English summary
Hindu Makkal Katchi leader Arjun Sampath has sued Nithyanantha and Actress Ranjitha for defaming his and his wife's name. He has filed a petition with Coimbatore First Judicial Magistrate court, claiming 50 lakhs in damages. The case will come for hearing on 23rd Nov.
மனைவி குறித்து அவதூறுப் பேச்சு- நித்தியானந்தா, ரஞ்சிதா மீது இந்து மக்கள் கட்சி தலைவர் வழக்கு
கோவை: தனது மனைவி மதம் மாறி விட்டதாகவும, மனைவியைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியாதவர் என்றும் கூறி தன்னையும், தனது மனைவியையும் குறித்து அவதூறாகப் பேசிய சாமியார் நித்தியானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா ஆகியோர் மீது இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளார்.
கோவை கோர்ட்டில் இந்த வழக்கை அர்ஜூன் சம்பத் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அர்ஜூன் சம்பத்தின் வழக்கறிஞர் கூறுகையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மனைவி கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாகவும், தனது மனைவியையே கட்டுப்படுத்த முடியாத அர்ஜூன் சம்பத் மற்றவர்களைக் குறை கூறிப் பேசலாமா என்று பேசியுள்ளார் நித்தியானந்தா. அந்தப் பேச்சை ஆமோதிக்கும் வகையில் நடிகை ரஞ்சிதாவும் அப்போது உடன் இருந்துள்ளார்.
இதையடுத்து நித்தியானந்தாவின் பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்தும், மன்னிப்பு கேட்கக் கோரியும் கடந்த 8.8.11 அன்று நித்தியானந்தாவுக்கும், நடிகை ரஞ்சிதாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. இதையடுத்து தற்போது கோவை கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முதலாவது நீதித்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் தன்னைப் பற்றியும், தனது மனைவி குறித்தும் அவதூறாகப் பேசிய நித்தியான்தா, ரஞ்சிதா ஆகியோர் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது என்றார். இந்த வழக்கு வருகிற 23ம் தேதி விசாரணைக்கு வரும் என மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா மீது 50 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு
நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா மீது ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கோவை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெங்களூரில் பிரபலமான ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இவர் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியிடப்பட்டதால் அவர் தலைமறைவானார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அவருடைய மனைவி ஆகியோரை நித்யானந்தா அவதூறாக பேசியதாக புகார் கூறப்பட்டது. அப்போது நடிகை ரஞ்சிதாவும் உடன் இருந்ததாக கூறப்பட்டது. இதற்கு அர்ஜூன் சம்பத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நித்யானந்தாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
இதைதொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அர்ஜூன் சம்பத் கடந்த 8.8.2011 அன்று நித்யானந்தாவுக்கும், நடிகை ரஞ்சிதாவுக்கும் வக்கீல் நோட்டீசு அனுப்பினார். ஆனால் அந்த நோட்டீசுக்கு அவர்கள் 2 பேரும் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதனால் நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா மீது அர்ஜூன் சம்பத் கோவை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா ஆகியோர் தனக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு சத்தியமூர்த்தி 23-ந் தேதி மனு மீதான விசாரணை நடைபெறும் என்று கூறி தள்ளிவைத்தார்.
WATCH NITHY'S DANCE WITH HIS FATHER'S DEAD BODY
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=RVX2Pngy61c