பெங்களூர்: ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற போலீசாரின் கோரிக்கை யை ஏற்கக் கூடாது என்று நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. கர்நாடக மாநிலம், ராம்நகரம் மாவட்டம், பிடதியில் உள்ள தியான பீடத்தின் மடாதிபதி நித்யானந்தா மீது கர்நாடகாவில் பல வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஆண்மை சக்தி இல்லை என்று கூறியிருந்தார். அதை மறுத்த பிடதி போலீசார், நித்யானந்தாவு க்கு ஆண்மை பரிசோதனையும், ரத்த பரிசோதனை நடத்த அனுமதி கோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதையேற்று பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படி நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா மேல்முறையீடு செய்தார். அதில் ராம்நகரம் மாவட்டம், பிடதி போலீ சார் தன் மீது தொடர்ந்துள்ள ஆண்மை பரிசோதனை, ரத்த பரிசோதனை உள்பட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அம்மனு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா சார்பில் ஆஜரான வக்கீல் தனது கட்சிக்காரர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்றார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், நித்யானந்தா மீது பலர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டியது அரசின் கடமை என்பதால் நித்யானந்தா தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்கக் கூடாது என்றார்.இருதரப்பு வாதங்களை யும் கேட்டபின் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நித்யானந்தா மீது பலர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை மனுதாரர் கண்டிப்பாக சந்திக்க வேண்டும். ஆகவே வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. ஆகவே நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். மேலும் நித்யானந்தா மீதான வழக்கு விசாரணையை ராம்நகரம் மாவ ட்ட அமர்வு நீதிமன்றம் ஜூலை 28ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணையுடன் தொடங்க வேண்டும். மேலும் நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீசார் விரும்பினால், அதை செய்யலாம். அதற்கு நித்யானந்தா ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர் ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தால் கைது செய்து பரிசோதனை செய்ய போலீசாருக்கு அனுமதி வழங்குவதாக தீர்ப்பில் கூறியது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=101054

No comments:
Post a Comment