புதுடெல்லி : சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா மீது தொடரப்பட்டுள்ள 2010ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக் கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளும்படியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்ற நீதிபதி ரன்ஜனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான பெஞ்ச், சாமியார் நித்யானந்தாவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் நெருக்கமாக இருந்த காட்சிகள், கடந்த 2010ம் ஆண்டில் தொலைக்காட்சிகளில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின. அதன்பின், அமெரிக்காவில் இருந்து வந்து அவரது ஆசிரமத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி பணிவிடை செய்து வந்த பெண் சிஷ்யை ஒருவர் நித்யானந்தா மீது கடந்த 2012ம் ஆண்டில் பலாத்கார புகார் அளித்தார். இதன்பின், நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் அவர் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என போலீசார் விசாரணை நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். இதை ஏற்று நீதிமன்றம் பரிசோதனைக்கு உத்தரவிட்டது. தனக்கு ஆண்மை பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து நித்யானந்தா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனு நேற்று நீதிபதி ரன்ஜனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய கர்நாடக ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் ஆண்மை பரிசோதனை நடத்த அனுமதிக்கக் கூடாது என அவரது வக்கீல் வாதிட்டார். இதை ஏற்றுக் கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.
முன்னதாக, ஆகஸ்ட் 20ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள தயங்குவது ஏன்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகரித்துள்ள சூழ்நிலையில், மருத்துவப் பரிசோதனை என்பது அவசியமானது. பலாத்கார வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர் ஆண்மை பரிசோதனை செய்ய மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை. 2010ம் ஆண்டு வழக்கில் மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு இவ்வளவு காலம் தாமதம் ஆனது ஏன் என்றும் உச்ச நீதிமன்றம் போலீசாரிடம் கேள்வி கேட்டது. இதையடுத்து, ஆகஸ்ட் 21ம் தேதி தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
* 2010ம் ஆண்டு: பாலியல் பலாத்கார வழக்கு பதிவு.
* பலாத்கார வழக்கில் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் 4 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட்டை ராமநகரம் நீதிமன்றம் கடந்த ஜூலை 28ம் தேதி பிறப்பித்தது.
* இந்த கைது வாரன்ட்க்கு ஆகஸ்ட் 1ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
* விசாரணை அதிகாரி முன் ஆஜராகி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ராமநகரம் தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் (சிஜேஎம்) முன்பு ஆகஸ்ட் 18ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
* தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் கடந்த ஜூலை 28ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் தாக்கல் செய்த மனு மீது மேற்கண்ட உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.
* கடந்த 2012ம் ஆண்டு சிஜேஎம் பிறப்பித்த உத்தரவில், குற்ற புலனாய்வு துறை, நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி அளித்தது. இந்த உத்தரவை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 16ம் தேதி பிறப்பித்த உத்தரவில் உறுதி செய்தது.
* மருத்துவப் பரிசோதனை செய்வதற்கும் குரல் மற்றும் ரத்த மாதிரி எடுப்பதற்கும் கண்டிப்பாக நித்யானந்தா ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்படி அவர் தானாக முன்வந்து ஒத்துழைப்பு தரவில்லை என்றால், அவரை கைது செய்து பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் அப்போது குறிப்பிட்டு இருந்தது.
-------------------
புதுடெல்லி,
கற்பழிப்பு வழக்கில் சிக்கிய சாமியார் நித்யானந்தாவின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் அவர் ஆண்மை பரிசோதனைக்கு உட்பட்டாக வேண்டும்.
பலாத்கார வழக்கு
கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் அருகே உள்ள பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார் (வயது 36). இவர் மீது முன்னாள் சிஷ்யையான ஆர்த்திராவ் என்பவர் அளித்த பாலியல் பலாத்கார புகாரின் பேரில், பிடதி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நித்யானந்தா கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.
