[Translation help requested]
நித்தி ஒரு மோசடிப் பேர்வழி என்றும் அவருக்கு எவ்வளவு அபராதம்? என்ன தண்டனை? என்பதையெல்லாம் 19-ந் தேதி அறிவிக்கப்போவதாகவும் அமெரிக்க நீதி மன்றம் அறிவித்து, நித்திக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தியிருக்கிறது
சனிக்கிழமை, 7, ஜூலை 2012 (10:10 IST)
நித்தி ஒரு மோசடிப் பேர்வழி என்றும் அவருக்கு எவ்வளவு அபராதம்? என்ன தண்டனை? என்பதையெல்லாம் 19-ந் தேதி அறிவிக்கப்போவதாகவும் அமெரிக்க நீதி மன்றம் அறிவித்து, நித்திக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தியிருக்கிறது
""நான் தனி ஆள் இல்லை. என்னுடைய தியானபீடம் ஒரு பெரிய ஆலமரம். அதன் கிளைகள் உலகம் முழுதும் 192 நாடுகளில் இருக்கிறது. இங்கே உங்கள் முன் நான் பேசுவதை உலகம் முழுதும் இருக்கும் என் பக்தர்கள், இரவு பகல் பாராமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்'' என ஏராளமான டி.வி.திரைகளை தன் முன் வைத்துக்கொண்டு புளூடூத் கருவியை காதில் செருகியபடி பிரஸ் மீட்டுக்களில் ’உதார்’ விடுவது நித்தியின் ஸ்டைல்.
நித்யானந்த பீடத்தின் ஆணிவேராக நித்தி கருதுவது அமெரிக்காவில் இருக்கும் அவரது 18 அமைப்புகளைத்தான். அவைதான் அவருக்கு டாலர் டாலராய் கரன்ஸிகளை அள்ளிக்கொடுத்த அட்சய பாத்திரங்கள். தனது ஆன்மீக சாம்ராஜ்யத்தின் ஆணிவேர்களாக நித்தி நம்பிக்கொண்டிருந்த அந்த அமெரிக்கக் கிளைகளையே விரைவில் முடக்கக்கூடிய அளவிற்கு ஒரு அதிரடித் தீர்ப்பைதான் தற்போது கலிபோர்னியா மாநில நீதிமன்றம் கொடுத்திருக்கிறது.

நித்தியின் முகத்திரையை ’2010 மார்ச் மாதத்தில், ரஞ்சி- நித்தி’வீடியோ கிளிப்பிங்ஸ் மூலம் முதன்முதலில் கிழித்தது நக்கீரன்தான். அதைத் தொடர்ந்து நித்தி போட்ட செக்ஸ் ஒப்பந்தங்களை அம்பலப்படுத்திய தோடு அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் பேட்டிகள் தொடங்கி, அந்த விவகாரமான வீடியோ காட்சிகள் வெளிவரத் துணை புரிந்த
நித்தியின் மாஜி சீடர் லெனின் தர்மானந்தா பேட்டி, நித்தியால் பாதிப்பிற்கு உள்ளான ஆர்த்திராவ் பேட்டிவரை கொடுத்ததோடு நித்தி மதுரை ஆதீனப் பதவியைக் குறிவைத்தது வரையிலான அத்தனைத் தகவல்களையும் முதன்முதலில் தந்த பெருமையும் நக்கீரனையே சேரும். அதே வேகத்தோடு நித்தியின் அமெரிக்க வழக்குகள் குறித்தும் விசாரணையில் இறங்கினோம்.

இந்த வழக்கு குறித்தும் அதன் பின்னணி குறித்தும் அமெரிக்க வாழ் நித்தியின் முன்னாள் சீடர்களிடம் விசாரித்தபோது அதன் முழுப் பின்னணியையும் விவரித்தனர். பொப்பட்லால் சாவ்லா என்பவர் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ரியல்எஸ்டேட் அதிபர். பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர். அவரது மனைவியோ அங்கு பிரபலமாக விளங்கும் மருத்துவர். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட இந்த தம்பதிகள். 2006-ல் நித்தியின் ஆன்மீக உரையைக் கேட்டு மனதைப் பறிகொடுத்தனர். இருவரும் ஆன்மீக சேவை செய்யும் வேட்கையில் நித்யானந்த பீடத்திலும் இணைந்தனர். இந்திய வேதங்களையும் தத்துவங்களையும் நுணுகி ரசித்த பொப்பட்லால், நித்தியிடம் "ஒரு வேத பாட கல்லூரியை நாம் கலிபோர்னியாவில் ஆரம்பித்தால் என்ன?' என்று பேச்சுவாக்கில்...
Source: Nakkheeran News (http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=78709)
No comments:
Post a Comment