வெள்ளி, ஜூன் 27, 2014

பலத்த எதிர்ப்பால் பொதுமக்களைச் சந்திக்க பயந்துகொண்டிருந்த ’மன்மத சாமியார்’ நித்தியானந்தா, தற்போது பாத பூஜை நிகழ்ச்சிகளுக்காக 15 நாட்கள் தமிழகம் முழுக்க டூரை தொடங்கியிருக் கிறார். ஆன்மிகத்தை அசிங்கப்படுத்தியதால், பொதுமக்கள் தன்னைத் தாக்கலாம் என்ற அச்சத்தில், தலைக்கு தினசரி 5 ஆயிரம் கூலி பேசி, 30 பவுன்ஸர்களை பாதுகாப் புக்காக தன்னோடு இந்த டூரில் வைத்துக் கொண்டிருக்கிறார். பவுன்ஸர்கள் என்பது அடியாட்களின் மாடர்ன் பெயர். பல்வேறு அசிங்கமான வழக்குகளில் சிக்கியிருக்கும் நித்தி, எப்படி சுதந்திரமாக டூர் வருகிறார்? அவர் மீதான வழக்குகள் என்ன ஆயிற்று? என விசாரணையில் இறங்கினோம்.
துரத்தப்பட்ட நித்தி
ரஞ்சிதாவுடனான ஆபாச சி.டி. வெளியாகி, சிறைக்கு சென்று வந்தபிறகு நித்தியின் சாமியார் இமேஜ் முழுதாகச் சரிந்தது. அவரது சீடர்கள் எல்லாம் அவரை விட்டு விலகத் தொடங்கினர். போகிற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் நித்தி மீது கோபத்தைக் காட்டத் தொடங்கினர். கர்நாடக மக்க ளும் அவரைத் துரத்தியடித்ததால்... திகைத்துப்போன நித்தி, மதுரை ஆதீனத்தை தனக்கே உரிய ’சாம பேத தண்டங்களால்’ மயக்கி, இளைய ஆதீனமாய் முடிசூட்டிக்கொண்டார். இதற்கு பக்தர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதாலும், தமிழக அரசுத் தரப்பின் கோபப் பார்வை நித்தி மீது திரும்பிய தாலும், நித்தியை மடத்தில் இருந்து, மதுரை ஆதீனம் துரத்தி யடித்தார்.
இதன்பின் தமிழகத்தில் அதிகம் தலைகாட்ட பயந்து, அங்கே இங்கே என ஒளிந்து திரிந்த நித்தி, தற்போது வெளியே முகம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
பாதபூஜை ஏஜண்டுகள்
கடந்த 13-ந் தேதி மும்பையில் 200 பேர்களைத் திரட்டி, தியான நிகழ்ச்சியை நடத்திய நித்தி, 16-ந் தேதி ஹைதராபாத்தில் தியானக் கூட்டத்தை ஏற்பாடு செய் திருந்தார். அவருக்கு எதிராக பக்தர்கள் திரளுவதை அறிந்த நித்தி, மழை பெய்யாத நிலையிலும்... மழை வரலாம் என்று கூறி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, ரஞ்சிதா சகிதம் திருப்பதி கோயிலுக்குப் போய் தரிசனம் செய்தார். அங்கு அவரை எவரும் கண்டுகொள்ளாத போதும், தானாக திருப்பதி பக்தர்கள் பக்கம் திரும்பி கையை உயர்த்தி, ரெடிமேட் சிரிப்புடன் அவர் ஆசிர்வாதம் செய்தது பரிதாபமாக இருந்தது. இந்த நிலையில்தான் நித்தியின் தமிழக ஏஜண்டுகளான மூவர், 15 நாள் பாத பூஜை நிகழ்சியை ஏற்பாடு செய்தனர். யாரந்த ஏஜண்டுகள்? அரசு போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக அதிகாரி நடராஜன், பி.எஸ்.என். எல் அதிகாரி கண்ணன், சேலம் ஓட்டல் அதிபர் ரிஷி ஆகியோர்தான் அந்த மூவர்.
நித்தி மீதான செக்ஸ் வழக்கு
ஆசிரம பக்தைகளை மிரட்டியும் ஒப்பந்தம் போட்டும் கற்பழித்து மோசடி செய்தது, கொலை மிரட்டல் விடுத்தது என நித்தி மீது, லெனின் கருப்பன் கொடுத்த புகார், கர்நாடக ராம்நகர் காவல் நிலையத்தில் வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான குற்றப்பத்திரிகை ராம்நகர் நீதிமன்றத்தில் 2010 நவம்பர் 27-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அந்த வழக்கில் நித்தி உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு இன்னும் குற்றப்பத்திரிகை வழங்கப்படவே இல்லை. இதேவழக்கில், நித்தியின் முன்னாள் சீடர் வினய் பரத்வாஜ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், 2012 மார்ச்சில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆசிரமத்திற்கு வரும் பக்தைகளிடம், மா சதானந்தா என்கிற ஜமுனாராணி, செக்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதை யும் அதற்கு அவரது கணவரான சதானந்தா என்கிற தனசேகரன் உடந்தையாக இருந்ததையும் தன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டி ருந்தார் வினய் பரத்வாஜ். இருந்தும் அந்த வழக்கை சகல உபாயங்களையும் கையாண்டு இழுத்தடித்தபடியே இருக்கிறது நித்தி தரப்பு. எப்படி?
