Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Sunday, July 17, 2011

Nithyananda's levitation a flop show

[Translation requested from Tamil readers]

தோல்வியில் முடிந்த நித்யானந்தாவின் நிகழ்ச்சி!
சனிக்கிழமை, 16, ஜூலை 2011 (13:17 IST)

ஆபாச வீடியோ குற்றச்சாட்டால் சரிந்துபோன தனது செல்வாக்கை சரிசெய்ய, தியானத்தில் இருப்பவர்களை 'குண்டலினி சக்தி'யின் மூலம் அந்தரத்தில் மிதக்க வைப்பதாக சவால் விட்ட நித்யானந்தாவின் ஆன்மீக நிகழ்ச்சி தோல்வியில் முடிந்தது.


பிடதி நித்யானந்தா தியான பீடத்தில், குரு பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, 15.07.2011 அன்று காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவை ஒட்டி, ஆசிரமத்தின் பிரதான வாயிலில் இருந்து, ஆனந்தேஸ்வரா கோவில் வரையிலும் நித்யானந்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.


ஆசிரமத்திலுள்ள ஆனந்தேஸ்வரா சன்னிதியின் முன், பஞ்சதபா ஆசனம் போடப்பட்டிருந்தது. அதில், நித்யானந்தா அமர்ந்திருந்தார்.


இந்த குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அவர் நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது நித்யானந்தா ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து பக்தர்களும், ஆசிரம பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து நித்யானந்தாவுக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.

சிறிது நேரம் ஆசி வழங்கிய நித்தியானந்தா பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக பக்தர்களை தன்னால் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும் என்று சவால் விட்டார்.


குண்டலினியை எழுப்பி, மந்திரங்களை ஓதி அவர் சைகை செய்ய எம்பி யெம்பி குதித்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவின் கட்டளையை ஏற்று அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார். ஆனால் தடுமாறி கீழே விழுந்த அவர் அப்படியே சிரித்தப்படி உட்கார்ந்துவிட்டார்.


கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சிரித்த நித்யானந்தாவிடம் ஒருவர் சவால் விட்டார். தன்னை இச்சோதனைக்கு உட்படுத்திக்கொண்ட அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தில் ஈடுபட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் நித்யானந்தா. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Credits: Nakkeeran

 

ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி

பெங்களூர்: நடிகை ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைப்பதாக பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா நடத்திக் காட்டிய வித்தை படுதோல்வி அடைந்தது. வெளிநாட்டு சீடர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். மக்களை  ஏமாற்றுவதாக நித்யானந்தாவுக்கு எதிராக ஒரு நிருபர் ஆவேசமாக கூச்சல் போட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் உலகம் முழுவதும்  பத்திரிகைகள் மற்றும் டி.வி.க்களில் வெளியானதால் நித்தியானந்தாவின் உண்மையான முகம் மக்களிடம் அம்பலமானது. இந்து மதத்துக்கு அவமானத்தை  ஏற்படுத்திய ஆபாச சாமியாரை தண்டிக்க வேண்டும் என நாடெங்கும் குரல்கள் எழுந்தன. இதையடுத்து நித்யானந்தா கர்நாடகா போலீசால் கைது செய்யப்பட்டு இப்போது  ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். ரஞ்சிதாவும் இதுவரை தலை மறைவாக இருந்தார். மக்களிடம் மதிப்பிழந்த நித்யானந்தா, சிலரது தூண்டுதலின் காரணமாக சமீபத்தில் ரஞ்சிதாவுடன் சென்னை வந்து பிரஸ் மீட் நடத்தி செய்தி நிறுவனங்கள் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டார். அதை  தொடர்ந்து அடுத்த காமெடி கலாட்டாவை தனது பிடதி ஆசிரமத்தில் அரங்கேற்றியுள்ளார்.

