Nithyananda has been ordered by Ramanagar District Collector to give up the agricultural land, which he had illegally used for commercial purpose at his Bidadi ashram. As per law, agricultural land must be used only for agricultural purposes. Nithyananda however obtained the land by claiming himself to be an agriculturist!!! Later he applied to convert the 23 acres of land into commercial land. Ramnagar DC yesterday rejected Nithyananda's conversion application, and confirmed that the 23 acres land at his Bidadi ashram have been illegally used by Nithyananda for purposes other than agriculture. The DC has ordered Nithyananda to surrender all such ashram land immediately and that legal action will be taken against him.
பெங்களூரு: பிடதி ஆசிரம நிலம் தொடர்பாக, மாவட்ட கலெக்டரிடம், சாமியார் நித்யானந்தா தாக்கல் செய்த மனு, நிராகரிக்கப்பட்டது.
'பிடதி ஆசிரமம், இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே வாங்கி, நித்யானந்தாவால் கட்டப்பட்டது. பிடதி ஆசிரமத்துக்கு அருகிலிருந்த, 21 ஏக்கர் நிலத்தை, தன் நிலம் எனக்கூறி, நித்தியானந்தா ஆக்கிரமித்து உள்ளார். இந்த நிலம், அரசுக்கு சொந்தமானது. அதை காலி செய்ய வேண்டும்' என, தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இதை எதிர்த்து, மாவட்ட கலெக்டரிடம், நித்யானந்தா மனு செய்தார். மனுவில், '23 ஏக்கர் நிலம், பிடதி ஆசிரமத்துக்கு சேர்ந்தது என, உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார். இந்த மனுவை, ராம்நகர் மாவட்ட கலெக்டர் நிராகரித்தார்.'பிடதி ஆசிரமத்தை சுற்றியுள்ள, 21 ஏக்கர் நிலத்தை, அரசிடம், நித்தியானந்தா ஒப்படைக்க வேண்டும்' என,உத்தரவிடப்பட்டது.
ஆண்மை பரிசோதனை நடத்த தடையில்லை: பிடதி ஆசிரமத்தை சேர்ந்த பெண் ஒருவர், நித்யானந்தா, தன்னை, பாலியல் பலாத்காரம் செய்தார் என, பெங்களூரு ராம்நகர் போலீசில் புகார் செய்தார். இவ்வழக்கு, ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அப்போது, தனக்கு ஆண்மை இல்லை. அதனால், ஒரு பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ய இயலாது என, நித்யானந்தா மனு செய்தார்.இதையடுத்து, அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், போலீசார் அவரை பலமுறை அழைத்தும், நித்யானந்தா வரவில்லை.
இதற்கிடையில், 'ஆண்மை பரிசோதனை, ரத்த பரிசோதனை என, தன் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்' என, நித்யானந்தா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.இவ்வழக்கின் தீர்ப்பு: அதில், 'நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை, ரத்த பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு அவர், ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவரை, போலீஸ் காவலில் எடுத்து, பரிசோதனைக்கு உட்படுத்தலாம்' என, தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1023695
No comments:
Post a Comment