அரசு வழக்கறிஞர்களை மாற்றிய நித்தி தரப்பு
நித்தி டீம் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்ட நிலையில் 2011 ஜனவரியில், வழக்கில் இருக்கும் ஏ-2 கோபால் சீலம்ரெட்டி, ஏ-3 சிவ வல்லபனேனி என்கிற சச்சிதா னந்தா, ஏ-4 தனசேகரன் என்கிற சதானந்தா, ஏ-5 ராகினி (சச்சிதானந்தாவின் மனைவி) இந்த நால்வரும் கர்நாடக ஹைகோர்ட்டுக்கு போய், தங்கள் மீதான குற்றப்பத்திரிகையை நிறுத்தி வைக்கும்படி கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி.யின் பப்ளிக் பிராஸிகியூட்டர் சி.ஹெச்.ஜாதவ் ஆஜ ரானார். வழக்கை விரைந்து டிரையலுக்குக் கொண்டுவரவேண் டும் என இவர் நீதிமன்றத்திடம் பெட்டிஷன் செய்ததோடு வழக்கில் தீவிரம் காட்டினார். இதைக்கண்டு திகைத்துபோன நித்தி தரப்பு, வழக்கில் சி.பி.சி.ஐ.டி சார்பில் ஜாதவ் ஆஜராகக் கூடாது என்றது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி.யின் பப்ளிக் பிராஸிகியூட்டராய் கோவிந்தன் நியமிக்கப்பட்டார். இவர் ராஜீவ்காந்தி கொலையாளிகளான சிவராஜன், தணு தொடர் பான வழக்கில் பெங்களூரில் ஆஜரானவர். இவரும் அதிரடியாக வாதம் வைப்பார் என்பதைப் புரிந்து கொண்ட நித்தி தரப்பு, இவரும் சி.பி.சி.ஐ.டி. சார்பில் ஆஜராகக் கூடாது என்று நீதி மன்றத்தில் போராடியது. இதைத்தொடர்ந்து அவரையும் வழக்கி லிருந்து ஒதுக்கிய நீதிமன்றம், சாதாரண அரசு வழக்கறிஞரே ஆஜராகட்டும் என்று சொல்லிவிட்டது.
குற்றவாளிகளுக்காக வாதம் செய்த அரசு வழக்கறிஞர்
இந்த வழக்கு 2011 ஜூனில் இருந்து 2013 பிப்ரவரி வரை டிரையலுக்கு வரவே இல்லை. எனவே 2013 மார்ச்சில் லெனின் கருப்பன், நித்தி தரப்பு மீதான வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும்’ என கர்நா டக ஹைகோர்ட்டில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இதை நித்தி தரப்பு எதிர்த்தது. இதில் ஆச்சரியமில்லை. ஆனால் சி.பி.சி.ஐ.டி. சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞரே, லெனின் கருப்பன் இதில் பாதிக்கப்பட்டவ ரல்ல, எனவே அவர் இந்த பெட்டிஷனைப் போடக்கூடாது’என குற்றவாளிகளான நித்தி தரப்பிற்கு சாதகமாக வாதம் செய்தார். இதைத் தொ டர்ந்து கர்நா டக ஹை கோர்ட், லெனின் கருப்பனின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
ஆர்த்திராவுக்கு எதிர்ப்பு தெரிவித்தநித்தி தரப்பு
நித்தியால் வல்லுறவுக்கு ஆளான ஆர்த்திராவ், 2014 பிப்ரவரியில், தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும்’ என அதே ஹைகோர்ட்டில் முறையிட்டார். உடனே நித்தி தரப்பு, ஆர்த்திராவ் இந்த வழக்கில் புகார்தாரரல்ல. எனவே இவரையும் வழக்கில் சேர்க்கக் கூடாது’ என வாதிட்டது. ஆர்த்தி தரப்பிற் காக சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர் ஆஜராக, 8 மணி நேரம் கடும் வாதம் நடந்தது. இந்தநிலையில் நித்தி தவிர்த்த நான்கு குற்றவாளிகளும், நித்திக்கு ஜூன் 2012-லேயே மெடிக்கல் டெஸ்ட் எடுத் திருக்கவேண்டும். வழக்கிற்கு அடிப்படை யான இந்த டெஸ்ட்டே இன்னும் எடுக்கப்படாததால், ஆர்த்திராவ் இந்த வழக்கில் சேர்க்கப்படக் கூடாது’ என தனித்தனியாக மனு போட்டனர். வழக்கை விசாரித்த கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி சத்ய நாராயணராவோ, ஆர்த்திராவை வழக்கில் சேர்க்கலாமா கூடாதா என்ற தீர்ப்பை ரிசர்வ் பண்ணி வைத்துவிட்டார்.
