காரைக்கால், ஜன.8-
நித்யானந்தா சாமியார் நேற்று திடீரென்று திருநள்ளாறு கோவிலுக்கு வருகை தந்தார். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருந்து வருவதால், அவரை தேவஸ்தான கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் சிறப்பு வழியாக கோவிலுக்குள் அழைத்து வந்தார்.
அவருடன் அவரது ஆண், பெண் சீடர்கள் பலரும் வந்திருந்தனர். கோவிலில் உள்ள சொர்ணகணபதி, சுப்ரமணியர், தர்பாரண்யேஸ்வரர், தியாகராஜர், அம்பாள் சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார்.
தொடர்ந்து பகவான் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தார். அனைத்து வழிபாடுகளையும் சுமார் 20 நிமிடங்களில் விரைவாக முடித்துக் கொண்ட அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் எந்த வாகனத்தில் வந்தார்? அவருடன் யார்? யாரெல்லாம் வந்தனர்? என்று சரிவர யாருக்கும் தெரியவில்லை.
அவர் வருவதற்கு சற்று முன்னதாக கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகளுடன் நித்யானந்தாவின் சீடர் ஒருவர் கோவிலுக்குள் வந்து சுவாமி எந்தெந்த இடங்களுக்கு சென்று வழிபட வேண்டும்? என்பதை நேரில் பார்த்து விட்டுச் சென்றார். அதன் பின்னரே நித்யானந்தா கோவிலுக்குள் வந்து பகவானை தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிலுக்குள் திடீரென்று நித்யானந்தா சுவாமிகளைக் கண்ட பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர். நித்யானந்தாவின் வருகையை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
http://www.maalaimalar.com/2012/01/08132458/Nithyanandha-worship-in-Thirun.html
COMMENTS
கருத்து
சற்று சரியாக படியுங்கள், இவன் எங்கு சென்றாலும் பெண் பக்தர்கள் இல்லாமல் செல்வதில்லை. இவனை ஏன் தமிழ் நாட்டில் உள்ள புனிய ஸ்தலமான கோயில்களுக்கு அனுமதிக்க படுக்கிறான். இவனால் கோயில்கள் அசுத்தம் ஏற்பட்டுவிடும். கோயில்கள் பக்க்திக்கு, மரியாதைக்கும் உரிய இடம் கோயில், அதை மதிக்க வேண்டுமோ தவிர இவனால் போலி சாமியார்கள் மிதிக்க கூடாது.
-----------------------------------------------------------------------------------------------------------------
இக்காலத்தில் காவி கட்டிய இப்படியான சாமிகளும் அவர்களது சீடர்களும் உலகத்தை அழிக்கவந்த "சாத்தான்கள்"... துர்க்கை, முருகன், ஹனுமான் போன்ற தெய்வங்களின் காயத்திரி மந்திரத்தை தினமும் ஜெபித்து இவர்களிடம் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்... தலைவிதியை மாற்ற யாரால் முடியும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
கலியுகம் சரியாக நடக்கிறபோது இப்படியான சாமிகள் உருவாகுவார்கள் என்று வியாச முனிவர் "வியாஸ்ய பாஷ்யம்" என்கிற நூலில் சொல்லியிருக்கிறார்... காவிகட்டிய சாமிகளை நம்பி மோசம் போகாமல், ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்களை தினமும் தியானம் செய்து துன்பங்களில் இருந்து விடுதலை பெற்றுக்கொள்ளுங்கள் !!..