மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பாலியல் புகாரில் சிக்கிய நித்யானந்தா கடந்த ஏப்ரலில் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும் நித்யானந்தா தகுதி இல்லாதவர் எனக் கூறியது. இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நித்யானந்தாவை ஆதீனம் நீக்கினார்.
இதன் பிறகு இளைய ஆதீனப் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில் நீக்கப்பட்ட நித்யானந்தாவும் அவரது சீடர்களும் மீண்டும் ஆதீன மடத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டுமென மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆதீனம் அருணகிரிநாதர் வழக்கு தொடர்ந்தார். இதில் நித்யானந்தா எதிர்மனு தாக்கல் செய்துள் ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
தன்னிடம் இருந்து இளைய ஆதீனப் பதவி பறிக்கப்பட்டாலும், அந்த இடத்திற்கு தனது நெருங்கிய சீடரான சொரூபனாந்தாவை நியமிக்கும்படி ஆதீனம் அருணகிரிநாதரிடம் ஏற்கனவே நித்யானந்தா வலியுறுத்தி வந்தார். அதை ஆதீனம் ஏற்கவில்லை. நித்யானந்தாவோ அவரது சீடர்களோ எந்த ரூபத்திலும் ஆதீன மடத்தில் மீண்டும் நுழைய அனுமதிக்க கூடாது என்பதில் ஆதீனம் உறுதியாக உள்ளார். இதையடுத்து அவரது முயற்சியைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.
உடனடியாக இளைய ஆதீனம் என்று நியமனம் செய்தால் ஏதாவது சிக்கல் ஏற்படும் எனக் கருதி, அதற்குப் பதிலாக புதிதாக தம்புரான் (திருக்கூட்டத்துக்கு அடியவர்) பதவி உருவாக்கி, அதில் திருச்சிற்றம்பலம் சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருவாடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்தவர். 32 வயதான இவர் திருநெல்வேலி தியாகராஜ நகரைச் சேர்ந்தவர். திருமணம் ஆகாதவர். சைவப் பிள்ளை சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
“நித்யானந்தா நீக்கப்பட்டு விட்டதால், தம்பிரானாக நியமிக்கப்பட் டுள்ள திருச்சிற்றம்பலசுவாமி இளைய ஆதீனமாக ஆக்கப்படுவாரா? என்று ஆதீனத்திடம் கேட்டதற்கு, “ தம்பிரான் அடுத்து இளைய ஆதீனமா? என்பது சிவபெருமான் முடிவுபடி நடக்கும். தம்பிரான் நியமனத்திற்கு பல்வேறு ஆதீனங்கள், பக்த அமைப்பினர் என்னுடன் தொடர்பு கொண்டு வரவேற்பு தெரிவித்தனர். தம்பிரானுக்கு விரைவில் மந்த்ரகாசாயம் தீட்சை அளிக்கப்பட்டு முறையான சடங்குகள் நடத்தப்படும். அப்போது ஆதீன சம்பிரதாயப்பபடி தம்பிரான் தன் முடி, தாடியை அகற்றிக் கொள்வார். நித்யானந்தா குறித்து பேசுவதற்கு இனிமேல் எதுவும் இல்லை“ என்றார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=33592
http://www.youtube.com/watch?v=OonreSsRD_Y
ReplyDeletehttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=604620&Print=1
ReplyDeleteஓரங்கட்டப்பட்டவர் வளர்ந்துட்டாரே!மதுரை ஆதீனத்தின், இளைய சன்னிதானமாக நித்யானந்தா இருந்த போது, மடத்தில் நடந்த பேட்டிகளில், நித்யானந்தாவே பதில் சொல்லி வந்தார். ஆதீனம் இந்த காட்சிகளை, அவர் அருகில் மவுனமாக இருந்து வேடிக்கை பார்ப்பார்.
நித்யானந்தாவை வெளியேற்றிய பின், ஆதீனம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார். சில நாட்களுக்கு முன், திருவாவடுதுறை ஆதீனத்தில் சேவை செய்து வந்த, திருச்சிற்றம்பலத்தை, மதுரை மடத்தின் முதல் தம்பிரானாக, ஆதீனம் அறிவித்தார்.
தம்பிரானை அறிமுகம் செய்த நிகழ்ச்சியில், பேட்டி கொடுத்தார். பின், ஒவ்வொரு, "டிவி'க்கும், தனித்தனியாக பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அருகில் நின்றிருந்த வைஷ்ணவி, "ஏன் இப்படி, "இம்போசிஷன்' மாதிரி, திருப்பித் திருப்பி, அவரை பேச வைக்கிறீங்க...' என கோபமானார். இதை பார்த்த ஆதீனம், "அவங்க, சந்தேகங்களத் தானே கேக்கறாங்க' என சிரித்தபடி, உற்சாகமாக பேட்டியை தொடர்ந்தார்.கூட்டத்திலிருந்த ஒருவர், "மடத்தில், நித்யானந்தா இருந்த போது, ஓரம் கட்டப்பட்ட வைஷ்ணவி, இப்போ இடைமறித்து பேசும் அளவிற்கு வளர்ந்து விட்டாரே... பரவாயில்லை...' என, கிண்டலடித்தபடியே நகர்ந்தார்; காதில் வாங்கிய வைஷ்ணவியின் முகத்தில், கடுகடுப்பு!
போதும்டா சாமி உங்க சகவாசம்!