 நேற்று முன்தினம் குரு பூர்ணிமா பூஜை நடந்தது. ஆடம்பரமாக கொண்டாடினார் நித்யானந்தா. ரஞ்சிதா உள்பட ஏகப்பட்ட பெண் சீடர்கள், வெளிநாட்டு கோஷ்டிகள் அவரை சுற்றி அமர்ந்திருந்தன. அப்போது தான் ஒரு வித்தை புரியப்  போவதாக நித்யானந்தா அறிவித்தார். குண்டலினி சக்தி மூலம் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உங்களை அந்தரத்தில் மிதக்க வைக்க போகிறேன் என்றார்.

 ‘அந்தரத்தில் மிதப்பது எல்லாம் ரொம்ப சிம்பிள். பிளாங்க் செக் கொடுத்து ஏழையை பணக்காரனாக்குவது போன்றதுதான் அது. குண்டலினியில் ஈடுபட்டு இந்த சக்தியை அடைவதற்குள் உங்களுக்கு வயதாகிவிடும். அதனால் நானே உங் கள் குண்டலினி சக்தியை உடனடியாக எழுப்பிக் காட்டுகிறேன்!’ என்று நித்யானந்தா சவால் விடும் தோரணையில் அறிவித்தார்.

இதையடுத்து ரஞ்சிதா உள்பட அங்கிருந்த சிஷ்யகோடிகள் அனைவரும் அந்தரத்தில் மிதக்க தயாராயினர். சிம்மாசனத்தில் அமர்ந்து கையில் வாள், கேடயம் போன்றவற்றை வைத்துக் கொண்டு நித்யானந்தா ஏதோ மந்திரம் முணுமுணுத் தார். பிறகு வாயை குவித்து காற்றை ஊதினார். நடக்கட்டும் என்பது போல் கைகளை அசைத்து எல்லோரையும் குதிக்க சொன்னார். குதித்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் சர்ரென மேலெழும்பி அந்தரத்தில் மிதக்கலாம் என்றார்.

 இதையடுத்து எல்லோரும் சம்மனமிட்டு உட்கார்ந்தபடியே குதிக்க தொடங்கினர். விநோத ஒலிகளை எழுப்பிய வண்ணம்  அவர்கள் குதித்தது ஒரே நேரத்தில் ஏராளமான தவளைகள் தாவி குதிப்பதை போலிருந்தது. எங்கே அந்தரத்தில்  பறந்துபோய் கீழே விழுந்தால் அடிபட்டு விடுமோ என்று சிலர் ஹெல்மெட் வேறு போட்டிருந்தனர்.
 ஆனால் ஜன்னி வந்தது போல எல்லோரும் குதித்ததுதான் மிச்சம், யாரும் மிதக்கவில்லை. சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த நித்யானந்தா, ரஞ்சிதாவை பார்த்து, Ôம்...நீயும் குதி...Õ என்பதுபோல சைகை காட்டினார்.

 அடுத்த நிம¤டம் தனது டிசைனர் சாரியை இடுப்பில் செருகிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் இருந்து சர்வாங்கமும் அதிர குதிகுதியென குதித்தார் ரஞ்சிதா. இதை பார்த்த ஒரு நிருபர், Ôஎன்னையும் மிதக்க வைக்க முடியுமாÕ என்று கேட் டார். நித்தியானந்தா சளைக்கவில்லை. அவரையும் குதிக்க சொன்னார். ஹெல்மெட் மாட்டிக்கொண்டு நிருபரும் உட்கார்ந்த இடத்தில் இருந்து துள்ளி குதித்தார்.
ஆசிரமம் முழுக்க இப்படி ஒரே துள்ளலாக இருந்ததே தவிர யாரும் அந்தரத்தில் மிதக்கவில்லை. தீவிரமாக குதித்த ரஞ்சிதா மல்லாந்து விழுந்தார். ஆனாலும்  சிரித்தபடி எழுந்து உட்கார்ந்தார். கடைசிவரை யாரும் எழும்பாததால் அனைவ ரும் ஏமாற்றம் அடைந்தனர்.

