கொந்தளிக்குக்ம் கர்நாடகா...
அடுத்த சர்ச்சைக்கு அடித்தளம் அமைத்திருக்கிறார் நித்தியானந்தா!
பெங்களூரில் உள்ள 'சமயா’ என்ற லோக்கல் சேனலில் ஹரித்துவாருக்கு யாத்திரை சென்ற சிலரது பேட்டி ஒளிபரப்பானது. அந்தப் பேட்டியில், ''யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம் நடத்துவதற்காக ஹரித்துவாரில் உள்ள சரோவர் ஹோட்டலில் நித்தி யானந்தாவும் அவரது சிஷ்யர்களும் தங்கியிருக்கிறார்கள். ஹரித்துவாருக்கு டூரிஸ்ட்களாக சென்ற நாங்கள் சரோவர் ஹோட்டல் மேனேஜர் பிரிஜேஷ் குமாரிடம் ரூம் கேட்டோம். இதைக் கவனித்த நித்தியானந்தா, 'கன்னடர்களை இங்கே தங்க அனுமதிக்கக் கூடாது’ என்று சொன்னார். அவர் சொன்னதால் எங்களுக்கு ரூம் கொடுக்கவில்லை'' என்று சொன்னார்கள்.
இந்தப் பேட்டி ஒளிபரப்பானதும் சில கன்னட அமைப்புகள் நித்தியானந்தாவுக்கு எதிராக போர்க்கொடித் தூக்கின. 'இனி, நித்தியானந்தா கர்நாடகாவுக்குள் வரக்கூடாது’ என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்துக்குத் தலைமையேற்று நடத்திய கர்நாடக ஜனப்ரா வேதிகா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கவுடா, ''எங்களுக்கும் நித்தியானந்தாவுக்கும் தனிப்பட்ட விரோதம் கிடையாது. அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. தன்னை கடவுள் என்றும், சிவன் என்றும் நித்தியானந்தா சொல்லிவருவது இந்து மதத்துக்கே பெருத்த அவமானம். இப்படிப்பட்டவர் ஹரித்துவாரில் உள்ள ஹோட்டலில் கன்னடர்களுக்கு ரூம் கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு வாழ்க்கைக் கொடுத்தது கர்நாடகா. அவரது ஆசிரமம் இருப்பது கர்நாடகா. இப்படி கர்நாடகாவை நம்பிப் பிழைக்கும் நித்தியானந்தா கர்நாடக மக்களையே கேவலப்படுத்தி இருக்கிறார். இனி நித்தியானந்தா எப்படி கர்நாடக மண்ணில் கால் வைக்கிறார் என்பதை நாங்களும் பார்க்கிறோம். நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சாமியார் என்ற போர்வையில் கர்நாடக மக்களை ஏமாற்றுபவர்களைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம்'' என்று கொந்தளித்தார்.
நித்தியானந்தா தரப்பு கருத்துக்களை அறிய பிடதி ஆசிரமத்துக்கு சென்றோம். ஆசிரமத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆசிரமத்தில் இருக்கும் நிர்வாகிகள் நம்மிடம், ''சுவாமி ஹரித்துவாரில் இருக்கிறார். நீங்கள் குறிப்பிடும் விஷயங்களை சுவாமியின் கவனத்துக்குக் கொண்டுசெல்கிறோம். உங்களது மெயில் ஐ.டி-யைக் கொடுங்கள். நிச்சயம் சுவாமி பதில் அனுப்புவார்'' என்று சொன்னார்கள். சொன்னபடியே நமக்கு மெயிலில் பதில் கொடுத்திருந்தார் நித்தியானந்தா. ''நான் இந்த கர்நாடக தேசத்தை நேசிக்கிறேன். கன்னட மக்களையும் நேசிக்கிறேன். நானோ அல்லது என்னுடைய பிரதிநிதி எவருமோ கன்னட மக்களை ஹோட்டலில் தங்க அனுமதிக்க வேண்டாம் என்று ஹோட்டல் நிர்வாகத்திடம் சொல்லவில்லை. நாங்கள் மதத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ எந்தவித தடைகளையும் ஏற்படுத்துவது இல்லை. நாங்கள் மொத்த மனித குலத்துக்கும் எங்கள் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறோம். ஒவ்வொருவரையும் வரவேற்கிறோம். எதையோ என்னிடம் எதிர்பார்த்து சிலர் திட்டமிட்டு என்மீது பொய்யான புகார்களைப் பரப்பிவருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க எல்லா முயற்சிகளையும் செய்துவருகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹரித்துவாரில் உள்ள சரோவர் ஹோட்டல் மேனேஜர் பிரிஜேஷ் குமாரைத் தொடர்புகொண்டு பேசினோம். ''கர்நாடகாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியில் எங்களது ஹோட்டலைப் பற்றி தவறான தகவல் வெளியாகியுள்ளது. ஊரைப் பார்த்து நாங்கள் யாருக்கும் அறை கொடுப்பது கிடையாது. யார் வேண்டுமானாலும் எங்கள் ஹோட்டலுக்கு வரலாம். அவர்களது அடையாள அட்டையைக் காட்டினால் நிச்சயம் ரூம் கொடுப்போம். நித்தியானந்தா எங்கள் ஹோட்டலில்தான் தங்கியிருக்கிறார். அவர் சொல்லி, கர்நாடகாவைச் சேர்ந்தவர்களுக்கு நாங்கள் ரூம் கொடுக்கவில்லை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது'' என்று சொன்னார்.
நித்தியானந்தா தியான வகுப்புகளை முடித்துக்கொண்டு கர்நாடகா திரும்பும்போது பிரச்னை வெடிக்கத் தயாராக இருக்கிறது!
- http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=91542
hello every one. i just dont understand why this bastered Nithyanada swami still in karnataka after he had comited so many crimes when he is from tamilnadu, and why the karnataka peoples still allow him to put up his asharam still here, this swami has no shame atall have you all noticed he still kept smiling when he was arrested and police were takibg him to jail,and now he setup a family in karnataka as he got his secret wife who he had kept as a keep in bidadi asharam and unfortunetly caught this secret of sex in hidden cam, now both swami and sanyasi are in bidadi ashram in karnakata which are from tamilnadu, she also kept her sir name of nithyananda as Ananda and you know in kanndada language Nithyananda = everyday enjoyment fun (Nithya Andanda) so now only the way is to put her sexy movie posters and sexy pictures in front of her/his Ashram so thier devoties can enjy watching it before the go to ashram and know wht kind of sanyasi they have LOL
ReplyDeleteNithyananda is disgusting.. He says all sorts of nonsense on his Satsangs then copyrights them so they cannot be properly exposed in a legal manner. The man is proof of how corrupt Hindu religion is.
ReplyDeleteWhat's more disgusting in not only in this article but in general,with what's going on in India.The treatment of women !What are You guys doing about the rape carnage that happening on a daily basis across India.
ReplyDelete