Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Sunday, May 6, 2012

Income Tax Raid on Madhurai Adheenam Mutt

நித்யானந்தா பொறுப்பு ஏற்ற மதுரை ஆதீன மடத்தில் சோதனை: வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை



மதுரை, மே. 5-
திருஞான சம்பந்தரால் 1,400 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஆதீனம் மடம் தோற்றுவிக்கப்பட்டது. சைவ சித்தாந்த கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த ஆதீனம் பாரம்பரிய சிறப்புக் கொண்டது.
மதுரை, விருதுநகர், திருச்சி, திருவாரூர், சிவகங்கை உள்பட பல ஊர்களில் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ள மதுரை ஆதீனத்தின் தற்போதைய 292-வது ஆதீனமாக ஸ்ரீஅருணகிரிநாத ஞானசம் பந்த தேசிக பரம்மாச்சார்யா உள்ளார். இவர் கடந்த வாரம் மதுரை ஆதீனத்தின் 293-வது இளைய ஆதீனமாக நித்யானந்தாவுக்கு முடி சூட்டினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நித்யானந்தா நியமனத்துக்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. நித்யானந்தாவுக்கு எதிராக சென்னை, மதுரை கோர்ட்டுக்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. நித்யானந்தா ஆபாச சி.டி. புகாரில் சிக்கியவர் என்பதால், அவரை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக தொடர விடக்கூடாது என்பதில் மற்ற ஆதீன தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.
மதுரை ஆதீனத்தின் பாரம்பரிய பெருமையை காக்க வேண்டுமானால், அந்த ஆதீனத்தை அரசே ஏற்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். மதுரை ஆதீனத்தின் கோடிக்கணக்கான சொத்துக்களை நித்யானந்தா நிர்வகிக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் தொடர்பாக அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
குறிப்பாக மதுரை ஆதீன சொத்துக்கள் மற்றும் வரவு- செலவுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. இந்த நிலையில் மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீனத்தில் மதுரை மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீரென வருமான வரி சோதனை நடத்தினார்கள். மண்டல இணைக்கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தியது.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட சென்றபோது மதுரை ஆதீனம் ஸ்ரீஅருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரம்மாச்சார்யா மட்டுமே இருந்தார். இளைய ஆதீனம் நித்யானந்தா இல்லை. நித்யானந்தா பெங்களூர் சென்றுவிட்டதால், அவரது சீடர்கள் சிலர் மட்டுமே ஆதீன வளாகத்தில் இருந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள், ஆதீனத்தில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.
அதுபோல வெளியில் இருந்து யாரும் உள்ளே வர அனுமதிக்கவில்லை. எல்லா கதவுகளையும் மூடிக்கொண்டு சோதனை நடத்தினார்கள். மதுரை ஆதீனம் 2 மாடி கட்டிடம் மற்றும் வளாகத்தை கொண்டது. அந்த வளாகம் முழுவதும் எங்கு வேண்டுமா னாலும் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று பெரிய ஆதீனம் அனுமதி கொடுத்தார். இதையடுத்து ஆதீனம் முழுக்க ஒவ்வொரு அறையாக சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அதிகாரிகள் 2 குழுவாகப் பிரிந்து இந்த சோதனையை மேற்கொண்டனர். நித்யானந்தா இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றபோது அவருக்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டது. கையில் தங்க செங்கோல் கொடுக்கப்பட்டது. அதுபோல பெரிய ஆதீனமும் தங்க கிரீடம் மற்றும் கையில் தங்க செங்கோலுடன் காணப்பட்டார். ஸ்ரீஅருணகிரி ஞானசம்பந்தரும், நித்யானந்தாவும் ஏராளமான தங்க ஆபரணங்களும் அணிந்திருந்தனர். அந்த நகைகள் குறித்து வருமான வரித்துறையினர் ஆய்வு செய்ததாக தெரிய வந்துள்ளது.
நகைகள் தவிர ஆதீனத்தில் பல கோடி பணம் கையிருப்பு உள்ளது. அந்த பணத்துக்கு முறையாக கணக்கு உள்ளதா? என்றும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். இது தவிர ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றுக்கு மதுரை ஆதீனம் சார்பில் முறைப்படி வருமான வரி கட்டப்பட்டுள்ளதா? எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளது? என்று கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. 

