Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Sunday, September 14, 2014

ஆண்மை பரிசோதனையில் நித்தியானந்தா அரங்கேற்றிய அடுத்த கூத்து!.


- See more at: http://www.manithan.com/news/20140913112271#sthash.YtthHnbr.dpuf


நித்திக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்ட விஷயம், அப்போது அவர் நடந்து கொண்ட விதம்... கர்நாடகத்தையே கடுப்பாக்கித்தான் விட்டது.
நித்திக்கு பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் நடத்திய விக்டோரியா மருத்துவமனை மருத்துவர் குழு "நித்தி ஆணா? பெண்ணா?' என்பதற்கான பிஸிக்கல் டெஸ்ட்டும் நடத்தியது. "டெம்ப்பர் டெஸ்ட்'டுக்காக டாக்டர்கள் இன்ஜெக்ஷன் போட வந்தபோது... அதை ஏற்காத நித்தி "எனக்கு இடுப்புக்குக் கீழே வலி. செயல் இழந்த மாதிரி உடல் மரத்துப் போயிருக்கு'னு அடம் பண்ணியதுடன் செமன் டெஸ்ட்டுக்கும் சம்மதிக்கவில்லை.
"பரிசோதனைக்கு கோ-ஆபரேட் பண்ணலேன்னா... நித்திக்கே பாதகமாக முடியும்' என்கிற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் அதற்கு மேல் நித்தியை ஃபோர்ஸ் பண்ணவில்லை சி.ஐ.டி. போலீஸும், டாக்டர்களும்.
குரல் டெஸ்ட் மிக முக்கியம் என்பதால் அதற்கு அழைத்தபோது "அதான் சொன்னேனே... இடுப்புக்குக் கீழே முழுக்க வலி. அதனால் நாளைக்கி வர்றேன்' என்று டபாய்த்திருக்கிறார் நித்தி. "அரெஸ்ட் பண்ணுவோம்' என பதிலுக்கு போலீஸ் டபாய்த்தபிறகே... "என்னை ஸ்ட்ரெச்சரில் படுக்க வச்சு கூட்டிப் போங்க' எனச் சொல்லி குரோசின் மாத்திரையை வாயில் அதக்கிக் கொண்டிருக்கிறார்.
"காவி கட்டிக்கிட்டு இம்புட்டு பொய் சொல்லி டிராமா போடுற ஒரு ஆள பார்த்ததேயில்ல. "டெஸ்ட்டெல்லாம் வேணாம்'னு சொல்லிப் பாருங்க... துள்ளிக் குதிச்சு ஓட ஆரம்பிச்சிடுவார். என்னா சீட்டிங்?' என மூத்த டாக்டர் ஒருவர், போலீஸ் அதிகாரியிடம் சலித்துக் கொண்டாராம்.
வீல் சேரில் அமர வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றி வாய்ஸ் டெஸ்ட்டுக்கு கொண்டு சென்றபோது... தொடர்ந்து மாத்திரைகளை வாயில் அதக்கிக்கொண்டிருக்கிறார் நித்தி. "மாத்திரையை அதக்கிக்கிட்டா பேச்சு குளறும்' என யாரோ கொடுத்த ஐடியாதான்.
டெஸ்ட்டின் போது ஏற்கனவே மாஜி சிஷ்யர் லெனின் கருப்பனிடம் "தர்மா... வேணாம்டா... அந்த சி.டி.யை வெளியிடாதடா' என நித்தி பேசியிருந்த வார்த்தைகளை மீண்டும் பேசச் சொன்னபோது "தர்ல்மா... தர்ல்மா' என குளற... "மாத்திர போட்டு ஏமாத்திர...ம்... நடத்து உன் நாட கத்தை' என்பது போல் கவனித்துக் கொண்டிருந்தார் கள் போலீஸார்.
ஒருவழியாக டெஸ்ட் முடிந்து, காரில் பிடதி ஆசிரமத்திற்குத் திரும்பினார் நித்தி. ஆசிரமத்திற்குள் நுழையும் போது காரிலிருந்து ஒரு பாட்டில் வீசப்பட... அது காத்திருந்த டி.வி.க்காரர்களில் ஒருவர் மீது பட்டு ரத்தக்காயம். கொதித்துப் போன மீடியா, உள்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு... "மீடியா மீது தொடர்ந்து மூன்றாவது முறையா நித்தி தரப்பு அட்டாக் பண்ணிருக்கு. அவர் மேல நடவடிக்கை ஏன் எடுக்கல?' என கேட்க... "அரசு கண்டிப்பா ஆக்ஷன் எடுக்கும்' என உறுதி தந்தார் மந்திரி.
8-ந் தேதி நடந்த இந்தக் கூத்துகளை அறிந்த சுமார் 25 கன்னட அமைப்புகள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்து "நித்யானந்தாவை கர்நாடகத்தை விட்டு வெளியேற்று' என அரசுக்கு நெருக்கடி தரும் விதமாக 9-ந் தேதி போராட் டத்தை ஆரம்பித்தனர். இந்நிலையில்...
"நீதிமன்ற உத்தரவுப்படி என்னிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளுக்கு நான் நன்றாக ஒத்துழைப்பு தந்தேன்' என்றும், "நான் ஆண்மையற்றவன் என குறிப்பிட்டும் எனக்கு கடிதம் தரவேண்டும்' என சி.ஐ.டி. போலீஸிற்கும், மருத்துவர் குழுவுக்கும் கடிதம் அனுப்பினார் நித்தி. ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.
"மானே... தேனே...' மாதிரி "பிளட் டெஸ்ட்டே, யூரின் டெஸ்ட்டே'னு அங்கங்கே போட்டு நித்தி எழுதிய கடிதப் பின்னணியில் டுவிட்டர், வாட்ஸ் அப், பேஸ்புக் மூலமாக ஒரு பிரச்சாரம் தொடங்கியது.
"செக்ஸ் வச்சுக்கிற அளவுக்கு சாமி வொர்த் கிடையாது' என கிண்டல் பண்ணுவதுபோல் நித்திக்கு ஆதரவாக இந்த பிரச்சாரம் நடந்தது. நடந்து வருகிறது.
கர்நாடக அரசும் தன்மீது கடுப்பு காட்டுவதுபோல் தெரிய வந்ததையடுத்து தனது பிரத்யேக வெப் டி.வி. மூலம் பக்தர்களுக்கு மெஸேஜ் விட்டார் நித்தி.
"பிடதி ஆசிரமம் செயல்படும். ஆனாலும் எனது செயல்பாடுகள் அனைத்தும் இனி தமிழகத்தில் உள்ள எனது திருவண்ணா மலை ஆசிரமத்தில் மட்டுமே நடக்கும். இனி வழக்கிற்காக மட்டுமே கர்நாடகம் வருவேன்' என்கிற முடிவை அறிவித்தார்.
வெப் டி.வி.க்கு பேசியபோது "உஸ்ஸு புஸ்ஸு'னு அன்ஈஸியா இருந்தாரே நித்தி. கால்கள் இரண்டையும் அசைக்க முடியாத அளவுக்கு சிரமப்பட்டாரே... கால்களை அகட்டி உட்கார்ந்திருந்தாரே... இருபுறம் மேடாக நடுவில் சரிவாக இருந்த பலகையை சிஷ்யர்கள் நித்தியின் காலடியில்வைத்து... அதில் நித்தியின் கால்களை தூக்கி வைத்தார்களே... ஏன்?
"இடுப்புக்குக் கீழே செம வலி'னு போலீஸ்கிட்டயும், டாக்டர்கள்கிட்டேயும் சொன்னார்ல. அத மெயின்ட்டன் பண்றா ராமாம்.
அடப்பாவமே... எம்புட்டு நேரம்தான் வலிக்கிற மாதிரியே நடிக்கிறது. கொஞ்சம் சிரமமாத்தான சாமி இருந்திருக்கும்?
- See more at: http://www.manithan.com/news/20140913112271#sthash.YtthHnbr.dpuf