அவகாசம் கேட்ட அரசு வழக்கறிஞர்
தீர்ப்பு தங்களுக்கு எதிராக வரும் என்று யூகித்த நித்தி தரப்பு மேலும், வழக்கை இழுத்தடிக்க, பகீரதப் பிரயத்தனங் களில் இறங்கியது. இந்த நிலையில் ஜூன் 13-ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியின் வழக்கறி ஞர் தனக்கு உடல்நலம் சரியில்லை என்றும், எனவே வழக்கைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் முறையிட் டார். இதைத் தொடர்ந்து ஜூன் 17-க்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. 17-ந் தேதி இந்த வழக்கு விசா ரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் ஆஜராகி ‘வழக்கு ஆவணங்களை நான் முழுதாகப் படிக்க, கால அவகாசம் வேண்டும்’ என்றார். இதைத் தொடர்ந்து வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. வழக்கில் ஆர்த்திராவ் சேர்க்கப்பட்டால், அடுத்து நித்திக்கு ஆண்மை சோதனை நடத்தும் வேலைகள் தொடங்கிவிடும். அது முடிந்து அவரது ஆண்மை நிரூபிக்கப்பட்டால், ராம்நகர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 2 குற்றப் பத்திரிகைகளின் அடிப்படையில், இறுதிக்கட்ட விசாரணை நடக்கும். எனவே தனது தலைக்கு மேல் கத்தி தொங்குவதை உணர்ந்த நித்தி, பீதியில் ஏறுக்கு மாறாக நடக்க ஆரம்பித்திருக்கிறார்.
நிலுவையில் இருக்கும் நித்தி வழக்குகள்
நித்தி தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆர்த்திராவ், 2012 அக்டோபரில், கர்நாடக மாநில ஹென்னூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அப்படியே பெண்டிங்கில் இருக்கிறது. எவரும் விசா ரிக்கவில்லை. தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நித்தி மீது லெனின் கருப்பன், அங்குள்ள விதான் சௌதா காவல்நிலையத்தில் 2010-ல் கொடுத்த புகாரும் விசாரிக்கப்படாமல் அப்படியே பெண்டிங்கில் இருக்கிறது. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் லெனின் கருப்பன், நித்தி மீது அடுத்தடுத்துக் கொடுத்த 2 கொலை மிரட்டல் புகார்களும் பெண்டிங்கில் வைக்கப்பட்டிருக்கிறது. திருச்சி, ராஜபாளையம், சேலம், ஹைதராபாத் ஆகிய இடங்களில் நிலங்களை அபகரித்ததாக நித்தியால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்களும் விசாரிக்கப்படவே இல்லை. செக்ஸ் புகார்களைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் இருக்கும் நித்தியின் ஆசிரமத்தை கைப்பற்ற, தமிழக அரசின் அறநிலையத்துறை மேற்கொண்ட முயற்சிகளும் ஸ்ட்ரக் ஆகி நிலுவையில் நிற்கிறது.
நித்தியின் பொய்ப் புகார்கள்
தனக்கு எதிராகப் புகார் கொடுத்தவர்கள் மீதெல்லாம், ஆசிரமப் பெண்களைக் கற்பழிக்க முயன்றதாகவும் பணம் கேட்டு மிரட்டியதாகவும் புகார் கொடுப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார் நித்தி. இந்த பாணியில் அவர் கொடுத் திருக்கும் சில புகார்களை மட் டும் பார்க்கலாம். நடிகை ரஞ்சிதா வை கற்பழிக்க முயன்றதாக லெனின் கருப்பன் மீது வழக்குப் போட்டிருக்கிறது நித்தி தரப்பு. நித்தி-ரஞ்சிதா ஆபாச வீடியோ தொடர்பாக மட்டும் ராம்நகர் கோர்ட்டில் லெனின் கருப்பன் மீது 9 வழக்குகள் இருக்கின்றன. இதே வழக்கு வாரணாசியிலும் போடப்பட்டிருக்கிறது. இந்த ஆபாச வீடியோவின் அடிப் படையில் அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியாவில் லெனின் மீதும் ஆர்த்திராவ் மீதும் வழக்கு போடப்பட்டி ருக்கிறது. அமெரிக்காவுக்கு ஒரு முறை கூட போகாத, பாஸ் போர்ட்டே இல்லாத லெனின் கருப்பன், அமெரிக்காவில் கற் பழிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக, அங்குள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நீதி மன்றத்தில் வழக்கு போட்டிருக் கிறது நித்தி தரப்பு. நித்தியிடம் நிலத்தை தானமாகக் கொடுத்த சிலர், நித்தியின் சுயரூபம் தெரிந்து, நிலத்தைத் திருப்பிக் கேட்ட தால், அவர்கள் மீதெல்லாம் கற்பழிப்பு முயற்சி வழக்கைப் போட் டிருக்கிறார் நித்தி. ஆசி ரமத்துக்கு கம்ப்யூட்டர் இணைப்புகள் கொடுத்த தற்கான பண பாக்கியைக் கேட்ட பள்ளிப்பாளையம் செங்குட்டுவேல் மீதும் கற்பழிப்பு முயற்சி வழக்கு பாய்ந்திருக்கிறது.
