Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Tuesday, December 18, 2012

SUN TV Saxena's Police Complaint: NO TALK of Nithyananda CD Morphing

First Published: Mon, Dec 17 2012. 06 15 PM IST

Chennai: Ayyappan R., a former Sun Pictures associate and film distributor, on Monday filed a police petition against Kalanithi Maran, promoter of Sun TV Network Ltd, alleging that he hadn’t been paid dues of Rs.35 crore. The petition was filed with the Chennai police commissioner.
Sun Pictures is the movie producing and distributing arm of Sun TV Network
“I had given Rs.400 crore cash for 19 movies to Maran,”Ayyappan said in an interview. Ayyappan distributed Sun Pictures movies in Chennai city, Madurai, South Arcot and North Arcot, and also helped the company rope in other distributors.
“The 2% commission and the 10 movies that failed out of all the movies which I had bought from Sun Pictures need to be compensated by Maran,” he said.
Ayyappan was accompanied by Hansraj Saxena, former chief operating officer of Sun Pictures, when he filed the petition.
Saxena was arrested on 4 July 2011 on cheating and intimidation charges following a case filed by a Salem-based film distributor. Two more cases were filed against him by Tamil film producers for alleged intimidation after that. Saxena was then relieved of his position in the company.
“I went to prison and am not responsible for all what happened at Sun Pictures,” Saxena said. “Let the truth come out as to what happened to Rs.400 crore.”
Maran could not be reached for comment. Calls and emails sent to his office and personal phones didn’t elicit a response.
Saxena currently produces and distributes Tamil movies through his new company, Sax Pictures.
Sun TV Network closed at Rs.407.80, up 0.83%. The benchmark Sensex dropped 0.38% to 19,244.42 points
 
http://www.livemint.com/Companies/BXuJN28WJGArBvcnJHcUlM/Former-Sun-Pictures-associate-files-petition-against-Maran.html 

SUN TV Saxena's Police Complaint: NO TALK of Nithyananda CD Morphing



Talk of a comeback. Just over a year after his arrest on charges of cheating, Hansraj Saxena has managed to strike out on his own in Kollywood. Out on bail after 72 days in jail, he launched a film production and distribution company named Sax Pictures, which made its debut with a moderately successful multi-lingual feature, 'Chaarulatha'. Sax Pictures is now busy putting final touches on a second project, a Tamil-Telugu bilingual named 'Shivani'.

His resurgence is evident from the fact that there is talk of a movie starring Rajinikanth. The project has the industry waiting in anticipation as it could mark the coming together of the Superstar and the marketing talent of Sax, as he is popularly known.

All this was inconceivable a year ago when Saxena was arrested at Chennai airport soon after he arrived on a flight from Hyderabad. "My success made me a bad boy. When we took over the reins of 'Enthiran' from its original producers Ayngaran International, nobody expected it to become such a huge hit. But I convinced Kalanithi Maran (Sun TV Network chairman, who also owns Sun Pictures) that we could make it work. After the movie made a lot of money, my former colleagues became jealous of my success. And they got false cases foisted on me."And this resulted, he claims, in his fall from grace.

"Kalanithi dissociated himself from me..." From being the CEO of the most influential film production house in south India, he ended up a jailbird. "I am not a terrorist. What was the reason to pick me up at the airport? I guess after a complaint was filed, some cops got excited and thought they could use me to get a handle on Kalanithi Maran. And they were very disappointed when I had nothing sensational to disclose about the Sun group. I don't blame the government or the cops for my arrest because I know for a fact that my former colleagues in Sun TV misled them," he says.

During his tenure, Sun Pictures was accused of arm-twisting producers using political and financial muscle, but Sax insists the deals he entered into were above board. He says, "I was doing genuine business. Even if someone had accused me of cheating, it would just have been a civil case, there was no reason to arrest me; we could have sat across the table and resolved any problem."

Sun TV chose to steer clear of Saxena after cheating cases were filed against him, preferring to settle directly with those who he had done business with on their behalf. However, Saxena claims it was his erstwhile colleagues who misrepresented his role before the Sun management. If his dealings were not above board, why would people who complained against him come back to work with him after his release, asks Sax, quoting the example of producer-director Sakthi Chidambaram. The latter says, "I had filed a case against Sax and R Ayyappan (film distributor, who owns Sri Devar Pictures) as some money was due to me from Sun Pictures after I distributed 'Enthiran' in Chengalpattu.

