அலகாபாத், பிப்.14- அலகாபாத்தில் நடை பெற்றுவரும் கும்ப மேளாவில் நித்தியானந் தாவுக்கு மகா மண்ட லேசுவரர் பட்டம் வழங் கப்பட்டுள்ளது. இந்த பட்டத்தை பணம் கொடுத்து வாங்கியதாக சாதுக்களின் உயர் அமைப்பான அகாரா பரிஷத் குற்றம் சாட்டி யுள்ளது.
கும்பமேளா விழா உத்தரப்பிரதேச மாநி லம் அலகாபாத்தில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி தொடங்கி யது.
பெங்களூருவை அடுத்துள்ள பிடதியில் தியான பீடம் நடத்தி வரும் நித்தியானந்தாவும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டார். திரி வேணி சங்கமம் அருகே நடந்து வரும் கும்ப மேளா விழாவில் மகா நிர்வாணி அகாரா என்ற அமைப்பு நித்தியானந் தாவுக்கு மகாமண் டலேசுவரர் என்ற பட் டத்தை வழங்கியுள்ளது. இந்த பட்டம் வழங்கிய தற்கு சாதுக்கள் மற்றும் மடாதிபதிகளின் உயர் அமைப்பான அகாரா பரிஷத் கண்டனம் தெரி வித்திருக்கிறது. மேலும் இந்த விருது வழங்கி இருப்பதில் பணப் பரி மாற்றம்-ஊழல் நடந்து இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறது. இது பற்றி அகாரா பரிஷத் தின் தலைவர் மகந்த் ஞானதாஸ் கூறியதா வது:-
நித்தியானந்தாவுக்கு மகா மண்டலேசுவரர் விருது வழங்கி இருப்ப தில் பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக் கிறது. திரிவேணி சங்க மத்தில் நடந்த விழாவில் மகா நிர்வாணி அகாரா, நித்தியானந்தாவை மகா மண்டலேசுவராக பட் டம் சூட்டி இருக்கிறது. இந்த விழாவை ஏராள மான சாதுக்கள், மடா திபதிகள் புறக்கணித் துள்ளனர். நித்தியானந் தாவுக்கு மகா மண்டலே சுவரர் பட்டம் கொடுப் பது கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைக் கப்பட்டு இருந்தது.
மகா மண்டலேசுவரர் பட் டம் பெறுவது என்பது மிக நீண்ட ஆன்மிக நடவடிக்கை. ஆனால் சிலர் அதனை பணத் தால் அடைய முயற்சிக் கிறார்கள். இதுபோன்ற நடைமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கடந்த 2010 ஆம் ஆண்டு ஹரித்துவாரில் நடை பெற்ற கும்பமேளாவில் நித்தியானந்தாவின் கூடாரம் சாதுக்களால் சேதப்படுத்தப்பட்டது.
ஆனால் அதுபோன்ற சம்பவம் இங்கு நடை பெறவில்லை. காரணம் மகா மண்டலேசுவரர் பட்டம் பணப் பரி மாற்றத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது. சாதுக்கள், மடாதி பதிகள் அடங்கிய உயர் நிலைக்குழு கூட்டம் கூட்டப்படும். இந்த கூட் டத்தில் மகா மண்டலே சுவரர் பட்டத்தை முறை கேடாகப் பெற்றிருப் பது உறுதியானால் நித் தியானந்தா நீக்கப்படு வார்.
- இவ்வாறு மகந்த் ஞானதாஸ் கூறினார்.