ஆர்த்தியைக்குறி வைத்துத் துரத்தும் நித்தி
ஆர்த்திராவ் கர்நாடக ஹைகோர்ட்டில் போட்ட பெட்டிஷனால் தனக்கு ஆபத்து நெருங்குவதை உணர்ந்த நித்தி, அந்த வழக்கு விசாரணைக்கு வரும்முன், அவரை தனது பண பலத்தால் அமெரிக்க சிறையில் அடைக்கும் முயற்சியில் இருக்கி றார். இதற்காக அமெரிக்காவின் மெக்ஸிகன் மாநிலம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் வழக்குகள் போடப் பட்டிருக்கிறது. அதில் ஒரு வழக்கை தீவிரப்படுத்தி ஆர்த்தி ராவை எப்படியும் கைது செய்து அமெரிக்க சிறையில் அடைந்து விட வேண்டும் என நித்தி தரப்பு ஜரூராக இருக்கிறது. அமெரிக்க சட்டப்படி, ஒருவர் கைதானால் ஜாமீனே கிடையாது. 2 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின்னர்தான், வழக்கில் அவர் அப்பீலே செய்ய முடியும். இதைத் தெரிந்துகொண்ட நித்தி, வினய் பரத்வாஜை பொய்ப் புகார் கொடுத்து அமெரிக்க சிறையில் அடைத்தது போலவே, ஆர்த்திராவையும் அமெரிக்க சிறையில் அடைத்து வைத்துவிட்டால், இங்குள்ள வழக்கில் ஆர்த்தி ராவ் ஆஜராக முடியாது. அதை வைத்து நாம் தப்பிவிடலாம் என்பதுதான் நித்தி போட்டு வைத்திருக்கும் வில்லங்கக் கணக்கு. சாமியார் வேடத்தில் தவறு செய்தவர் நித்தி. அதை கண்டு பிடித்து இனியும் யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று அம்பலப்படுத்தியவர்கள் நக்கீரனும், லெனின் கருப்பனும், ஆர்த்தியும். ஆனால், நித்தி பணத்தை வைத்துக்கொண்டு தப்பிப்பதோடு மற்றவர்கள் மீது பொய் வழக்குகளையும் போட்டு கொடுமைப்படுத்துகிறார். இதற்கும் சிலர் ஆதரவு உள்ளது.
நித்தி தனது பண பலத்தால், தன்னால் பாதிக்கப் பட்ட பலரையும் தோற்கடித்துவரும் நிலையில், நமது நக்கீரன் சட்டரீதி யாகப் போராடி, தகுந்த ஆதாரங் களைக் கொண்டு நிரூபித்து, "நித்தி யைப் பற்றி நக்கீரன் வெளியிட்ட செய்தி கள் உண்மையான வை' என நீதிமன்றத் தில் வெற்றித் தீர்ப் பைப் பெற்றிருக் கிறது. இதுவே நித்தியின் யோக்கிய தையைக் காட்டும்.




Tiger woods Ex-world No. 1 golfer went though messy divorce after being outed for his affairs.
Swami NithyanandaGodman exposed in Tamil channel video; it showed him in various sexual acts.
Dominque Strauss-KahnFrench officials charge him with “aggravated pimping”, forced to quit as IMF boss.
Michael Douglas US actor one of the first celebrities to go to a deaddiction clinic, in 1990.
Asaram Bapu Godman accused by a 16-year-old of rape at his Jodhpur ashram. Now behind bars.
David Duchovny The X-Filesstar has been open about his addiction, checked into rehab in ’08.
Silvio Berlusconi Ex-Italian PM known for his bunga-bunga parties with prostitutes.
Charlie Sheen Once went on a $53,000 binge on call girls. And then there’s the pornstar GFs.
N.D. Tiwari Quit as AP governor after being caught on video in bed with three girls.
Billy Bob Thornton Once married to Angelina Jolie, actor even had therapist falling for his charms.