சபலச் சாமியார் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்குள் 24-ந் தேதி இரவு நுழைந்த கர்நாடக போலீஸ் டீம்... அங்கிருந்த நிர்வாகிகள் மூன்றுபேரைக் கைதுசெய்து... ஆசிரமத்தரப்பிற்கு ஹைவோல்ட் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
நித்தி மீதான பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளையும் கர்நாடக சி.ஐ.டி. போலீஸ்தான் கையிலெடுத்து விசாரித்துவருகிறது. நித்தியின் செக்ஸ் ஒப்பந்தம் குறித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த.... ஆசிரம பெண் டிரஸ்ட்டியான மா சதானந்தாவை மாதக்கணக்கில் தேடிவந்தனர். காரணம் ஆசிரமத்தில் ஐக்கியமாக வரும் இளம்பெண்களிடம்... செக்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதோடு... ஆசிரமத்தின் சார்பில் சாட்சிக் கையெழுத்தையும் தொடர்ந்து போட்டு வந்தவர் இந்த மா சதானந்தாதான்.
’ஆசிரமத்தில் செக்ஸ் பரிசோதனைகளுக்கு உட்படவேண்டியிருக்கும். செக்ஸ் ரீதியிலான இந்த தாந்ரீகப் பயிற்சிகள் குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது’என்ற ரீதியில்... மோசமான கண்டி ஷன்கள் அடங்கிய அந்த ஒப்பந்தத்தில் யாராவது கையெழுத்துப்போட மறுத்தால்... அவர்களைப் பேசிப்பேசியே பிரைன்வாஷ் செய்து... சாமர்த்திய மாய் கையெழுத்து வாங்கிவிடுவாராம் இந்த மா.
’’தனசேகர் என்கிற சதானந்தாவின் மனைவி தான் இந்த மா. திருச்செங் கோட்டைச் சேர்ந்த இந்த சதானந்தாதான்... பெங்களூரில் நித்தி, ஆசிரம பிஸ்னஸ் தொடங்க முதலீடு பண்ணியவர். தனது இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் சதானந் தாவை தனக்கு நிகராக வைத்துக்கொண்டார் நித்தி. ஆசிரமத்தின் அனைத்து கரன்ஸிப் பரிபாலனத்தையும் இவர்தான் பார்த் துக்கொள்கிறார். எனவே இவ ரது மனைவி யான மாவும் இங்கு பலத்த பவர் புள்ளியாக இருக்கிறார். ஸ்பின் னிங் மில் அனுபவம் இருக்கும் சதானந் தா மூலம்.... நிறைய காற்றாலைகளில் முதலீடு பண்ணி யிருக்கிறார் நித்தி’ என்கிறார்கள் விபர மறிந்தவர்கள்.
தேடிப்போகும் போதெல்லாம் சி.ஐ.டி. அதிகாரிகளுக்குத் ’தண்ணி’ காட்டிவிடுவார் மா. எனவே அவரின் நடமாட்டத்தைக் கண்காணித்த அதி காரிகள்... 24-ந் தேதி மா ஆசிரமத்தில் இருப்பதை அறிந்து... விசாரணை அதி காரி ராமலிங்கப்பா தலைமையில் அங்கு விரைந்தனர். ஆசிரம முகப்பு கேட்டுக்கு அதிகாரிகள் வந்தபோது... அதை அறிந்த மா, வேறொரு வாசல் வழி யாக குவாலிஸ் காரில் தப்பினார். இதைப்பார்த்த அதிகாரிகளும் பெங்களூர் ரோட்டில் விரைந்து அவரது காரை ஜீப்பில் துரத்தினர். 10 கி.மீ. தூரத்துக்கு நடந்த இந்த சேசிங்கில்.. கடும் டிராபிக்கை பயன்படுத்திக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார் மா.
இதைத்தொடர்ந்து... தங்கள் வேலைக்கு இடையூறு செய்ததாக ஆசிரமத் தரப்பினர் மீது சி.ஐ.டி. அதிகாரிகள் பிடதி காவல் நிலையத்தில் புகார்கொடுக்க.... புகாரைப் பெற்ற பிடதி போலீஸார்... இரவு 8 மணிக்கு ஆசிரமத்திற்குள் அதிரடியாகப் புகுந்தனர். அங்கிருந்த நிர்வாகிகளான சச்சிதானந்தா, தயானந்தா, சாந்திமயானந்தா ஆகியோரை சுற்றி வளைத்துக் கைது பண்ணி ஸ்டேஷனுக்கு அள்ளிச் சென்றனர். போலீஸின் இந்த அதிரடி அட்டாக்கால்... அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் நித்யா. மாவை வலைவீசித் தேடிக்கொண்டி ருக்கிறார்கள்.
Can anyone please translate this to english for people who cannot ready tamil please?
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8584
Can anyone please translate this to english for people who cannot ready tamil please?
ReplyDelete