Source: Maalai Malar


COMMENTS

Saturday, May 05,2012 05:09 PM, guru said:15
கோடி கோடின்றாங்கே இத பாத்த குடுசை மாதரி தெரியுது ? எல்லாத்தையும் பெண்களிடம் குடுத்து வச்சுருப்பாணுக நமக்கு எதுக்கு இந்த வம்பு , சாப்பிடுறது பதாம் பிஸ்தா முந்திரி நெய்யி இதெல்லாம் எங்க போயி கொட்டிக்கிறது ? மடத்துல நாலு சன்னியாசிகள் இருந்தா தானே அவசரத்துக்கு உதவும் ? இன்னும் நாலு ரஞ்சிதா சாமிகளே சேருங்க உங்க புகழ் ஓகோன்னு உலகம்பூரா சீக்கிரம் பரவும்
Saturday, May 05,2012 02:53 PM, மணி said:16
இந்துமத நம்பிக்கைப்படி சந்நியாசிகள் மண், பொன், பெண் ஆகிய மூன்றையும் துறந்தவர்கள். நித்தியோ பொன்னாலான கிரீடம், பெண்ணாலான சிடி என அலைபவன். உண்மையான அத்வைத துறவி இறைவனில் எல்லாம் அடக்கம், மனிதனில் அந்த இறைவன் அடக்கம் எனும் அத்வைத தத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை! அல்லது நடிக்கிறார். இறைவன் கொடுப்பவனும் அல்ல. கெடுப்பவனும் அல்ல. அவனிடம் நாம் கொள்ளவேண்டியது பக்தி ஒன்றே. பய பக்தியோ அல்லது பிச்சை கேட்கும் பக்தியோ அல்ல!(அப்படி நினைத்தால் இருவரும் வேறு என்றாகிவிடும்) தத்வமஸி. (உன்னை அறி). நம்மில் நாமாக இருக்குமிறைவனை எங்கோ வானத்தில் அல்லது மேலுலகத்தில் இருப்பவனாக நினைப்பவன் கருத்துக் குருடன்,இறைவன் வேறு, நல்ல மனிதம் மிருகமெல்லாம் வேறு என நினைப்பவன் ஆத்ம குருடன்! நித்தியை நம்புபவனும் அதுவே!
On Saturday, May 05,2012 03:32 PM, பக்கிரி said :17
எல்லாவற்றையும் ஜோடியாக படைத்த இறைவன் சந்நியாசத்தை விரும்பவில்லை என்றுதான் அர்த்தம். மனைவி துறந்து இறைவனை நினைப்பதை விட மனைவி குழந்தைகளோடு குடும்பம் நடத்தி இந்த பாக்கியத்தை கொடுத்த இறைவனை நினைப்பவன் மேல்.
On Saturday, May 05,2012 04:12 PM, அழகுதுரை said :22
போகும்போது பெண்டாட்டி பிள்ளைகளுடனா போகப் போகிராராய்? அப்டோதைக்கிப்போதே சந்நியாசியாகிவிடு! எவ்வளவோ உயிரினங்களில் ஆண் பெண் வித்தியாசம் கிடையாது! சந்நியாசம் ஆத்மவிடுதலையின் துவக்கம். அதனை நிறைவாக கடைபிடித்து வென்றவர் மகான்கள் பலருண்டு!
On Saturday, May 05,2012 04:23 PM, உண்மையுடன் said :13
தனியாகத்தான் வந்தோம் தனியாகத்தான் போவோம் ஆனால் வாழும்போது தனியாக வாழுக்கூடாது. தான் மகான் ஆகாமல் உங்களை ஈன்று மகானாக்கிய பெற்றோருக்கு நன்றியை கூறுங்கள் நண்பரே.
Saturday, May 05,2012 01:29 PM, உண்மையுடன் said:211
