அக்டோபர் 19,2013,23:55 IST
பெங்களூரு: 'பிடதி ஆசிரமம் சார்பில் நடத்தப்படும், குருக்கள் பள்ளியில், நித்யானந்தா பாதங்களை கழுவி, பாத பூஜை செய்ய வேண்டும்' என, மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், "மாணவர்களை தன் முன், ஆஜர்படுத்த வேண்டும்' என, ராம் நகர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரில் உள்ள, பிடதி, நித்யானந்தா ஆசிரமம் சார்பில், "ஸ்கூல் ஆப் தாட்ஸ்' என்ற குருக்கள் பள்ளி நடத்தப்படுகிறது. இந்த பள்ளியில், 80 மாணவர்கள் படிக்கின்றனர். கல்வித் துறையின், பாட முறைகள் இங்கு இல்லை. நித்யானந்தா எழுதிய, "உலக சரித்திரம்' என்ற நூலை மையமாகக் கொண்டு, பாடம் நடத்தப்படுகிறது. கடந்த, 2010ல், நித்யானந்தா மீது பாலியல் புகார் எழுந்த பின், இப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளிகளில், அட்மிஷன் கிடைக்கவில்லை. நித்யானந்தா ஆசிரமம் சார்பில், மலேசியாவில் நடத்தப்படும், குருக்கள் பள்ளியை, நல்ல முறையில் நிர்வகிக்க, பெண் சீடர் ஒருவரை, 2005ல், நித்யானந்தா அனுப்பினார். அந்தப் பெண் சீடரின் மகன், பிடதி ஆசிரம குருக்கள் பள்ளியில் படித்து வந்தான். அந்தச் சிறுவன், திடீரென விஷம் குடித்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அதனால், மலேசியாவிலிருந்து திரும்பும்படி, அவனின் தாயாருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அந்தப் பெண் சீடரும் பெங்களூரு திரும்பி, மருத்துவமனையில் விசாரித்த போது, மகன் விஷம் குடித்ததை அறிந்தார். இதையடுத்து, போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரில், "பிடதி ஆசிரமத்தில், என் மகனை கொடுமை செய்துள்ளனர். அதனால் தான், அவன் விஷம் குடித்துள்ளான். இந்த விவகாரத்தை, ஆசிரம நிர்வாகிகள் மறைக்க முற்படுகின்றனர்' என, தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கர்நாடகா, குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: நித்யானந்தா ஆசிரம பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, காவி உடை கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டும்; அடிமை போன்று நடத்தப்படுகின்றனர். நித்யானந்தாவின் காலைக் கழுவி, மாணவர்கள், அவ்வப்போது பாத பூஜை செய்ய வேண்டும். பள்ளியை நடத்த, கர்நாடகா அரசிடமோ, குழந்தைகள் நலத்துறையிடமோ, பிடதி ஆசிரமம் அனுமதி பெறவில்லை. அங்கு படிக்கும் பல மாணவர்கள், தற்கொலைக்கு முற்பட்டுள்ளனர். பள்ளியை நீண்ட நாள் நடத்த முடியாது என்று தெரிந்ததும், லண்டனில் நடத்த, நித்யானந்தா, அனுமதி கேட்டுள்ளார். ஜூனில், குழந்தைகள் நலத்துறையினர், பள்ளியை பார்வையிடச் சென்றபோது, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, பிடதி ஆசிரம ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. பள்ளி மீது நடவடிக்கை எடுப்பது பற்றி, அரசு ஆலோசித்து வருகிறது. இவ்வாறு குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், சில மாணவர்களின் பெற்றோர், ராம் நகர் மாவட்ட கலெக்டரிடம், புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், "பிடதி ஆசிரமத்தில், எங்கள் குழந்தைகளை அடிமை போன்று நடத்துகின்றனர்; கொடுமைப்படுத்துகின்றனர். அவர்களை மீட்டுத் தர வேண்டும்' என, தெரிவித்துள்ளனர். இதையடுத்து, "குருக்கள் பள்ளி மாணவர்களை, தன் முன் ஆஜர்படுத்த வேண்டும்' என, பிடதி ஆசிரமத்துக்கு, ராம் நகர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
நித்யானந்தா மீது பாலியல் புகார்கள் குற்றங்கள் என்று அடிக்கிகொண்டு போகும்போது ஏன் உங்கள் குழந்தைகளை அந்த பள்ளியில் சேர்க்க வேண்டும்
ReplyDeleteஏமாறுவதற்கு என்று ஒரு கூட்டம் நாட்டில் இருக்கும் வரை ஏமாற்றி பிழைப்பதற்கு என்று ஒரு கூட்டமும் நாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கும், நாம் தான் விழிப்பாக இருக்க வேண்டும் .
