பிடதி போலீஸ் நிலையத்தில் அவரது முன்னாள் பெண் சீடர் ஆர்த்திராவ் என்பவர் கற்பழிப்பு புகார் கூறினார். இந்த வழக்கு சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கு பற்றி சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பான வழக்கு ராமநகர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சி.ஐ.டி. போலீசார் விடுத்த கோரிக்கையை ஏற்று நித்யானந்தாவுக்கு ஆண்மை மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதி வழங்கி ராமநகர் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அவரது மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டது.
நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை

இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் நித்யானந்தா மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் ஆண்மை மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.
இந்த நிலையில் நித்யானந்தா சாமியாருக்கு நாளை(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை செய்ய சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். 4 மருத்துவர்கள் அடங்கிய குழு அவருக்கு இந்த பரிசோதனை செய்கிறது. இது தொடர்பாக நித்யானந்தாவுக்கு சி.ஐ.டி. போலீசார் நோட்டீசு மூலம் தகவல் தெரிவித்து உள்ளனர்.
http://www.dailythanthi.com/News/India/2014/09/07040449/Supreme-Court-orders-to-godman-Nithyananda-masculinity.vpfhttp://tamil.oneindia.in/news/india/nithyanantha-undergo-potency-test-tomorrow-210379.html
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=128380
http://news.theindiansubcontinent.com/tamil-nadu/item/49054-2014-09-07-09-44-43
http://www.lankasri.lk/india/view/228856/
No comments:
Post a Comment