ஆண்மை பரிசோதனையின்போது தன்னை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாகவும், இதனால் கர்நாடகத்தை விட்டு விரைவில் வெளியேறப் போவதாக செவ்வாய்க்கிழமை தனது சீடர்கள் முன்னிலையில் நித்யானந்தா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதனை வரவேற்று பிடதியில் பல்வேறு கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பாலியல் புகாருக்கு உள்ளான நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இதையடுத்து திங்கள்கிழமை பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு 7 விதமான ஆண்மை பரிசோதனைகள் நடத்தப்பட்டது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்க மறுத்திருக்கிறார். அதனால் போலீஸாரும், மருத்துவர்களும் கட்டாயப்படுத்தி பணிய வைத்துள்ளனர்.
திருவண்ணாமலைக்கே செல்கிறேன்
இந்நிலையில் பெங்களூர் அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் செவ்வாய்க் கிழமை தனது சீடர்களிடம் நித்யானந்தா பேசினார். அப்போது, ‘‘துறவியாக இருக்கும் என்னிடம் ஆண்மை பரிசோ தனை என்ற பேரில் மிகவும் அருவருப் பாக நடந்துகொண்டார்கள். மருத்துவ மனையில் என்னை நடத்தியவிதம் மிகவும் வேதனை தருகிறது.

உலகம் முழுவதும் லட்சக்கணக் கானவர்கள் மதித்து வணங்கும் என்னை கர்நாடக போலீஸாரும், மருத்து வர்களும் அவமதித்துவிட்டார்கள். போதிய உணவும் தண்ணீரும் தரவில்லை. சாதாரண மனிதனுக்கு தரும் மரியாதையைக்கூட கர்நாடக போலீஸார் எனக்கு தரவில்லை.
எனது போதனைகளை மதிக்கத் தெரியாத மண்ணில் வாழ்வது வருத்தமாக இருக்கிறது. ஆகவே பிடதியில் இருக்கும் எனது ‘தியானபீடம்’ ஆசிரமத்தில் இருந்து விரைவில் திருவண்ணாமலை செல்ல திட்டமிட்டு இருக்கிறேன். வழக்கம் போல தினசரி பூஜைகளும், சிறப்பு யாகங்களும், சொற்பொழிவுகளும் திருவண்ணாமலையில் தொடர்ந்து நடைபெறும்.

நான் திருவண்ணாமலையில் இருந்து இயங்கினாலும் பிடதி தியான பீட ஆசிர மத்துக்கு அவ்வப்போது வருவேன்’’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கன்னட அமைப்புகள் கொண்டாட்டம்

நித்யானந்தா கர்நாடகத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள தகவல் வெளியானதால் பல்வேறு இடங்களில் கன்னட அமைப்புகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டன.
நித்யானந்தாவின் 'தியான பீட ஆசிரமம்' பெங்களூரை அடுத்துள்ள மைசூர் நெடுஞ்சாலையில் பிடதியில் இருக்கிறது. 2003-ம் ஆண்டு தொடங்கப் பட்ட இந்த ஆசிரமம் சுமார் 22 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு 4 கோயில்கள், சீடர்கள் தங்கும் விடுதி, பக்தர்கள் தங்கும் அறை, மருத்து வமனை, 3 மண்டபங்கள், 100 ஆண்டு பழமையான ஆலமரம், பிரம்மாண்டமான சிவலிங்கம், மிகப்பெரிய மைதானம் ஆகியவை உள்ளன.
http://tamil.thehindu.comhttp://tamil.thehindu.com/india/

இனி பெங்களூர் பக்கமே வரமாட்டேன் : நித்தியானந்தா அறிவிப்பு

 இனி பெங்களூர் பக்கமே வரமாட்டேன் : நித்தியானந்தா அறிவிப்பு
சென்னை,செப்.10 (டி.என்.எஸ்) பெங்களூர் அருகே உள்ள ஆசிரமத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற நித்தியானந்தா முடிவு செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின்  உத்தரவின் பேரில் நித்யானந்தா சாமியாருக்கு பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஆண்மை பரிசோதனை 5½ மணி நேரம் செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை முடிந்து நித்யானந்தா தனது தியான பீடத்திற்கு திரும்பியபோது அவரை பின்தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகங்களை சேர்ந்தவர்கள் செய்தி சேகரிக்க சென்றனர்.

தியான பீடத்தின் முன் பகுதியில் தொலைக்காட்சி ஊடக பிரதிநிதிகள் மீது நித்யானந்தாவின் சீடர்கள் தாக்கியதாக கூறி அவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். சில கன்னட அமைப்பினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். ‘‘தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போலீஸ் அமைச்சர்  கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

நித்யானந்தா இணையதள டி.வி.யில் தினமும் சொற்பொழிவு ஆற்றுகிறார். அதேபோல் அவர் நேற்று இணையதள தொலைக்காட்சியில் தனது பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். சொற்பொழிவை தொடங்கும் முன் ஒரு அறிவிப்பை வெளியிடுவதாக அவர் கூறினார்.

அந்த அறிவிப்பை வெளியிட்டு அவர் தொடர்ந்து பேசுகையில், ‘‘பிடுதி தியான பீடத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன். ஒட்டுமொத்தமாக அனைத்தும் இங்கிருந்து மாற்றப்படுகிறது. தினமும் நடைபெறும் பூஜைகள் உள்பட அனைத்தும் திருவண்ணாமலையிலேயே நடைபெறும். இந்த பிடுதி தியான பீடம் தொடர்ந்து செயல்படும். இனிமேல் நான் வழக்கு சம்பந்தமான விஷயங்களுக்காக மட்டுமே பெங்களூர் வருவேன்’’ என்றார்.
http://tamil.chennaionline.com/news/national/newsitem.aspx?NEWSID=ea942f95-0fed-4eb6-8d5d-334aa9f14f69&CATEGORYNAME=TNATL