பெங்களூர்,
நித்யானந்தா சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை பெங்களூர் மருத்துவமனையில் சுமார் 51/2 மணி நேரம் நடைபெற்றது. 7 டாக்டர்கள் கொண்ட குழுவினர் இந்த சோதனையை நடத்தினர்.
பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடத்தில் நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பெங்களூர் பிடதி போலீசில் அவரது முன்னாள் பெண் சீடர் ஆர்த்திராவ் என்பவர் நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் கூறினார். இந்த வழக்கு விசாரணை சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது.
விசாரணையின்போது நித்யானந்தா கூறிய தகவல்களின் அடிப்படையில் சி.ஐ.டி. போலீசார் விடுத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய ராமநகர் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை கர்நாடக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டும் தள்ளுபடி செய்தன. ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஆண்மை பரிசோதனை நடத்த 8-ந் தேதி பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் காலை 9 மணிக்கு ஆஜராகும்படி சி.ஐ.டி. போலீசார் நித்யானந்தாவுக்கு நோட்டீசு அனுப்பினர். அதன்படி நித்யானந்தா சாமியார் காலை 7.45 மணிக்கு விக்டோரியா மருத்துவமனைக்கு காரில் வந்தார். அவருடன் சீடர்களும் வந்தனர். காலை 8 மணிக்கு மருத்துவ பரிசோதனைகள் தொடங்கியது.
விக்டோரியா அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் துர்கண்ணா தலைமையில் 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தினர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய மருத்துவ பரிசோதனை பகல் 1.30 மணிக்கு நிறைவடைந்தது.
இதுகுறித்து ஆண்மை பரிசோதனை செய்த மருத்துவ குழுவின் தலைவர் டாக்டர் துர்கன்னா கூறுகையில், நித்யானந்தா சாமியாருக்கு ஆண்மை மருத்துவ பரிசோதனை செய்து முடித்துவிட்டோம். அவசியமான சோதனைகளை செய்தோம். சோதனைக்கு அவர் ஒத்துழைப்பு வழங்கினார். மருத்துவ சோதனை அறிக்கை நாளை சி.ஐ.டி. போலீசாரிடம் வழங்கப்படும் என்றார்.

http://www.dailythanthi.com/News/India/2014/09/08194800/Nithyananda-undergoes-medical-examination-in-Bangalore.vpf
பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை
கருத்துகள்
How to get rid of wrinkles
பெங்களூர்:
பெங்களூர்: பலாத்கார வழக்கில் சிக்கிய நித்யானந்தாவிற்கு பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் 4 விதமான பரிசோதனை நடத்தப்பட்டது. இது குறித்து அறிக்கை இன்று சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூர் பிடதி தியானபீட ஆசிரம மடாதிபதி நித்யானந்தா மீது பெண் சீடர் ஆரத்திராவ் பாலியல் புகார் அளித்தார். இவ்வழக்கை விசாரித்த ராமநகரம் போலீசார் வழக்கை சிஐடி பிரிவுக்கு மாற்றினர். சிஐடி போலீசார் நித்யானந்தாவிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது. எனவே அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த அனுமதி வழங்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். ஆனால், நித்யானந்தா சார்பில் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு வந்தது. சிஐடி போலீசாரின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நித்யானந்தா மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, கர்நாடக சிஐடி போலீசார் கடந்த 4ம் தேதி நித்யானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து, நேற்று காலை பெங்களூர் விக்டோரியா மருத்துவமனைக்கு நித்யானந்தா நேரில் வந்தார். தண்ணீர், உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாத நிலையில் அவரை டாக்டர்கள் ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்த பரிசோதனையில் துர்கண்ணா, ரட்சல், சந்திரசேகர், வீரண்ண கவுடா, வெங்கட், ராமலிங்கையா, சுஜாதா, சித்தப்பா ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் ஈடுபட்டனர்.