ஆஞ்சநேய காயத்திரியை மனம் அமைதியாக இருக்கிறபோதேல்லாம் ஜெபித்துவர நல்ல பாதுகாப்பும் உங்களது பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வும் நிச்சயமாய் கிடைக்கும்... இது உறுதி !!.. அவர் நல்ல காவல் தெய்வம். இத்தகைய சாமிமார்கள் உங்களுக்கு தவறான பாதைகளை காட்டி தமக்கென ஒரு CULT ஐ உருவாக்கி மீழமுடியாத அழிவுக்குள் தள்ளிவிடுவார்கள். உங்கள் வீட்டு பெண்களிடமும் பணத்திலுமே இவர்களது கண் இருக்கும். "குற்றமற்ற அறிவையே குருவாக அடையவேண்டும்".. இஷ்ட தெய்வங்களை குருவாக ஏற்று தியானம் செய்துவர வாழ்க்கையில் நல்ல திருப்பம் நிச்சயமாய் ஏற்படும்... ரஞ்சிதாவுடன் காமக்கலை பயின்றது அவரது PERSONAL விஷயம்... முதலில் சன்யாசி என்ற பெயரிலோ சுவாமி என்ற பெயரிலோ காவியை கட்டாமல் யாரையாவது திருமணம் செய்துகொள்ளட்டும்... தெய்வங்கள், முனிவர்கள், ரிஷிகள் எல்லோருக்கும் "மனைவிகள்" உண்டு... "காமசூத்திரம்", "கொக்கோகம்" என்ற நூல்கள் கூட ரிஷிகளாலேயே எழுதப்பட்டது... சிற்றின்பம் என்பது பேரின்பத்தின் அஸ்திவாரம். தர்மம் "கிருஹஸ்தம் என்கிற ஒரு நிலையின் பிற்பாடுதான் "வனப்பிரஸ்தத்தை" உபதேசித்தது... பண்டைக்கால ரிஷிகள் "காமத்தை" இறைவனுடன் ஆத்மார்த்தமாக ஒன்று சேர்வதற்கான ஒரு பயிற்சியாகவே (யோகமாக) ஒரு ஒழுக்கத்துடன் கருதினார்கள். எந்தப் பெண்ணிடமும் "CONTRACT" SIGN பண்ணவில்லை !!... பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம் சன்யாசம் என்பதுதான் தர்மம் வகுத்த ஒரு ஒழுக்கமான வழிமுறை !!...
----------------------------------------------------------------------------------------------------------------
காவி கட்டியவன் எல்லாம் உண்மையான துறவி அல்ல . இப்படியான போலி சாமியார்களின் காலில விழுவதை நிறுத்துங்கள் . உங்களை பெற்ற தாய்தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் அவர்களை நல்ல முறையில் பராமரித்து வந்தால் அதுவே சிறந்த தொண்டு ஆகும் .
----------------------------------------------------------------------------------------------------------------
சனியனே சனியனை பார்க்க போனால் அந்த சனியனே இந்த உலகை விட்டு பொய் விடும் .இவனே கடவுள் என்கிறான் அப்புறம் எது கோவில் கொவில போறன் . மக்களே கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள் . இது போல் ஆசாமிகளை நம்பதிர்கள் . கடவுள் ஒருவனே . சனியனும் இல்லை . முனியும் இல்லை . கடவுள் ஒருவன் .
-----------------------------------------------------------------------------------------------------------------
சனியன் சக்கடையக்கு போலீஸ் பாதுகாப்பு வேற அறியாமை உள்ள மக்கள் இர்ருக்கும் வரை உங்களுக்கு கொண்டாட்டம்தான்..
-----------------------------------------------------------------------------------------------------------------
இந்தச் சாமிக்கெல்லாம் ஒரு போலிஸ் பாதுகாப்பு.... நாடு எங்கே போகிறது...??????????
-----------------------------------------------------------------------------------------------------------------
சனிக்கே சனியனா? சபாஷ் சரியான போட்டி
------------------------------------------------------------------------------------------------------------------
நித்தி ரஞ்சிதாவுடன் இணைந்தது அவர்களின் தனிப்பட்ட விஷயம். சன் டிவி செய்தது மிகப்பெரிய தவறு. நித்தி சாமியாரை பிடித்தால் ஆசி பெறு!! இல்லையேல் சும்மா இரு!! அவர் யாரையும் வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிடவில்லை. உலகில் வாழ்ந்த பல சாமியார்கள் மேல் பல்வேறு அழுக்கு உண்டு. ஆனாலும் அவர்கள் சொன்னதை பின்ப்பற்றும் பல கோடி மக்கள் உண்டு. பெண் விஷயத்தில் அதிக சல்லாபம் செய்தவர் சொன்ன மதம் தான் இன்று உலகில் வேகமாக வளரும் மதம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இவர் இறந்த பிறகு இவர் சொல்லும் "கதவை திற" மதமும் பிரபலமாகும்!!!!