இறைவன் எந்த ஒரு தேவையும் அற்றவன். மனிதனுக்கு வேண்டிய செல்வத்தை இறைவனுக்கு கொடுப்பதால் என்ன பயன். நாம் கேட்பதை கொடுப்பவன் இறைவன், இறைவனுக்கு கொடுக்க நாம் யார். அப்படி இறைவனுக்கு கொடுக்கிறேன் என்று பாதாளத்தில் பதுக்கி வைத்தாலும் இறைப்பனிகாக அள்ளி அள்ளி கொடுத்து மக்களளுக்கு பயனில்லாமல் இருந்தால் அதை கொள்ளை அடிக்க வரத்தான் செய்வார்கள், அந்த காலத்தில் மன்னர்கள் இந்த காலத்தில் மடாதிபதிகள் இதுதான் வித்தியாசம். ஆனால் பதுக்கப்பட்டது கொள்ளை அடிக்கத்தான் படும்.
On Saturday, May 05,2012 03:01 PM, அமர் அக்பர் ஆண்டனி said :52
மனிதன் இறைவனிடம் கையேந்தும் பிச்சைகாரனா? ? உங்களையே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். நம்மைப் படைத்த தாய் நாம் பசி எனும் முன்பே உணவூட்டுபவள்.கேட்டு வாங்கினால் அது அன்பு அல்ல! கேட்டால் மட்டுமே கொடுப்பவன் நம்மைப் படைத்தவனாக இருக்கமுடியாது! அது வெறும் பிச்சை !ச்சே ..கேவலம், அரிது அரிது மானிடராய்ப் பிறப்பதரிது .நல்ல மானுடனாக பகுத்தறிவுடன் வாழுங்கள்/
On Saturday, May 05,2012 03:39 PM, சாமி said :04
மதுரை இல்ல யார் மட்ட போராங்களோ விரைவில்
On Saturday, May 05,2012 04:19 PM, உண்மையுடன் said :13
பகுத்தறிவு என்பது உண்மையை அறிவது, நம் கண்முன்னே இருக்கும் இறைவனின் அத்தாட்சிகளை நாம் இயற்கை என்று ஒதுக்கலாமா! நமக்கு உணவளிப்பவள் தாய், ஆனால் கருவறையில் தாயின் தொப்புளோடு நம்மை இணைத்து உணவளித்தவன் யார். இந்த பூமியில் பிறந்த பிறகும் அமுதமாக தாயின் மார்பில் நமக்கு உணவளித்தவன் யார்!
Saturday, May 05,2012 12:03 PM, P.Chandrasekaran said:220
இதேபோல் எல்லா மடத்திலும் நடத்துக...மக்களுக்கு இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் தெரிய வரும்.
On Saturday, May 05,2012 01:30 PM, மூன்றாவது கண் said :16
கொடுமை கொடுமை ன்னு கோயிலுக்கு போனா ன்னு ஒரு பழமொழி இருக்கு.. இப்ப அதே மனசு நொந்து மடத்துக்கு போனா அங்கொரு மடாதிபதி........எல்லாம் காலக் கொடுமை......நடப்பது தமிழ் சங்கம் இருந்த மதுரை என்று என்னும்போது அதிக வேதனை வருத்தம்..... தாங்கள் குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் தப்பானவர்கள் என்று உறுதியாக தெரிந்த பிறகும் அவருக்கு பணிவிடை செய்யும் ப(க்)தர்களுக்கும், தாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் எவ்வளவுதான் தவறுகள் செய்தாலும், சொல்வது பொய்தான் என தெரிந்தாலும் அவர்களுக்கு கொடி பிடிக்கும் தொண்டர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை..இறைவனை அடைய இடை தரகர் யாரும் தேவையில்லை என்பதை மக்கள் உணராதவரை போலி சாமியார்களும், கள்ள பாதிரிகளும், முல்லாக்களும் முளைத்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்பதே கசப்பான உண்மை. நம் தமிழர்கள் முட்டாள் என்று மதுரை ஆதினமும் ,நித்தியும் முடிவு கட்டிவிட்டார்கள்!!!!!
