Chennai November 01, 2012, 00:35
The Madras High Court today disposed of a batch of petitions, the
main one seeking its direction, among others, to forbear self-styled
godman Nithyananda from holding the post of head of the 'Madurai
Aadheenam (mutt).
A division bench comprising justices R Banumathi and R Subbiah, in
their order, said, "... Since already a suit has been filed, we are not
inclined to issue any direction in the present writ petitions. More so,
when 10th respondent (Nithyananda) is now said to have been removed from
the position" (as Mutt head)."
However, the bench said, "... When certain allegations are made
against the trustees of the Mutt by the disciples and devotees of the
Mutt, instead of making Hindu Religious and Charitable Endowments (HR
and CE) department to undergo ordeal of trial by filing a suit, the
Commissioner must have power to deal with the situation."
As per the Section 59 of Tamil Nadu Hindu Religious and Charitable
Endowments Act, 1959, the Commissioner or any two or more persons who
have obtained the consent of the Commissioner in writing, can only
institute a suit for removal of a trustee of a Mutt or a specific
endowment attached to the Mutt.
"Instituting a suit for removal and finality of suit will take
considerable time and by which time, much damage could be done to the
Mutt," the court said.
It opined that to have more regulatory control over mutts, the state
can consider to amend the provisions of section 59 of Tamil Nadu HR and
CE Act by giving suo motu powers to the Commissioner, as found in
Section 51 of Andhra Pradesh Charitable and Hindu Religious Institutions
and Endowments, 1987 (30 of 1987).
Petitioners had prayed for the court's direction to forbear
Nithyananda from holding the post of mutt head, to take custody,
protection and administer of the endowment of the over 1500 year old
saivite mutt besides quashing his appointment as mutt head and declare
his appointment as void-ab-initio
http://www.business-standard.com/generalnews/news/hc-disposespetitions/74433/
சென்னை :"மதுரை ஆதீனம் தொடர்பாக, எந்த உத்தரவும் பெற, அரசு விரும்பினால்,
மதுரை, சப்-கோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யலாம்' என, சென்னை ஐகோர்ட்
உத்தரவிட்டுள்ளது. "ஏற்கனவே, ஆதீன விவகாரம் குறித்து, சிவில் வழக்கு
நிலுவையில் இருப்பதால், இந்த ரிட் மனுக்கள் மீது, உத்தரவு பிறப்பிக்க
விரும்பவில்லை' என, சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. அதே சமயம், "மடங்களை
ஒழுங்குபடுத்த, இந்து சமய அறநிலையத் துறை கமிஷனருக்கு, அதிகாரங்கள்
அளிக்கும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வர, அரசு பரிசீலிக்கலாம்
எனவும், கருத்து தெரிவித்துள்ளது. மதுரை ஆதீனகர்த்தராக இருப்பவர்,
அருணகிரிநாதர். 293வது குரு மகா சன்னிதானமாக, நித்யானந்தாவை, அருணகிரிநாதர்
நியமித்தார்; இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. நித்யானந்தா நியமனத்தை
எதிர்த்து, ஐகோர்ட்டில், வழக்கறிஞர் கவுதமன் என்பவர், மனுத் தாக்கல்
செய்தார்.
