[Request Tamil readers to send an English translation, for benefit of non-Tamil readers]
நித்யானந்தா மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பதிவு செய்த நாள் : ஜூலை 05,2012,02:25 IST
சென்னை:நித்யானந்தாவுக்கு எதிராக, அமெரிக்க கோர்ட் அளித்துள்ள, தீர்ப்பை வரவேற்றுள்ள ஆர்த்தி ராவ், "நித்யானந்தா மீது, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, மாவட்ட கோர்ட் ஒன்றில், நித்யானந்தா மீது, அவரது முன்னாள் சீடர் பொபட்லால் சாவ்லா என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
9 கோடி ரூபாய்
கடந்த, 2005 முதல் 2010 வரை, நித்யானந்தாவின் சீடராக இருந்த சாவ்லா, 2007, 2008 ஆண்டுகளில், "நித்யானந்தா பவுண்டேஷன்' என்ற நிறுவனத்திற்கு, அவர் தனது சொந்தப் பணம், 9.35 கோடி ரூபாய் (1.7 மில்லியன் டாலர்) நன்கொடையாக அளித்திருந்தார். ரஞ்சிதா, "சிடி' வெளியான பின், அதிர்ச்சியடைந்து, ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்."சிடி' விவகாரத்திற்குப் பின், அந்தப் பணத்தைத் திருப்பித் தரும்படி, சாவ்லா கேட்டிருந்தார். "சிடி' விவகாரத்தில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்த நித்யானந்தா, அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து சாவ்லா, அமெரிக்க கோர்ட்டில், 2010, ஜூலையில், வழக்கு தொடுத்தார். நித்யானந்தா பவுண்டேஷன், அதன் பொறுப்பாளர்களான, மா நித்ய சதானந்தா, சிவ வல்லபனேனி, பக்தானந்தா ஆகியோர் மீது இவ்வழக்கு தொடுக்கப்பட்டது.இவ்வழக்கை, நித்யானந்தா தரப்பு, பல விதமாக இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், கடந்த ஜூன் மாதம் இறுதியில் துவங்கிய விசாரணை, ஒருவழியாக முடிவடைந்து, ஜூன் 29ம் தேதி, இறுதித் தீர்ப்பு வெளியானது. அதில், "நித்யானந்தா பவுண்டேஷன்' ஒரு மோசடி நிறுவனம் என்றும், நன்கொடையாக வசூலித்த பணத்தில், 8.63 கோடி ரூபாயை, பொபட்லால் சாவ்லாவுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்றும், கோர்ட் உத்தரவிட்டது.

அபராதம் எவ்வளவு?
மேலும், சாவ்லா மற்றும் அரசுத் தரப்புக்கு, "நித்யானந்தா பவுண்டேஷன்' தரப்பில், செலுத்த வேண்டிய அபராதத் தொகை குறித்து, வரும் 19ம் தேதி, கோர்ட் அறிவிக்க உள்ளது. அமெரிக்க சட்டங்களின்படி, மோசடி செய்தல், மிகத் தீவிர குற்றமாகக் கருதப்படும் என்பதால், அபராதத் தொகை, 10 மடங்கு கூட விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

முதல்வருக்கு கோரிக்கை
இந்நிலையில், நித்யானந்தாவால் பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்ட ஆர்த்தி ராவ், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது: நித்யானந்தாவால் பாதிக்கப்பட்டவருக்கு, அமெரிக்க கோர்ட்டில் நீதி கிடைத்துள்ளது. இதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். அதே நேரம், அமெரிக்க கோர்ட்டால், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நித்யானந்தாவால், இனி, எதிர்காலத்தில், யாருக்கும், எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன்.இந்து மதத்தில் உள்ள, குரு தொடர்பான நம்பிக்கையைப் பயன்படுத்தி, உண்மையான குருவைப் போல வேஷமிட்டு அப்பாவிகளை, தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் நித்யானந்தா. அவர்களை பாலியல், பொருளாதாரம், மனம் என அனைத்து வகையிலும் சுரண்டி வருகிறார்.
ஏன் போராட்டம்?
நான் ஒரு சாதாரண பெண். நித்யானந்தாவைப் போல பணபலமோ, செல்வாக்கோ எனக்கு கிடையாது. ஆனாலும், நான் அவரை எதிர்த்துப் போராடி வருகிறேன். நான் பாதிக்கப்பட்டது போல, எதிர்காலத்தில், இனி, யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தான் நான் போராடுகிறேன்.மக்கள் உண்மையான குருவைக் கண்டறிந்து, அவர்களிடம் செல்ல வேண்டும். நித்யானந்தாவின் அநியாயங்களைத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.
