கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந் தாவின் முன்னாள் சீடர் ஆர்த்தி ராவ் அளித்த பாலியல் பலாத்கார புகாரில் நித்யானந்தாவுக்கு, கடந்த 8-ம் தேதி ஆண்மை பரிசோதனை நடைபெற்றது. பெங்களூர் விக்டோரியா மருத்துவ மனை மற்றும் மடிவாளா தடயவியல் ஆய்வகத்தில் நடைபெற்ற பரிசோத னைக்கு நித்யானந்தா முழுமை யாக ஒத்துழைக்கவில்லை.

இதனால் ஆண்மை பரிசோத னைக்கான சான்றிதழ் களை ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத் தில் தாக்கல் செய்யமுடியாமல் தலைமை மருத்துவர் துர்க்கண்ணா தவித்து வருகிறார்.இதனிடையே சட்ட ஆலோசகரின் ஆலோசனைக்கு பிறகு, இன்னும் ஒரு வாரம் கழித்து பரிசோதனை முடிவுகளை அறிவிப்போம் என மருத்துவர் துர்க்கண்ணா சிஐடி போலீஸாரிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நித்யானந்தா வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து பெங்களூரில் கர்நாடக சிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.

வலுக்கட்டாய பரிசோதனை

இது தொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த முறை நடைபெற்ற ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா முறையாக ஒத்துழைக்கவில்லை.ப‌ரிசோதனை நடைபெறுவதற்கு முன்பாக அவர் மருந்து உட்கொண்டது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் குரல் பரிசோதனையின் போது மாத்திரையை தொண்டையில் வைத்திருந்ததும் அம்பலமானது. இதனால் இந்த சோதனை முடிவுகளை நாங்கள் ஏற்க மாட்டோம்.
எனவே மீண்டும் நித்யானந்தா விற்கு ஆண்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு முன்னதாக ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அணுகி, முறையான அனுமதி பெற முடிவு செய்துள்ளோம்.விசாரணைக் காலகட்டத்தில் நித்யானந்தா கர்நாடகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க‌க்கூடாது என்ற தடை ஆணையையும் பெற திட்டமிட்டுள்ளோம். ஆதலால் அவர் தமிழகத்திற்கு தப்பி செல்ல முடியாது. மீறினால் கைது செய்வோம்.

நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் நித்யானந்தா ஆண்மை பரிசோதனைக்கு முழுமையாக ஒத்துழைக்காவிடில், அவரை கட்டாயப்படுத்தி பரிசோதனை மேற்கொள்வோம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 53-ம் பிரிவிலும், கர்நாடக குற்ற நடைமுறை வரைவு விதிமுறை யின் 21-ம் பிரிவின் கீழும் இதற்கு காவல்துறைக்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

அப்போது ஆண்மை பரிசோதனை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை நடை பெறும். ஆழ்ந்த தூக்கத்தின் போதும், விழித்த நிலையிலும் நித்யா னந்தாவிடம் சில முக்கிய சோதனை களை வலுக்கட்டாயமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
http://tamil.thehindu.com/india