மதுரை: மதுரை ஆதீனம் மடத்தின் புதிய தம்பிரான் திருச்சிற்றம்பலத்திற்கு
மொட்டை அடிக்கப்பட்டு, தீட்சை அளிக்கப்பட்டு, காதில் வளையம் மாட்டப்பட்டது.
""இதற்கு நித்யானந்தா உட்பட யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது,''
என்றார் மூத்த ஆதீனம். நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து, சர்ச்சையில்
சிக்கிய மதுரை ஆதீனம், டிச.,9 ல், திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தம்பிரான்
திருச்சிற்றம்பலத்தை, உதவியாளராக நியமித்துக் கொண்டார். இதற்காக,
"தம்பிரான்' என்ற பதவியையும் உருவாக்கினார். மடத்தின் சம்பிரதாய பூஜைகளில்
உதவியாக இருந்து வரும் திருச்சிற்றம்பலத்திற்கு, டிச., 10 முதல், தீட்சைகள்
அளிக்கும் சடங்கு துவங்கியது. நேற்று முன் தினம், அவருக்கு மொட்டை
அடிக்கப்பட்டது; மந்திர காசாயம், நிர்வாண தீட்சை அளிக்கப்பட்டு, காதில்
வளையம் மாட்டும் "சுந்தரவேடம்' என்ற சடங்கு நடந்தது.
தினமலர் நிருபருக்கு, ஆதீனம் அளித்த பேட்டி:
* இளைய ஆதீனமாக நியமிப்பதற்கான சடங்கா இது?
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... தம்பிரான், இளைய ஆதீனம் அல்ல. இச்சடங்குகள், தம்பிரானுக்கும் உரியது.
* அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளதா?
ஆம். "ஸ்ரீமத் நெல்லையப்ப தம்பிரான்' என, அழைக்கப்படுவார்.
* இதற்கு, நித்யானந்தா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதா?
அவர் எப்படி எதிர்க்க முடியும்? அவரைத் தான் நீக்கிவிட்டேனே. அவருக்கும், மடத்திற்கும் சம்பந்தமில்லை. திருவாவடுதுறை ஆதீன மடத்தின் சம்மதத்தோடு, இங்கு திருச்சிற்றம்பலம் வந்துள்ளதால், யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.
* மடத்தின் விவகாரம் கோர்ட் வரை சென்றுவிட்டதே?
அதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு கூறினார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=608430&Print=1

No comments:
Post a Comment