As I did not receive the money even after a year, I filed a complaint with the police. Later, I realized they were not to blame, and I withdrew the complaint." Today, though most cases have been withdrawn, the ordeal he faced in jail still rankles Sax. Also, there is still the unresolved issue of transactions dating back to that period. But Saxenapresents himself as blameless and chooses to put the onus entirely on his ex-employer. Despite repeated attempts, no official from Sun was available for comment.

Distributor demands payments

A close aide of Hansraj Saxena, film distributor R Ayyappan, on Monday filed a police complaint against Sun Group chief Kalanithi Maran and three others on charges of cheating and criminal intimidation. Saxena was with Ayyappan when he submitted the complaint to Chennai police commissioner S George. In his complaint, Ayyappan said he had been in film production and distribution rights for 20 years. He said he had secured the distribution rights for 17 films produced by Sun Pictures, and distributed them for screening, with an oral agreement of two per cent as commission per film. He said the Sun had earned nearly Rs 400 crore through screening of the films across the state but failed to pay the agreed amount to him and other distributors, which works out to Rs 24 crore. Ayyappan said he was forced to pay Rs 4.36 crore from his pocket to some distributors.


 http://timesofindia.indiatimes.com/city/chennai/The-Second-coming-of-sax/articleshow/17658131.cms

"நெல்லையப்ப தம்பிரான்' ஆனார் திருச்சிற்றம்பலம் : "யாரும் எதிர்க்க முடியாது' என்கிறார் மதுரை ஆதீனம்

மதுரை: மதுரை ஆதீனம் மடத்தின் புதிய தம்பிரான் திருச்சிற்றம்பலத்திற்கு மொட்டை அடிக்கப்பட்டு, தீட்சை அளிக்கப்பட்டு, காதில் வளையம் மாட்டப்பட்டது. ""இதற்கு நித்யானந்தா உட்பட யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது,'' என்றார் மூத்த ஆதீனம். நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து, சர்ச்சையில் சிக்கிய மதுரை ஆதீனம், டிச.,9 ல், திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தம்பிரான் திருச்சிற்றம்பலத்தை, உதவியாளராக நியமித்துக் கொண்டார். இதற்காக, "தம்பிரான்' என்ற பதவியையும் உருவாக்கினார். மடத்தின் சம்பிரதாய பூஜைகளில் உதவியாக இருந்து வரும் திருச்சிற்றம்பலத்திற்கு, டிச., 10 முதல், தீட்சைகள் அளிக்கும் சடங்கு துவங்கியது. நேற்று முன் தினம், அவருக்கு மொட்டை அடிக்கப்பட்டது; மந்திர காசாயம், நிர்வாண தீட்சை அளிக்கப்பட்டு, காதில் வளையம் மாட்டும் "சுந்தரவேடம்' என்ற சடங்கு நடந்தது.

தினமலர் நிருபருக்கு, ஆதீனம் அளித்த பேட்டி:

* இளைய ஆதீனமாக நியமிப்பதற்கான சடங்கா இது?
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... தம்பிரான், இளைய ஆதீனம் அல்ல. இச்சடங்குகள், தம்பிரானுக்கும் உரியது.
* அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளதா?
ஆம். "ஸ்ரீமத் நெல்லையப்ப தம்பிரான்' என, அழைக்கப்படுவார்.
* இதற்கு, நித்யானந்தா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதா?
அவர் எப்படி எதிர்க்க முடியும்? அவரைத் தான் நீக்கிவிட்டேனே. அவருக்கும், மடத்திற்கும் சம்பந்தமில்லை. திருவாவடுதுறை ஆதீன மடத்தின் சம்மதத்தோடு, இங்கு திருச்சிற்றம்பலம் வந்துள்ளதால், யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.
* மடத்தின் விவகாரம் கோர்ட் வரை சென்றுவிட்டதே?
அதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு கூறினார்.