http://www.viduthalai.in/component/content/article/42-other-news/54778-this-is-the-merit-of-kumpamela-nithyanada-purchased-with-money-title.html
மதுரை ஆதீனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நித்தி, வட மாநிலங்களில் செல்வாக்குள்ள அகாடாக்களில் இடம் பெற்று, மகா மண்டலேசுவரராக உருவெடுத்திருக்கிறார். இது அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கும்பமேளாவிற்காக, கடந்த, 6ம் தேதி, அலகாபாத் வந்தார் நித்தியானந்தா. மறுநாளான, 7ம் தேதி, வட மாநிலங்களில் செயல்படும் துறவிகள் அமைப்பான அகாடாக்களில், முதன்மையானதும், முக்கியமானதுமான, "மகா நிர்வாணி அகாடா'வின், மகா மண்டலேசுவரர் ஒருவர், அவரை சந்தித்துப் பேசியுள்ளார்.அதே நாளில் தான், ஜெயேந்திரரும், நித்தியை நேரில் சந்தித்தார். இதையடுத்து, கடந்த, 12ம் தேதி, மகா மண்டலேசுவரராக, நித்தியை, மகா நிர்வாணி அகாடா அங்கீகரித்தது. ஆனால், அதற்கான சம்பிரதாய முன் அனுமதியை பெறவில்லை என்ற பேச்சு, எழுந்திருக்கிறது. அத்துடன், ரஞ்சிதா, "சிடி' விவகாரத்தில், நித்தியின் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், அவரை, மகா மண்டலேசுவரராக ஏற்றுக் கொண்டது எப்படி என்பதே, இப்போது எழும் வாதம்.இது தொடர்பாக, மகா நிர்வாணி அகாடாவின், அமைப்புச் செயலர், ரவீந்திர புரி கூறியதாவது:கும்பமேளாவில், தென் மாநிலங்களை சேர்ந்த துறவிகள், கணிசமான அளவில் பங்கேற்கவில்லை. நித்யானந்தா, தென் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமானவை. அவற்றுக்கும்,
அகாடாவில் அவர் சேர்வதற்கும் சம்பந்தமில்லை.தென் மாநில சாதுக்களை, கும்பமேளாவில் சேர்த்துக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் தான், நித்யானந்தாவை சேர்த்துள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆனால், "இந்த நடவடிக்கை, நியாயமானதல்ல. நியமனத்திற்கு முன், மற்ற அகாடாக்களின் கருத்தையும் கேட்டிருக்க வேண்டும்' என, நிரஞ்சனி அகாடா என்ற மற்றொரு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.இந்த அமைப்பை சேர்ந்த ஹரிகிரி என்பவர் கூறுகையில், ""ஒருவரை மகா மண்டலேசுவரராக நியமிப்பதற்கு முன், அவரது நடத்தை, பின்னணி பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். நித்யானந்தாவை எப்படி நியமித்தனர் என, தெரியவில்லை,'' என்றார்.மகா மண்டலேசுவரராக நியமிக்கப்பட்ட பின், தன், 220 சீடர்களுடன் நித்தி, நேற்று முன்தினம் காசிக்கு வந்தார். கங்கையில் படகில் சென்று, சில கட்டங்களை பார்த்து விட்டு, பின், 60 சீடர்களுடன் விசுவநாதர், அன்னபூரணி மற்றும் விசாலாட்சியை தரிசித்தார்.மதுரை ஆதினகர்த்தவாக ஆக முயன்று, சர்ச்சையில் சிக்கிய நித்தியானந்தா, வடமாநிலங்களில் காலூன்ற முதல் கட்டமாக, மகா மண்டலேசுவரராக நியமனம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
அகாடா என்றால்...?
வட மாநிலங்களில் உள்ள துறவிகள், "அகாடா' என்ற பெயரில் அமைப்புகளை ஏற்படுத்தி ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். தென் மாநிலங்களில் பல்வேறு மடங்கள் இருந்தாலும், அகாடா போன்ற அமைப்பு கிடையாது.தென் மாநில மடங்களில் எதுவும், இந்த அகாடா அமைப்பில் சேரவில்லை. இந்த அகாடாக்களில், துறவிகள் குழுவுக்கு தலைவராக இருக்கும் துறவி, மகா மண்டலேசுவரர் எனப்படுவார். இது அதிகாரமும், செல்வாக்கும் மிக்க பதவி. இதில், சைவ, வைணவ மற்றும் தனியான பிரிவாக, "உதாசீன்' என்ற பிரிவும் உள்ளது. இம்மாதிரி, மொத்தம், 13 அகாடா பிரிவுகள் உள்ளன.
நூறு பேருக்கு கிடைத்த பதவி
மகா மண்டலேசுவரராக ஒருவர் வரவேண்டும் என்றால், அவர் வேதம், சாஸ்திரங்கள் உள்ளிட்டவற்றை, முறையாக படித்திருக்க வேண்டும். முறையான குரு பரம்பரையில், சன்னியாச தீட்சை பெற்றிருக்க வேண்டும். ஆன்மிக பாரம்பரியத்தில், யோக சாதனைகள் கற்றிருக்க வேண்டும்.இந்த கும்பமேளாவில், இதுவரை, 100க்கும் மேற்பட்டோர், மகா மண்டலேசுவரர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கும்பமேளா போன்ற முக்கிய விழா நிகழ்ச்சிகளில், இவர்களுக்கு முதலிடம் வழங்கப்படுவது பாரம்பரியம்.கடந்த, 2007ம் ஆண்டு, நித்தியை மகா மண்டலேசுவரராக நியமிப்பதற்கான முயற்சிகள் நடந்தன.நியமனத்திற்காக அவர், 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2010 வரை அவர், அதை செலுத்தவில்லை என , கூறப்படுகிறது. 2010ல், நித்தி செக்ஸ் சர்ச்சையில் சிக்கிய போது, கும்பமேளாவில் இருந்தார். அகாடாக்கள் அங்கிருந்து அவரை வெளியேற்றி விட்டனர் என, கூறப்படுகிறது.-நமது சிறப்பு நிருபர்-
http://www.dinamalar.com/news_detail.asp?id=648287