நித்யானந்தா மீண்டும் தன் வேஷம் கலைந்து விட்டதை திசை திருப்ப, அசட்டு சிரிப்புடன் விளக்கம் கூற முயன்றார். ஆனால் சும்மா குதித்து அவமானப்பட்ட நிருபர், நித்யானந்தாவுடன் வாக்குவாதம் செய்தார். ‘‘மக்களை முட்டாளாக்கும்  விதத்தில் இன்னும் எத்தனை காலம்தான் இப்படி வித்தை காட்டுவீர்கள்?’’ என்று கோபமாக கேட்டார். வெளிநாட்டு சீடர்கள் சிலரும் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினர். அவர்களை லோக்கல் சீடர்கள் அழுத்தி உட்கார வைத்தனர்.

குருபூர்ணிமா போன்ற புனித நாளில் இதுபோன்ற காமெடி கலாட்டாவை  அரங்கேற்றி இந்து மதத்தின் பெருமையை குலைக்¢கும் விதத்தில் நடந்துகொண்ட நித்யானந்தா மீது மடாதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆபாச சாமி யாரின் மற்றொரு புரட்டு அம்பலமாக குரு பூர்ணிமா பூஜை உதவியது என மக்கள் கூறினர்.

Credits: Dinakaran News



குருபூர்ணிமாவில் நடிகை, பக்தைகள் ஆட்டம் கர்நாடகாவில் இருந்து நித்தியை வெளியேற்ற கோரி ஆர்ப்பாட்டம்


பெங்களூர்: நித்யானந்தாவை மாநிலத்தில் இருந்து வெளியேற்றா விட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தலித் க்ரிய சமிதி எச்சரித்துள்ளது.

கர்நாடகாவில் குருபூர்ணிமா விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி மாதம் பவுர்ணமி தினமாக குருபூர்ணிமா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆன்மிக பெரியவர்கள், குருமார்கள், ஆசிரியர்கள் ஆகியோரை அணுகி வாழ்த்து பெறுவது வழக்கம். சிறப்புமிக்க இந்த தினம், பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் கேளிக்கை விழாவாக நடந்துள்ளது.

நித்யானந்தாவை மாநிலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று தலித் க்ரிய சமிதி சார்பில் ஷிமோகாவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அமைப்பின் தலைவர் பகவான் அளித்த பேட்டியில், ‘‘உலகம் முழுவதும் குருக்களுக்கு மாணவர்கள் மரியாதை செலுத்தும் விழாவாக குருபூர்ணிமா கொண்டாடப்படு கிறது. இந்த புனித நாளில் நடிகை, பக்தைகளை ஆட வைத்து, அதை அலங்கார தேரில் வலம் வந்து நித்யானந்தா ரசித்துள்ளார். மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டிய கால கட்டத்தில், அவற்றுக்கு மக்களை மீண்டும் அழைத்துச் செல்லும்  முயற்சியில் நித்யானந்தா ஈடுபட்டுள்ளார். ஆன்மிக புனிதர்கள் பலர் வாழ்ந்த இந்த புண்ணிய பூமியில் நித்தியானந்தா போன்றவர்கள் இருப்பது கர்நாடகாவின் கவுரவத்துக்கு இழுக்கு. எனவே, அரசு அவரை மாநிலத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்து வோம்’’ என்றார்.

Credits: Dinakaran News

2 comments:

  1. Name : Murali
    புவிஈர்ப்பு விசைக்கு எதிராக முதலில் நித்தியானந்தா அந்தரத்தில் மிதந்து காட்டட்டும்.

    Name : Lalman
    யோவ்..பேசாம நீ அந்த பொம்பளைய கல்யாணம் பண்ணிக்க..

    Name : basumani
    சூப்பர் காமெடி மக்கள் எப்போ உண்மையை அறிவார்கள்.

    Name : nkulandhaisamy
    யாருக்கும் வெட்கமில்லை.இந்த போலி சாமியாருக்கும் குடும்பத்துக்கு அடங்காத இந்த பெண்களுக்கும்.பட்டால்தான் புத்தி வரும்.

    Name : vel
    ஏன் இன்னும் இந்த செக்ஸ் சமியர்ரை பின்னால தொடருதுகள் இந்த சனம் .அவனை உள்ளே போடுங்கள் தமிழர்களே.