 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=608430&Print=1

நித்யானந்தா என்னும் க்ளோஸ்-அப் விளம்பரக்காரன்


நேற்று பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். கண்காட்சியில் நுழைந்தவுடன் முதல் வரிசையிலேயே நித்யானந்தா ஆசிரமத்துக்காரர்கள் கடை விரித்திருந்தார்கள். கடையில் பார்வையாளர்கள் யாரையும் காணவில்லை. எனக்கென்னமோ நித்யானந்தாவின் படத்தை பார்த்தவுடன் தெறித்து ஓடுகிறார்கள் என்றுதான் தோன்றியது. ஆனால் ஆசிரமத்துக்காரர்கள் நிறைய இருந்தார்கள். அழகான பெண்களும் உண்டு.
காலச்சுவடு, உயிர்மை, கிழக்கு என்று சுற்றிவிட்டு கடைசியாக நித்தியிடம் வந்தேன். கடை ஜொலித்தது. சீரியல் செட் கட்டி, பெரிய புகைப்படங்களில் க்ளோஸ் அப் விளம்பரக்காரனைப் போல சிரித்துக் கொண்டிருந்தார் சுவாமிகள். எனக்கு நித்தியைப் பார்க்கும் போதெல்லாம் “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் ரொம்பப நல்லவன்ன்ன்ன்” என்ற டயலாக் ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. நித்தியின் கதையை தமிழில் படமாக எடுத்தால் அதில் வடிவேலுவை நடிக்க வைக்க வேண்டும். அந்த பாடி லேங்குவேஜ்ஜில் வடிவேலு மட்டுமே பட்டையைக் கிளப்புவார்.
கடைக்கு அருகில் சென்றதும் அழகான பெண் தான் அருகில் வந்தாள்.
“கன்னடமா” என்றாள். ஆமாம் என்று சொல்லியிருந்தால் அவளே என்னிடம் பேசியிருக்கக் கூடும்.
“இல்லை, தமிழ்” என்று சொல்லிவிட்டேன். வேறு ஒரு பெண்ணைக் கோர்த்துவிட்டாள். கோர்த்துவிடப்பட்டவள் சேலத்துப் பெண். சேலம் வைசியா கல்லூரியில் படித்தாளாம்.
“நீங்க என்னவா இருக்கீங்க” என்றேன்.  
“சந்நியாசி ஆகிவிட்டேன். எம்.எஸ்.சி பயோ கெமிஸ்ட்ரி முடிச்சிருக்கேன்” என்றாள். அவள் படிப்பைப் பற்றி நான் கேட்கவில்லை. அவளாகவே சொன்னவிதத்தில் கர்வம் இருந்தது. சந்நியாசிகளுக்கு கர்வம் இருக்கக் கூடாது என்று சாமியார் சொல்லித்தரவில்லை போலிருக்கிறது.
‘ஜீவன்முக்தி’ என்ற ஒரு புத்தகத்தை கொடுத்து “சாமிகள் சொன்னது, சொல்லிக் கொண்டிருப்பது, சொல்லவிரும்புவது என சகலமும் இருக்கிறது” என்றாள். ரஞ்சிதா என்ற பெயர் என் தொண்டைக்குள் முட்டிக் கொண்டிருந்தது. அடக்கி வைத்திருந்தேன்.
“முந்நூறு ரூபாய்தான். வாங்கிப்படியுங்கள்” என்றாள். 
பெங்களூரில் ஒரு பயிற்சி வகுப்பு நடக்கிறதாம். சுவாமிகளே நடத்துகிறார் என்றாள். என்ன வகுப்பு என்று கேட்கவில்லை. பயிற்சிக்கட்டணம், தங்கும் வசதி பற்றிய தகவல்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். அசுவராசியமாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
“சுவாமிகளின் சத்சங் கேட்டிருக்கீங்களா?” என்றாள்
“ம்ம்” என்றேன்
“யூடியூப்பில் சுவாமியை பார்த்திருக்கீங்களா?” இந்த கேள்வியை எதிர்பார்த்து கிடந்தவன் போல அவள் கேட்டவுடன் மிகுந்த உற்சாகமாகிவிட்டேன்.  
“ஊரே பார்த்துச்சே” என்றுதான் சொல்ல விரும்பினேன். ஆனால் “ம்ம்ம்..பார்த்திருக்கேன்” என்றேன்.
“என்ன லேங்குவேஜ்ல பார்த்தீங்க” 
இவள் வேண்டுமென்றே கேட்கிறாள் போலிருக்கிறது. இனியும் இதை கட் செய்யாவிட்டால் என்னை பைத்தியகாரனாக்கிவிடுவாள்.

சில கேரக்டர்கள் நாம் கலாய்ப்பதற்கென்றே பிறப்பெடுத்து வந்திருக்கின்றன. நித்யானந்தா  அப்படியான ஒரு கேரக்டர். சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் ஓட்டிவிட வேண்டும்.
“சின்னவீடு” படத்தில் வரும்  ‘நாகிரதனா...மியூஸிக்தான் பேக்ரவுண்டல் ஓடுச்சு” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன். அவளுக்கு புரிந்திருக்குமா என்று தெரியவில்லை. இணையத்தில் ‘நக்கீரன்’ பதிவேற்றிய க்ளிப்பிங்ஸை பார்த்த அத்தனை பேருக்கும் புரியக்கூடும்.
 