---------------------------------------------------------------------------------------------------------------
கடவுள் மனிதனையும், விலங்கையும், தாவரத்தையும் மற்றும் அனைத்தையும் ஆணாகவும், பெண்ணாகவும் தான் படைத்தார். ஆண் பெண் இரண்டும் சேர்வது தான் இயற்கை. அதுதான் வாழ்க்கை. ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் வாழ வேண்டும் அல்லது நான்கு பெண்களுடன் வாழலாம் என்பது மனிதன் போட்ட சட்டங்கள். இவன் இவளோடு, இவள் இவனோடு மட்டுமே வாழ வேண்டும் என்பது மனிதனின் சுயநலத்தால், பிரச்சினை இல்லாமல் இருக்க, ஆறறிவால் மனிதன் தனக்கு தானே ஏற்ப்படுத்தி கொண்ட சட்டங்கள். விலங்குகளுக்கு இந்த சட்டங்கள் இல்லை. அவைகளுக்கு ஆன்மீகமும் கிடையாது. ஆன்மீகத்தில் இருக்கும் ஒருவர் ஒரு பெண்ணோடு உறவு வைத்து கொள்ள கூடாது என்று சட்டங்கள் இல்லை. அப்படி மற்றவர்கள் நினைப்பது முட்டாள்தனமானது. நீங்கள் பார்வையை மாற்றுங்கள். பாதை சரியாக தெரியும். நித்தி மேல் தப்பு இல்லை என்பது புரியும். இதை அறிய ஏழறிவு வேண்டும்!!!!!
----------------------------------------------------------------------------------------------------------------
ஆண் பெண் இரண்டும் சேர்வது தான் இயற்கை. அவன் செய்து இருக்கிறான் ஓகே ஒரு தாலி கட்டி செய்து கொள்ளட்டும் இல்லை என்றால் அது விபச்சாரம் இதை புரிந்துகொண்டு பேசுவது நலள்ளது,அதை விட்டுவிட்டு அவன் கதவை திற சொன்ன நீங்கள் எதை திறகிரிகள் இவனுக்கு மற்றவருக்கு அறிவுரைகூற என்ன தகுதி உள்ளது என்பதை புரிந்து கொண்டு இப்படிப்பட்ட போலி சாமியார்களை நாட்டை விட்டு துரத்துங்கள்,உங்களை போன்ற இருக்கும் வரை நம் நாடு உருபடாது
----------------------------------------------------------------------------------------------------------------
இந்தச் சாமிக்கெல்லாம் ஒரு போலிஸ் பாதுகாப்பு.... நாடு எங்கே போகிறது...??????????
-----------------------------------------------------------------------------------------------------------------
http://www.maalaimalar.com/2012/01/08132458/Nithyanandha-worship-in-Thirun.html
இக்காலத்தில் காவி கட்டிய இப்படியான சாமிகளும் அவர்களது சீடர்களும் உலகத்தை அழிக்கவந்த "சாத்தான்கள்"... துர்க்கை, முருகன், ஹனுமான் போன்ற தெய்வங்களின் காயத்திரி மந்திரத்தை தினமும் ஜெபித்து இவர்களிடம் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்... தலைவிதியை மாற்ற யாரால் முடியும்.
ReplyDeleteஇக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
http://www.dvdbluray.org/video/watch/sun-tv-and-nithyananda-27743.htm
ReplyDeleteசாமியார்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் ஹிந்து மதம் , சாமாநியகளுக்காக அல்ல .....! சாமியார்கள் வாழ்க , சாமியார்கள் வாழ்க ,சாமியார்கள் வாழ்க ,,,,,, ! மக்கள் எல்லாம் இந்த சாமியார்களை வாழ்த்தியே நாசமாக போகட்டும் ...... நல்ல சாமியார் ,நல்ல மக்கள்,,,,,,,,! நம்ம இந்தியா அறிவாளிகள் நிறைந்த நாடு என்பதில் நாமெல்லாம் பெருமைகொள்ளலாம் ,
ReplyDeleteungaloda adutha padam yeppo???? india ungala madhiri poli samiyargalaiyum kollai adikkira arasiyalvaadhi galayum than innum yezhai naadaagave irukkiradhu aanaal neenga mattum sakala vasadhigalodum makkalai yemaatri vaazhndhu kondu irukkireergal
ReplyDeleteHe preaches Brahmacharya (Thats his main preaching) which means abstaining from Woman, why preach and make profit out of it, if you cant practise? I think ppl who r supporting him n blaming media from a particular section of society who r affected by these exposures.
ReplyDelete