: 18:31 (18/08/2014)Last updated : 18:52 (18/08/2014)
.jpg)
கர்நாடகாவில் ஆன்மீக ஆசிரமத்தை நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா, பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கர்நாடக போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து நித்யானந்தா ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூரு காவல்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து, ஆண்மை பரிசோதனை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை பல வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதி, காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என உத்தரவிட்டது. ஆனால், ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா ஆஜராகாததால், அவரை கைது செய்து ஆஜர்படுத்த கடந்த மாதம் 28ஆம் தேதி ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நித்யானந்தா சார்பில், ஆண்மை பரிசோதனைக்கு தடைவிதிக்கக்கோரி பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நித்யானந்தாவின் மனுவை நிராகரித்ததோடு, அவருக்கு 6ஆம் தேதி ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், 7ஆம் தேதி அவரை ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, நித்யானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை செய்ய இடைக்கால தடை விதித்ததோடு, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், 18ஆம் தேதி ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜராகவும் நித்யானந்தாவுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்று (18ஆம் தேதி) ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா நேரில் ஆஜரானார். அவருடன் சீடர்களும் வந்திருந்தனர். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். நித்யானந்தா ஆஜரானதையொட்டி ராம்நகர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

http://news.vikatan.com/article.php?module=news&aid=31459
http://www.dailythanthi.com/News/India/2014/08/18174952/Supreme-Court-orders-to-appear-in-court-Nithyananda.vpf
http://www.inneram.com/i-news/india/1496-nittiyananta-appeared-in-court.html
No comments:
Post a Comment