 SOURCE :  http://www.nisaptham.com/2012/12/blog-post_17.html

Sunday, December 16, 2012

Malaysia Hindu Sangam Protests Against Nithyananda's Visit to Malaysia

Madurai Adheenam & Nithyananda’s petition dismissed

The principal sub court here on Saturday dismissed the petition filed by Madurai adheenam
Arunagirinatha Desikar, in his plea, had also requested the court to dismiss the case filed by the Department of Hindu Religious and Charitable Endowments (HR and CE), seeking his removal from the Madurai adheenam.
Stating that HR and CE department’s earlier plea filed in 1984 to remove him from the mutt was dismissed in 2001, he said that the case before the principal sub court here should be dismissed.
Principal sub-judge K. Guruviah, however, noted that the HR and CE department had filed a petition to revive the case. Therefore, he dismissed Arunagirinatha Desikar’s petition. The judge also declined to issue directions to the sub-registrar of Madurai South to cancel the registration of the Trust formed in collaboration with Nithyananda.
Nithyananda, in an impleading petition, sought to name the HR and CE Commissioner and Madurai South sub-registrar as respondents in the Adheenam’s case. It was also dismissed on Saturday.
The HR and CE department has accused the Madurai adheenam of trying to amass the mutt’s wealth by bidding to sell the properties for a cheap price. Arunagirinathar did not get permission from the department before forming a trust with Nithyananda, said HR and CE Commissioner P. Dhanapal in a petition, through which he also sought Arunagirinathar’s removal as the Madurai Adheenam. The HR and CE department’s case has been adjourned to Monday.

 http://www.thehindu.com/todays-paper/tp-national/adheenam-petition-on-restricting-nithyanandas-entry-dismissed/article4205913.ece

மதுரை ஆதீனத்தை அரசு ஏற்க தடை கோரிய மனு தள்ளுபடி

:12/16/2012 12:24:24 AM

மதுரை: மதுரை ஆதீன மடத்தை அரசு ஏற்கும் வழக்குக்கு தடை கேட்ட அருணகிரிநாதரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அறநிலையத் துறையையும், மதுரை தெற்கு சார்பதிவாளரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 
 
மதுரை ஆதீன மடம் நிர்வாகத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால் மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை, ஆதீன மடம் நிர்வாகம் தொடர்பாக அருணகிரிநாதரும், நித்தியானந்தாவும் சேர்ந்து ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு தடை விதிக்க வேண்டும். ஆதீன மட சொத்துக்களில் அருணகிரிநாதர் மற்றும் அவரது ஆட்களால் வில்லங்கம் ஏற்படுத்த கூடாது என இடைக்கால உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அருணகிரிநாதர் சார்பில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், ‘ஆதீன மடத்தை அரசு ஏற்பது தொடர்பாக 1994ல் சப்-கோர்ட்டில் அரசு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு 2001ல் தள்ளுபடியானது. அந்த உத்தரவை மறு சீராய்வு செய்யக்கோரி அரசு சார்பில் அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதே கோரிக்கைக்காக இந்த மனுவை அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்துள்ளார். கீழ் கோர்ட்டில் அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு விசாரணை முடியும் வரையில் தற்போது அறநிலையத்துறை தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்“ என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி குருவையா விசாரித்து தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார்.இந்நிலையில், அருணகிரிநாதர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார். அந்த உத்தரவில், “கீழ்கோர்ட்டில் அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்னும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை. இந்த சூழ்நிலையில், இந்த மனு விசாரணைக்கு தடை விதிக்க அருணகிரிநாதர் உரிமை கோர முடியாது“ என குறிப்பிட்டிருந்தார்.இதே கோர்ட்டில் அருணகிரிநாதர் மற்றொரு மனுவும் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:  இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா, அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இளைய ஆதீனமா இருந்தபோது நானும், அவரும் சேர்ந்து ஆதீன சொத்துக்களை நிர்வகிக்க அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினோம்.