On Saturday, May 05,2012 01:44 PM, உண்மையுடன் said :05
மூன்றாவது கண்ணே, நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரனை நினைவுபடுத்திவிடீர்கள்.
Saturday, May 05,2012 11:41 AM, ஆண்டியப்பன் said:1813
ஐயா அதிகாரி! சர்ச் மற்றும் மசூதிகளில் உங்கள் சோதனைகள் இருக்காதா? அவைகளும் இந்தியாவில்தானே உள்ளது. அங்கு சோதனை செய்தால் அந்த இனங்கள் ஒன்று கூடி ஒற்றுமை காப்பார்கள் என்றுதானே! இந்து ஆன்மிகவாதிகளை இழிவுபடுத்த பிளவு படுத்த எங்கள் விரல்களே போதும்! நாங்களே எங்கள் கண்களை குத்திக்கொள்வோம். மற்ற ஆன்மீக தலங்களை அரசு ஏற்காதா? இதைமட்டும் அரசு ஏற்கவேண்டுமா?
On Saturday, May 05,2012 11:53 AM, ரம்யா said :612
கோயில்,மசூதி,சர்ஜ் என அனைத்தையும் அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும். எங்க போனாலும் சாமி கும்பிடத்தான போறம் அதை அரசாங்கம் ஏற்று நடத்தினால் என்ன குற்றம்?
On Saturday, May 05,2012 11:55 AM, மூன்றாவது பார்வை said :316
மதவாதிகள் மாசுபடலாம்... ஆனால் ஒருபோதும் மதங்கள் மாசுபடுவதில்லை... இது இம்மதத்திற்கு மட்டுமல்ல எம்மதத்திற்கும்.....பொருந்தும்!
On Saturday, May 05,2012 12:08 PM, ஆரிப் said :412
எப்ப ஆண்டி... மசூதி-ல சோதனை செய்த உண்டியல் தான் இருக்கும்..சில்லறை காசு வேணுன்ன போய் பார்க்க சொல்லு...
On Saturday, May 05,2012 01:38 PM, விடிவெள்ளி said :03
மதங்கள் நல்லதைத்தான் போதிக்கிறது, ஆனால் அவை உண்மையாக இறைவனால் போதிக்கப்பட்டிருந்தால் அதில் மனிதன் தலையிட முடியாது. மனிதன் உலக வாழ்க்கைக்கு ஏற்ப மதத்தின் கொள்கைகளை மாற்றி மனிதன் திருத்துவதாக இருந்தால் அந்த கடவுளின் கொள்கைக்கு என்ன மரியாதை. கல்வி அறிவும் உலக அறிவும் மனிதனை பக்குவப்படுத்துகிறது உண்மை எது என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் தன்மையை கொடுக்கிறது. உலகம் தட்டை என்றான், இல்லை அது உருண்டை என்று நிருபித்து காட்டினான் மனிதன். நல்லது சொல்வதுக்கு மனிதன் போதும், உண்மை சொல்வதுக்கு இறைவன் ஒருவனே வேண்டும்.
On Saturday, May 05,2012 05:43 PM, ரெக்ஸ் said :02
மசூதிகளும் கிறிஸ்துவ தேவாலயங்களும் எப்போதும் திறந்து தான் இருக்கின்றன. யார்வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம், பிரார்த்தனை செய்யலாம்.
On Saturday, May 05,2012 06:06 PM, குரு said :02
உண்மைகள் மசூதிகள் என்றும் எப்போதும் திறந்து தான் இருக்கும் காரணம் அங்கு கள்ளத்தனம் திருட்டு இல்லை பொதுவான இடம் யாரும் எப்போதும் வரலாம் பிரார்த்திக்கலாம்

பக்கங்கள்:
1
2


No comments:

Post a Comment