ReplyDeleteதிருந்தாத ஜன்மங்கள் இன்னும் 1000 பெரியார்கள் வந்தாலும் இவர்கள் திருந்தப்போவது இல்லை ..
ReplyDeletein india if u have money u can do anything. he is utilzing that , thats it . in all level he is supplying money . these people suc....ing his pe....s.
ReplyDeleteஇவ்வளவையும் செய்து விட்டு இவனுடைய சிரிப்பை பாருங்கள். இவனுடைய நிகழ்சிகளை ஒளிபரப்பும் டிவி சேனல்களை தடை செய்ய வேண்டும். இவனை ஏன் இன்னும் வெளியில விட்டுவைக்கணும்?
ReplyDeleteஅடுத்த படம் எப்ப ரிலீஸ்.இந்த பொம்பளை பொறுக்கியை இன்னுமா நம்புகின்றனர்.
ReplyDeleteநம்ம நாட்டில் மட்டும்தான் பண பலமும் ஆள் பலமும் இருந்தால் என்ன தப்பு வேண்டுமமனாலும் செய்யலாம் நீ ஆடு மகனே ஆடு
ReplyDeleteஇந்த பெற்றோர் மீது தான் முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டும். நித்தியின் மேன்மை பற்றி தெரிந்த பின்னும் அந்த பள்ளியில் சேர்த்து விட்டதற்கு............
ReplyDeleteஇவர்களுக்கு அரசியல்வாதிகளின் அதரவு உண்டு மேலும் மக்களை கண்டால் பயம் இல்லை என்ற நிலை மாறவேண்டும் .
ReplyDeleteஇவனுக்கு ஒரு முடிவு வரமாட்டுதே.....,இப்போ ஆன்மீக ஆராய்ச்சி செய்வது இல்லையா....
ReplyDeleteவந்துட்டான்யா .. வந்துட்டான்யா ... அவனுக்கு என்ன ஒரே கோலாட்டம்தான். நித்திக்கு நித்திய க..ண்டம் பூரண ஆயுசு.
ReplyDeleteடேய் நித்தியானந்தா ... உன்ன மக்கள் எல்லாரும் சேர்ந்து கும்மி அடிக்க போறோம் .....
ReplyDelete.இன்னுமாய்யா இந்த ஆளை வெளியே நடமாடவிட்டு இருக்கிறீர்கள்... தவறு செய்துவிட்டான் என்று அப்பட்டமாக டிவியில் போட்டு காட்டிய பின்னும், நான் தவறே செய்யவில்லை என்று வெளியில் திரிகிறான் மேலும் பல விதமான தவறுகளை செய்து கொண்டு... இந்த குற்றச்சாட்டில் நான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்லுவான், (ஏனென்றால் வீடியோ சாட்சி எதுவும் இல்லையல்லவா...) என்ன செய்வது... ஆனால் இதெல்லாம் இந்தியாவில்தான் நடக்கும்...
ReplyDeleteபல ஆசிரமங்கள் கூடாரங்கள் மாபியா கூடாரமாக மாறி வெகு நாள் ஆகிவிட்டன இவர்களின் அடாவடி தனத்தால் .பாமர மக்கள் முட்டாளாக மாற்றியதுதான் பல ஆசிரமங்களின் வேலை ஆகிவிட்டது .இவர்களால் இவர்கள் சார்ந்த மதத்திற்குதான் கேட்ட பெயர் .