அதை மதுரை தெற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். தற்போது நித்தியானந்தா நீக்கப்பட் டுள்ள நிலையில், அந்த அறக்கட்டளையும் கலைக்கப்பட்டு விட்டது. இதனால் அறக்கட்டளைக்கான பதிவை ரத்து செய்ய தெற்கு சார்பதிவாளரிடம் மனு அளித்தோம். அவர் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த அறக்கட்டளை பதிவை ரத்து செய்ய தெற்கு சார்பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். நித்தியானந்தாவும், அவரது ஆட்களும் மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய தடைவிதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது
.நித்யானந்தா மனு: இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவில் அறநிலையத்துறையையும், மதுரை தெற்கு சார்பதிவாளரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என நித்தியானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி குருவையா நேற்று உத்தரவிட்டார். பின்னர், அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் 17ம் தேதிக்கு நீதிபதிக்கு தள்ளி வைத்தார்.


 http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=34024

Friday, December 14, 2012

நி‌த்யான‌ந்தா நுழைவத‌ற்கு தடை கே‌ட்டு‌ம் ஆ‌‌தின‌ம்


வெள்ளி, 14 டிசம்பர் 2012( 14:15 IST )
 
 
FILE
இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தா நீக்கப்பட்டுள்ளதா‌ல் அவரும், அவரது தரப்பினரும் மதுரை ஆதீனத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் எ‌ன்று மதுரை ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மனு‌த் த‌ா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தரப்பில் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மனு‌வி‌ல், ‌இ‌ந்துஅற‌நிலைய‌த்துறை உருவாக்கிய மதுரை ஆதீனம் அறக்கட்டளை கலைக்கப்பட்டுவிட்டது. அதனை மதுரை தெற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தோம். தற்போது அறக்கட்டளை கலைக்கப்பட்ட நிலையில் அந்த பதிவை ரத்து செய்யும்படி சார்பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அவரும், அவரது தரப்பினரும் மதுரை ஆதீனத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவில் சார்பதிவாளரும், நித்யானந்தாவும் மட்டும் எதிர்தரப்பாக சேர்க்கப்பட்டு இருந்தனர். மனு விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா தரப்பில் ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர், இந்த மனுவில் இந்து அறநிலையத்துறையையும் ஒரு எதிர்தரப்பாக சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக அரசு வழ‌க்க‌றிஞ‌ர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வ‌ரு‌ம் 15ஆ‌ம் தே‌தி‌க்கு தள்ளிவைத்தார். 
 http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1212/14/1121214030_1.htm

Seer’s case adjourned



The Principal Sub-Judge here has posted the case filed by the Department of Hindu Religious and Charitable Endowments (HR and CE) seeking the removal of the incumbent Madurai adheenam on Saturday for final orders.
Originally HR and CE Commissioner, P. Dhanapal, had filed a petition seeking removal of Arunagirinatha Gurugnanasambanda Desikar from being the head of Madurai adheenam for violating provisions of Tamil Nadu HR and CE Act.
According to the Commissioner, Mr. Arunagirinatha Desikar sold two properties belonging to the mutt at a lower cost in the year 1995. Besides, he formed a trust along with Nithyananda without obtaining approval from the HR and CE department, as mandated by Tamil Nadu HR and CE Act.
Therefore, Mr. Arunagirinatha Desikar should be removed from being Madurai adheenam and HR and CE department should be allowed to take charge of the mutt until appointment of a new head, it was prayed. Principal Sub-Judge K. Guruviyah, on Thursday heard the arguments of both the sides and posted the case for Saturday.
Meanwhile, the judge also adjourned to Saturday Arunagirinatha Desikar’s original suit to restrain Nithayananda and his followers from entering the 1500-year-old Saivaite mutt and to direct the sub-registrar of Madurai South to cancel the registration of the trust he formed in collaboration with Nithyananda.
The case was adjourned after HR and CE department’s counsel sought for time to file counter affidavit. Nithyananda had also impleaded himself in the case

 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/seers-case-adjourned/article4198462.ece


மதுரை ஆதினமடம் இந்து சமய அறநிலையத்துறை வசமாகுமா?: நாளை தீர்ப்பு 

Published: Friday, December 14, 2012, 19:25 [IST]


மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரி நாதரை நீக்கிவிட்டு மடத்தை இந்து அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பு மதுரை மாவட்ட கோர்ட்டில் சனிக்கிழமை வெளியாக உள்ளது. மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா நுழைந்ததில் இருந்தே சர்ச்சைகள் ஆரம்பித்து விட்டன. திடீரென்று ‘மதுரை ஆதினம் அறக்கட்டளை' தொடங்கப்பட்ட உடன் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அறநிலையத்துறை ஆணையர் தனபால் தாக்கல் செய்த அந்த மனுவில், ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில்தான் ‘‘மதுரை ஆதீனம் அறக்கட்டளை'' தொடங்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஆதீனம் தரப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மடத்திற்கு சொந்தமான 2 சொத்துக்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். எனவே மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அடுத்த ஆதீனம் நியமிக்கப்படும்வரை மடத்தின் பொறுப்புகளை இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது. ஆதினம் தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த மனு மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆதீனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த அரசு தரப்பு, இந்து அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 
இந்தநிலையில் வழக்கு நீதிபதி குருவையா முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீனம் தரப்பு வக்கீல்களும், அரசு வக்கீல் தமிழ்ச்செல்வமும் அவர்கள் தரப்பு வாதங்களை எடுத்துக்கூறினர். அவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மதுரை ஆதீனத்தை நீக்கிவிட்டு மடத்தின் பொறுப்புகளை ஒப்படைக்கும்படி கோரி இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சனிக்கிழமை ஒத்திவைத்தார். 
அறக்கட்டளை கலைப்பு இதற்கிடையே மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தரப்பில் அதே கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவர்கள் உருவாக்கிய மதுரை ஆதீனம் அறக்கட்டளை கலைக்கப்பட்டுவிட்டது. அதனை மதுரை தெற்கு சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தோம். தற்போது அறக்கட்டளை கலைக்கப்பட்ட நிலையில் அந்த பதிவை ரத்து செய்யும்படி சார் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அவரும், அவரது தரப்பினரும் மதுரை ஆதீனத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவில் சார் பதிவாளரும், நித்தியானந்தாவும் மட்டும் எதிர்தரப்பாக சேர்க்கப்பட்டு இருந்தனர். மனு விசாரணைக்கு வந்தபோது, நித்தியானந்தா தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த மனுவில் இந்து அறநிலையத்துறையையும் ஒரு எதிர்தரப்பாக சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக அரசு வக்கீல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை சனிக்கிழமை ஒத்திவைத்தார்


http://tamil.oneindia.in/news/2012/12/14/tamilnadu-madurai-court-deliver-verdict-on-madurai-aadheenam-166266.html

Tuesday, December 11, 2012

புதிய தம்பிரான் நியமனம் ஏன்? ஆதீனத்தில் மீண்டும் நுழையும் நித்யானந்தா முயற்சி முறியடிப்பு

மதுரை : மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா மீண்டும் நுழைவதைத் தடுக்கவே புதிதாக தம்பிரான் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பாலியல் புகாரில் சிக்கிய நித்யானந்தா கடந்த ஏப்ரலில் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும் நித்யானந்தா தகுதி இல்லாதவர் எனக் கூறியது. இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நித்யானந்தாவை ஆதீனம் நீக்கினார்.

இதன் பிறகு இளைய ஆதீனப் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில் நீக்கப்பட்ட நித்யானந்தாவும் அவரது சீடர்களும் மீண்டும் ஆதீன மடத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டுமென மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆதீனம் அருணகிரிநாதர் வழக்கு தொடர்ந்தார். இதில் நித்யானந்தா எதிர்மனு தாக்கல் செய்துள் ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

தன்னிடம் இருந்து இளைய ஆதீனப் பதவி பறிக்கப்பட்டாலும், அந்த இடத்திற்கு தனது நெருங்கிய சீடரான சொரூபனாந்தாவை நியமிக்கும்படி ஆதீனம் அருணகிரிநாதரிடம் ஏற்கனவே நித்யானந்தா வலியுறுத்தி வந்தார். அதை ஆதீனம் ஏற்கவில்லை. நித்யானந்தாவோ அவரது சீடர்களோ எந்த ரூபத்திலும் ஆதீன மடத்தில் மீண்டும் நுழைய அனுமதிக்க கூடாது என்பதில் ஆதீனம் உறுதியாக உள்ளார். இதையடுத்து அவரது முயற்சியைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

உடனடியாக இளைய ஆதீனம் என்று நியமனம் செய்தால் ஏதாவது சிக்கல் ஏற்படும் எனக் கருதி, அதற்குப் பதிலாக புதிதாக தம்புரான் (திருக்கூட்டத்துக்கு அடியவர்) பதவி உருவாக்கி, அதில் திருச்சிற்றம்பலம் சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருவாடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்தவர். 32 வயதான இவர் திருநெல்வேலி தியாகராஜ நகரைச் சேர்ந்தவர். திருமணம் ஆகாதவர். சைவப் பிள்ளை சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

