We request the Tamil readers to post (as comment) an English translation of this article, for the benefit of the non-Tamil readers.
31-08-2011 ![]() ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழலை விசாரிக்கவும் உடனடியாகத் தண்டனையை நிறைவேற்றவும் வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. அதிகாரத்தி லிருப்பவர்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு அவர்களே அதிர்ந்து போகுமளவுக்கு ஊழல் செய்பவர்களும் தப்ப முடியாதபடி ஊழல் ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதற்கொரு உதாரணம், நித்யானந்தா. தனது பக்தர்கள் வழங்கும் நிதியெல்லாம் தன்னுடைய ஆசிரமத்தின் ஆன்மிகப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், இது லாபநோக்கமில்லாத (non#profitable) நிறுவனம் என் றும் சொல்லி, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தங்களுடைய வருமா னத்திற்கு வரிவிலக்கு பெற்றிருக்கிறது நித்யானந்தா தரப்பு. பக்தர்கள் தரும் நிதியை ஆசிரமக் கணக்கில் மட்டுமே சேர்ப்பதாகவும், தன் பெயரில் வங்கிக் கணக்கு எதுவும் இல்லை என்றும் நித்யானந்தா சொல்லி வருகிறார். அது 100% பொய் என்பது ஆவணங்கள் மூலமாகவே நிரூபணமாகியிருக்கிறது. நித்யானந்தாவின் ஆசிரமம் கர்நாடக மாநிலம் பிடதி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளையில் நித்யானந்தாவுக்கு பர்சனல் அக்கவுண்ட் உண்டு. ஸ்ரீபரமஹம்ச நித்யானந்தா என்ற பெயரில் உள்ள அவருடைய அக்கவுண்ட்டின் நம்பர் 008401004313 என்பதாகும். இந்தக் கணக்குப் பெயரளவுக்குத் தொடங்கப்பட்டதல்ல. பேரளவுக்கு பணப்புழக்கம் நடந்துள்ளது. 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி முதல் 2010 ஏப்ரல் 5-ந் தேதி வரையிலான ஏறத்தாழ 4 ஆண்டு காலத் தில் பிடதி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கிளையில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பணத் தின் மதிப்பு 6 மில்லியன் 370ஆயிரத்து 850 அமெரிக்க டாலர். இதன் இந்திய மதிப்பு 32கோடியே 10 லட்சத்து 92ஆயிரத்து 735 ரூபாய் 67 பைசா. (நித்யானந்தாவின் வங்கிக் கணக்கு பற்றிய நயா பைசா சுத்தமான விவரத்தை ஆதாரத்துடன் காண்க) மலைக்க வைக்கும் இந்த 32 கோடியே சொச்ச ரூபாயை அவர் அமெரிக்காவிலுள்ள ஆசிரமத்தின் கணக்கிலிருந்து பிடதியில் உள்ள தன் பெயரிலான கணக்கிற்குக் கொண்டு வந் துள்ளார். ஆசிரமத்தின் வளர்ச்சிக்காக வும் ஆன்மீக சேவைக்காகவும் நிதி திரட்டுகிறேன் என்று இந்தியாவில் உள்ள நடுத்தரவர்க்கத்தின் உயர் சம் பளக்காரர்கள், பெரிய தொழிலதிபர்கள், திரையுலகைச் சார்ந்தவர்கள் எனப் பலரிடமும் காணிக்கை பெறுவதுடன், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிட மும், மனஅமைதிக்காக ஆன்மீகத்தை நாடும் அமெரிக்கர்களிடமும் மில்லியன் களில் டாலரையும் அவர்களுக்கு சொந்தமான இடங்களையும் ஆசி ரமத்திற்கென்று வாங்கி, அதனைத் தன் பெயரில் மாற்றிக்கொள்வதுதான் நித்யா னந்தாவின் வழக்கம் என்கிறார்கள் அமெரிக்காவில் அவரிடம் ஏமாந்த