பெங்களூரு, நித்தியானந்தா ஆசிரமத்தில் மர்மமான முறையில் இறந்த, திருச்சியை சேர்ந்த சங்கீதாவின் உடலை, மறு பிரேத பரிசோதனை செய்த போது, எதனால் மரணம் ஏற்பட்டது என்பதை கண்டறிவதற்கான உடல் உறுப்புகள் இல்லை என்ற, பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
மர்ம மரணம்:
திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு பகுதியை சேர்ந்த அர்ஜுனன் - ஜான்சிராணி தம்பதியின் மகள் சங்கீதா, 24. இவர், திருச்சியில், பி.சி.ஏ., படித்து முடித்ததும், பெங்களூரில் உள்ள, நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்ந்து, துறவியானார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர், 28ம் தேதி சங்கீதா, பெங்களூரு ஆசிரமத்தில் மர்மமான முறையில் இறந்தார். பெங்களூரு மருத்துவமனை யில் வைக்கப்பட்டிருந்த, சங்கீதாவின் உடல், திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. கடந்த ஜனவரி, 3ம் தேதி, சங்கீதா சாவில் மர்மம் இருப்பதாகவும், போலீசார் விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், அவரது தாய் ஜான்சிராணி, பெங்களூரு ராமன்ன ஹாரா சப்-டிவிஷன் டி.எஸ்.பி., லட்சுமியிடம் புகார் கொடுத்தார்.
பிரேத பரிசோதனை:
கடந்த ஜனவரி, 6ம் தேதி காலை, ஸ்ரீரங்கம் தாசில்தார் காதர் மொய்தீன், பெங்களூரு பிடதி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., லோகித் ஆகியோரின் முன்னிலையில், நவலூர் குட்டப்பட்டு மயானத்தில் புதைக்கப்பட்ட, சங்கீதாவின் உடலை, தோண்டி எடுத்து, திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் மறு பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனையின் போது, சங்கீதாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்காக, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், 25ம் தேதி, பெங்களூரு பிடதி போலீஸ் எஸ்.ஐ., லோகித், திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து, சங்கீதாவின் மறு பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றுச் சென்றார். இந்நிலையில், எதனால் மரணம் ஏற்பட்டது என்பதை கண்டறிவதற்கான உடல் உறுப்புகள் இல்லை என்ற, பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
அறிக்கை தாக்கல்:
இதுகுறித்து சங்கீதாவின் உறவினர்கள் கூறியதாவது: இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது, மூளையில் ஒரு பகுதி, ஒரு கிட்னி உள்ளிட்ட ஆறு உறுப்புகளை எடுத்து, ஆய்வுக்கூடத்திற்கு அனுப்புவர். சங்கீதா உடலை, இரண்டாவது முறை பிரேத பரிசோதனை செய்தபோது, மூளையும், இரண்டு கிட்னியும் இல்லை. இருப்பினும், அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள், பெங்களூரு ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி, அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. திருச்சியில் நடந்த மறு பிரேத பரிசோதனை, வீடியோவில் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எதனால் மரணம் ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி, உடல் உறுப்புகளை எடுத்த, பெங்களூரு மருத்துவமனை டாக்டர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசில் புகார் கொடுப்போம். இவ்வாறு, அவர்கள் கூறினர். சங்கீதா மர்ம மரணம் விவகாரம், மீண்டும் சூடு பிடித்துள்ளது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1217377&Print=1
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
The News Minute | January 4, 2014 | 11.27 am IST
The parents of a girl who died in Nithyananda Dhyanapeetam ashram in Bidadi on the outskirts of Bengaluru, have said they suspected foul play in death of their daughter.
Sangeetha Arjunan (24) died on the ashram premises on December 28 and the ashram officials claimed she died of a heart attack. Her parents however, have said that Sangeetha did not have any heart condition and that they suspected foul play.
The girl hails from Tiruchi in Tamil Nadu and her parents had initially approached the police there. They have since met with the Ramnagara district Superintendent, under whose jurisdiction Bidadai falls.
In her complaint to the Ramnagara police, the girl’s mother Jansi Rani has said that they suspected that Sangeetha’s death was unnatural as she did not suffer from any heart ailment, and also said that Sangeetha’s and her own signatures had been taken on blank papers.
In her complaint Jansi Rani also spoke about alleged assaults and beatings her daughter suffered at the ashram at the hands of some of the people there. She said that in mid 2013, her daughter called her up from the ashram: “After reaching home, she showed me her legs, she had been beaten very badly below her waist & on her legs. I was shocked to see several bruises and injury marks.”
She also said that the ashram officials had tried to restrict her movement on several occasion and that one person “locked up all of Sangeetha’s certificates in a cupboard and when she wanted to leave, he refused to return them to her. Another boy called Saravanan from Thanjavur tried to help sangeetha by breaking open the cupboard and getting the certificates for her. But just because he helped her, Hamsanada and other ashramites punished him also. They beat him up badly and locked him up in a room for a few days. Finally his family and relatives went to Bidadi, got him released & took him away from ashram.”
She further said: “After I left Sangeetha in the ashram, I went 3 times within 2 month to see her and to tell her to come home, but they didn’t let me meet her alone. I was only allowed to meet her along with other sanyasis in the ashram, and they kept telling me she has not finished her work, she can leave after finishing all the work assigned to her. The 3rd time when I went, they brought her to meet me, but she was in a terrible condition, she could not even walk a single step. I could not bear to watch the sight. Some 30 ashram people came with her, maybe they wanted to make sure she will not tell me anything.”
“They told me promise on Kalabairava that I or any of my relatives will not give any report against Swami Nithyananda to anyone. I promised."
“(sangeetha called from ashram) She said, if I continue to say wrong things about swami - they were telling her to say this – then she will file case against me! I said okay, go ahead file a case against me. Immediately after I said that, they cut the phone line. That was the last time I talked to Sangeetha. After that they did not even let me talk one word to her.”
Jansi also alleged that certain people had asked her to sign blank papers if she wanted her daughter’s body back, and that she could not read either Kannada or English.
http://www.thenewsminute.com/karnatakas/508