வெள்ளி, 14 டிசம்பர் 2012( 14:15 IST )
FILE
மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்துஅறநிலையத்துறை உருவாக்கிய மதுரை ஆதீனம் அறக்கட்டளை கலைக்கப்பட்டுவிட்டது. அதனை மதுரை தெற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தோம். தற்போது அறக்கட்டளை கலைக்கப்பட்ட நிலையில் அந்த பதிவை ரத்து செய்யும்படி சார்பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அவரும், அவரது தரப்பினரும் மதுரை ஆதீனத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவில் சார்பதிவாளரும், நித்யானந்தாவும் மட்டும் எதிர்தரப்பாக சேர்க்கப்பட்டு இருந்தனர். மனு விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவில் இந்து அறநிலையத்துறையையும் ஒரு எதிர்தரப்பாக சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1212/14/1121214030_1.htm
No comments:
Post a Comment