பக்தர்கள். ![]() ஆன்மிகப் பணிகளுக்கான நிதியை வசூலிக்கும் நித்யானந்தா பவுன்டேஷன் என்ற லாபநோக்கில்லாத நிறுவனத்தி லிருந்து, நித்யானந்தா எக்ஸ்போர்ட் அண்ட் இம்ப்போர்ட் என்ற நிறுவனத் திற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தை உருவாக்கி அதனை நிர்வகித்து வருபவர் நித்யானந்தாவின் சகோதரர் ஆவார். இந்த நிறுவனம் மூலமாக சிலைகளை ஏற்றுமதி செய்வது -விற்பனை செய்வது போன்ற வேலைகள் நடந்துள்ளன. உதாரணத்திற்கு, 2010 ஏப்ரல் 17 அன்று நித்யானந்தா தியானபீடம் ஆலயம் மற்றும் கலாச்சார மையம் என்ற நிறுவனத்திற்கு நித்யானந்தா ஏற்றுமதி-இறக்குமதி என்ற நிறுவனத்தின் சார்பில் 5 லட்சத்து 50ஆயிரத்து 386.82 டாலருக்கு சிலைகள் வழங்கப்பட்டதாக இன்வாய்ஸ் போடப்பட்டுள்ளது. ஆனால், அந்த சிலைகளின் மொத்த மதிப்பு 1 லட்சம் டாலரைக்கூடத் தாண்டாது என்று நித்யானந்தா பவுண்டேஷன் மீதும் மா நித்ய சதானந்தா மற்றும் சிவா வல்லபஹனேனி ஆகியோர் மீதும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில உயர்நீதிமன்றத்தில் (சுப்பீரியர் கோர்ட்) பொபட்லால் கே.சாவ்லா என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் தெரிவித் துள்ளார். (காண்க : பொபட்லால் தாக்கல் செய்துள்ள மனு) தன்னுடைய சொத்துகளை நித்யானந்தா தரப்பிலிருந்து மீட்பதற்காகப் போராடும் இவர், தனது சார் பிலும் தன்னைப்போல பாதிக்கப்பட்டவர்களின் சார்பிலும் 2010 ஜூலை 26-ந் தேதியன்று இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அமெரிக் காவில் மட்டும் பிளிஸ் இன் வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், லைஃப் ப்ளிஸ் பவுண்டேஷன், நித்யானந்தா அன்னா மந்திர், நித்யானந்தா ஸ்ப்ரிட்ச்சுவல் ஹீலிங் ரிசர்ச் பவுண்டேஷன், நித்யானந்தா யோகா அண்ட் மெடிட்டேஷன் யுனிவர்சிட்டி, நித்யானந்தா யோகா பவுண்டேஷன், ஆனந்தா பிசி னஸ் சொல் யூஷன்ஸ், ஆனந்தா கன்சல்ட் டிங், நித்யானந்தா இன்வெஸ்ட்மெண்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை நித்யானாந்தா பவுன்டேஷன் வெவ்வேறு பெயர்களில் நடத்தி வருகிறது. இவற்றில் பலவற்றுக்கு கலி ஃபோர்னியா கார்ப்பரேஷன் பதிவு எண் உண்டு. சிலவற்றுக்கு பதிவு எண் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்களையும் கலிபோர்னியா சுப்பீரியர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருக்கும் பொபட்லால் கே. சாவ்லா, அமெரிக்காவிலேயே உள்ள நித்யானந்தா சம்பந்தப்பட்ட மற்ற நிறுவனங்களும் கனடா நாட்டில் உள்ள நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இல்லை எனத் தெரிவித்துள்ளார். ![]() பவுண்டேஷனுக்கு பல்வேறு வழிகளில் நிதியைத் திரட்டி அவற்றை ஆசிரமத்தின் சார்பிலான லாப நோக்கமில்லாத நிறுவனங்களின் கணக்கில் போட்டு, பிறகு கடவுள் சிலைகள் வாங்கி யது உள்ளிட்ட பலவித கணக்குகளைக் காட்டி, அதற்காகக் கொடுத்ததாக ஆவணங்களை தயார் செய்து, அந்தப் பணத்தை நித்யானந்தாவின் சகோதரர் நடத்தும் எக்ஸ்போர்ட்-இம்ப்போர்ட் கம்பெனிக்கு மாற்றி, சொந்த லாபம் அடைந்துள்ளார் நித்யானந்தா என்றும் பொபட்லால் குற்றம்சாட்டியுள்ளார். பிடதியில் உள்ள நித்யா னந்தா பவுன்டே ஷனுக் கான கட்டிடத்தை சிறப்பாகக் கட்டுவதற்காக அமெரிக்கா வில் உள்ள பக்தர்களிடம் பல வழிகளிலும் நிதி திரட்டப் பட்டது. (பொபட்லால் உள் ளிட்டவர்களும் நிதியளித்துள்ளனர்) பவுண் டேஷன் பெயரில் நிதியைத் திரட்டினாலும், பிடதியில் கட்டப்பட்ட கட்டடம் நித்யா னந்தாவின் சொந்தப் பெயரில் கட்டப் பட்டுள்ளது என்பதும் பொபட்லாலின் குற்றச்சாட்டுகளின் முக்கியமானதாகும். ஆன்மீக விழாக்களில் மட்டுமே பங்குபெறு வதாக அனுமதி பெற்று அமெரிக்காவுக்கு வந்த நித்யானந்தா அங்கு மிகப்பெரிய அளவில் நிதி திரட்டியது பற்றியும் பொபட்லால் வெளிப்படுத்தியுள்ளார். பொய்யானத் தகவலைக்கூறி அனுமதி பெற்ற நித்யானந்தா, அமெரிக்காவில் கொடுத்த சில டாக்குமெண்ட்டுகளில் தன்னுடைய பிறந்த தேதி 1.1.1978 என்று கொடுத்துள்ளார். அவருடைய பாஸ் போர்ட்டிலோ நித்யானந்தாவின் பிறந்ததேதி 13.3.1977 என்று பதிவாகியுள்ளது. தவறான ஆவணங்கள், பொய்யான தகவல்கள் ஆகியவற்றைக் கூறி அமெரிக்காவில் ஆன்மீக நிகழ்ச்சிகள் என்ற பெயரில் பெருமளவில் நிதி திரட்டிய நித்யா னந்தா அவற்றை அங்கேயே முதலீடு செய்வதற்காக 2007 நவம்பர் 26-ல் நித்யானந்தா கேபிட்டல் மேனேஜ்மெண்ட் இன்க் என்ற நிறுவனத்தையும், அதுபோல நித்யானந்தா இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் என்ற நிறுவனத்தையும் 2008 ஏப்ரல் 8-ல் நித்யா அட்வைசர்ஸ் என்ற நிறுவனத்தையும் ஆரம்பித்திருக்கிறார். ஆசிரமத்தில் உறுப்பினராகிறவர்களுக்கு கொடுக்கப்படும் ஒப்பந்தப் பத்திரத்தில், செக்ஸ் மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட பொருட்கள் வழங்குவதும் ஆன்மீகச் செயல்பாட்டில் அடக்கம் என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் பொபட்லால் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆன்மிகத்தின் பெயரால் நிறுவனம் நடத்துவதாகக் காட்டிக்கொண்டு, அதற்கு வரும் அபரிமிதமான நிதிக்கு வரிவிலக்கும் பெற்று, அந்த நிதியை இன்வெஸ்ட்மெண்ட்ஸ், எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட், அட்வைசர்ஸ், கன்சல்டண்ட் என்று லாபம் தரும் நிறுவனங்களுக்கும் தனது சொந்த பெயரிலான அக்கவுண்ட்டுக்கும் மாற்றி, இந்திய-அமெரிக்க அரசாங்கத்தை ஏமாற்றி பல கோடிகளைக் குவித்துள்ளார் நித்யானந்தா. இவை போக ஷேர் மார்க்கெட்டிலும் முதலீடு செய்யப் பட்டுள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலும் வியாபாரத் தொடர்பு உள்ளது. அன்னா ஹசாரே போன்றவர்கள் வலியுறுத்தும் ஜன்லோக்பால் சட்டத்தில்கூட கண்டறிய முடியாத ஊழல் களை செய்து, அதன் மூலம் கிடைத்துள்ள பல கோடிகளை கையில் வைத்துக்கொண்டு சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து மிரட்டிக்கொண்டிருக்கிறார் நித்யானந்தா. பணம் பாதாளம் மட்டும் பாயும் என்று அவரது தரப்பு ஆட்டம் போட்டு வருகிறது. நீதி நிதானமாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. பாதாளத்தில் நுழைந்தாலும் ஆகாயத்தில் புகுந்தாலும் அக்கிரமக்காரர்களை நிச்சயம் தண்டித்தே தீருவான் நீதிதேவன். |