ReplyDeleteஇவனே ஒரு ஈனப்பிறவி,இதுல பாதபூஜஎல்லாம் இவனுக்கு ஒரு கேடா? இழுத்து மூடுங்கள் இவனது குருகுல பள்ளிகளை.
ReplyDeleteசெய்யறது எல்லாம் அயோக்கிய தனம் / மொள்ளமாரி தனம் ஆனா முகத்தில் பொன் சிரிப்பு .....கொய்யால என் எதிர்ல மாட்டின அலேக்கா தூக்கி மல்லாக்கா போட்டுடுவேன் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் அறிஞர் அண்ணா கூறியது .......ஆனால் இந்த சாமியின் சிரிப்பில் பல ....களை காணலாம் .....இந்த சிறியவர் கூறியது
ReplyDelete" ஏன் அந்த ரஞ்சிதமான நடிகையின் பணிவிடைகள் சாமிக்கு அலுப்பு தட்டி விட்டதா ??? கொய்யால இந்தியாவில் சாமி பெயரில் அடிக்கும் கூத்துக்கு ஒரு நெறி முறை படுத்த சட்டம் கொண்டு வர முடியாதா ??? நீதிமன்றங்கள் //மத்திய/ மாநில //அரசுகள் கண் திறந்து பார்க்க மறுப்பது ஏன் ????
ReplyDeleteஇதுகளையெல்லாம் சானியா கரைச்சு கொட்டி கழுவனும் , இவனே ஒரு போலி மாட்டினால் வெளுத்துக்கட்டுங்க, " இவர் எழுதி புத்தகம் உலக சரித்திரம் இதனை கொண்டு பாடம் நடத்தப்படுகிறது கொடுமை கொடுமையிலும் கொடுமை .... ...உலக சரித்திரம் என்ன ???இவரின் ச (த) ரித்தரத்தை படித்தாலே ஆசிரமத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் புத்தி வந்து விடுமே ???
ReplyDeleteகுருகுலம் என்பது மன்னர் ஆட்சியில் மிக நன்றாக நடந்த ஒன்று. குருகுல ஆசான் ஒழுக்க சீலராகவும் சிறந்த அறிவாளியாகவும், மிக நேர்மையானவராகவும் இருப்பார். அதில் படித்து தேறும் மாணவர்கள் ( மன்னரின் மக்களும் அதில் படித்து தேறியவர்கள் தான்.) சிறப்பானவர்களாகவும் இருப்பார்கள்.மக்கள் ஆட்சியில் படிப்படியாக அது குறைந்து, இன்று இந்த நிலையில் வந்து நிற்கிறது. இங்கு எல்லாம மிக நல்ல நிலையில் நடந்தால்,எல்லோரும் விரும்பி சேருவார்கள்.ஆனால்,இந்த மூர்கனின் தலைமையில் இயங்கும் இந்த பள்ளியை குழந்தை நலத்துறையினர் பார்வையிடச்சென்ற பொழுது,அனுமதிக்க வில்லை விரட்டி விட்டனர் என்று சொல்வது முட்டாள் தனமானது. தவறுகளை அரசாங்கமே தட்டிக்கேட்க முடியவில்லை என்றால் அதைவிட கேலிக்கூத்து வேறு எதுவும் இல்லை. எல்லாம் பணம் செய்யும் வேலை. " நான் அடிப்பது போல் அடிக்கின்றேன் நீ அழுவதுபோல் அழு என்ற கதை தான். " மோசமான மனிதர்கள், சாமியார் என்றபோர்வையில் உலா வருகிறார்கள். அத்துடன் நில்லாது, தாங்கள் தான் மதத்தையே காக்கின்ற தலைவர்கள் என்று பறைசாற்றி,தாங்கள் கடவுள் என்றும் சொல்லி மக்களை ஏமாற்று கிறார்கள். மூட மக்களும், குனிந்து வணங்கி, அவர்கள் கை - கால் பிடித்து சேவை செய்கிறார்கள். எது ஒரு புத்திசாலி அவர்களை ஆதாரத்துடன் பிடித்து கோர்ட்டில் நிறுத்தினாலும்,பணபலத்தால் வெளியே வந்து ஆட்டம் காட்டுகிறார்கள். மக்கள் மீண்டும் அந்த கயவனை தங்கள் குருவாக ஏற்று வந்தனம் செய்கிறார்கள். இதெல்லாம் மக்கள் தவறுதான். இதைப்போன்ற திகம்பர சாமியார் தலை எடுக்காமலே செய்து விடவேண்டும்.இவனுக்கு எது பணம்.....? எல்லாம் மூடர்களான மக்கள் கொடுத்தது தானே. அதைத்தானே இவன் அள்ளி வீசுகிறான். இதைப்போன்ற கயவர்களை மக்களே கவனித்து,அங்கேயே மொத்தமாக அடக்கி விடவேண்டும்