“நித்யானந்தா நீக்கப்பட்டு விட்டதால், தம்பிரானாக நியமிக்கப்பட் டுள்ள திருச்சிற்றம்பலசுவாமி இளைய ஆதீனமாக ஆக்கப்படுவாரா? என்று ஆதீனத்திடம் கேட்டதற்கு, “ தம்பிரான் அடுத்து இளைய ஆதீனமா? என்பது சிவபெருமான் முடிவுபடி நடக்கும். தம்பிரான் நியமனத்திற்கு பல்வேறு ஆதீனங்கள், பக்த அமைப்பினர் என்னுடன் தொடர்பு கொண்டு வரவேற்பு தெரிவித்தனர். தம்பிரானுக்கு விரைவில் மந்த்ரகாசாயம் தீட்சை அளிக்கப்பட்டு முறையான சடங்குகள் நடத்தப்படும். அப்போது ஆதீன சம்பிரதாயப்பபடி தம்பிரான் தன் முடி, தாடியை அகற்றிக் கொள்வார். நித்யானந்தா குறித்து பேசுவதற்கு இனிமேல் எதுவும் இல்லை“ என்றார்.


http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=33592

Monday, December 10, 2012

Madurai adheenam gets new ‘thambiran’

Dec 10, 2012, 06.39AM IST TNN


MADURAI: Senior pontiff of Madurai Adheenam Arunagirinatha Desikar has appointed a new "thambiran" (chief disciple) for the mutt.

Desikar announced the appointment and introduced Thiruchitrambala Thambiran (36) to reporters at the mutt premises on Sunday. He was earlier serving as thambiran of the Thiruvavaduthurai Aadheenam. He hails from Palayamkottai in Tirunelveli district and has done a diploma in dairy management.

It is a pre-requisite that a person who is appointed as junior pontiff should be a Thambiran in the particular mutt. In fact, the sudden announcement of Nithyananda as junior pontiff in April this year, bypassing such norms, had raised a hue and cry among Hindu outfits and other mutts in the state. Eventually, Nithyananda was removed from the position after the Madurai Adheenam faced the threat of being taken over by the state government.

However, Desikar did not commit as to whether Tiruchitrambala Thambiran would be made his junior pontiff in place of Nithyananda.

Interacting with media persons here, Desikar said Thiruchitrambala Thambiran expressed his desire to serve in the Madurai Aadheenam after the demise of Thiruvavaduthurai Aadheenam, Sivaprakasa Desiga Paramachariar Swamigal recently and he was not willing to remain back in the Aadheenam anymore. "Based on his request, he has been made the Thambiran of Madurai Adheenam", he said. When asked about the prospects of him being made the next pontiff, Desikar said, "It is the will of Lord Shiva and Parvathy". 
 http://m.timesofindia.com/city/madurai/Madurai-adheenam-gets-new-thambiran/articleshow/17552102.cms
 New Chief Priest appointed for Madurai Adheenam

Madurai | Monday, Dec 10 2012 IST
 Amid raging controversy after Tamil Nadu Government moved the court to take over the millennium-old Saivite Mutt 'Madurai Adheenam,' Sri Arunagirinatha Sri Gnanasambanda Desika Paramacharya Swamigal, also called as 'Arunagirinathar' - the 292nd Pontiff, has appointed a new 'Thambiran' (Chief Disciple) for the mutt. Thiruchitrambala Thambiran (36), who had earlier served as Thambiran of another ancient Saivite mutt 'Thiruvavaduthurai Adheenam', was appointed by Arunagirinathar, based on his request after the recent demise of Thiruvavaduthurai Pontiff Sivaprakasa Desiga Paramacharya Swamigal, said mutt sources today. There are possibilities of Thiruchitrambala Thambiran being made as the next Pontiff of Madurai mutt, as there is a pre-requisite that a person, who is appointed as junior Pontiff should be a Thambiran in the particular mutt.
Madurai Mutt was in the midst of controversy, after Arunagirinathar coroneted tainted god man Nithyananda as the junior Pontiff of the mutt on June 5, last. After strong protests from various Hindu outfits and Pontiffs of other Saivite mutts over appointment of Nithyananda, who was facing several sexual abuse charges, Tamilnadu government moved a lower court in Madurai to remove Arunagirinathar from the Pontiff post and to take over the administration of the mutt. Rattled over the government's move, Arunagirinathar sacked Nithyananda from the junior Pontiff . post on October 19. UNI GSM AKM ADB1014 NNNN
-- (UNI) -- 10ms2.xml
 http://news.webindia123.com/news/Articles/India/20121210/2116459.html

