பெங்களூர், மார்ச் 31: நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பனுக்கு கீழ்நீதிமன்றம் அனுப்பிய சம்மனை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நித்யானந்தாவின் பெண் சீடரான அமெரிக்காவை சேர்ந்த அஞ்சுளா ஜாக்சன், லெனின் கருப்பனுக்கு எதிராக 2010 ஆகஸ்ட் 28-ம் தேதி ராமநகரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், இந்திய தண்டனை சட்டத்துக்கு எதிராகப் பல்வேறு குற்றங்கள் இழைத்து நித்யானந்தாவுக்கு எதிரான வீடியோவை லெனின் கருப்பன் தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்திய சட்டம், தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக செயல்பட்டு, தனி நபர் சுதந்திரத்தில் அத்துமீறி நுழைந்துள்ளதாகப் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
இதை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், லெனின் கருப்பனை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதற்கு லெனின் கருப்பன் ஜனவரி 13-ல் உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றார்.
இந்தத் தடையை நீக்குவதற்காக அஞ்சுளா ஜாக்சன், உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி கே.என்.கேசவநாராயணா, ராமநகரம் மாவட்ட நீதிமன்றத்தில் லெனின் கருப்பனுக்கு பிறப்பித்த சம்மனை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்மன் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறும், சட்டத்துக்கு உட்பட்டு ஆணை பிறப்பிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
http://www.dinamani.com/நித்யானந்தாவின் பெண் சீடரான அமெரிக்காவை சேர்ந்த அஞ்சுளா ஜாக்சன், லெனின் கருப்பனுக்கு எதிராக 2010 ஆகஸ்ட் 28-ம் தேதி ராமநகரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், இந்திய தண்டனை சட்டத்துக்கு எதிராகப் பல்வேறு குற்றங்கள் இழைத்து நித்யானந்தாவுக்கு எதிரான வீடியோவை லெனின் கருப்பன் தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்திய சட்டம், தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக செயல்பட்டு, தனி நபர் சுதந்திரத்தில் அத்துமீறி நுழைந்துள்ளதாகப் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
இதை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், லெனின் கருப்பனை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதற்கு லெனின் கருப்பன் ஜனவரி 13-ல் உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றார்.
இந்தத் தடையை நீக்குவதற்காக அஞ்சுளா ஜாக்சன், உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி கே.என்.கேசவநாராயணா, ராமநகரம் மாவட்ட நீதிமன்றத்தில் லெனின் கருப்பனுக்கு பிறப்பித்த சம்மனை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்மன் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறும், சட்டத்துக்கு உட்பட்டு ஆணை பிறப்பிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment