கருத்துகள்
பெங்களூர் : நித்யானந்தாவுக்கு அடுத்த வாரம் ஆண்மை பரிசோதனை செய்ய சி.ஐ.டி. போலீசார் ஏற்பாடு செய்து வருகிறார்கள். கர்நாடக மாநிலம், ராம்நகரம் மாவட்டம், பிடதியில் உள்ள நித்யானந்த ஆசிரமத்தின் மடாதிபதி நித்யானந்தா மீது கர்நாடகாவில் பல வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கு ஆண்மை சக்தி இல்லை என்று கூறியிருந்தார். அதை மறுத்த பிடதி போலீசார், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனையும், ரத்தப் பரிசோதனை நடத்த அனுமதிகோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதையேற்று பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படி நித்யானந்தாவுக்கு உத்தரவிட்டது. மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.அந்த மனு கடந்த மாதம் 16ம் தேதி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரணை நடத்திய நீதிமன்றம், நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீசார் விரும்பினால், அதை செய்யலாம். அதற்கு நித்யானந்தா ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தால் கைது செய்து பரிசோதனை செய்ய போலீசாருக்கு அனுமதி வழங்குவதாக தீர்ப்பில் கூறியது.
ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரணை நடத்திய நீதிமன்றம், நித்யானந்தாவின் கோரிக்கையை நிராகரித்ததுடன், ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டது.அதை தொடர்ந்து நேற்று கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதில் நித்யானந்தாவுக்கு பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நடத்த முடிவு செய்தனர். மேலும் அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு கடிதம் எழுதவும் முடிவு செய்தனர். மேலும் ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படி வரும் 8ம் தேதிக்கு முறைப்படி ஆண்மை பரிசோதனை நடத்த போலீசார் தேதி முடிவு என்று சி.ஐ.டி. வட்டாரம் மூலம் தெரியவருகிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=108089
No comments:
Post a Comment