ஆண்மை பரிசோதனையை எதிர்த்து அப்பீல்
இந்த நிலையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய ராம்நகர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவரது சார்பில் பெங்களூர் ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்து தள்ளுபடி செய்த கர்நாடக ஐகோர்ட்டு, நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆண்மை பரிசோதனை தொடர்பாக ராம்நகர் கோர்ட்டில் ஆஜராக வில்லை. இதையடுத்து அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் ஐகோர்ட்டை நாடினார். அதில் அவர் 6–ந் தேதி ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகவேண்டும் என்றும் 7–ந்தேதி ராம்நகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் மேல்–முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சனா தேசாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனுவின் மீதான வாதங்கள் நடைபெற்றன.
நித்யானந்தா சார்பில் மூத்த வக்கீல் மோகன் பராசரன் ஆஜராகி வாதாடினார். அவர், ‘‘நித்யானந்தாவை துன்புறுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இது போன்ற ஆண்மை பரிசோதனையை மேற்கொள்ள போலீஸ் தரப்பில் வற்புறுத்துகின்றனர். இந்தக் குற்றம் நடைபெற்றதாகக் கூறப்பட்ட போதே அதனை செய்திருக்க வேண்டும். இப்போது அது போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள சட்டத்தில் இடமில்லை’’ என்று கூறினார். இது போன்ற பாலியல் பலாத்கார வழக்குகளில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட சில தீர்ப்புகளையும் அவர் மேற்கோள் காட்டினார்
நடிகை ரஞ்சிதா வக்கீல்
நடிகை ரஞ்சிதா சார்பில் வாதாடிய மூத்த வக்கீல் ரங்காச்சாரி, தன்னுடைய கட்சிக்காரர் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்; அவரை தேவையில்லாமல் தொடர்பு படுத்தி சிறுமைப்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே அவரையும் இந்த வழக்கின் விசாரணையில் சேர்த்துக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று வாதாடினார்.
கர்நாடக அரசு சார்பில் வாதாடிய மூத்த வக்கீல் எம்.என்.ராவ், ‘‘நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த அனைத்து முகாந்திரங்களும் உள்ளன. அவர் தரப்பில் புதிது புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வழக்கை இழுத்தடிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ஆண்மை பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரும் நித்யானந்தாவின் கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதாடினார்.
வாதங்கள் முடிவு அடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 21–ந் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.
மனு தள்ளுபடி
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சனா தேசாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. பெங்களூர் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தனக்கு ஆண்மை பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரும் நித்தியானந்தாவின் கோரிக்கையை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நித்யானந்தா மனுவுடன் இணைந்து தாக்கல் செய்திருந்த சிவ வல்லபனேனி, ராகினி, கோபால் ரெட்டி ஷீலம் (எ) நித்ய பக்தானந்தா ஆகியோரின் மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
பரிசோதனை கட்டாயம்
எனவே, நித்யானந்தா இப்போது ஆண்மை பரிசோதனைக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நித்தியானந்தா... ஆண்மை சோதனையில் 2வது சாமியார்... சோதனையில் என்ன செய்வார்கள்?
டெல்லி: நித்தியானந்தா ஆண்மை சோதனைக்கு கண்டிப்பாக உட்பட்டே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உறுதிபடக் கூறி விட்டது. எனவே இனியும் நித்தியானந்தா இந்த சோதனையிலிருந்து தப்ப முடியாத இக்கட்டான நிலைக்கு வந்து விட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு இதே போல பாலியல் வழக்கில் சிக்கிய ஆசாராம் பாபு என்ற சாமியாருக்கு ஆண்மை சோதனை நடத்தினர். அந்த சோதனையின் முடிவு டாக்டர்களையே அதிர வைத்தது. காரணம், 75 வயதான ஆசாராம் பாபு நல்ல ஆண்மையுடன் இருப்பதாக தெரிய வந்ததே.
இந்த நிலையில் தற்போது நித்தியானந்தாவுக்கும் அந்த சோதனை கிட்டத்தட்ட கிட்டே வந்து விட்டது. இந்த ஆண்மை சோதனையின்போது 3 கட்டமாக சம்பந்தப்பட்ட நபரைப் பரிசோதிப்பார்களாம். அதுகுறித்த ஒரு பார்வை....!