    Name : samrith
    இவனை எப்படி இன்னும் மக்கள் நம்பறாங்க என்று அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம். ஐந்து அறிவு உள்ள நாய் கூட இவனை கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளுது. ஆறரிவு உள்ள நாம் ஏன் இன்னும் திருந்த மாட்டேன்கிறோம் என்றுதான் புரியவில்லை

    Name : k a venkaatesan
    sex samiyar nithi acting try to prove good sami but all people know he is frad cheating sex sami

    Name : John
    சூப்பர் காமடி..... மேன் ஆப் காமடி, ha ha ha ha ha

    Name : mayurii
    இந்த போலி சாமியாரை நம்பி இன்னும் எவளவு காலத்துக்கு ஏமாற போறிங்களோ உங்களை அந்த கடவுளே வந்தாலும் திருத்தவே முடியாது

    Name : sathish
    அறிவாளிக்கு பின்னே பத்து பேரு, இது போலே முட்டாளுக்கு பின்னேயும் பத்து பேரு, இது தான் உலகம். புரிஞ்சிக்கோ .

    Name : J
    மக்கள் எவ்வளவு முட்டாள் என்பதற்கு இதுதான் சரியான ஆதாரம் !! ௧௦௦௦ "நக்கீரர்கள் " நெற்றிக்கண் திறந்தாலும் இந்த மாரி தருதல பயலுக மக்களை ஏமாத்தாம ஓய மாட்டாங்க

    Name : SARAVANAN
    இந்த போலி சாமியாரை நம்பி இன்னும் எவளவு காலத்துக்கு ஏமாற போறிங்களோ உங்களை அந்த கடவுளே வந்தாலும் திருத்தவே முடியாது

    Name : sha
    அந்த பொம்பள போறுகீ பயலை இன்னுமா மக்கள் நம்புது இது தான் அவன் பலம்

    Name : bizu kareem
    எந்த தவறு செய்தலும் மக்கள் அதை ஏற்று கொள்ளும் மனோ பாவத்தில் வந்து விட்டார்கள் , அதனால் அவர் மறுபடியும் தவறு செய்யலாம் என அவர் காலில் விழ ஆரம்பித்து விட்டார்கள் , சரியாக , சொன்னால் அவர் தான் மக்கள் காலில் விழ வேண்டும் !! பிழைப்பு தேடி தோஹா .

    Name : tamilon
    இந்த போலி சாமியாரை நம்பி இன்னும் எவளவு காலத்துக்கு ஏமாற போறிங்களோ உங்களை அந்த கடவுளே வந்தாலும் திருத்தவே முடியாது

    Name : paanchaiventhan
    அட கிருக்கா, புவியீர்ப்பு விசையை மீறி செயல் பட முடியும் என்று நினைத்த உனக்கு கேமரா எங்கே வைத்தார்கள் என்று எப்படி தெரியாமல் போனது?

    Name : sgpillai
    யோகம் என்பது மந்திரம் இல்லை அது அனுபவம் பணம் சம்பாதிக்கும் நித்தியானந்தா போன்ற சாமிக்கு தெரியாது இன் இங்கிலீஷ் விர்டுஅல் இமேஜ் என்று சொல்வார்கள் அது உண்மையான யோகிகள் , மகான்கள் மட்டும் செய்வார்கள் போலிகள் செய்ய முடியாது

    Name : fay
    என்ன கொடும சார் இது

    Name : ambalavaanar
    "குண்டலினி" என்பது ஒரு மனநோய் அறிகுறி! அப்படி ஒரு அறிகுறி இருக்கிறதா என்று கூட அறிய முடியாத அறிகுறி! மூக்கு அறுபட்டவன், மூக்கை அறுத்தால் கடவுள் தெரிவார் என அடுத்தவனை அருக்கவைத்து, அவனும் ஆமாம் தெரிகிறார், மூக்கை அறுங்கள் என்று மேலும் பல முட்டாள்களை அறுக்கவைத்தது போன்றதே இது.

    ReplyDelete
  2. http://www.change.org/petitions/end-nithyanandas-holy-fraud-sex-abuse-call-for-immediate-arrest-trial?utm_medium=twitter&utm_source=share_petition

    ReplyDelete