2 comments:

  1. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=98799டெஸ்ட் பண்ணும்போது வீடியோ எடுக்கக் கூடாது!''

    ''டெஸ்ட் பண்ணும்போது வீடியோ எடுக்கக் கூடாது!'''நீங்கள் மற்றவர்களைத் துன்புறுத்தாதபோது, நிச்சயம் உங்களையும் யாரும் துன்புறுத்த முடியாது. நீங்கள் இந்த உலகத்தை துன்புறுத்தாதபோது இந்த உலகம் உங்களை துன்புறுத்தாது. நாம் வாழும் இந்த வாழ்க்கையின் நெறிமுறை மற்றவர்களுக்கு ஒளி வீச வேண்டும். என் உடலுக்குள் இருக்கும் ஆன்மா உங்கள் ஒவ்வொருவரின் உடலிலும் இருக்கும்...’- ஆண்மை பரிசோதனையை முடித்துவிட்டு வந்த அடுத்த நாள் பக்தர்களுக்கு நித்தியானந்தா சொன்ன அருளுரை இது. எப்படியாவது ஆண்மை பரிசோதனைக்கு தடை வாங்கிவிட உச்ச நீதிமன்றம் வரை போனார் நித்தியானந்தா. ஆனால், உச்ச நீதிமன்றமோ, 'இதற்குத் தடைவிதிக்க முடியாது. நீங்கள் ஆண்மை பரிசோதனை செய்துகொள்ளுங்கள்!’ என்று உத்தரவிட்டது. அதன் பிறகு கடந்த 8-ம் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது. அன்று காலை சரியாக 7.30 மணிக்கு தனது சீடர்கள் புடைசூழ மருத்துவமனைக்குள் நுழைந்தார் நித்தியானந்தா. மருத்துவமனைக்கு வெளியே மீடியா,. . .

    ReplyDelete
  2. நித்தியானந்தாவின் மெடிக்கல் ரிப்போர்ட்டை போலீஸாரிடம் ஒப்படைத்திருக்கிறது மருத்துவமனை. அதில் என்ன இருக்கிறது என்று விசாரித்தோம். ''இந்த வயதுடைய ஆண் மகனுக்கு என்ன உணர்வுகள் இருக்குமோ அது நித்தியானந்தாவுக்கு இருக்கிறது. அவரது குரலில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை. அவர் முழு ஆண்மை உடையவராக இருக்கிறார்'' என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். இதனை வைத்து போலீஸார் தனது அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவார்கள்!

    ReplyDelete