பெங்களூர், பிடதி ஆசிரமத்திலிருந்து நித்தியானந்தா உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கன்னட அமைப்பு ஒன்று போராட்டத்தில் குதித்துள்ளது. இதனால் நித்தியானந்தா மீண்டும் வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.
முன்னதாக பெங்களூர் அருகே உள்ள பிடதியில் நித்யானந்தாவுக்கு ஆசிரமம் உள்ளது. மதிரை மடாதிபதியின் இளைய ஆதினமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதால் அவர் மதுரை வந்து பதவி ஏற்றார். ஆனால், அங்கு அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு தோன்றியதால் அருணகிரிநாதர் நித்யானந்தாவின் பதவியைப் பறித்து விட்டார்.
இதனிடையே, நித்தியானந்தா பிடதி வந்துள்ளார் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து கநாடக நவநிர்மான் சேனா அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பிடதிமுன் திரண்டு “நித்தியானந்தா வெளியேறு” என கோஷமிட்டு போராட்டத்தில் குதித்தனர். அவருடையே பதாகைகளில் கரி பூசினர். இதனைத் தொடர்ந்து போலீஸார் வந்து கூட்டத்தைக் கலைத்து விட்டனர்.
http://news.vikatan.com/index.php?nid=11972#cmt241
http://vanakkammalaysia.com/permalink/4909.html
No comments:
Post a Comment