பெங்களூரு : சாமியார் நித்யானந்தாவுக்கு நடந்த ஆண்மை பரிசோதனையின் போது, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை டாக்டர்கள், 18 கேள்விகளைக்
கேட்டுள்ளனர். பரிசோதனை அறிக்கையை, வரும் 15ம் தேதி, போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு அடுத்த பிடதி ஆஸ்ரமத்தில், சாமியார் நித்யானந்தாவின் பெண் சீடராக இருந்த ஆர்த்தி ராவ், நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்து வாழ்வை பாழ்படுத்தி விட்டதாக, போலீசில் புகார் செய்தார். இதை விசாரித்த போலீசாரிடம், ''எனக்கு, 6 வயது சிறுவன் போன்ற உடலமைப்பு தான் உள்ளது. என்னால், ஒரு பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள முடியாது,'' என்றார் நித்யானந்தா. இதையடுத்து நடந்த சட்டப் போராட்டத்தில், நித்யானந்தாவுக்கு, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 9ம் தேதி, நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, டாக்டர்கள், அவரிடம், 18 கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. சாமியார் நித்யானந்தாவுக்கு நடந்த ஆண்மை பரிசோதனை அறிக்கையை, சி.ஐ.டி., போலீசாரிடம், டாக்டர்கள் கொடுக்கவில்லை. வரும் 17ம் தேதி, அறிக்கை கொடுக்கப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1068976
No comments:
Post a Comment