தேடப்படவில்லை
நான் தமிழக போலீசாரால் தேடப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் பொய். என் வழக்கறிஞரிடம் இதுவரை, என்னைத் தேடி யாரும், அதிகாரபூர்வமாக வந்ததில்லை. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தான், நான் பாதுகாப்பான இடத்தில் உள்ளேன்.பெங்களூரு கோர்ட்டில் உள்ள, தன் மீதான முக்கிய வழக்கை சந்திக்க பயப்படும் நித்யானந்தா, அதை, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, தாமதப்படுத்தி வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டில், அவருக்கு எட்டு முறை கர்நாடக சி.பி.சி.ஐ.டி., போலீசார், சம்மன் அனுப்பியும், அவர் ஏன் நேரில் ஆஜராகவில்லை? இவர் குழந்தையா, ஆண்மையில்லாதவரா என்பதைக் கண்டறியும் சோதனைக்கு ஏன் நேரில் ஆஜராக மறுக்கிறார்?இவ்வாறு ஆர்த்தி ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்ன குற்றச்சாட்டு?
சீடர்களுடன் நித்யானந்தா செய்து கொண்ட, "செக்ஸ் ஒப்பந்தம்' எனப்படும் வெளிப்படையாக அறிவிக்கக் கூடாத ஒப்பந்தம் குறித்துக் கேள்விப்பட்ட உடன், பொபட்லால் அதிர்ச்சி அடைந்தார். அது உண்மையா என 2010, ஏப்ரலில் அவர் நித்யானந்தாவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் ஒப்புக் கொண்டார்.
அதேபோல், 2010, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், நித்யானந்தாவுடன், பொபட்லால் தொடர்பு கொண்டு பேசிய போது, வேதப் பல்கலைக் கழகம் துவக்குவதாக எண்ணமே தனக்கு இல்லை என்பதையும், நித்யானந்தா ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், 2007ல், அந்தக் காரணத்தைக் கூறித் தான், ஒன்பது கோடி ரூபாய் நன்கொடை வாங்கினார்.
அமெரிக்காவில், "நித்யானந்தா பவுண்டேஷ'னுக்குத் தரப்பட்ட கோடிக்கணக்கான ரூபாயை, நித்யானந்தா, வேறு நிறுவனங்களுக்கு வாரிக் கொடுத்துள்ளார். அவற்றில் கணிசமான தொகை, நித்யானந்தாவின் தம்பி கோபி என்ற நித்ய ஈஸ்வரானந்தா நடத்தி வந்த, "நித்யானந்தா எக்ஸ்போர்ட் அண்டு இம்போர்ட்' நிறுவனத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
மத உபதேசம் செய்வதற்காக வாங்கிய விசாவில், அமெரிக்காவிற்கு வந்த நித்யானந்தா, அமெரிக்க சட்டங்களுக்கு விரோதமாக அங்கு தன் பெயரில், "ஹெட்ஜ் பண்ட்' நிறுவனம் ஒன்றைத் துவக்கியுள்ளார்.
மேலும், அமெரிக்க விசாவில், தன் பிறந்த தேதியை 1978, ஜனவரி 1 என அளித்துள்ள நித்யானந்தா, தனது பாஸ்போர்ட்டில், 1977, மார்ச் 13 என அளித்துள்ளார். இதன் மூலம், இரு நாட்டு அரசுகளுக்கும் தவ
தகவல்களை அளித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தான் பொபட்லால் சாவ்லா, நித்யானந்தா மீது, அமெரிக்க கோர்ட்டில் அளித்துள்ள, "முதல் தகவல் அறிக்கை'யில் தெரிவித்துள்ளார்.யார் இந்த பொபட்லால்?பொபட்லால் சாவ்லா, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார். "ரியல் எஸ்டேட்' தொழில் செய்பவர். அமெரிக்காவில், நித்யானந்தாவுக்கு கிடைத்த, மிகப் பெரிய நன்கொடையாளர் இவர் தான். இவர் மூலம், பல நன்கொடைகளை நித்யானந்தா பெற்றுள்ளார். 2005-2010 காலகட்டத்தில், நித்யானந்தாவின் நெருங்கிய சீடராக இருந்த இவர், அமெரிக்காவுக்கு, நித்யானந்தா வரும்போதெல்லாம், அவரது நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பார். அமெரிக்காவில் வசித்து வரும், இந்திய வம்சாவளி இளைஞர்கள், இந்திய பண்பாட்டில் இருந்து விலகாமல் வாழ வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்.அதே நோக்கத்திற்காக வேதப் பல்கலைக் கழகம் ஒன்றை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், அமைக்க விரும்புவதாக நித்யானந்தா கூறியவுடன், தயங்காமல், 1.7 மில்லியன் டாலரைத் தூக்கிக் கொடுத்தார்.
Source: Dinamalar (http://www.dinamalar.com/News_detail.asp?Id=501074)