Madurai ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 06, 2:03 PM IST
-மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை அருணகிரி நாதர் நியமித்தார். இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இளைய ஆதீனம் பதவியி லிருந்து நித்யானந்தாவை நீக்கி அருணகிரி நாதர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் மதுரை ஆதீனம் மடத்திற்குள் நித்யானந்தா அவரது சீடர்களை நுழைய தடை விதிக்க வேண்டும் என்று சப்-கோர்ட்டில் அருணகிரி நாதர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவில் நித்யானந்தா நியமனத்தை ரத்து செய்து விட்டேன். அவர் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டபோதும் ஆதீனம் சொத்துக்களை நிர்வகிக்க நானும், அவரும் சேர்ந்து ஏற்படுத்திய அறக்கட்டளை கலைக்கப்பட்டு விட்டது. எனவே அறக்கட்டளை கலைக்கப்பட்டதை பதிவு செய்ய சார்பதிவாளருக்கு உத்தர விட வேண்டும்.
மேலும் மடத்துக்குள் நித்யானந்தாவும் அவரது ஆட்களும் நுழைய தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு நித்யானந்தா தரப்பில் பதில் தெரிவிக்க அவகாசம் கோரப்பட்டு வந்த நிலையில் அவரது தரப்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்னை இளைய ஆதீனமாக நியமித்தது மரபுப்படி சரியானது தான். ஆதீன மடத்துக்கு நானும், எனது ஆதரவாளர்களும் நுழைய மாட்டோம். எந்த தொந்தரவும் எங்களால் ஏற்படாது. எனவே மதுரை ஆதீனத்தின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு பதில் மனுத்தாக்கல் செய்யும்படி ஆதீனம் தரப்பிற்கு நீதிபதி குருவையா உத்தரவிட்டு வழக்கை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
http://www.maalaimalar.com/2013/01/06140343/madurai-aadheenam-petition-to.html
அன்று.. 1000 பேரை பலி கொடுத்தாவது காப்பேன்..! இன்று...சீ சீ இந்த பழம் புளிக்கும்...!
ReplyDelete