 மதுரை ஆதினத்தில் தம்பிரான் நியமனம்

 திருவாவடுதுரை: திருவாவடுதுரை ஆதினத்தில் தம்பிரானாக இருந்தவர் திருசிற்றம்பலம், திருவாவடுதுரை ஆதினத்தில் அனுமதி பெற்று , மதுரை அருணகிரிநாதரை சந்தித்து தம்பிரானாக ஏற்க்கும் படி கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட அருணகிரிநாதர் அவரை தம்பிரானாக நியமித்தார். இவர் மதுரை ஆதினத்தின் முதல் தம்பிரான் ஆவார்.
 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=602442

Friday, December 7, 2012

Nithayananda files injunction

Nithyananda has filed an injunction petition at the Principal Sub-Court here seeking to implead Hindu Religious and Charitable Endowments (HR and CE) department in an original suit filed by the Madurai Adheenam.
On November 24, Nithyananda had raised objections to the Adheenam’s suit and sought time to file an injunction petition. On Wednesday, his advocates filed the injunction petition stating that the Department of HR and CE should be included as one of the respondents in the Adheenam’s suit.
Madurai Adheenam Arunagirinathar had originally filed the suit seeking directions to the sub-registrar of Madurai South to cancel the deed of a trust he had formed in collaboration with Nithyananda.

Interim prayer

In an interim prayer, he said Nithyananda and his followers should be restrained from entering the mutt.The case has been adjourned to December 7 following Hindu Religious and Charitable Endowments department’s request to file a counter affidavit. 

 http://www.thehindu.com/news/cities/Madurai/nithayananda-files-injunction/article4167998.ece

Sunday, December 2, 2012

Nithyananda Fleeing the Country - TV9 Report

Is Nithyananda who has been missing for the past several weeks trying to flee from India on the pretext of a 21-day spiritual program on a cruise to Singapore, Malaysia and Thailand???

நித்யானந்தா மீது நில அபகரிப்பு புகார் 27கிராம மக்களிடம் டிஎஸ்பி விசாரணை

சேலம் : நித்யானந்தா மீதான நில அபகரிப்பு புகார் தொடர்பாக, கிராம மக்களிடம் டிஎஸ்பி நேற்று விசாரணை நடத்தினர். சேலம் மாவட்டம் சீரகாபாடியைச் சேர்ந்தவர் குணசேகரன். விவசாயி. தனது 50 சென்ட் நிலத்தை ஆசிரமம் அமைக்க நித்யானந்தாவுக்கு தானமாக கொடுத்துள்ளார். ஆனால், அதை விலைக்கு வாங்கியது போல் நித்யானந்தாவின் ஆதரவாளர்கள் பத்திரம் பதிவு செய்துள்ளனர். இது குறித்து கடந்த மாதம் 3ம் தேதி சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நித்யானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னகிருஷ்ணன், சக்தி மீது குணசேகரன் நில அபகரிப்பு புகார் அளித்துள்ளார். இது குறித்து நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி முனியப்பன் விசாரணை நடத்தி வருகிறார்.

நித்யானந்தா மீதான புகார் தொடர்பான அனைத்து ஆவணங்களை யும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர். இதனிடையே சீரகாபாடியில் ஆசிரமம் துவக்கப்பட்ட போது நித்யானந்தா கலந்து கொண்டு பேசியது தொடர்பான சிடியை, அவரது சீடர் சென்னகிருஷ்ணன் நேற்று முன்தினம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனிடையே கடத்தூர் முக்கோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்க ளிடம் டிஎஸ்பி முனியப் பன், விவசாயி குணசேகரன் 50 சென்ட் நிலத்தை தனமாக கொடுத்தாரா? அல்லது பணம் வாங்கிக் கொண்டு நிலத்தை விற்றாரா? என்பது குறித்து  தனித்தனியே விசாரித்தார். அவர்களின் வாக்கு மூலத்தை வீடியோவில் போலீசார் பதிவு செய்தனர்.


 http://www.result.dinakaran.com/News_Detail.asp?nid=32547