ஜெகதலபிரதாபன் என்பவர், தாக்கல் செய்த மனுவில், "மதுரை
ஆதீனத்தையும், அறக்கட்டளையையும், இந்து சமய அறநிலையத் துறை எடுத்துக் கொள்ள
வேண்டும். இளைய சன்னிதானமாக, நித்யானந்தாவை நியமித்தது செல்லாது என,
உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்களை, நீதிபதிகள்
பானுமதி, சுப்பையா, அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள்
சார்பில், மூத்த வழக்கறிஞர், என்.ஆர்.சந்திரன், வழக்கறிஞர்கள், ரமேஷ்,
கண்ணன்; அரசு தரப்பில், அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், சிறப்பு அரசு
பிளீடர்கள் கந்தசாமி, இன்பதுரை; ஆதீனம் சார்பில், மூத்த வழக்கறிஞர்,
ஜி.ராஜகோபாலன் ஆகியோர் ஆஜராயினர். இவ்வழக்கு நிலுவையில் இருந்த போது,
மதுரை ஆதீனத்தில் இருந்து அருணகிரிநாதரை நீக்குவது தொடர்பாக, மதுரை,
சப்-கோர்ட்டில், இந்து சமய அறநிலையத் துறை, சார்பில் மனுத் தாக்கல்
செய்யப்பட்டது; அவ்வழக்கு நிலுவையில் உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் நடந்த
விசாரணையில், இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், மனுக்கள் மீதான
உத்தரவை, தேதி குறிப்பிடாமல், கடந்த மாதம், 19ம் தேதி, "டிவிஷன் பெஞ்ச்'
தள்ளி வைத்திருந்தது. இதனிடையே, நித்யானந்தாவை, இளைய ஆதீனத்தில் இருந்து
நீக்கி விட்டதாக, அருணகிரிநாதர் அறிவித்தார்.
மனுக்களை விசாரித்த,
"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: "மதுரை ஆதீனத்தின், 293 வது, குரு
மகா சன்னிதானத்தில் இருந்து, நித்யானந்தா நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக,
அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை' என, அட்வகேட்-ஜெனரல் தெரிவித்துள்ளார்.
ஆனால், "நித்யானந்தாவை நீக்கி விட்டதாக, மதுரை ஆதீனத்திடம் இருந்து
அனுப்பிய தகவலை, நித்யானந்தா பெற வேண்டியதுள்ளது' என, மூத்த வழக்கறிஞர்
ஜி.ராஜகோபாலன் தெரிவித்தார். எனவே, மனுதாரர்கள் எழுப்பியுள்ள பிரச்னைகளை,
இந்த, "ரிட்' மனுக்களில் முடிவு செய்ய முடியாது. ஏனென்றால், இந்த, "ரிட்'
மனுக்களில் முடிவு தெரிவித்தால், சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கில் பாதிப்பை
ஏற்படுத்தும். ஏற்கனவே, சிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், இந்த மனுக்கள்
மீது, எந்த உத்தரவையும், பிறப்பிக்க விரும்பவில்லை. எனவே, இடைக்கால
உத்தரவு எதுவும் பெற வேண்டும், என, அரசு விரும்பினால், மதுரை,
சப்-கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில், தகுந்த மனுவை தாக்கல் செய்யலாம்.
பொது நலன் சம்பந்தப்பட்ட பிரச்னையில், அரசு தரப்பில் நடவடிக்கையில்லை
என்றால், பொது நல மனுவை, விசாரணைக்கு ஏற்று, அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க
முடியும். ஆந்திராவில் இருப்பது போல், அறநிலையத்துறை தொடர்பாக,
தமிழகத்தில் சட்டம் இல்லை. இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் கீழ்,
மடாதிபதியை நீக்க, அறநிலையத் துறை கமிஷனருக்கு அதிகாரமில்லை. சிவில் வழக்கு
மூலமே, மடாதிபதியை நீக்க முடியும்.
ஆந்திரா சட்டம் : இந்து சமய
அறநிலையத் துறை சட்டப்படி, மடத்தின் அறங்காவலரை நீக்க வேண்டும் என்றால்,
கமிஷனரோ அல்லது அவரது ஒப்புதலைப் பெற்றவர்களோ, சிவில் வழக்கு தொடர
முடியும். இவ்வாறு வழக்கு தொடுத்து, அது முடிவக்கு வர, கணிசமான நேரம்
ஆகும். அதற்குள், மடத்துக்கு அதிக சேதாரம் இழைக்கப்பட்டிருக்கும். எனவே,
ஆந்திராவில் இருப்பது போல், மடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து,
ஒழுங்குபடுத்த, அறநிலையத் துறை கமிஷனருக்கு அதிகாரங்கள் அளிக்கும் வகையில்,
இந்து சமய அறநிலையத் துறை சட்டப் பிரிவில், திருத்தம் கொண்டு வர அரசு
பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=577109&Print=1