ReplyDeleteசாமி யார் என்று கேட்கும் இது போன்ற சாமியார்களை நாட்டை விட்டு துரத்துவது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.ஆனா நம்பூரு டி வி சேனல்கள் ரெண்டு இவனை மகானாக்குரான்களே..அந்த கொடுமைய எங்கபோயி சொல்றது..,முதலில் ஆசிரமத்தை அதுகிது எல்லாவற்றையும் இழுத்து பூட்டனும்...
ReplyDeleteஇந்த சாமியார் மீது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றன் பின் ஒன்றாக புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. நித்தியை சிறையில் அடைத்தனர் மற்றும் என்னென்னவோ சோதனை, விசாரணை என்று எல்லாம் செய்தனர். மக்களும் ஒரு பக்கம் எல்லா எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தினர். இறுதியில் என்ன நடந்தது? அவர் சர்வசாதரணமாக வெளியில் வந்து தன் அன்றாட வேலைகளை சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்.என்ன ஒரு சாமியார் மீது இவ்வளவு குற்ற புகார்கள் இருந்தும் அரசாங்கத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லையெனில், இதைப்பற்றி பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு என்ன பயன்? நித்தியின் செய்தியே வேண்டாம். இதிலிருந்து என்ன நாம் தெரிந்துகொள்ளவேண்டுமெனில், நித்திக்கு மிகவும் பெரிய இடத்து பக்கபலத்தால் அவர் ஆட்டம் போடுகிறார் என்பது வெட்ட வெளிச்சம்,.
ReplyDeleteஇந்த போலி சாமியார் பற்றி பேப்பரில் .இருந்தும் அவரது ஆசிரம்மத்திர்க்கு மக்கள் போறார்கள். என்னத்த சொல்ல. கேவலம் மஹா கேவலம் . இந்தியாவில் சுதந்திரம், சட்டம் , ஜனநாயகம் ,மனித உரிமைகள் ,மனிதாபிமானம் , சமாதானம் எல்லாமே தீயோர்களுக்குத்தன் சாதகமாக உள்ளது . / ஜூனில், குழந்தைகள் நலத்துறையினர், பள்ளியை பார்வையிடச் சென்றபோது, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, பிடதி ஆசிரம ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. பள்ளி மீது நடவடிக்கை எடுப்பது பற்றி, அரசு ஆலோசித்து வருகிறது. // இன்னும் எத்தனை மாதங்களுக்கு ஆலோசனையிலே இருப்பீர்கள் ?
ReplyDeleteஇன்னுமா இவன் உயிரோடிருக்கான்?? படிக்கிற பெண்கள் மேல ஆசிட் வீசுறாங்க . இவன யார்கண்ணுக்கும் தெரிலய்யா?
ReplyDeleteஜெயிலுக்கு போயிட்டு வந்தும் திருந்தலையா.? உன்ன மாதிரி போலி சாமியாரெல்லாம் மக்கள் இனி நம்ப மாட்டாங்க .,ஜாமீன்ல வெளிவர முடியாத படி தண்டனை கொடுங்க .
ReplyDelete