ஆசாராமுக்கு அடுத்த சாமியார் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்ய்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவுக்கும் இந்த ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது நித்தியானந்தாவுக்கும் இதே சோதனை நடத்தப்படவள்ளது.
சோதனையின் நோக்கம் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடிய அளவுக்கு உடலில் தெம்பு உள்ளதா, அவரால் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக புணர்ச்சி கொள்ளக் கூடிய தகுதி உள்ளதா, அந்த நபரால் ஒரு பெண்ணை கர்ப்பமாக்கும் அளவுக்கு தகுதி உள்ளதா, அவரது விந்தனுவின் வேகம் என்ன என்பதை அறிவதே இந்த ஆண்மைப் பரிசோதனையின் நோக்கம். இதை வைத்து பாலியல் பலாத்கார வழக்கின் நிலைமை உறுதிப்படும்.

என்ன செய்வார்கள்... இது சாதாரண மருத்துவப் பரிசோதனைதான். 3 விதமான முறையில் சோதனைகள் நடைபெறும். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரின் ஆண்மைத் திறன் குறித்த முடிவுக்கு வருவார்கள் மருத்துவர்கள். இந்த சோதனைகளைப் பொதுவாக யூரோ ஆண்ட்ராலஜிஸ்ட் மருத்துவர்தான் நடத்துவார்.
முதலில் விந்தனு ஆய்வு இந்த சோதனையில் விந்தனுவின் எண்ணிக்கை உள்ளிட்டவை கணக்கிடப்படும். அதன் செயல் திறன் பரிசோதிக்கப்படும்.
2வது ஆணுறுப்பு சோதனை அடுத்து ஆணுறுப்பு குறித்த சோதனை. இதில் ஆணுறுப்புக்கு ரத்த ஓட்டம் சரியாக இருக்கிறதா என்பதை டாப்ளர் ஸ்கேன் மூலம் சோதித்துப் பார்ப்பார்கள். மேலும் ஆணுறுப்பு எழுச்சி இருக்கிறதா என்பதும் சோதிக்கப்படும். ஆணுறுப்பு எழுச்சி சரியாக இருந்தால் ரத்த ஓட்டம் ஆணுறுப்புக்குள் இருக்கும். எழுச்சி இல்லாவிட்டால் ரத்த ஓட்டமானது ஆணுறுப்பின் வெளிநரம்புகளில் அதிகமாக இருக்கும்.
3வது சோதனை 3வது சோதனையானது ஆணுறுப்பின் எழுச்சியை வெளிப்புறத்திலிருந்து கவனிப்பது. சாதாரண நிலையில் ஆணுறுப்பு எப்படி உள்ளது. விரைத்த நிலையில் எப்படி உள்ளது என்பதைக் கண்ணால் கண்டு அனுமனிப்பார்கள்.
முன்பு நடந்ததே வேறு... முன்பெல்லாம் இதுபோன்ற சோதனைக்கு வரும் குற்றவாளிகளிடம் சுய இன்பம் (masturbate) செய்யச் சொல்லி அவர்களின் செயல் திறனை டாக்டர்கள் கவனித்தார்கள் என்று கூறப்படுதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை. முழுக்க முழுக்க மருத்துவ ரீதியில்தான் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இப்படியும் ஒரு சோதனை இதேபோல தற்போது என்பிடி எனப்படும் நாக்டர்னல் பீனைல் டியூமசீன் (Nocturnal Penile Tumescence) என்ற சோதனையும் நடத்தப்படுகிறது. இதை தூங்கும் நிலையில், ஆணுறுப்பின் எழுச்சியை வைத்து சோதிப்பார்கள்.
இரவு முழுவதும் இந்த சோதனையின்போது சம்பந்தப்பட்ட நபரின் உடலில் ஒரு கருவி பொருத்தப்படும். இது இரவு நேரத்தில் சம்பந்தப்பட்ட நபரின் ஆணுறுப்பின் அசைவு மற்றும் நீட்சியைக் கணக்கிட்டு தெரிவிக்கும்.
http://tamil.oneindia.in/news/india/what-is-sexual-potency-test-210182.html#slide132484

No comments:
Post a Comment