Self Styled God Man Swamy Nithyananda
Bengaluru: Controversial self-styled godman Nithyananda, along with five other accused, appeared before the Chief Judicial Magistrate Court (CJMC), Ramnagara on Wednesday. The case came up for hearing around 11.30 am and went on till around 12.45 p.m. It was adjourned to October 27.
It was the 3rd Additional Sessions Court Ramanagara that was hearing the case, but as presiding officer Manjula was on leave, the Chief Judicial Magistrate Court Ramanagara was directed to hear the case and a special public prosecutor was appointed. “As the case was called, the accused, Nithyananda, and five others filed bail petitions. As the Chief Judicial Magistrate Court was an in-charge court, the case was adjourned to October 27 for objections to be filed by the prosecution,” said Mr K. Gopal Rao, Senior Assistant Public Prosecutor, CJM Court.
Though Nithyananda agreed to a potency test following a Supreme Court order, the godman refused to take the very injection that was crucial to determine the potency of an individual. He claimed to the doctors in Victoria Hospital that he would suffer a cardiac arrest if he was injected with the drug.
He was also adamant in not taking the injection as it was not mentioned in the court order. The interim potency test reports and voice test results were handed over by the medical team from Victoria Hospital and the Forensic Sciences Laboratory in Madiwala to the CID officials recently.
An NRI filed a rape complaint against Nithyananda in 2010, alleging that she was repeatedly sexually assaulted over five years in Nithyananda’s ashram and was threatened with dire consequences if she revealed it to anyone.
Then Karnataka Chief Minister D.V. Sadananda Gowda in June 2012 had ordered the arrest of Nithyananda after several of his followers appeared on vernacular Kannada TV news channels and accused the godman of exploiting them sexually. Cases of rape and unnatural sex were registered against Nithyananda and five others at the Bidadi police station.
http://www.deccanchronicle.com/141016/nation-current-affairs/article/nithyananda-files-bail-petition-case-adjourned-october-27
|
ராம்நகரம்: தியானபீட மடாதிபதி நித்யானந்தா மீது முன்னாள் பெண் சீடர் ஆரத்திராவ் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக நித்யானந்தா அவரது 5 சீடர்களுடன் ராம்நகரம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். கர்நாடக மாநிலம், ராம்நகரம் மாவட்டம், பிடதியில் உள்ள தியானபீட ஆசிரமத்தின் மடாதிபதி நித்யானந்தா மீது கர்நாடகாவில் பல வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்தின் முன்னாள் பெண் சீடர் ஆரத்தி ராவ் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக பிடதி போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கு ஆண்மை சக்தி இல்லை என்று கூறியிருந்தார். அதை மறுத்த பிடதி போலீசார், நித்யானந்தா வுக்கு ஆண்மை பரிசோதனையும், ரத்த பரிசோதனை நடத்த அனுமதி கோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதையேற்று பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படி நித்யானந்தாவுக்கு கோர்ட் உத்தரவிட்டது. மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனு கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரணை நடத்திய நீதிமன்றம் இந்த வழக்கை மனுதாரர் கண்டிப்பாக சந்திக்க வேண்டும். ஆகவே வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. மேலும் நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீசார் விரும்பினால், அதை செய்யலாம். அதற்கு நித்யானந்தா ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
ஒருவேளை அவர் ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தால் கைது செய்து பரிசோதனை செய்ய போலீசாருக்கு அனுமதி வழங்குவதாக தீர்ப்பில் கூறியது. ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரணை நடத்திய நீதிமன்றம், நித்யானந்தாவின் கோரிக்கையை நிராகரித்ததுடன், ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 4ம் தேதி உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 7ம் தேதி நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனையும், அதே நாளில் மடிவாளவில் குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. நித்யானந்தாவிடம் நடத்தப்பட்ட பரிசோதனை அறிக்கையை கடந்த வாரம் டாக்டர்கள் கர்நாடக சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக நித்யானந்தா உள்பட 5 பேரும் அக்டோபர் 15ம் தேதி (நேற்று) நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ராம்நகரம் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நேற்று காலை 11.15 மணிக்கு நிதியானந்தா உள்பட அவரது 5 சீடர்கள் நீதிமன்றத்திற்கு வந்தனர். செஷன்ஸ் கோர்ட் நீதிபதி மஞ்சுளா விடுமுறையில் இருந்ததால், நீதிபதி ஹொச கவுடர் முன் ஆஜராகினர். அதை தொடர்ந்து பல்வேறு புகாரில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்கக் கோரி கடந்த மாதம் நித்யானந்தா தாக்கல் செய்திருந்த மனு மற்றும் மூல வழக்கு விசாரணையை அக்டோபர் 27ம் தேதிக்கு நீதிபதி ஹொச கவுடர் ஒத்திவைத்தார்.
|
|
No comments:
Post a Comment