மனோதத்துவ பரிசோதனை: நித்யானந்தாவிற்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய கோளாறு போன்ற நோய்கள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து மனோதத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் இந்த பரிசோதனைகளை செய்தார். அப்போது அவரிடம் மருத்துவர் 18 கேள்விகள் கேட்டார். அனைத்திற்கும் அவர் சரியான பதில் கூறினார். இதனால் அவர் மனதளவில் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியானது. ரேடியாலஜிஸ்ட் பரிசோதனை: இதைத் தொடர்ந்து ரேடியாலஜிஸ்ட் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நித்யானந்தாவின் உடலில், இதற்கு முன்பு மருத்துவ சிகிச்சை எதேனும் செய்யப்பட்டிருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை என்பது தெரியவந்ததும் , கிட்னி, ரத்த நாளம் தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது கிட்னி மற்றும் ரத்த நாளங்கள் நல்ல முறையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆண்மை தன்மை பரிசோதனை: பின்னர் இறுதியாக ஆண்மை தன்மை தொடர்பான பரிசோதனைக்கு மருத்துவர்கள் அவரை உட்படுத்தினர். இந்த பரிசோதனையை விக்டோரியா மருத்துவமனையை சேர்ந்த 4 பேர் கொண்ட மருத்துவர் குழுவினர் மேற்கொண்டனர். துவக்கத்தில் இதற்கு நித்யானந்தா மறுப்பு தெரிவித்தார். நான் ஒரு ஆன்மிகவாதி என்னிடம் இதுபோன்ற பரிசோதனை செய்வது நியாயமில்லை என்றார். நித்யானந்தாவுக்கு கவுன்சலிங்: பின்னர் என்.ஜி.ஓ பெண் அதிகாரிகள் இரண்டு பேர் அவருக்கு கவுன்சலிங் அளித்தனர். இதையடுத்து அவர் ஆண்மை பரிசோதனைக்கு ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து மருத்துவர்கள் அவரது விந்தணுவை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை பிற்பகல் 1.30 மணிக்கு முடிந்தது. 4 மணி நேர பரிசோதனைக்கு பிறகு, மருத்துவர்கள் அவருக்கு பால், பழம் போன்ற உணவு வழங்கினர். பின்னர் சில மணி நேரம் அவருக்கு ஒய்வு அளிக்கப்பட்டது.
இதற்கென அவருக்கு மருத்துவமனையின் 3வது மாடியில் சிறப்பு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு 3 மணி நேர ஒய்வுக்கு பின்னர் மருத்துவர்கள் அவரை மடிவாளாவில் உள்ள குரல் பரிசோதனை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். சரியாக 6 மணிக்கு அங்கு அவருக்கு குரல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து தனது வாகனம் மூலம் அவர் பிடதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்றார்.
இன்று சி.ஐ.டியிடம் அறிக்கை தாக்கல்
ஆண்மை பரிசோதனை முடிந்த பின்னர் மருத்துவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பரிசோதனையில் ஈடுபட்ட அனைத்து மருத்துவர்களும் கலந்து கொண்டனர். அப்போது மருத்துவ பரிசோதனை அறிக்கையின் விவரங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் அறிக்கையை எப்பொழுது சி.ஐ.டியிடம் ஒப்படைக்கவேண்டும் என்று ஆலோசித்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த ஆலோசனையில், நித்யானந்தா குறித்த மருத்துவ அறிக்கையை இன்று சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். அறிக்கையை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=108635
நித்யானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை, குரல் பரிசோதனை நடந்தது
பெங்களூரு அருகேயுள்ள பிடதியில் அமைந்துள்ள நித்தியானந்தா தியான பீடத்தில் நடிகை ரஞ்சிதாவுடன் ஆபாசமாக நடந்து கொண்டதாக பாலியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நித்யானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்த சிஐடி போலீஸார் முடிவு செய்தனர்.
ஆனால் தனக்கு ஆண்மை சோதனை நடத்த கூடாது என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நித்யானந்தா மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் நித்யானந்தாவிற்கு இன்று (திங்கட் கிழமை) ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்த சீடர்களுடன் நித்தியானந்தா இன்று காலை 8 மணிக்கு விக்டோரியா அரசு மருத்துவ மனைக்கு வரவழைக்கப்பட்டார். காவி உடையில் மருத்துவமனைக்கு வந்திறங்கிய நித்யானந்தாவுடன், பெண் சீடர்கள் வெள்ளை சேலையும், ஆண் சீடர்கள் காவி உடையும் அணிந்து இருந்தனர். சோதனைக்காக காலையில் நித்யானந்தா உணவு எதுவும் உட்கொள்ள வில்லை. மருத்துவமனையில் அவருக்கு 4 மருத்தவர்கள் குழு மருத்துவ பரிசோதனை நடத்தியது. பொது மருத்துவர், நியூராலஜி, உளவியல், தடயவியல் துறை நிபுணர்கள் நடத்திய இந்த மருத்துவ சோதனையை மருத்துவமனை தலைவர் தீர்க்கண்ணா மேற்பார்வையிட்டார். ஆண்மை சோதனை முடிந்ததும் மபுவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்துக்கு நித்யானந்தா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு குரல் சோதனை நடத்தப்பட்டது.
நித்யானந்தாவுக்கு ஆண் குரலா? பெண் குரலா என்பது கண்டறியப்பட்டது. போனில் மிரட்டியதாக நித்யானந்தா மீது போலீசில் ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. இந்த வழக்கின் ஆதாரத்துக்காக இந்த குரல் சோதனை நடத்தப்பட்டதாக சிஐடி போலீசார் தெரிவித்தனர்.
http://www.dinamani.com/latest_news/2014/09/08/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0/article2420923.ece
http://newsurviews.com/news/rape-case-nithyananda-undergoes-potency-test/
No comments:
Post a Comment